Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலம்கொண்ட சிறிலங்கா - மக்களை மறந்த ஈழத்தமிழ் அரசியல்வாதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலம்கொண்ட சிறிலங்கா - மக்களை மறந்த ஈழத்தமிழ் அரசியல்வாதிகள்

[ புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 08:42 GMT ] [ புதினப் பணிமனை ]

'புதினப்பலகை'க்காக யதீந்திரா

கடந்த அறுபது வருடங்களாக ஈழத் தமிழ் மக்களை பிரதநிதித்துவப் படுத்திய அரசியல் தலைமைகள் தாங்கள் சரியென்று நம்பிய ஒரு வழியால் பயணித்து வந்திருக்கின்றன.

அந்த காலகட்டத்தின் நமது தலைமுறைகளும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவற்றுடன் இணைந்து நின்றிருக்கின்றன.

இதில் ஒரு முப்பது வருடம் கறுப்புக் கொடி, கடையடைப்பு, சத்தியாகிரகம் என்றெல்லாம் நமது தலைவர்கள் சாத்தியமான வகையில் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி இருந்தனர் ஆனால் ஒன்றையும் அடைய முடியவில்லை.

அடுத்த பகுதி முப்பது வருடங்கள் ரைபிளில் தொடங்கி ஏ.கே.47 இற்கு மாறி இறுதியில் ஆட்லரி, விமானப்படையாக விரிவு கொண்டது ஆனாலும் இங்கும் எதையும் நம்மால் அடைய முடியவில்லை.

முதலாவது காலம் ஈழத் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்பதாக நிறைவு பெற்றது.

இரண்டாவது காலம் அந்த நம்பிக்கையைக் கூட விட்டு வைக்காத அளவிற்கு இருண்டகாலமாக இருக்கின்றது.

சரி அப்படியானால் நமது அடுத்த தெரிவு எது? பாதை எது? நிச்சயமாக அந்த பாதை கடந்த அறுபது வருடங்களின் தொடர்ச்சியாக இருக்க முடியாது.

இன்றைய சூழலை விளங்கிக் கொண்டு அதற்கு ஏற்பவே நாம் பயணிக்க முடியும்.

இங்கு கடந்த காலத்தில் நிகழ்ந்தவைகள் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பது எந்தவொரு ஆக்க பூர்வமான பலன்களையும் தரப் போவதில்லை.

கடந்த காலத்தில் அரச தரப்பால் நமக்கு நேர்ந்த அவலங்கள் குறித்து நாம் பேச முடியும். எங்களிடம் அவ்வாறு பேசுவதற்கு ஏராளமான விடயங்கள் இருக்கின்றன.

அதே போன்று சிங்கள மக்கள் தரப்பிலிருந்தும் புலிகள் அப்பாவி சிங்கள மக்களை கொல்லவில்லையா என்ற கேள்வி எழும்.

எங்களவிற்கு இல்லாவிட்டாலும் பவுத்த பிக்குகள் கொல்லப்பட்டதிலிருந்து இறுதியாக பொதுசன பேருந்துகள் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்புகள் வரை அவர்களாலும் பேச முடியும்.

நாங்கள் பேச அவர்களும் பேசுவார்கள் இறுதியில் விவாதம் புரிவதிலேயே காலங்கள் உருண்டோடும்.

எனவே விவாதங்களை விட்டுவிட்டு ஆக்க பூர்வமாக சிந்தித்து செயற்படுவதே இன்று அவசியமாக இருக்கின்றது.

உடனே அது என்ன ஆக்க பூர்வம் என்ற கேள்வி எழலாம்.

இப்போதெல்லாம் ஆக்கபூர்வமாக யாதார்த்தமாக என்றெல்லாம் சொல்லவே அச்சப்பட வேண்டியிருக்கிறது.

நம்மில் ஒரு சிலர் அடுத்தவர்களுக்கு துரோகி, கைக்கூலி இப்படி பட்டங்கள் சூட்டுவதற்காகவே விரதமிருக்கின்றனர்.

அதற்காக ஆக்க பூர்வமான விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தக் கூடாது என்று இந்தக் கட்டுரை வாதிட முயற்சிக்கவில்லை.

