Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் சிங்கள அரச பயங்கரவாதம்

Featured Replies

ஜே.வி.பி.யினர் மீதான தாக்குதல் அரச பயங்கரவாதத்தின் ஒரு வடிவம் - ஜ.ம.மு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் வீட்டில் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருந்த ஜே.வி.பி எம்.பி சுனில் ஹந்துன்நெத்தி உள்ளிட்ட குழுவினர் மீது நடத்தப்பட்டுள்ள வன்முறை தாக்குதல் அரச பயங்கரவாதத்தின் ஒரு வடிவமாகும்.

அத்துடன் இதை ஜே.வி.பி.யை விரும்பாத தமிழ் மக்கள் நடத்திய தாக்குதல் என்று வர்ணிப்பது மக்களை முட்டாளாக்கும் நடவடிக்கையாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியினர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அரச பயங்கரவாதம் தமிழ் மக்களுக்கு புதிய ஒரு விடயம் அல்ல. அதிலும் குறிப்பாக யாழ்பாணத்தில் வாழும் மக்களுக்கு இது பழகிப்போன விடயமாகும். அரச பயங்கரவாதத்தின் மூலமான அனுபவங்களை தமிழ் மக்கள் மறக்க முடியாது.

1971லும், 1989லும் அரச பயங்கரவாதத்தின் தாக்கங்களை அனுபவித்த ஜேவிபி சமீப காலமாக அவற்றை மறந்திருந்தது. தமிழ் மக்கள் உச்சக்கட்ட துன்பங்களை அனுபவிக்கும் போது, அவை ஜே.வி.பி.யினருக்கு வலித்திருக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

எனினும் இந்த கசப்பான உண்மையை மறந்துவிட்டு நாங்கள் நேற்று முதல் நாள் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சகோதரர்களுக்கும் எதிராக யாழ்பாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஜனநாயக மக்கள் முன்னணியையும், தமிழ் மக்களையும் பொருத்தவரையில் நாம் எல்லாவிதமான வன்முறைகளையும் நிராகரிக்கின்றோம்.

வன்முறைகள் மூலமாக ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்க படுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால்  வன்முறைகள் மூலமாக மிக அதிகமான துன்பங்களை சமகாலத்திலே அனுபவித்தவர்கள் நாடுமுழுக்க வாழும் தமிழ் மக்களாகும்.

இந்த வன்முறை சம்பவம் எதிர்காலத்தில் இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அணிதிரள வேண்டும் என்ற அடிப்படை உண்மையை வலியுறுத்தி நிற்கின்றது.

மூலம் : தமிழ் மிரர்

கதறி அழும் தாய்மார்களின் படங்கள் :

http://www.tamilmirror.lk/index.php/component/content/article/87---main/11200-2010-11-15-12-03-43.html

Edited by akootha

  • தொடங்கியவர்

அடக்கு முறைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் - யாழில் சோமவன்ச

நாம் இலங்கையர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் காணாமல் போனவர்கள் மற்றும் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்களை வெளியிடுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கற்கள் வீசப்பட்டன.

யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது  கற்கள், தக்காளிப் பழங்கள், கூழ் முட்டைகள் ஆகியவற்றால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், இந்த ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடந்து முடிந்தது.

இலங்கையில் மக்கள் விரோத ஆட்சியே நடைபெறுகிறது. மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. உரிமைகளுக்காகவும் உண்மைகளுக்காகவும் போராடுகின்ற மக்கள் அடக்குமுறைக்குள்ளாக்கப்படுகிறார்கள். மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக நாங்கள் எப்போதும் குரல் கொடுப்போம். அடக்குமுறை அரசாங்கத்துக்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம் என்று ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று ஜே.வி.பி.யின் ஏற்பாட்டில் நாம் இலங்கையர் என்ற அமைப்பின் பெயரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சோமவன்ச அமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் காணாமற்போனோரின் உறவினர்களும் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் மீட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

காணாமற்போனோரின் உறவினர்கள் காணாமற்போனோரின் புகைப்படங்களையும் அடையாளச் சான்றுகளையும் ஏந்திய வாறு எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் ஆண்டுக்கணக்காக காணாமற்போயிருக்கும் எங்கள் உறவினர்களை எங்களிடம் மீண்டும ஒப்படைக்க வழி செய்யுங்கள் எங்களுக்கான பதிலை அரசாங்கம் சொல்ல வேண்டும் என்ற கோரிக்கைகளைக் கதறி அழுதவண்ணம் விடுத்தனர்.

