Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணடைய வரும் புலிகளை சுடுமாறு உத்தரவிடப்படவில்லை

Featured Replies

எவரும் வெள்ளை,கறுப்புக்கொடிகளுடன் வரவும் இல்லை வழக்கு விசாரணையில் மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வா

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப்புலிகள் பக்கமிருந்து சரணடைய வரும் எவரையும் சுடுமாறு உத்தரவிடப்படவில்லை எனவும் அக்காலப் பகுதியில் எவரும் சுடப்படவில்லை எனவும் அப்போதைய 58 ஆவது படையணியின் தளபதியான, தற்போதைய ஐ.நா.வுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சந்தனசில்வா நேற்றையதினம் இடம்பெற்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணையின்போது சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

வெள்ளைக்கொடியோ,கறுப்புக்கொடியோ எதுவும் காட்டிக்கொண்டு சிவிலியன்கள் வரவில்லை எனவும் அவர்கள் வெறும் கைகளுடனேயே சரணடைய வந்தார்கள் எனவும் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட்டதாகவும் மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்தார்.

வெள்ளைக்கொடி விவகார வழக்கு நேற்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர தலைமையில் எச்.என்.பி.பி.வராவௌ,சுர்பிக்ரஸீன் ஆகியோரடங்கிய ட்ரயல் அட்பார் விசாரணை இடம்பெற்றது.நேற்றைய தினம் முன்னைய இராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வா இரண்டாவது சாட்சியாக அழைக்கப்பட்டிருந்தார்

அவரை முதலில் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் வசந்த நவரட்ண பண்டார விசாரணை செய்தார்.

கேள்வி: நீங்கள் தற்போது என்ன பதவி வகிக்கிறீர்கள்?

பதில்: ஐ.நா.விலிருக்கும் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தில் இரண்டாவது வதிவிடப்பிரதிநிதியாக செயற்படுகிறேன். அத்துடன் ஐ.நா.வின் அமைதிகாக்கும் படையிலும் பணிபுரிகின்றேன்.

கேள்வி: இராணுவத்தில் எப்போது இணைந்தீர்கள்?

பதில்: 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றேன்.

கேள்வி: ஆரம்பத்தில் ஏற்ற பதவி என்ன?

பதில்: 1985 நவம்பர் 16 ஆம் திகதி கஜபா ரெஜிமண்டில் லெப்டினன்டாக சேர்ந்தேன்.அன்று அதன் கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விஜேகுணவர்தன இருந்தார் அப்போது நான் விசேட படையதிகாரியாக நியமனம் பெற்றேன்.அதன் பின்னர் கஜபா ரெஜிமண்ட் யாழ்.குடாநாட்டில் உருவாக்கப்பட்ட "கன்டபா' அதிகாரியாக பொறுப்பேற்றேன்.

அக்காலகட்டத்தில் வடமராட்சி போரில் காயமடைந்து ஒரு மாதகாலம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபின்னர் இராணுவத்தின் நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டேன்.பின்னர் குழுப் பொறுப்பதிகாரியாகவும் நியமனம் பெற்றேன்.அக்காலத்தில் வடபுலத்தில் இடம்பெற்ற சகல போரிலும் பங்கேற்றதோடு ஆனையிறவை மீட்டெடுப்பதில் மும்முரமாகச் செயற்பட்டேன்.

பின்னர் இராணுவ பயிற்சிப் பீடத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டேன்.அதனிடையே பூநகரி முகாமில் இரண்டாவது கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டேன்.

அடுத்த 5 மாதங்களில் ரிவிரெஸ போர் தொடங்கியது. அப்போது யாழ். குடாநாட்டுக்கான பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மீட்கப்பட்டதும் கொழும்புக்கு மாற்றப்பட்டு படை அதிகாரியாக நியமிக்கப்பட்டேன்.

பின்னர் கிளிநொச்சியை மீட்டெடுக்கும் போரிலும் பங்கேற்று அதில் வெற்றியீட்டினோம். இது நடந்தது 1995 அல்லது 1996 என்று நினைக்கின்றேன்.

