Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களை நம்புங்கள் நாங்கள் உங்களுடன் சேர்ந்து வேலை செய்வோம் - கூட்டமைப்பு பற்றி பீரிஸ்

Featured Replies

திங்கட்கிழமை, அக்டோபர் 18, 2010

எங்களை நம்புங்கள் நாங்கள் உங்களுடன் சேர்ந்து வேலை செய்வோம் ( Trust us. We will work with you. ) என கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன் மஹிந்தவிடம் கூறியதாக இலங்கை வெளி நாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

இந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பிரத்தியேக செவ்வியிலேயே பீரிஸ் கூறியுள்ளார்.

பீரிஸ் தொடர்ந்து கூறுகையில் கூட்டமைப்பு சம்பந்தனை மஹிந்த இராஜபக்‌ஷ இரு தடவை சந்தித்துள்ளார். இப்போ சம்பந்தன் தமிழ் நாட்டில் நீண்டகாலம் தங்கி இருந்துவிட்டு மீண்டும் கொழும்பு வந்துள்ளார் அவரை மஹிந்த விரைவில் சந்திப்பார். கூட்டமைப்பிற்கும் அரச அதிபருக்கும் நல்ல உறவு உள்ளது.

வெளி நாட்டில் உள்ள தமிழர்கள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் மிகவும் உறுதியான ஓர் கட்டமைப்பாக இருக்கின்றார்கள். அவர்கள் எம்மை விமர்ச்சிக்கின்றார்கள் இது ஓர் தடையே என்றாலும் அவர்களை விரைவில் நாம் உள்வாங்கி விடுவோம்.

அதற்காக கோத்தபாய ராஜபக்‌ஷவும் நானும் பெரும் முயற்சி எடுத்து வருகின்றோம்.

சிறிலங்கா எயர் லைன்ஸ் புலம்பெயர் தமிழர்களால் நாள் தோறும் நிரம்பி வழிகின்றது. அவர்கள் தம் கிராமங்களுக்கு தினமும் வந்து போய்க்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இங்கு பிரச்சினை இல்லை.

புலம்பெயர் தமிழர்களின் தற்போதைய கருத்துக்கள் மாறி வருகின்றன. அவர்கள் காலப்போக்கில் மஹிந்த இராஜபக்‌ஷவுடன் கைகோர்ப்பார்கள் என்றும் கூறியுள்ளார் பீரிஸ்.

கூடவே இந்தியா எப்போதுமே ஓர்முக்கியமான மையப்புள்ளியாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. எனவும் கூறிய பீரிஸ் இந்த உறவுக்கு காரணம் காலம் சென்ற லக்‌ஷ்மன் கதிர்காமரே எனவும் கூறியுள்ளார். பீரிஸ் அவர்களின் செவ்வி முழுவடிவம் ஆங்கிலத்தில் http://www.eelanatham.info/?p=763

வெளி நாட்டில் உள்ள தமிழர்கள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் மிகவும் உறுதியான ஓர் கட்டமைப்பாக இருக்கின்றார்கள். அவர்கள் எம்மை விமர்ச்சிக்கின்றார்கள் இது ஓர் தடையே என்றாலும் அவர்களை விரைவில் நாம் உள்வாங்கி விடுவோம் :) :) :D

"சிறிலங்கா எயர் லைன்ஸ் புலம்பெயர் தமிழர்களால் நாள் தோறும் நிரம்பி வழிகின்றது. அவர்கள் தம் கிராமங்களுக்கு தினமும் வந்து போய்க்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இங்கு பிரச்சினை இல்லை."

