Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா

Featured Replies

கணினிப் பயன்பாட்டில் தமிழ் மொழியின் எழுத்துக்களை ஒரே மாதிரியாகப் பயன்படுத்த "TAMIL ALL CHARACTER ENCODING 16" மென்பொருளில் ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ என்னும் (வடமொழி) கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதை முதலில் கவனிக்காமல் இருந்துவிட்டு, அப்புறம் ஏன் இப்போது பின்வாங்குகிறார் முதல்வர்

கருணாநிதி" என்று கேட்கிறது ஒரு குரல்!

ஆகா...! முதல்வர் காலம் க்டந்தாவது தமிழ் குறித்து நல்லறிவு பெற்று, எதிர்க்கவேண்டிய வடமொழி எழுத்துகளை எதிர்திருக்கிறாரே என்று களிப்பேருவகை அடைந்தோம்!

கருணாநிதி மத்திய அரசுக்கு எழுதிய மடல் ஏகெனவே தமிழ் ஒருங்குறியில் உள்ள, ஜ, ஷ,

க்ஷ, ஸ, ஹ என்னும் ஐந்து எழுத்துகள் குறித்தவை அல்லவாம். இவைபோல் இன்னும் 26 கிரந்த எழுத்துக்களைத் தமிழ் ஒருங்குறியில் சேர்க்கவேண்டும் என்கிறார்களாம் டெல்லியில். அது குறித்துத்தான் கருணாநிதி, அதுவும் "யோசித்து முடிவெடுக்கலாம்" என்று தயவாகத்தான் எழுதி இருக்கிறாராம்!.

ஜ, ஷ போன்ற ஏந்து கிரந்த எழுத்துகள் ஏற்கெனவே இருந்து வருபவை என்பதால்,

கருணாநிதியும் அவர் வைத்திருக்கிற தாள வாத்தியத் தமிழறிஞர்களும் அதை எதிர்க்காமல்

மறந்திருப்பார்கள் போல.

2500 ஆண்டுகளுக்கு முன்னர் வடமொழி எதிர்ப்பு இயக்கத்துக்குத் தலைமை ஏற்றவன் தொல்காப்பியன்!

இந்த எழுத்துகள் எந்தக் காலத்திலும் தமிழால் ஏற்கப்படவில்லை. பல்லுக்குள் மாட்டிக்கொண்டுவிட்ட தேவையற்ற சக்கைகளை நாக்குத் துழாவி வெளியே தள்ளிவிடுவது போல, தமிழ் இந்த வட மொழி வல்லோசைகளைக் காலங்காலமாக வெளியே தள்ளிக்கொண்டுதான் இருக்கிறது! ஆனால், வடமொழி வழக்கிழந்து 2000 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அதனுடைய ஆக்கிரமிப்பு முயற்சி மட்டும் ஓயவில்லை!

ஜ, ஷ, க்ஷ், ஸ, ஹ போன்ற ஓசைகள் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு வருபவை!

அப்படி அடிவயிற்றில் இருந்து மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசுவதற்குத் தமிழன் உடன்படவில்லை.

மூச்சை இழுப்பதும் விடுவதும் எப்படி எந்த முயற்சியுமின்றி இயல்பாக நடக்கிறதோ, அப்படியே பேசுவதற்கும் எந்தப் பாடும் கூடாது என்று கருதியே மொழியை வடிவமைத்தான் தமிழன்!

ஜ, க்ஷ என்பன போன்ற எழுத்துகளின் மீது நமக்கு உள்ள பகைக்குக் காரணமே, அந்த ஓசைகளோடு நம்முடைய மொழிக்கு உள்ள பொருந்தாமைதான். அந்த ஓசை தமிழின் அடிப்படைக்கு மாறானது என்னும்போது, அந்த எழுத்துகள் த்மிழுக்கு எதற்கு?

ஒருவேளை தவிர்க்க இயலாமல் வட சொற்கள் தமிழுக்குள் நுழையும் நிலை ஏற்பட்டால், செருப்பைக் வெளியே விட்டுவிட்டு வருவதுபோல, வடமொழி தனக்குரிய ஓசையை களைந்துவிட்டுத் தமிழோசையை ஏற்றுக்கொண்டுதான் தமிழுக்குள் நுழையவேண்டும் என்று கட்டளை விதித்தான் தொல்காப்பியன்! "வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ" என்பது அவனுடைய கட்டளை நூற்பா!

கம்பன் கையைக் கட்டிக்கொண்டு தொல்காப்பியனுக்கு கட்டுப்பட்டானே! விபீஷணனை வீடணன் என்றும் லக்ஷ்மணனை இலக்குவன் என்றும் மாற்றிவிட்டானே!