சரி முதலில் நிலைமைகளை ஒரு ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

இன்று இருக்கும் இலங்கையில் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் எத்தகைய நிலையில் இருக்கிறது?

முன்னர் இருந்த நிலைமைகளுக்கும் தற்போதைய நிலைமைகளுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகள் என்ன?

இன்றைய சூழலில் தமிழர்கள் முன்னர் வைத்த அதே கோரிக்கைகளை எழுப்ப முடியுமா?

அவ்வாறு எழுப்பினாலும் அதனை செவி சாய்க்கக் கூடிய நிலையில் இன்றைய கொழும்பு இருக்கின்றதா? இன்றைய கொழும்பின் பலம் எத்தகையது?

இன்றைய கொழும்பை பகைத்துக் கொண்டு எவரேனும் தமிழர்களுக்கு உதவ முன்வருவார்களா?

சிலர் சொல்லுவது போன்று இந்தியா ஏதேனும் அழுத்தங்களை கொழும்பின் மீது பிரயோகிக்குமா? இன்றைய சூழலில் அத்தகைய ஏதேனும் தேவை இந்தியாவிற்கு இருக்கிறதா?

இவ்வாறான கேள்விகளை எழுப்பாமல் நமது அடுத்த கட்ட அரசியல் குறித்து எதனையும் பேச முடியாது.

ஆனால் நடைமுறையில் இவ்வாறான எந்தவொரு கேள்வியையும் எழுப்பாமலேயே நமது அரசியல் விற்பனர்கள் அனைவரும் அரசியல் பேசி வருகின்றனர். எனவே நாம் மேற்படி கேள்விகளுக்கான விடைகளை பார்ப்போம்.

புலிகளின் காலத்தில் தமிழர்களின் அரசியல் என்பது பலமையப்பட்ட (power based politics) அரசியலாக இருந்தது.

இது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

அந்த பலம் என்பது பல்லாயிரக்கான இளைஞர் மற்றும் மக்களின் தியாகங்களால் விளைந்த ஒன்று.

அந்த பலமே பேச்சுவார்த்தை மேசையில் அரசுக்கு நிகராக புலிகளை அமர்த்தியது.

புலிகள் தாம் வன்முறையின் மூலம் அடைந்த பலத்தை சனநாயகத் தளத்திற்கு கைமாற்றிக் கொள்ள கிடைத்த சந்தர்ப்பம்தான் மேற்கின் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை.

ஆனால் புலிகளால் அதனை சரியாகக் கையாள முடியவில்லை. இறுதியில் அரசு புலிகளை அழித்தொழிக்கும் முப்பதாண்டு கால யுத்தத்தில் வெற்றி பெற்றது.

புலிகளை அரச எப்படி தோற்கடித்தது என்பது பற்றி இந்திய சுயாதீன இராணுவ செய்தியாளர் நித்திக் கோகல்லே ஒரு நூலையும் வெளியிட்டு இருக்கிறார். படித்துப் பாருங்கள்.

எனவே இன்று இருக்கும் காலம் என்பது வெல்லவே முடியாது என்று கருதப்பட்ட ஒரு இயக்கத்தை தோற்கடித்தது மட்டுமல்லாமல் அதன் கட்டமைப்புக்கள் அனைத்தையும் இலங்கைக்குள் துடைத்தழித்திருக்கும் அரசாங்கம் ஒன்றின் காலம் ஆகும்.

இந்த நிலைமையில் இருந்துதான் அரசின் பலத்தை நாம் மதிப்பிட வேண்டும்.

அரசு தனது இராணுவ ரீதியான வெற்றியை அரசியல் தளத்திற்கு மாற்றியதன் மூலம் தனது அரசின் ஸ்தரத்தன்மையை ஒழுங்குபடுத்திக் கொண்டது.

ஏனெனில் எந்தவொரு இராணுவ வெற்றியும் முறையாக அரசியல் தளத்திற்கு மாற்றப்படும் போதுதான் அது ஒரு முழுமையான வெற்றியாக மாறுகின்றது.

அரசின் இந்த அணுகுமுறையே அரசு குறித்த மேற்கின் விமர்சனங்களைக் கூட படிப்படியாக தணித்தது.

