Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தில்லி பொதுநலவாயப் போட்டிகள் - பிரஷாந் செல்லத்துரை 2 தங்கம், 1 வெண்கலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தில்லி பொதுநலவாயப் போட்டிகள் - பிரஷாந் செல்லத்துரை 2 தங்கம், 1 வெண்கலம்

இம்முறை தில்லிப் பொதுநலவாயப் போட்டிகளில் கலந்துகொள்ளும் அவுஸ்த்திரேலிய ஈழத்தமிழர் பிரஷாந் செல்லத்துரை இதுவரை நடந்த போட்டிகளில் ரெண்டு தங்கம், ஒரு வெண்கலம் ஆகிய பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவரின் சர்வதேச அளவிலான போட்டிகளும் அவரது பதக்கங்களும் வருமாறு,

2006 மெய்வல்லுனர் போட்டிகள் 3 வெள்ளி

2009 1 வெண்கலம்

2010 2 தங்கம், 1 வெண்கலம்

வாழ்த்துக்கள் தோழா !!!!!

தில்லி பொதுநலவாயப் போட்டிகள் - பிரஷாந் செல்லத்துரை 2 தங்கம், 1 வெண்கலம்

இம்முறை தில்லிப் பொதுநலவாயப் போட்டிகளில் கலந்துகொள்ளும் அவுஸ்த்திரேலிய ஈழத்தமிழர் பிரஷாந் செல்லத்துரை இதுவரை நடந்த போட்டிகளில் ரெண்டு தங்கம், ஒரு வெண்கலம் ஆகிய பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவரின் சர்வதேச அளவிலான போட்டிகளும் அவரது பதக்கங்களும் வருமாறு,

2006 மெய்வல்லுனர் போட்டிகள் 3 வெள்ளி

2009 1 வெண்கலம்

2010 2 தங்கம், 1 வெண்கலம்

வாழ்த்துக்கள் தோழா !!!!!

Prasanth%20sellaththurai.jpgடெல்லி கொமன்வெல்த் போட்டியில் ஒரு தமிழர் பதக்கங்கள் பெற்று கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஈழத்தைச் சேர்ந்த பிரஷாந்த் செல்லத்துரை. அவுஸ்திரேலியாவுக்காக விளையாடி வருகிறார் இந்த ஜிம்னாஸ்ரிக்ஸ் வீரர்.

சர்வதேச அரங்கில் தமிழர்களின் முத்திரை தற்போது அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் இப்போது டெல்லி கொமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையில் முதலிடத்திலிருக்கும் அவுஸ்திரேலியாவுக்காக ஒரு தமிழர் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அவரது பெயர் பிரஷாந்த் செல்லத்துரை. பூர்வீகம் ஈழம். இவரது குடும்பத்தினர் இலங்கையில் இனக்கலவரம் பெரிதாக வெடித்த 1983 ஆம் ஆண்டு அங்கிருந்து இடம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்றனர். தற்போது சிட்னியில் வசித்து வருகிறது செல்லத்துரையின் குடும்பம்.

பிரஷாந்த் அவுஸ்திரேலிய ஜிம்னாஸ்ரிக்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரர். அவுஸ்திரேலியாவுக்காக டெல்லி கொமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்று கொடுத்துள்ளார்.

"குதிரை வீரன் என்று அவுஸ்திரேலிய வீரர்களால் செல்லமாக அழைக்கப்படும் பிரஷாந்த் டெல்லி கொமன்வெல்த் போட்டியில் இரு போட்டிப் பிரிவுகளில் கிட்டத்தட்ட 15,000 புள்ளிகள் வரை பெற்றுள்ளார் பிரஷாந்த். ஜிம்னாஸ்ரிக்ஸ் போட்டிகளில் இந்தளவுக்கு அதிக பட்ச புள்ளிகள் கிடைப்பது மிகவும் அரிதான விடயம். அந்தளவில் பிரஷாந்த் ஒரு சாதனையே படைத்துள்ளார்.

24 வயதேயாகும் பிரஷாந்த் "ரேடியோலோஜி மாணவர் அவுஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்தது பிரஷாந்த்துக்கு எளிதாக இருக்கவில்லையாம். கடும் போராட்டங்கள், கடின பயிற்சி, கடுமையான முயற்சிக்குப் பின்புதான் அணியில் இடம்கிடைத்தது.

செவ்வாய்க்கிழமை நடந்த குழுப்போட்டியில் பிரஷாந்த், ஜோசுவா ஜெபரிஸ், சாமுவேல் ஆப்போர்ட், லூக் விவடோவஸ்கி, தோமஸ் பிச்லர் ஆகியோர் அடங்கிய குழு தங்கம் வென்றது. ஜிம்னாஸ்ரிக்ஸில் அவுஸ்திரேலியாவுக்குக் கிடைத்த முதல் கொமன்வெல்த் தங்கம் இது.

இதேபோல இன்னொரு தங்கத்தையும் வென்று இரட்டை தங்க நாயகனாக உயர்ந்துள்ளார் பிரஷாந்த். கடந்த மெல்போர்ன் கொமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் பிரஷாந்த். இந்த முறை தங்கத்துடன் திரும்புவேனென சபதமே போட்டிருந்தாராம். சொன்னபடி வாங்கியும் விட்டார்.

டெல்லி கொமன்வெல்த் போட்டியில் ஒரு தமிழர் அதுவும் ஈழத்தமிழர் தங்க வேட்டையாடி வருவது பெருமைக்குரிய விடயம் தமிழ் மக்கள் அனைவரும் இவரை வாழ்த்துவதுடன் இவரைப்போல பலரை புலம்பெயர்ந்த மக்கள் உருவாக்க முடியும் அல்லவா

Eelanatham.net http://www.eelanatham.net/story/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

தங்கம் வென்ற தமிழனுக்கு மீண்டும் மீண்டும் எனது வாழ்த்துக்கள்.என் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பதக்கங்களை வெல்வது போன்று ஓர் இனந்தெரியாத உணர்ச்சி மேலிடுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.