Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க ஆணைக்குழு

Featured Replies

நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கு தமிழ்க் கூட்டமைப்பு விசேட அறிக்கை தயாரிப்பு

அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட அறிக்கையொன்றினை தயாரித்துள்ளது. நேற்று முன்தினம் கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூடிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்த அறிக்கையினை தயாரித்துள்ளன.

அடுத்த வாரம் அளவில் இந்த அறிக்கை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் கொழும்பில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி ரிட்ரீட் அவனியூவில் நேற்றுக்காலை புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன், எம்.பி.க்களான மாவை.சேனாதிராஜா, சுரேஷ்பிரேமச்சந்திரன், எம். சரவணபவான், எம்.ஏ. சுமந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

புதிய அலுவலகத்தில் நேற்று கூட்டமைப்பின் செயற்குழு கூட்டமும் இடம் பெற்றது. இதில் பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

10/18/2010 - http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27895

==============================================

தொடர்பு பட்ட செய்திகள் :

இலங்கையின் ஆணைக்குழு முன் சாட்சியம் சொல்ல மாட்டோம்! பிரபல மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக அறிவிப்பு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76412

இதற்குமேல் என்ன சாட்சி வேண்டும்?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76314

விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவப் பேச்சாளர் இளந்திரையனின் மனைவி, மட்டு புலனாய்வுப் பொறுப்பாளருடைய மனைவி உட்படப் பலர் சாட்சியம்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76292

முள்ளிவாய்க்காலில் பொஸ்பரஸ்,கிளஸ்ரர் குண்டுகளை இராணுவம் வீசியது - ஆணைக்குழு முன் சாட்சியம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=75558

  • தொடங்கியவர்

நல்லிணக்க ஆணைக்குழு எம் கஷ்டங்களைக் கேட்டறியுமா? : தமிழ் அரசியல் கைதிகள்

வீரகேசரி இணையம் 10/19/2010 3:16:30 PM

விடுதலை செய்யப்படாமல் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எங்களை விடுதலை செய்வதற்காக எங்கள் அனைவரினதும் கருத்துக்களையும் கேட்டறிந்து ஜனாதிபதி முன்னிலையில் சமர்ப்பியுங்கள் என புதிய மகசின் சிறைச்சாலை, ஜி.எச்.ஜே. பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1993 ஆம் ஆண்டிலிருந்து கைது செய்யப்பட்டு இதுவரை காலமும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளான நாங்கள் சொல்லொணா துன்ப துயரங்களை அனுபவித்து வருகிறோம்.

இளமையிலிருந்து சிறைச்சாலையிலேயே காலத்தைக் கழித்துவரும் நாங்கள், வாழ வேண்டும் என்பதற்காக இங்கு உயிரோடு இருக்கிறோம். ஐந்து வருடங்கள் தொடக்கம் 17 வருடங்களாக சிறையினுள்ளே வாழ்கின்ற நாங்கள் இந்நாட்டின் பிரஜைகள் இல்லையா? அல்லது உறவுகளுடன் சேர்ந்து வாழத் தகுதியற்றவர்களா? விடை காணா வினாக்களாகவே உள்ளன.

எங்கள் குடும்ப உறவினர்களின் கஷ்ட நிலைமைகளை விபரித்துக் கூற வார்த்தைகள் இல்லை. இருப்பினும் நாங்கள் விடுதலை செய்யப்பட்டு தங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடனே இத்தனை வருடங்களாக அவர்கள் காலத்தைக் கழித்து வருகிறார்கள். அவர்களில் சிலர் இறந்தும் விட்டனர்.

நாடு எவ்வளவோ அபிவிருத்தியடைந்துவிட்ட பின்னரும், தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மட்டும் மாறவே இல்லை.

எங்களை விடுதலை செய்வதற்காக எங்களது கருத்துக்களையும் கேட்டறிய எங்கள் முன்னிலையில் சமூகமளியுங்கள். நீங்கள் அனைவரும் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளாகிய எங்களையும் சந்திக்க வர வேண்டும் எனக் கோரி நிற்கிறோம்.

வருவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்."

இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27941

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஆணைக்குழு மூலமாக அரசு கற்றறிய வேண்டிய பாடம்

முன்னாள் இலங்கை சட்டமா அதிபர் சீ.ஆர்.டி.சில்வா தலைமையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டதாகிய கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) முன்னிலையில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரமுகர்கள் சாட்சியமளித்து வருகின்றனர்.

2002 பெப்ரவரி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைகள் இயக்கத்திற்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட விக்கிரமசிங்கபிரபாகரன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் (CFA) வெளியாகிய நாளிலிருந்து விடுதலைப்புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு 26 வருட கால யுத்தம் முற்றுப்பெற்ற தினமாகிய 2009 மே 19 ஆம் நாள் வரையிலான காலப்பகுதியே மேற்படி ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டியதாகும் என்பது ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆணையாகும்.யுத்தத்தின் இறுதிக்கட்டங்களில் அரசு தரப்பிலும் விடுதலைப்புலிகள் தரப்பிலும் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் மீது சர்வதேச மட்டத்திலான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று மேலெழுந்து வந்த கோரிக்கைகள் காரணமாக குறிப்பாக சர்வதேச சமூகத்தைத் திசை திருப்புவதற்காகவே சி.ஆர்.டி.சில்வா தலைமையிலான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் நம்பகத் தன்மையும் சுயாதீனத்தன்மையும் கேள்விக்குறியாயுள்ளமை. சர்வதேச மட்டங்களில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையில் இவ்விவகாரம் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காகவென இந்தோனேசிய முன்னாள் சட்டமா அதிபர் தருஸ்மான் தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்றினை நியமித்துள்ளார். இதுவொரு ஆலோசனைக்குழுவே ஒளிய விசாரணைக்குழு அல்ல என மூன் திரும்பத் திரும்ப உறுதியளித்தபோதும் இலங்கை அரச தரப்பில் பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆத்ம விசுவாசி விமல் வீரவன்ச கொழும்பிலுள்ள ஐ.நா. காரியாலயத்திற்கு முன்னால் உண்ணாவிரதம் மேற்கொண்டதோடு மூனின் கொடும்பாவி எரிக்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால், மேற்கூறிய ஐ.நா. குழு தனது செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது.

LLRC மீது குறிப்பாக சர்வதேச மட்டத்தில் தெரிவிக்கப்பட்டு வந்த அவநம்பிக்கை காரணமாக ராஜபக்ஷ அரசாங்கம் சற்று கவலை கொண்டிருப்பதையும் இங்கு காணலாம். அதனாலேயே சர்வதேச மனித உரிமை அமைப்புகளான மனித உரிமைகள் காப்பகம் (HRW), சர்வதேச மன்னிப்புச்சபை (AI) மற்றும் சர்வதேச நெருக்கடிகள் குழு (ICG) ஆகிய நிறுவனங்களை இலங்கைக்கு விஜயம் செய்து சாட்சியமளிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அவ் நிறுவனங்கள் அதனை வெட்டொன்று துண்டு இரண்டாக நிராகரித்து விட்டதோடு, அதற்குரிய காரணங்களையும் ஒழிவுமறைவின்றி விளம்பிவிட்டன.

LLRCமுற்றிலும் வலுவற்றதொரு மையமாகும் என முதற்கண் ஐஇஎ குறிப்பிட்டுள்ளதோடு, மேற்படி 3 நிறுவனங்களும் கூட்டாக ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.எம்.சமரக்கோனுக்கு எழுதிய கடிதத்தில் தமது அதிருப்தியை அக்குவேறு ஆணிவேறாகத் தெரிவித்துள்ளன. அவை ஊடகங்கள் மூலம் ஓரளவு வெளியாகியுள்ளனவாயினும் அவற்றை முழுமையாக வாசகர்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்பதால் அவை கீழேதரப்பட்டுள்ளன.அ. ஃஃகீஇ முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு வாய்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கதாயினும் பொறுப்புக்கூறும் நியதி மற்றும் நல்லிணக்கம் இரண்டையும் இதய சுத்தியாகவும் நம்பகத்தன்மையாகவும் முன்னெடுப்பதில் பலத்த குறைபாடு உள்ளது. ஆணைக்குழு கொண்டிருக்க வேண்டிய நோக்கத்தை பிசத்தக் கூடிய பல்வேறு பலவீனங்கள் உள்ளன.

