Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூவின மக்களும் "சிங்களே” என்றே அழைக்கப்படவேண்டும் - இராணுவ அதிகாரியின் கூற்றுக்கு கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூவின மக்களும் "சிங்களே” என்றே அழைக்கப்படவேண்டும் - இராணுவ அதிகாரியின் கூற்றுக்கு கண்டனம்

நவ 4, 2010

இந்த நாட்டின் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய அனைத்து இன மக்களும் "சிங்களே' மக்கள் என்றே அழைக்கப் படவேண்டும் என்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்து தமிழ் அரசியல் தலைவர்களை கொதிப் படையச் செய்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் ஆகியோர் இக்கூற்றை வன்மையாகக் கண்டித்து அறிக்கைகளை விடுத்துள்ளனர். நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேணல் அமரசேகர சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

இக்கூற்றுக் குறித்து செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:

சமூகத்தில் முக்கிய பதவி வகித்தவர்கள் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. இதுபோன்றவர்கள் இருக்கும்வரை நாட்டின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது. இதுபோன்ற சிலரின் கருத்துகளால்தான் இனங்களுக்கிடையே பிளவு ஏற்பட்டு அது ஆயுதப் போராட்டம் வரை நீண்டது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:

”இந்த நாட்டின் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து இன மக்களும் "சிங்களே மக்கள்' என்றே அழைக்கப்படவேண்டும் என்று ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேணல் அமரசேகர கற்றுக்கொண்ட பாடங்களும், அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்த கருத்துத் தொடர்பில் நாம் அதிர்ச்சி அடைந்தோம்.

அரசில் பதவி வகித்த ஒருவர் இத்தகைய குறுகிய நோக்கில் கருத்துகளை வெளியிடுவது அரசுக்கே அவமானத்தையும், அபகீர்த்தியையும் ஏற்படுத்துவதாக அமையும். இத்தகையவர்களால் தான் நாட்டில் அமைதியும், இயல்பு நிலையும், தகர்த்தெறியப்படுகின்றன.

இந்திய வம்சாவளி மக்கள் கோப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், இறப்பர் தோட்டங்கள் ஆகியவை உருவாக்கப்படுவதற்கு முன்னரே இந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில் இந்த நாட்டில் வாழ்ந்துவரும் தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர், சிங்களவர்கள் அனைவருமே வந்தேறு குடிகள்தான் என்ற வரலாற்றை இ.தொ.கா. நினைவுபடுத்த விரும்புகின்றது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கதி

tamils

மக்கள்' என்றே அழைக்கப்படவேண்டும்

tamils

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

.

அதில் என்ன தப்பு...... இராணுவ அதிகாரி சொல்வதே... சரி.

-மாற்றுக் கருத்து மாணிக்கம்-

27 மணித்தியாலத்துக்கு மேல் இணைக்கப் பட்ட இச் செய்திக்கு ஒருவரும் ஆர்வம் காட்டாத மர்மம் விளங்கவில்லை.......

சரி..... களம் சூடு பிடிக்கட்டும். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.