அதன் பின்னர் ஐயசிக்குறு போரிலும் பங்கேற்றேன்.இடையில் கிழக்கிலும் தரைப்படை அதிகாரியாக செயற்பட்டேன்.

2006 செப்டெம்பர் 13 இல் முகமாலை முன்னரங்கு பாதுகாப்பு வலயத்தில் தளபதியாக நியமிக்கப்பட்டேன். அதன் பின்னர் வன்னி மனிதாபிமான நடவடிக்கையில் செயற்பட்டேன் 58 ஆவது படையணியின் கமாண்டோ படையின் தளபதியாக நியமிக்கப்பட்டேன்.

கேள்வி: வன்னி மனிதாபிமான நடவடிக்கைக்கு நியமிக்கப்பட்டதாக கூறினீர்கள்.

பதில்: ஆம்

கேள்வி: வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக்கட்டத்திலும் 58 ஆவது படையணியின் தளபதியாக இருந்தீர்களா?

பதில்: ஆம்

கேள்வி: 58 ஆவது படையணி புது மாத்தளன் தாக்குதலிலும் பங்கேற்றதா?

பதில்: வன்னி மனிதாபிமான நடவடிக்கையின்போது எனது படைப்பிரிவு மன்னாரிலிருந்து செயற்பட்டது. இடையில் பரந்தன் முகாமை கைப்பற்றும் பணியையும் மேற்கொண்டேன்.புது மாத்தளன் என்பது புதுக்குடியிருப்பின் களப்புக்கு அப்பால் அமைந்துள்ளது. விடுதலைப்புலிகள் தம்வசப்படுத்திக் கொண்டிருந்த அப்பாவித் தமிழ் மக்களை புதுமாத்தளனில் தடுத்து வைத்திருந்தனர்.இதில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் காணப்பட்டனர்.அந்த மக்களை பாதுகாப்பாக மீட்க வேண்டிய பொறுப்பு இராணுவத்திடமிருந்தது.

அகதிகளாக,பணயக்கைதிகளாக இருந்த அந்த மக்களை மீட்கும் நடவடிக்கையை படிப்படியாக முன்னெடுத்தோம். சாதாரணமாக பணயக் கைதிகள் 10,15 அல்லது 50,100 ஆகவே இருக்கும்.இங்கு அப்படியல்ல ஒரு இலட்சத்தையும் தாண்டிய எண்ணிக்கையில் காணப்பட்டனர்.இதன் போது நாம்மேற்கொண்ட நடவடிக்கையை சர்வதேசம் அவதானித்துக்கொண்டிருந்தது.இதனால் எமது முயற்சியை தடுக்கும் நடவடிக்கை எதனையும் சர்வதேசம் எடுக்குமோ எனக் கூட எண்ணினோம்.ஏனெனில் மக்கள் பாதிக்கப்பட்டால் நடவடிக்கையை இடைநிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம் என அச்சம் கொண்டோம்.

கேள்வி: இக்கட்டத்தில் சர்வதேசம் மனித உரிமை மீறப்படுவதாக கூற முற்பட்டதா?

பதில்: இல்லை.மனித உரிமை மீறப்பட்டதாக சர்வதேசம் இன்று வரை கூறவில்லை.

பயங்கரவாதிகள் எதிர்பாராத விதத்தில் மக்களை பாதுகாப்பு டன் மீட்க முடிந்தது.

கேள்வி: 58 ஆவது படையணி இதனை எப்படி சாதித்தது?

பதில்: இரவு ஒரு மணிக்கு தாக்குதலை மேற்கொண்டு மிகக் குறுகிய நேரத்துக்குள் ஒரு இலட்சம் பேரையும் மீட்டெடுத்தது.

கேள்வி: 58ஆவது படையணியின் விசேட நடவடிக்கையாக இதனை காண்கிறீர்களா?

பதில்: நிச்சயமாக அது விசேட அதிரடி நடவடிக்கையாகவே கருதுகின்றேன்.

கேள்வி: வன்னி மனிதாபிமான நடவடிக்கைக்கு பங்களிப்புச் செய்யும்போது இராணுவத்தளபதியாக யார் இருந்தார்.