ஆரம்பத்தில் போர்க் குற்றங்கள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்த மேற்கு அரசுகள் சில படிப்படியாக தமது விமர்சனங்களிலிருந்து விலகி கொழும்புடன் அனுசரித்துச் செல்லும் உபாயத்தை கடைப்பிடிக்கத் தொடங்கின.

இன்று தெற்காசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறியிருக்கும் கொழும்புடன் இணைந்து செல்லவே அனைத்து சக்திகளும் முயற்சிக்கின்றன. இது மிகவும் வெளிப்படையான ஒன்றும் கூட.

இத்தகையதொரு பின்புலத்தில்தான் ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கை என்ற விடயம் நோக்கப்பட வேண்டும்.

புலிகள் பலமாக இருந்த காலத்தில் தமிழர் தலைமையுடன் வலிந்து பேச வேண்டிய தேவைப்பாடுகள் அரசுக்கு இருந்தன.

குறிப்பிட்ட காலத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அரசாங்கங்கள் அனைத்துமே விரும்பியோ விரும்பாமலோ புலிகளுடன் பேச முன்வந்தன.

இலங்கையில் இருவகை நிர்வாகங்கள் இருப்பதை அப்போதைய அரசுகள் எதனாலும் நிராகரித்துச் செல்ல முடியாத நிலைமையே இருந்தது.

ஆனால் தற்போதைய அரசிற்கு அவ்வாறான கடப்பாடுகள் எதுவும் இல்லை. இதனை நமது அரசியல் விற்பனர்கள் எவரும் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

எனவே அரசு எல்லாமுமாக இருக்கின்ற ஒரு சூழலில் அரசை தவிர்த்துக் கொண்டு எதனையும் இலங்கைக்குள் செய்ய முடியாது என்பதே யதார்த்தம்.

ஆனால் புலம்பெயர் சூழலில் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தேர்தல் வைக்கலாம். உருத்திர குமாரனை பிரதமராக தெரிவு செய்யலாம்.

கொழும்பின் அரசியல்வாதிகள் ஜரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் போது அவர்களை கண்டித்து சனநாயக ரீதியாக எதிர்ப்பை தெரிவிக்கலாம்.

இவற்றை அரசால் தடுக்கவும் முடியாது அத்துடன் இவற்றால் அரசை பணிய வைக்கவும் முடியாது.

ஆனால் இலங்கைக்குள் நிலைமைகள் முற்றிலும் வேறானது.

இலங்கைக்குள் ஈழத் தமிழ் மக்களுக்கான எதிர்காலம் என்பது அரசுடன் இணைந்த ஒன்று.

அரசை தவிர்த்து சிந்திப்பது வெறும் சுலோக அரசியலுக்கு உகந்ததாக இருக்குமேயொழிய யதார்த்திற்கு பொருத்தமான ஒன்றல்ல.

இன்று புலிகளின் அழிவிற்கு பின்னர் ஈழத் தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாகக் கூறி பலர் களத்தில் குதித்திருக்கின்றனர்.

இதில் ஒரு அணியினர் 'தமிழ் கட்சிகளின் அரங்கம்' என்னும் பேரிலும் மற்றைய அணியினர் 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு' ஆகவும் பிரிந்து இருக்கின்றனர்.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சியைத் தவிர அனைவருமே மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்பட்டிருப்பவர்கள் (இவருக்கும் ஒட்டுமொத்த வடகிழக்கு என்ற வகையில் செல்வாக்கு இல்லை).

அதில் சிலரை புதிய தலைமுறையினருக்கு அடையாளம் கூடத் தெரியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொருத்தவரையில் ஒப்பீட்டளவில் பெரும்பாலான வடகிழக்குத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற ஒரேயொரு அமைப்பு என்ற வகையில் அது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

எனவே ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தலைமை என்று சொல்லக் கூடிய தகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே உண்டு.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழர்கள் தொடர்பில் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கின்றது.

ஆனால் அவ்வாறு தூர நோக்குடன் செயலாற்றும் எண்ணம் எதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை வெளிப்படுத்தவில்லை. இனிவரும் காலத்திலாவது த.தே.கூட்டமைப்பு இது தொடர்பில் கவனம் கொள்ள வேண்டும்.