இதேவேளை எங்கள் சொந்தங்களை மீட்டுத்தாருங்கள் என்ற நீண்ட பதாகையில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் பலரும் கையொப்பமுமிட்டனர்.

இதனையடுத்து இந்தக் அங்கு உரையாற்றிய ஜே.வி.பி.யின் தலைவர் மேலும் கூறியதாவது :- மக்களின் அப்படை உரிமைகள் இன்று மறுக்கப்பட்டிருக்கின்றன. பல பிரச்சினைகள் தீர்வு காணப்படாமலேயே இருக்கின்றன. மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க முடியாத நிலை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது. நாம் இலங்கையர்கள் என்ற நிலையில் இந்த அரசாங்கத்தின் இவ்வாறான அடக்குமுறைப் போக்குக்கு எதிராக போராட வேண்டும்.

தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்ற வேறபாடுகளைக் களைந்து விட்டு நாம் இலங்கையர் என்ற பொது அடையாளத்தோடு அடக்கு முறைக்கு எதிராக அணிதிரள்வோம். நேற்றுக்கூட யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு ஆதரவாகப் போராட முயன்றோரின் மீது அரசாங்கம் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

காணாமற்போனோரின் உறவினர்கள் ஆண்டுக்கணக்காக தங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கான பதிலை அரசாங்கம் கொடுக்கவில்லை. இதையெல்லாம் நாம் அனுமதிக்க முடியுமா? என்று கேள்வியெழுப்பினார்.

இதனையடுத்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உரையாற்றுகையில், மக்களின் ஜனநாயக உரிமைகள் இன்று அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கின்றன. நாடு முழுவதும் அடக்குமுறையின் கீழ் வந்துள்ளது. மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. இதைப்பற்றிப் பேசமுடியாத ஒரு நிலையை அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது. அரசாங்கம் சரியாக நடக்குமானால், எதற்காகப் பயப்பட வேண்டும். அதனால் நாம் நாடுதழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

இதனையடுத்து உரையாற்றிய ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன், காணாமற்போனோரின் பிரச்சினைக்கு எந்தப் பதிலையும் தரத்தயாரில்லாத அரசாங்கம் அதைக் கேட்கும் மக்களை அச்சுறுத்துகிறது. நாம் இலங்கையர் என்ற அடிப்படையில் நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து போராடுவோம். யாழ்பாணத்தில் மக்கள் ஜே.வி.பி.யுடன் இணைந்து போராட ஆயத்தமாகியிருக்கிறார்கள்.

ஆனால், அதைத் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அந்த அடிப்படையிலேயே எங்கள் உறுப்பினர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் ஏற்பாடு செய்து தாக்கி விட்டு மக்கள் தாக்கினார்கள் என்ற சில ஊடகங்கள் மூலம் செய்தியைப் பரப்புகிறது. ஆனாலும் நாங்கள் ஓயமாட்டோம் என்றார்.

இதேவேளை அங்கு உரையாற்றிய ஜே.வி..யின் யாழ். மாவட்ட அமைப்பாளர் வீரராஜ் லலித்குமாரய், நேற்றைய தாக்குதல் அரசாங்கத்தரப்பின் ஏற்பாட்டின்படியே மேற்கொள்ளப்பட்டதுஎன்று குற்றஞ்சாட்டினார்.

மூலம் : தமிழ் மிரர்

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.