பதில்: ஜெனரல் சரத் பொன்சேகா

கேள்வி: அதாவது இந்த வழக்கின் பிரதிவாதியாக இருப்பவர்?

பதில்: ஆம்

கேள்வி: வன்னி மனிதாபிமான நடவடிக்கையை 58ஆவது படையணிதான் முன்னெடுத்ததா?

பதில்: ஆம்

கேள்வி: அப்போதும் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாதானா?

பதில்: ஆம்

கேள்வி: இந்த வழக்கின் பிரதிவாதியான சரத்பொன்சேகா இராணுவத்தளபதியாக பதவி வகிக்கும்போது உங்களுடனான உறவு எப்படி இருந்தது?

பதில்: இராணுவத்தளபதியாக இருந்த போது நெருக்கமான உறவு கொண்டிருந்தார்.அந்த நல்லுறவு தொடர்ந்து பேணப்பட்டது.எம்மை ஊக்குவித்தார்.

கேள்வி: ஒருபோதும் பிரச்சினைகள், முறுகல் ஏற்படவில்லையா?

பதில்: இல்லை. அப்படி எதுவும் இடம் பெறவில்லை

கேள்வி: வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக்கட்டம் பற்றி கூறுவீர்களா?

பதில்: 2009 மே மாதம் 18 ஆம் திகதி இறுதி மண்ணை மீட்டெடுத்தோம்.

கேள்வி: உங்களது 58 ஆவது படையணிதான் இறுதி வெற்றியைக் கண்டதா?

பதில்: ஆம், 500 மீற்றருக்குள் எல்லையைக் கட்டுப்படுத்தி வெற்றியை ஈட்ட முடிந்தது. அந்த இறுதி மண்ணை மீட்டெடுத்ததும் அதனை உடனடியாகவே இராணுவத் தளபதிக்கு அறிவித்தோம்.

அப்போது அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எமக்கு வாழ்த்துக் கூறினார். எம்முடன் இருந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் குணரத்ன ஆகியோருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.

கேள்வி: அது 18 ஆம் திகதி.

பதில்: ஆம், மண்ணை மீட்ட சில மணிநேரத்தில்.

கேள்வி: வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் இறுதி இரண்டு வாரத்தில் பிரதிவாதியான அன்றைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டில் இருந்தாரா?

பதில்: இறுதிக் கட்ட நாட்களான மே மாதம் 11 அல்லது 12 ஆம் திகதி அவர் வெளிநாடு சென்றிருந்தார். ஆனால், 17 ஆம் திகதி இரவு நாடு திரும்பினார்.

கேள்வி: 17 ஆம் திகதி தான் நாடு திரும்பினாரா?

பதில்: எனது நினைவின் படி 17 ஆம் திகதி இரவு நாடு திரும்பினார்.

கேள்வி: இந்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது ஊடகங்களும் இணைந்திருந்தனவா?

பதில்: ஆம், சில ஊடகங்கள் இறுதிவரை இருந்தன. சில இடையிடையே வந்து போயின. ஒருசில ஊடகங்கள் காலையில் வந்து மாலையில் சென்றுவிட்டன. இவர்கள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சினதும் இராணுவத் தளபதியினதும் அனுமதியுடனேயே வந்தன.

கேள்வி: பாதுகாப்பு அமைச்சினாலும் இராணுவத் தளபதியினாலும் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமா செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டனர்?

பதில்: பாதுகாப்பு அமைச்சு அனுமதித்து அனுப்பும் பெயர்ப்பட்டியல் எமக்கு வரும். அதேபோன்று இராணுவத் தலைமையகத்திலிருந்தும் வரும். அதில் குறிப்பிடப்பட்டவர்களைத் தவிர வேறு எவருக்கும் நாம் அனுமதிப்பதில்லை.

கேள்வி: அந்த ஊடகங்கள் எவை என அறிவீர்களா?

