Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்னால் இயங்க முடியாத உடல் நிலை ஆனாலும் தன் மனைவிக்காகவும் குழந்தைக்காகவும் வாழ்கிறான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
audio.gif2009 களமொன்றில் காயமடைந்தான் இவன். வயிற்றை அறுத்துக் கொண்டு போனது எறிகணை. சாகும் தறுவாயில் குருதி வெள்ளத்தில் கிடந்தவனை இவனது காதல் மனைவி காப்பாற்றத் துடித்த துடிப்பினைச் சொல்லும் தருணங்களில் அவள் அழுதேவிடுகிறாள். கைக்குழந்தையையும் அவனையும் கடலால் கொண்டு சென்று காப்பாற்றிவிட வேண்டுமென்ற முடிவோடு இயன்றவரையும் அவனது குருதிப்போக்கினை கட்டுப்படுத்த இயன்ற யாவையும் செய்தாள். அவளது முயற்சி அவனை உயிரோடு கொண்டுபோய் மருத்துவத்துக்காய் சேர்க்கப்பட்டான். தற்போது இவனுக்கு ஒரு சிறு நீரகம் மட்டுமே இயங்குகிறது. இடுப்பின் கீழ் இப்போது இவனுக்கு உணர்வுகள் இல்லாது வாழ்கிறான். வயிற்றுக்காயத்தின் தாக்கம் எஞ்சிய சிறுநீரகமும் தாக்கமடைந்திருப்பதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கிறது. சத்திர சிகிச்சைகளோடு இவன். இனி நடக்கவிருக்கும் சிகிச்சை 3வது பெரிய சத்திரசிகிச்சை. அதிலிருந்து தனது காதல் மனைவியிடமும் தன் ஆசை மகனிடமும் திரும்பி வரவேண்டுமென்ற விருப்போடு சத்திர சிகிச்சைக்கான நாளை எதிர்பார்த்திருக்கிறான். இப்போதைய இவனது ஆசை தன் குழந்தையும் தன் காதல் மனைவியும் வாழ ஒரு வழி….இதோ இந்தக் குடும்பத்தின் கதையிலிருந்து….

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருந்துடனும் மருத்துவமனையோடும் வாழும் இந்த முன்னாள் போராளிக்கு மாதாந்தம் யாராவது ஒரு சிறியளவிலான பண உதவி செய்தால் அது பேருதவியாக இருக்கும். சிறுநீரகம் குடல் முள்ளந்தண்டு என பாதிக்கப்பட்டு இடுப்புக்குக்கீழ் இயக்கம் அறுந்துபோன இவன் தனது மனைவியும் குழந்தையும் வாழ உதவி வேண்டுகிறான். சொந்தமாக இவர்களுக்கு வீடு காணி சொத்து எதுவுமே இல்லை. தற்போது வாழும் இடத்தில் தனது குழந்தைக்கான பால்மாவை பெற்றுக் கொள்வதற்கே மிகவும் சிரமப்படுகிறான்.

இன்னும் இயங்கு நிலையில் இருக்கும் ஒரு சிறுநீரகத்திலும் பாதிப்பென மருத்துவ அறிக்கைகளின் தரவுகள் சொல்கிறது. இம்மாதம் நடக்கவுள்ள சத்திரசிகிச்சைக்காக காத்திருக்கும் இவனுக்கு அச்சத்தைக் கொடுப்பதெல்லாம் தனது குழந்தை மனைவியின் வாழ்வுதான்.

ஈரமுள்ள இதயங்கள் இவனுக்கான உதவியைச் செய்வார்கள் என நம்புகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குடும்பத்துக்கு கள உறவு நெல்லையன் அவர்கள் மாதாந்த உதவியை வழங்க முன்வந்துள்ளார். எதிர்காலத்தில் இவர்களுக்கு ஒரு சுயதொழிலுக்கான உதவியையும் வழங்குவதாக வாக்குறுதி தந்துள்ளார்.

நெல்லையன் போல ஒவ்வொரு குடும்பத்தை ஒவ்வொருவர் பொறுப்பேற்றால் அவலமுறும் எங்கள் உறவுகள் வாழ்வில் மீண்டும் நம்பிக்கை துளிர்க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குடும்பத்துக்கு கள உறவு நெல்லையன் அவர்கள் மாதாந்த உதவியை வழங்க முன்வந்துள்ளார். எதிர்காலத்தில் இவர்களுக்கு ஒரு சுயதொழிலுக்கான உதவியையும் வழங்குவதாக வாக்குறுதி தந்துள்ளார். நெல்லையன் போல ஒவ்வொரு குடும்பத்தை ஒவ்வொருவர் பொறுப்பேற்றால் அவலமுறும் எங்கள் உறவுகள் வாழ்வில் மீண்டும் நம்பிக்கை துளிர்க்கும்.

பெருமைப்படுகின்றேன் நெல்லையன்

நன்றியுடன் கரம் கூப்புகின்றேன்

நல்லாயிருக்கணும் தாங்களும் தங்கள் குடும்பமும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.