என்னுடைய தாயார் "ஜனங்கள்" என்று சொல்ல மாட்டார்கள்..."சனங்கள்" என்றுதான் சொல்லுவார்கள்.

பஸ் ஸ்டாண்டு என்று சொல்ல வராது; "காரடி" என்பார்கள்.

ஒரு நாள் தாயாரிடம் கேட்டேன்: "ஏன் ஆத்தா! காரடியை எப்படி கண்டுபிடித்தாய்?"

தேர் நிற்கிற இடம் தேரடி என்றால், கார் நிற்கிற இடம் காரடிதானே? என்றார். அவர் 78 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். ஒரு நாள் ஒரு பொழுதுகூட ஜ, க்ஷ, ஷ-வை எல்லாம் அவர்களின் நாக்கு உச்சரித்தது இல்லை. எல்லாத் தாய்மார்களும் இப்படித்தான்!

அப்படியானால், யாரின் தேவையை நிறைவு செய்ய இந்த ஐந்து கிரந்த எழுத்துகளையும்

எதிர்க்காமல் முதல்வர் கருணாநிதி விட்டுவிட்டார்? "அவை பழகிவிட்டன; முன்பே உள்ளன" என்கிறார்.

தஞ்சை தமிழ்ப்பல்கலை கழகத் துணை வேந்தர் இராசேந்திரன்! யாருக்கு பழகிவிட்டது?

தொல்காப்பியனுக்கா? வீதியிலே கீரை விற்றுக்கொண்டு போகிறாளே முனியம்மா... அவளுக்கா?

தொல்காப்பியப் பூங்கா என்னும் நூலைக் கருணாநிதிதானே எழுதினார்? தமிழுக்கு அவன் போட்ட சட்டங்கள் கருணாநிதிக்குப் பிடிபடாதவையா?

ஜ, க்ஷ போன்ற ஐந்து கிரந்த எழுத்துகளையே வெளியே தள்ளு என்றால், மேற்கொண்டு 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்கிறதே ஒரு கூட்டம்! இது எவ்வளவு பெரிய சதி?!

தமிழுக்கே உரித்தான எ, ஒ, ழ, ற, ன ஆகிய எழுத்துக்கள் வேறு எந்த மொழிக்கும் இல்லாத

காரணத்தால், இந்த எழுத்துகளை மட்டும் கிரந்தத்தில் அப்படியே சேர்த்துக்கொண்டு, மீதி

தமிழை ஒழித்துவிடலாம் என்று கருதுகிறார்கள்!

தமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்தையும், தேவநாகரி எழுத்தில் எழுதினால் என்ன என்று கேட்டவர்களை எதிர்கொள்ள என்று அண்ணா இருந்தார்!

அந்த முயற்சி தோற்றுவிட்டது. இன்று தெய்வத் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தையும் கிரந்த எழுத்துக்களில் எழுத, அடுத்த சதி தொடங்கிவிட்டது!

சமக்கிருதம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய செம்மொழிகள் அனைத்தும் செத்துவிட்டன...தமிழ்

மட்டும் வாழ்வதா என்று பொறாமைக்காரர்கள் நினைக்கிறார்கள்!

ஐந்து கிரந்த எழுத்துகளான ஜ, க்ஷ உள்ளிட்டவற்றை முதலில் ஒழிக்கவேண்டும். அடிப்படையைத் தகர்த்துவிட்டால், அதற்கு மேல் முயற்சி எடுக்க மாட்டார்கள் அல்லவா!

தொடக்கப் பள்ளி தொடங்கி ஒருங்குறி மென்பொருள் வரை அனைத்திலும் தொல்காப்பியம் சுட்டாத எழுத்துகளைச் சுட்டுவிட வேண்டும்.

அதிகாரம் என்பது எதற்கு? குடும்பத்துக்கு வேண்டியதைச் சேர்த்து, பல தலைமுறைக்குப்

பாதுகாப்பு உண்டாக்க மட்டும்தானா?

நன்றி: ஜுனியர் விகடன்

ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ என்னும் (வடமொழி) கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதை ...

நன்றி: ஜுனியர் விகடன்

யூனியர் சூனியர் விகடன். முதலில் ஜூனியர் விகடனின் பெயரை மாற்ற இயலுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

யூனியர் சூனியர் விகடன். முதலில் ஜூனியர் விகடனின் பெயரை மாற்ற இயலுமோ?

இந்திய சஞ்சிகைகளைகளைப் பார்த்தால் அரைவாசி ஆங்கில எழுத்துக்களும், கிரந்த எழுத்துக்களுமே ஆக்கிரமத்திருக்கும்.

