Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழரின் சிந்தனையும் செயல் பாடும் !

Featured Replies

இன்று முக்கியத் தேவை தெளிவான சிந்தனையும் திட்டமிட்டச் செயல் பாடும்.

இதில் கொள்கை ஒரு முகமாகவே இருந்தாலும் சிந்தனைத் தெளிவு இல்லாமல் பலமுகச் சிந்தனைக் கருத்துக்கள் உலவி வருகின்றன, ஐந்து விரல்கள் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை,ஆனால் அவை ஒன்றாக மூடி இணையும் போது உள்ள ஆற்றல் தனித்தனியே வருமா? ஒரு முறை நன்றாக விரல்களை மூடி, இருக்கமாக மூடிப் பார்த்து விட்டு உருக்கமாகச் சிந்திப்போம்.

தமிழ் ஈழத்திலே மக்களின் துன்பங்கள்,வேதனைகள் நம்மை வெட்கத்திற்கும்,சொல்ல முடியாத துன்பத்திற்கும் ஆளாகி விட்டுள்ளது.

ஒவ்வொருவரும் ஏதவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் செயல் பட வேண்டுமே தவிர ந்ம்மால் என்ன முடியும் என்று சோர்வடைவதிலோ, செய்பவர்களை அது சரியில்லை,இது சரியில்லை என்று குறை பேசுவதிலோப் பயனில்லை.

தமிழ் மக்களை "பயங்கரவாதிகள்" என்ற ஒரு வார்த்தையை உலகெங்கும் ஊன்றி விதைத்து உலகத்தையே தமிழினத்திற்கு எதிராகச் சிங்களப் பயங்கரவாதம் ஏமாற்றி விட்டது.இது வரை நிகழாத ஒன்றாக அமெரிக்க,ருசியாவும், சீனாவும் இந்தியாவும்,இசுரேலும் ஈரானும்,பாகிச்தானும் மற்ற நாடுகளும் சேர்ந்து ஏராளமான உதவிகளைத் தனக்குச் செய்ய வைத்த சிங்கள சாணக்கியம் உலகை நன்கு ஏமாற்றி விட்டது.

ஆம்! நாம் ஏமாந்து விட்டோம். நமக்கு ஆதரவளித்த சில நல்ல இதயங்களால் நமது மக்களைக் காப்பாற்ற முடிய வில்லை. இப்போதும் இலங்கை அமர்ந்துள்ள இடத்தின் முக்கியத்துவத்தால் உலகம் அங்கே காலூன்றத்தான் பார்க்கின்றதே தவிர உண்மையான மனித நேய்த்துடன் இனவாத அரசைக் கண்டிக்க முன வரத் தயாராக இல்லை என்பதே கசப்பான உண்மையாகும்.இந்த நிலையிலே நமக்கு ஒரு அடிப்படை சிந்தனைத் தெளிவு வேண்டும்.

அந்தந்த நாடு அதனதன் பொருளாதார மற்ற வளர்ச்சிகளுக்குத்தான் முக்கியம் தருவார்களேயன்றித் தமிழருக்காக என்று அவர்களுக்கு வசதியில்லாத்தைச் செய்ய முன் வரமாட்டார்கள்.

சீனாவின் ஆழமான,அழுத்தமான இலங்கைத் தழுவல் ஏனைய நாடுகளைச் சிந்திக்க வைக்கும்,ஆனால் செயல் பாடுகள் அவரவர் நலனுக்காகத்தான் ஏற்றபடி நடக்கும்.

இந்தியா எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழீழம் அமைக்க உதவாது. தமிழ் நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் புது டில்லியின் கைப்பாவையாகத்தான் செயல் பட முடியும். தமிழகத்தின் தனிப்பெருந் தலைவராக இருந்த எம்.ஜி,ஆராலேயே அன்று ராஜிவ் காந்தியின் அடாவடித்தன சிறைவைப்பையோ, உடன் பாட்டின் கட்டாயக் கையெழுத்தையோ தடுக்க முடியவில்லை என்பது மறக்க முடியாத உண்மை நிலை.

வெறும் பேச்சினால் எதையும் சாதித்துவிட முடியாது என்பது நாம் கண்டறிந்த உண்மை.

இன்றைய அரசியல் சூழ் நிலையில் நமது சிந்தனைத் தெளிவாக நாம் ஒத்துக் கொள்ள வேண்டிய எண்ணங்கள் என்ன ?

உலக மக்களை நமது நிலையை நன்கு புரிந்து கொள்ள வைக்க வேண்டும்.தமிழர்கள் "பயங்கரவாதிகள்" அல்லர். இலங்கை இனவாத அரசுதான் உண்மையானப் "பயங்கரவாதிகள்" என்பது வெளியே வர வேண்டும்.

தமிழர்கள் இன அழிப்பில் தங்கள் அனைத்து உடைமைகளையும்,உரிமைகளையும் இழந்து விட்டனர் என்பதைப் புரிய வைக்க வேண்டும்.