ஆ. அரச படையினரும் விடுதலைப்புலிகளும் சென்ற வருடம் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது இழைத்த போர்க்குற்றங்கள் மீது விசாரணை நடத்த வேண்டுமென்ற ஏற்பாடுகள் எதுவுமே கிடையாது. முழுவதும் மேலெழுந்தவாரியாயுள்ளதோடு சர்ச்சைக்குரிய விடயங்கள் நழுவிச் செல்லவிடப்பட்டுள்ளன.இ. குற்றச்சாட்டுகள் மீது தற்துணிவாக விசாரணை நடத்துவதற்கு இடமில்லை. மாதக்கணக்கான எதுவித, ஆதாரமுமின்றி அரசாங்கத்தினால் சிவிலியன் பூஜ்ய மரணக்கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது என அரச அதிகாரிகள் எதுவித மறுதலிப்புக்கும் இடமின்றி மீண்டும் மீண்டும் கூறவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

ஈ. LLRC அங்கத்தவர்கள் சுயாதீனமானவர்களாகவிருக்க வேண்டுமென்பது புறந்தள்ளப்பட்டுள்ளது. அதாவது குறிப்பாகத் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா மற்றும் எ ச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்கா ஆகியோர் யுத்தத்தின் இறுதியாண்டின் போது அரசாங்கத்தின் சார்பாகச் செயற்பட்டதோடு இராணுவத்தின் மீது போர்க்குற்ற முறைப்பாடுகள் செல்லுபடியற்றவை எனக் காவாந்து பண்ணி வந்தனர்.உ. சென்ற வருடம் ஜனவரி பிற்பகுதியில் அரசாங்கம் பிரகடனப்படுத்திய யுத்த சூனியப் பிரதேசம் எனும் விடயம் மற்றும் பெப்ரவரியில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது செல் வீச்சு நடத்தப்பட்ட விடயம்.அன்று ஐ.நா. பிரதிநிதியாகவிருந்த பலிஹக்காரவினால் இNN செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வி மூலம் மறுதலிக்கப்பட்டன.

ஊ. மற்றும் சீ.ஆர்.டி.சில்வாவைப் பொறுத்தவரை முன்னர் அரச படையினரால் இழைத்ததாகக் கூறப்பட்ட மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் (20062009) செயற்பாடு தொடர்பாக அவர் அரசாங்கத்தின் யுத்த செயற்பாட்டினைப் பகிரங்கமாகக் காவாந்து பண்ணியது மட்டுமல்லாமல், அவ் ஆணைக்குழுவின் சுதந்திரமான செயற்பாட்டை மலினப்படுத்துவதற்குப் பெரிதும் பாடுபட்டவர். ஆக இவ்விருவரும் முரண்பாடான நலன் காப்பதில் ஈடுபட்டிருந்தனர்.எ.மற்றும் சாட்சியமளிப்பவர்களுக்கான பாதுகாப்புத் திட்டம் எதுவுமேயில்லை. இலங்கையில் என்றாவது இது மருந்துக்கும் இருந்ததில்லை. இது ஆணைக்குழுவை குறிப்பாக இன்றைய சூழ்நிலையில், ஒரு முடவன் போல் ஆக்குவதாகும்.

ஏ. இலங்கையில் ஆணைக்குழுக்கள் நீண்டகாலமாகத் தோல்வியுற்றும் அரசியல் மயப்படுத்தப்பட்டதுமான வரலாறுண்டு. இலங்கையில் விசாரணைக் குழுக்கள் 20 வருட மாயாஜாலம் என சர்வதேச மன்னிப்புச்சபை விடுத்த அறிக்கையில் இலங்கையில் ஆட்கடத்தல்கள் சட்டத்திற்கு மாறான கொலைகள்,சித்திரவதைகள் தொடர்பாக எல்லா இலங்கை அர சாங்கங்களும் புரளி செய்துள்ளமை தெரிந்ததே.அரச தரப்பினரின் ஆத்திரம்வேடிக்கையானது