பதில்: பாதுகாப்பு அமைச்சு, இராணுவத் தலைமையகம் என்பன அனுமதித்தவைகளே வர முடியும். குறிப்பாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் முழுமையாகச் செயற்பட்டது. அதேபோன்று சுயாதீன தொலைக்காட்சி (ஐகூN) பின்னர் வந்தது. அதேபோன்று ஏனைய ஊடகங்களும் இடையிடையே வந்து சென்றன.

கேள்வி: வன்னி மனிதாபிமான நடவடிக்கை இறுதிக் கட்டத்தில் சரணடைவது இடம்பெற்றதா?

பதில்: இறுதிக் கட்டத்தில் சரணடைவது இடம்பெற்றது. முதலில் பெண்புலி உறுப்பினர் ஒருவர் சரணடைந்தார். அடுத்து காயமடைந்த நிலையில் மற்றொரு பெண் புலி உறுப்பினர் சரணடைந்தார். அவரை உடனடியாக சிகிச்சைக்காகக் கொழும்புக்கு விமானம் மூலம் அனுப்பினோம். பின்னர் மூன்றாவதாக ஒரு ஆசிரியை சரணடைந்தார் அவர் அரசாங்க பாடசாலை ஆசிரியர். ஆனால், புலிகளுக்கான கல்வி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டவர். அதனைத் தொடர்ந்து சரணடையும் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது.

கேள்வி: அப்படி சரணடைந்தவர்கள் புலிகளா?

பதில்: ஆம்.

கேள்வி: வன்னி மனிதாபிமான நடவடிக்கையில் சரணடைந்தோர் புலிகள் மட்டுமா?

பதில்: இல்லை, பொதுமக்களும் காணப்பட்டனர். இறுதிக் கட்ட யுத்தத்தில் புலிகளால் வெற்றியீட்ட முடியாது என்று கருதியதால் சரணடைய முன்வந்தனர்.

கேள்வி: சரணடையும் போது வெள்ளைக் கொடி ஏந்திவந்ததாகக் கூறப்படுவதில் உண்மையுண்டா?

பதில்: வெள்ளைக்கொடியோ, கறுப்புக் கொடியோ எவரும் ஏந்தி வரவில்லை. வெறும் கையுடனேயே வந்தார்கள். யார் வந்தாலும் எப்படி வந்தாலும் அவர்களை ஏற்பதே எமது செயற்பாடாக இருந்தது.

கேள்வி: பொதுமக்களுடன் புலிகளும் வந்தார்களா?

பதில்: ஆம். புலிகளும் சிவிலியன்களும் வந்த வண்ணமே இருந்தனர்.

கேள்வி: அவர்களை இராணுவம் பொறுப்பேற்றதா?

பதில்: ஆம். அவர்களை பொறுப்பேற்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தோம்.

கேள்வி: அச்சந்தர்ப்பங்களில் எப்போதாவது இராணுவம் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதா?

பதில்: இல்லை. எமக்கு அத்தகைய உத்தரவு கிட்டியிருக்கவில்லை. நாம் அன்று மனிதாபிமான நடவடிக்கையையே மேற்கொண்டோம். பயங்கரவாத புலிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதே எமது பிரதான பணியாக இருந்தது.

சரணடையவருவோர் மீது எந்தவிதமான இறப்புகளும் இருக்கக்கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார். அதன் படியே நாம் நடந்துகொண்டோம்.

கேள்வி: சரணடைய வந்த புலிகளையும் ஏற்றீர்களா?

பதில்: ஆம். பொதுமக்களுடன் புலிகளையும் ஏற்றோம்.

கேள்வி: திரும்பி சரணடைய வருவோர் அனைவரையும் எவ்வாறு நடத்தினீர்கள்.

பதில்: திரும்பி வரும் அனைவரையும் மக்களாகவே பார்த்தோம். முதலில் ஒவ்வொருவருக்கும் ஒரு தண்ணீர் போத்தல் கொடுத்தோம். அடுத்து காயப்பட்டவர்களுக்கு முதற்சிகிச்சையளித்தோம். அதனையடுத்து அனைவருக்கும் உணவு வழங்கினோம்.

இந்த நிலையில் பகல் 12.30 மணியளவில் வழக்கு விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=1275:2010-11-16-00-21-37&catid=34:hotn-news&Itemid=99

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.