நம்முடைய உள்ளக் கருத்துக்கள் உள்ளத்தின் அடியிலேயே உறங்காமல் இருக்கட்டும். உதட்டிலேயிருந்து வருவது உலக மக்களுக்காக இருக்கட்டும்.

இன்று நமது ஆக்கபூர்வமானச் செயல் பாடுகள் என்னவாக இருக்க முடியும் ?

ஆங்காங்கே உள்ள தமிழ்,தமிழர் அமைப்புக்களுக்கு நமது செயல் பாடுகள் நன்றாகத் தெரிய வேண்டும்.நிலவும் குழப்பங்கள் தெளிவு படுத்தப் படவேண்டும். அமைப்புக்களில் பங்கேற்காத பலருக்கு நமது வீட்டு நிகழ்ச்சிகள், விழாக்களில் கலந்து கொள்ளும் போது நடப்பதை நேர்மையாக எடுத்துரைத்து ஆதரவைக் கோர வேண்டும். இதில் பங்கேற்பதால் அவர்களுக்கு எந்த விளைவுகளும்

நேராது என்ற மனத்திடத்தை வலியுறுத்த வேண்டும்.நாம் செய்யும் அனைத்தும் சட்ட திட்டங்களுக்கு நன்கு வரையறுக்கப்பட்டச் செயல்கள் , இதனால் எந்தத் தொந்தரவும் இல்லை என்பதை நன்கு எடுத்துரைக்க வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் கட்டாயமாகத் தமிழீழத்திலே வாழும் ஒரு குடும்பத்தையாவது வாழவைக்க உதவி செய்ய வேண்டும்.அதற்கான தேர்ந்தெடுத்த அமைப்புக்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.

உலக அளிவிலே இன்று உலகத் தமிழர் அமைப்பு (Global Tamil Forum), அதன் அங்கங்கங்களாக அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுச் செயல் படும் இயக்கங்கள் USTPAC, BTF,CTC,ATC etc.முன்னின்று செயல்படுகின்றன. அடுத்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசு. (Trans NationalGovernment of Tamil Eelam ).இதன் செயல் பாடுகள் பலருக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை.

நாம் என்ன சாதித்துவிட முடியும் என்ற அய்யப்பாட்டிலேயே தான் இருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே பதில், அப்படி நினைத்தால் இலங்கை அரசு ஏன் அதைப் பற்றிக் கவலைப் படுகின்றது? என்பது தான். நன்கு சிந்தித்துப் பல சட்ட வல்லுனர்களின் ஆலோசணையின் பேரிலே அமைக்கப் பட்டதுதான் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு.

ஆகவே இந்த இரண்டு அமைப்புக்களும் நன்கு உழைக்க அதன் அங்கங்கள் சரியாகத் திட்டமிட்டுச் செயல் பட வேண்டும்.அப்போதுதான் நமது கருத்துக்கள் வெளி உலகத்திற்கும்,முக்கிய அரசுகளுக்கும் சென்றடைய முடியும்.

இந்த அமைப்புக்களின் செயல் பாட்டிற்கு முக்கியத் தேவை நமது உழைப்பும், பொருளாதாரமும். பல துறை வல்லுனர்கள் இன்னும் ஒதுங்கியே இருப்பது ஏன் என்று அவர்களிடமே நேரே பேசி அறிய வேண்டும், தங்கள் பெயர் வெளியே வரவேண்டாம் என்று பல காரணங்களுக்காக நினைப்பவர்களின் எண்ணத்தை ஏற்று மதித்து அவர்களின் உதவிகளை ஏற்றுக் கொள்ளும் வழி வகைகளில் செயல் பட வேண்டும். தங்களின் அரிய உழைப்பை அல்லும் பகலுந்தந்து வருவோரை ஆதரித்து அவர்களுக்கு நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்று ஒவ்வொரு தமிழரும் ஈடுபட வேண்டும்.

வெறும் இணையத்தில் எழுதிவிட்டு நான் சாதனை படைத்து விட்டேன், என் கடமை இது தான் என்று எண்ணுவது நகைப்புகுறியது.நல்ல கருத்துக்களை ,நல்ல முறையில் சொல்லுங்கள். ஆனால் அதோடு உங்கள் கடமை முடிந்து விட்டதாக எண்ணாதீர்கள்.

பொருளாதார உதவியின்றி எந்த அமைப்பும் செயல் பட முடியாது என்பதைச் செயலில் காட்டுவோம்.

இலங்கப் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம் மெல்ல மெல்ல வெற்றி கண்டு வருகிறது.நமது ஆதரவு உலகெங்கும் அந்தந்த நாட்டு மக்களை இணைத்துப் போராடுவதில்தான் உள்ளது.

சிறப்பாகச் செயல் படுவோம். வெற்றி நமதே என்ற உள்ளுணர்வோடு செயல் படுவோம்.

- USTPAC

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.