இதில் ஊருக்கு உபதேசமும், செம் மொழி மாநாடு நடத்தி தமது புகழ் பாடவுமே தமிழக பத்திரிகைத்துறையும், அரசியல் வாதிகளும் லாயக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

யூனியர் சூனியர் விகடன். முதலில் ஜூனியர் விகடனின் பெயரை மாற்ற இயலுமோ?

நல்ல கேள்வி குருயி, நானும் கூடியவரை இவ் எழுத்துக்களை தவிர்க்க வேண்டும். :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்வி குருயி, நானும் கூடியவரை இவ் எழுத்துக்களை தவிர்க்க வேண்டும். :D

குருயி..... !!!

நல்ல ஆரம்பம் சுவி.28.gif10.gif :D

குருji,

இங்கு "ஜி" யை தவிர்த்து "ji" ஐ புகுத்துவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? juனியர் விகடன். இப்படி எழுதினால் என்ன? எமக்கு தமிழில் தேவைவரும்போது ஆங்கில உச்சரிப்பை வெளிப்படுத்துவதே பெரும்பாலான சமயங்களில் பிரச்சனையாக காணப்படுமானால்.. இதர இந்திய மொழிகளை புகுத்தாமல் நேரடியாக தமிழையும், தேவைவரும்போது ஆங்கில எழுத்துக்களையும் சேர்த்து எழுதலாமோ? :D

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

குருவே! (இது நல்லாயிருக்கு) "யி" யும் கிந்திக் காரர்களின் "ஐயா" போன்ற சொல்தானே.

எதுக்கு பாம்பின் வாயில தப்பி முதலை வாயிலை விழுவான்.எப்படியாயினும் சுமை சுமைதானே. முடிந்தவரை அதற்குரிய வேறு நல்ல தமிழ் சொல்லை பயன்படுத்தலாம் . எனக்கும் எழுத kasdam சிரமம்தான் ஆயினும் முயற்சி செய்கிறேன். ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும்,தமிழை தமிழாகவும் பாவிப்பம்.

இங்கிலாந்துக்கு பக்கத்து நாடுகளான பிரான்சு,யேர்மனி, மற்றைய நாடுகளிலும் விளம்பரங்களோ, அன்றி தெரு வழிகாட்டிகளோ கூட ஆங்கிலத்தில் கிடையாது. இங்கெல்லாம் ஆங்கிலம் பேசி ஒரு உப்புகூட வாங்க முடியாது.

எமது இன வளர்ச்சிக்கு நிச்சயம் ஆங்கிலம் தேவை, அதை ஆங்கிலமாகவே படிப்போம்,கதைப்போம்.

எமக்கு கிண்டல் போன்ற விடயங்களில் ஆங்கிலம் கலக்காவிடில் சுவையிராதுதான். :rolleyes:

குருji, பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகிய கதையாக போகுமோ என்று சற்று யோசனையாக உள்ளது. நான் தமிங்கில முறையை பயன்படுத்தியே தமிழில் எழுதுவது. தமிங்கில முறையில் வடமொழி எழுத்துக்களை தமிழ்போலவே இலகுவாக எழுதக்கூடிய வசதி காணப்படுகின்றது. s + a = ச s + h + a = ஷ வருகின்றது. தனித்தமிழில் எழுதுவது என்பது ஓர் சவால்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

--------

இங்கிலாந்துக்கு பக்கத்து நாடுகளான பிரான்சு,யேர்மனி, மற்றைய நாடுகளிலும் விளம்பரங்களோ, அன்றி தெரு வழிகாட்டிகளோ கூட ஆங்கிலத்தில் கிடையாது. இங்கெல்லாம் ஆங்கிலம் பேசி ஒரு உப்புகூட வாங்க முடியாது.

-------

ஒவ்வொரு நாட்டவரின் மொழிப் பற்றை காட்டுவதற்கு, மேலே... சுவி கூறியது நல்ல ஒரு உதாரணம்.plus_green_24.gif

தமிழர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய தமிழக தமிழர்கள் ஆங்கில மோகம் கொண்டு அலைவது வேதனைக்குரியது.

"யி" யும் கிந்திக் காரர்களின் "ஐயா" போன்ற சொல்தானே.

புரியவில்லை. ஐயா ஓர் தமிழ்ச்சொல் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா என்பது சுத்தமான தமிழ் சொல்தான்.

நான் உதாரணத்துக்கு சொன்னது: காந்தி ஜி , நேரு ஜி , பாலா ஜி போன்றவை . இதில் வரும் ஜி மரியாதையை குறிக்கும் சொல் குருவே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.