தற்போதைய சூழலில் அரசுடன் இணைந்து போகக் கூடியவற்றில் இணைந்தும் விமர்சிக்க வேண்டியவற்றில் விமர்சனத்துடனும் செயலாற்றும் பொறிமுறை ஒன்று குறித்து த.தே.கூட்டமைப்பு தமது முடிவுகளை பகிரங்கப்படுத்த வேண்டும்.

ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிந்தித்தால் இலங்கையில் தூய எதிர்ப்பு அரசியலின் காலம் முடிந்துவிட்டது.

இங்கு எதிர்ப்பு அரசியல் என்ற கருத்திற்கு பதிலாக அழுத்த அரசியல் என்பதே பொருத்தமாக அமையும்.

தமிழ் கட்சிகளின் அரங்கமும் இலங்கையின் ஒவ்வொரு இடமாக தெரிவு செய்து தேனிலவில் ஈடுபடுவதைவிடுத்து ஆக்க பூர்வமாக ஈழத் தமிழர்களின் எதிர்காலம் தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும்.

பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த ஜனாதிபதி தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டால் மட்டுமே அரசியல் தீர்வு குறித்து பேச முடியும் என்று மிகவும் நுட்பமாக பூமறாங்கை தமிழ்த் தலைமைகள் என்போர் பக்கம் வீசியிருக்கிறார்.

ராஜதந்திர அரசியலில் பூமறாங் தியறி என்று ஒன்றுண்டு.

உலகப்புகழ்பெற்ற சாணக்கிய அரசியல்வாதியென தேர்தல் காலங்களில் அவரது ஆதரவாளர்களால் புகழப்பட்ட இரா.சம்மந்தர் இதனை நன்கு அறித்திருப்பார் என்றே நாம் நம்பலாம்.

இறுதி யுத்தத்தில் போர்க் குற்றங்கள் இம்பெற்றதாக பல மனித உரிமை அமைப்புக்கள் கொழும்மை விமர்சித்த போது இந்த பூமறாங் தியறியையே கொழும்பு நுட்பமாகப் பயன்படுத்தியது.

ஆப்கானிலும், ஈராக்கிலும் என்ன நடந்ததோ அதுவே முள்ளிவாய்காலிலும் நடந்தது என்று கூறி விமர்சித்தவர்களை திருப்பித் தாக்கியது.

இப்போது கொழும்மை நோக்கி பூமறாங்கை தமிழ்த் தலைமைகள் என்போர் வீச வேண்டுமாயின் தமக்குள் ஒன்றுபட வேண்டும்.

ஆனால் ஒன்றுபடாமை என்பதே தமிழரின் நோய் பின்னர் எப்படி திருப்பி வீசுவது.

இதனை கொழும்பு நன்கு அறியும்.

எப்போது இந்த நோயில் இருந்து நம்மால் விடுபட முடியுமென்றால் தலைமை குறித்த ஆசையை விட்டுவிட்டு நமது மக்கள் மீண்டெழ வேண்டும் என்று சிந்தித்து அதனை செயற்படுத்திக் காட்டினால் மட்டுமே அது சாத்தியமாகும்.

குறிப்பிட்ட காலத்திற்காவது அனைவரும் கடந்கால விடயங்களை மறந்து ஒரு இடைக்கால நிபந்தனையின் அடிப்படையில் கூட ஒன்றுபட்டு செயலாற்ற முடியும்.

எல்லாவற்றுக்குமான விடை அரசியல்வாதிகளின் செயற்பாட்டில் இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களோ கேள்விக் குறியுடன்.

இதில் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்கும் ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என்போர்தான்.

அவர்களும் எழுதிக் கொண்டே இருக்கின்றனர் ஆனால் எந்தவொரு ஈழத் தமிழ் அரசியல்வாதியும் அதனை ஒரு கருத்திற்குக் கூட எடுத்ததில்லை. அதிலிருந்து எதனையும் கற்றுக் கொள்ள முயன்றதில்லை.

ஈழத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய, படுத்துகின்ற அரசியல் சக்திகள் அனைவருமே எல்லாமும் அறிந்த சகலகலா வல்லவர்கள்.

அதனால்தான் என்னவோ கடந்த அறுபது வருடங்களாக ஈழத் தமிழ் மக்களின் நலனுக்காக எதனையும் அவர்களால் செய்ய முடியவில்லை.