ஆம்,தேசிய ரீதியிலோ, சர்வதேச ரீதியிலோ, எந்தவொரு பிரமுகரோ, நிறுவனமோ LLRCயின் அழைப்பினை ஏற்றுக்கொள்வதற்கோ, ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கோ உரிமை உண்டு. அவ்வாறாகவே மேற்குறித்த 3 நிறுவனங்களும் தமக்குச் சரியெனப்பட்ட காரணங்களுக்கு LLRC விடுத்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டன. அதற்காக இலங்கை அரச தரப்பினர் ஆத்திரமடைந்து காணப்படுவது வேடிக்கையாகவுள்ளது. அண்மையில் லண்டன் சென்றிருந்தவராகிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் 3 நிறுவனங்களையும் காரசாரமாகச் சாடியிருந்தார். அவற்றின் தன்மை பறக்கத் தாக்கியிருந்தார். நேற்று ஐ.தே.க. அரசாங்கத்தில் அமைச்சராயிருந்தவர்களது ஒன்றும் இன்று மகிந்த ராஜபக்ஷ ஐ.ம.சு.முன்னணியில் அமைச்சராகவிருக்கும்போது இன்னொன்றுமாகப் பேசி பச்சோந்தி என்று பலரால் கௌரவிக்கப்படும் பீரிஸ், இது விடயமாக கையாண்டுள்ள அணுகுமுறையானது மிகவும் நகைப்புக்குரியதாகும். அவ் நிறுவனங்கள் தெரிவித்த மறுப்பானது இலங்கை போன்றதொரு நாட்டின் மீது அவை காட்டிவரும் காலனித்துவ அல்லது குடியேற்றவாத சிந்தனையைப் பிரதிபலிக்கிறது என பீரிஸ் சீண்டியிருப்பதானது தனது முதுகில் அழுக்கை அறியாமல் பேசும் மடைமை எனலாம்.

இலங்கையில், குறிப்பாக வடக்கு,கிழக்கு,தமிழ்,முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை மகிந்த சிந்தனை காலனித்துவ சிந்தனையாகவே அரங் கேற்றப்பட்டு வருகிறது. வடக்கில் குறிப்பாக வன்னியில் சிங்களப் பேரினவாத மேலாதிக்கம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஏ9 பாதையோரங்களும் அசுர வேகத்தில் ஆக்கிரமிக்கப்படுகிறது. வட பகுதிக்கான ஜனாதிபதி செயலணிக்குழு இன்றைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் அன்று அவர் வெறுமனே ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவிருந்த காலம் முதல் தனிச்சிங்கள பிரமுகர்களைக் கொண்டதாக இயங்கி வருகிறது.

லண்டனில் பீரிஸின் போதனை

LLRC யின் செயற்பாட்டினை மீண்டும் நோக்குவோமாயின் அமைச்சர் பீரிஸின் அண்மைய லண்டன் விஜயத்தின்போது தனது பிரித்தானிய சகபாடியான வில்லியம் ஹேக் என்பவரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அப்போது சர்வதேச சமூகம் LLRCஇயை நல்ல கண்கொண்டு பார்க்க வேண்டுமேயொழிய சமத்துவம் என்ற போர்வையில் மேற் கதிரையிலிருந்து தீர்ப்பு வழங்கும் மனப்பாங்கற்றதாயிருக்க வேண்டும் என்று பீரிஸ் கூறிவைத்தார். ஹேக் அதற்கு கருத்துத் தெரிவிக்கையில்; ஜனநாயகம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் ஆகியவை பேணப்படுவதற்கு சுயாதீனமானதும் நம்பகத்தன்மையானதுமான நடவடிக்கைகள் தேவை என்பதை வலியுறுத்தினார். LLRCயானது பான் கீ மூன் நியமித்த ஆலோசனைக் குழுவோடு தொடர்பாடல் நடத்தியும் செயற்படலாம் எனவும் ஹேக் கூறிவைத்தார்.

அமைச்சர் பீரிஸ் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸையும் சந்தித்தார். கடந்த பல வருடங்களாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது பொக்ஸ் குறிப்பாக இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக கரிசனை காட்டி வந்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான பரஸ்பரமான உடன்படிக்கையொன்றினை (லியம் பொக்ஸ் உடன்படிக்கை என நாமகரணம் சூட்டி)பரிமாறிக் கொள்வதற்கு வழிசமைத்தவர். ஆனால், அந்த உடன்படிக்கை குப்பைத் தொட்டியில் போட்டதையிட்டும் அவர் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை.