இது உண்மையில் ஒரு பிரச்சார நோக்குடனேயே சொல்லப்பட்டுள்ளது. ஆதாரமாக இதன் வருமான அறிக்கையின் படி பங்குனி 2010 மாதத்துடன் முடிந்த காலாண்டு கணக்கின் படி:

அ) மொத்த கணக்கு: 63.36 பில்லியன் ரூபாய்கள் ( இதே காலத்தில் 2009 இல் 74.26 பில்லியன் ரூபாய்கள் )

ஆ) மொத்த நட்டம் : 6.06 பில்லியன் ரூபாய்கள் ( இதே காலத்தில் 2009 இல் 9.99 பில்லியன் ரூபாய்கள் )

-- SriLankan Airlines, Sri Lanka's state-run national carrier said it lost 6.06 billion rupees in the year to March 2010, down from a 9.99 billion loss notched up an year earlier.

-- SriLankan said revenue fell to 63.36 billion rupees, down from 74.26 billion a year earlier.

-- Passenger load factor, or the actual passengers carried as a share of available seats had increased to 77.93 percent from 72.85 percent a year earlier.

-- Overall load factor, which includes cargo, had increased to 66.72 percent from 65.12 percent a year earlier.

http://www.lankabusinessonline.com/fullstory.php?nid=947923076

Edited by akootha

வெளி நாட்டில் உள்ள தமிழர்கள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் மிகவும் உறுதியான ஓர் கட்டமைப்பாக இருக்கின்றார்கள். அவர்கள் எம்மை விமர்ச்சிக்கின்றார்கள் இது ஓர் தடையே என்றாலும் அவர்களை விரைவில் நாம் உள்வாங்கி விடுவோம்.

அதற்காக கோத்தபாய ராஜபக்‌ஷவும் நானும் பெரும் முயற்சி எடுத்து வருகின்றோம்.

சிறிலங்கா எயர் லைன்ஸ் புலம்பெயர் தமிழர்களால் நாள் தோறும் நிரம்பி வழிகின்றது. அவர்கள் தம் கிராமங்களுக்கு தினமும் வந்து போய்க்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இங்கு பிரச்சினை இல்லை.

புலம்பெயர் தமிழர்களின் தற்போதைய கருத்துக்கள் மாறி வருகின்றன. அவர்கள் காலப்போக்கில் மஹிந்த இராஜபக்‌ஷவுடன் கைகோர்ப்பார்கள் என்றும் கூறியுள்ளார் பீரிஸ்.

வலு வலியுடன்... யதார்தமாக... அவதானித்து வருகிறார்கள்... வருகிறோம்.... உங்களை.... ஈழ விடுதலைவிரும்பிகள்...

தமிழரின் தாகம் தமிழீழதாயகம் நன்றி. :)

மிஸ்டர் பீரிஸ்

அப்ப ஏனுங்க, கிழக்கு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி கூட்டத்திற்கு த தே கூ அழைப்பு குடுக்கவில்லை.

இதைத்தான் சொல்வது கேட்பவன் கே..................................என்று

சிங்களம் செய்யும் பிரச்சாரங்களுக்கு நமது புலம் பெயர் தமிழர்கள் சிலரும் துணைபோவது நல்ல தல்ல. அது அவர்கள் தமது.... தாய், மனைவி, மக்களை ஏதோ தொழில் செய்வது போலாகும்.

இப்ப ராகவன் என்று ஒன்று முளைத்துள்ளது.

  • தொடங்கியவர்

மக்கள் உறுதியாக உள்ளார்கள் என்றும் அதனால் தானும் தம்பி கோத்தாவும் பெரும் வேலைத்திட்டத்தை முடுக்கி விட்டிருப்பதாகவும் சொல்றார் எல்ல. அதனால இது பிரச்சார நோக்கம் கொண்டவை என்றது அத்துப்படி.

ஆனால் இப்படி எல்லாம் கதை விடுவாங்கள் நாம அவதானமாக இருக்க வேணும். இலண்டன் வரும் பீரிஸ் அவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு மக்கள் அணி திரள வேண்டும். கூடவே பீரிஸ் என்ன சொல்கிறார் என கேட்க ஒரு ரெக்கி ரீமையும் அனுப்ப வேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.