இனியாவது தமிழ் ஈகோவை விட்டுவிட்டு உருப்படியாக சிந்திக்க முன்வருமாறு பாதிக்கப்பட்டு அனாதரவாக கிடக்கும் மக்களின் பேரால் இந்த கட்டுரை அழைக்கிறது.

http://www.puthinappalakai.org/view.php?20101027102371

மிஸ்டர் சம்பந்தன் குழு, நீங்கள் ஒரு துணை இராணுவக்குழுவாக மாறாமல் பார்த்துகொள்ள இது உதவும்.

அல்லது மக்கள் உங்களை அடித்து உதைப்பார்கள்

பலம்கொண்ட சிறிலங்கா - மக்களை மறந்த ஈழத்தமிழ் அரசியல்வாதிகள்

[ புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 08:42 GMT ] [ புதினப் பணிமனை ]

'புதினப்பலகை'க்காக யதீந்திரா

இதில் ஒரு முப்பது வருடம் கறுப்புக் கொடி, கடையடைப்பு, சத்தியாகிரகம் என்றெல்லாம் நமது தலைவர்கள் சாத்தியமான வகையில் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி இருந்தனர் ஆனால் ஒன்றையும் அடைய முடியவில்லை.

அடுத்த பகுதி முப்பது வருடங்கள் ரைபிளில் தொடங்கி ஏ.கே.47 இற்கு மாறி இறுதியில் ஆட்லரி, விமானப்படையாக விரிவு கொண்டது ஆனாலும் இங்கும் எதையும் நம்மால் அடைய முடியவில்லை.

முதலாவது காலம் ஈழத் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்பதாக நிறைவு பெற்றது.

இரண்டாவது காலம் அந்த நம்பிக்கையைக் கூட விட்டு வைக்காத அளவிற்கு இருண்டகாலமாக இருக்கின்றது.

-- இந்த கட்டுரையாளர் எமது வரலாற்றை 1948க்கு பின்னர் இருந்து ஆரம்பித்துள்ளார். சரி எங்கிருந்தாவது தானே ஆரம்பிக்க வேண்டும்.

-- "இங்கும் எதையும் நம்மால் அடைய முடியவில்லை" - நவீன உலக வரலாற்றில் தமிழனுக்கு உரிமைக்காக போராடியவன் என்ற பெயர் உண்டு. ஆம் இராணுவ ரீதியாக எமது இலக்கான தமிழீழத்தை பெரிய விலை கொடுத்தும் அடைய முடியவில்லை. நாம் அதற்காக முயற்சி செய்யாமல் இருந்திருக்க வேண்டுமா?

-- "இருண்டகாலமாக இருக்கின்றது" - நம்பிக்கை தான் வாழ்க்கை. உலக அரசியல் நேர்கோட்டில் பயணிக்காது. மாற்றங்கள் நிகழும் ஒளி பிறக்கும்.

பலம்கொண்ட சிறிலங்கா - மக்களை மறந்த ஈழத்தமிழ் அரசியல்வாதிகள்

எனவே ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தலைமை என்று சொல்லக் கூடிய தகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே உண்டு.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழர்கள் தொடர்பில் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கின்றது.

ஆனால் அவ்வாறு தூர நோக்குடன் செயலாற்றும் எண்ணம் எதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை வெளிப்படுத்தவில்லை. இனிவரும் காலத்திலாவது த.தே.கூட்டமைப்பு இது தொடர்பில் கவனம் கொள்ள வேண்டும்.

http://www.puthinappalakai.org/view.php?20101027102371

தமிழ் அரசியல்வாதிகள் பலரும் விட்ட பிழைகளால் தான் இளையோர் ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை ஏற்பட்டது. பின்னர் ஆயுதப்போராட்டம் வலுவடைந்த போதும் பலர் ஆதரிக்கவில்லை. இன்றும் "இதில் தமக்கு என்ன இலாபம்" என்றே பல தமிழ் அரசியல்வாதிகள் கேட்டவண்ணம் உள்ளனர்.

தொடர்ந்தும் கூட்டமைப்பினர் "முக்கியமான முடிவுகளை எடுக்க" தமிழர்களால் அவர்கள் தூக்கி எறியப்படலாம் அதற்கு ஒரு நல்ல மாற்று வழி கிடைக்கும் பொழுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.