பொக்ஸ் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் நன்கு சிநேகபூர்வமானவர். சில தடவைகள் இலங்கை வந்து ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடினவர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாடொன்றுக்கு அழைக்கப்பட்டவர். இன்று தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக அவரிடம் ஏதும் வகிபாகம் இருப்பதாகத் தெரியவில்லை.ஃஃகீஇ முன்னிலையில் யாழ்ப்பாண, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு அரசாங்க அதிபர்களும் யுத்தம் கோரமாக நடந்தபோது வன்னியில் செயற்பட்ட வைத்தியர்களாகிய டாக்டர் வி.சண்முகராசா, டாக்டர் ரி.சத்தியமூர்த்தி, டாக்டர் சிவபாலன் மற்றும் டாக்டர் ரி.வரதராசா ஆகியோரும் சாட்சியளிக்கவுள்ளனர். இன்றைய முல்லைத்தீவு அரசாங்க அதிபரும் மேற்குறிப்பிட்ட வைத்தியர்களும் கைது செய்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள். இவர்கள் எல்லோரும் சுயவிருப்பின் பேரிலா அல்லது அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரிலா சாட்சியமளிக்க முன்வருகின்றனர் என்பதைக் கூற முடியாதுள்ளது.

LLRC யானது ஒரு கண்துடைப்பு என்பது கண்கூடு எவ்வாறாயினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடத்தப்பட்ட அமர்வுகளின் போது பாதிக்கப்பட்டு நலிவுற்ற சில பொதுமக்கள் இனிமேல் இழப்பதற்கு ஒன்றுமில்லையென எண்ணித் துணிந்து சில அளித்த சாட்சியங்கள் அரசதரப்பினருக்கு மட்டுமல்லாமல் சில ஆணைக் குழு அங்கத்தவர்களுக்கும் தர்ம சங்கடமாகிவிட்டது. உடனடியாக அரசு தரப்பினர் அத்தகைய சாட்சியங்களை நிராகரித்துவிட்டன.சிங்கள பிரமுகர்கள் அளித்தநேர்மையான சாட்சியங்கள்

LLRC முன்னிலையில் சாட்சியமளித்த எத்தனையோ சிங்கள பிரமுகர்கள் வெகு நேர்மையாகவும் நிதானமாகவும் சாட்சியமளித்துள்ளனர். உதாரணமாக மூவரைக் குறிப்பிடலாம் ஒன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்க. 1956 தனிச்சிங்கள சட்டம் தான் இறுதியில் யுத்தத்திற்கே இட்டுச் சென்றதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இரண்டு, முன்னாள் மூத்த இராஜதந்திரி கே.கொடகே. விடுதலைப்புலிகள் தோற்றம் பெற்றதற்கு சிங்கள சமூகத்தினரே பொறுப்புக் கூற வேண்டுமென்ற கருத்தை முன்வைத்திருந்தார். மூன்று யாழ்.மாநகர சபையின் முன்னாள் களஞ்சியக் காப்பாளர், டி.டபிள்யூ.சிறிமன்ன. யாழ். நூலகம் எரிக்கப்பட்டது மிகக் கொடிய செயல் எனக் கூறி ஆணைக்குழு முன் கண்ணீர் மல்கியவர் சிறிமன்ன. மேலும் அடுத்த நாள் நடந்த யாழ்.மாவட்ட சபைத் தேர்தலின் போது காலை 7 மணிக்கு வாக்களிப்பை ஆரம்பித்து 10 மணிக்கு நிறுத்தியதுடன் எஞ்சிய வாக்குச்சீட்டுகளை நிரப்பி வைக்கும்படி முன்னாள் அமைச்சர் ஒருவர் தமக்கு உத்தரவிட்டதாகவும் ஆணைக்குழு முன் தெரிவித்தார்.எனவே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கற்றறிய வேண்டிய பாடம் நீறுபூத்த நெருப்பாயுள்ள தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரக்கூடிய அர்த்தமுள்ள அரசியல் தீர்வு காண்பதாகும்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=399:2010-11-01-01-08-05&catid=72:article&Itemid=100

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.