Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழ்க் குழுக்களின் ஊடான சிங்கள தேசத்தின் போர் வியூகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ்க் குழுக்களின் ஊடான சிங்கள தேசத்தின் போர் வியூகம்!

Posted by: on Nov 24, 2010

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தை நிர்மூலமாக்கியாகிவிட்டது. போர்க் களத்தில் நின்று போர் புரிந்த விடுதலைப் புலிப் போராளிகளை அழித்தாகிவிட்டது.

சிங்கள இனவாதத்திற்கு எதிராகச் செயற்படக் கூடியவர்கள் என்ற சந்தேகிக்கப்படும் அனைவரையும் முடிந்தவரை தேடிப் பிடித்துக் கொன்றாகிவிட்டது. தப்பிப் பிழைத்த தமிழ் மக்களை முள்வேலி முகாம்களுக்குள் முடக்கி, சித்திரவதைகளுக்குள்ளாக்கி அவர்களது மனோ பலத்தைச் சிதைத்தாக்கிவிட்டது. சிங்கள அரசு எதிர்பார்த்த சிங்கள பௌத்த சிறிலங்காவிற்குள் ஈழத் தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்டாகிவிட்டது.

எல்லாவற்றையும் பக்காவாகச் செய்து முடித்து, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுடன் தமிழர்களின் வாழ்விட எல்லைகளையும் அழித்துவிட்டு, ஈழத் தமிழர்களை நிரந்தர அடிமைகளாக ஆக்கும் சிங்கள தேசத்தின் சதித்திட்டத்திற்கு இடைஞ்சலாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழ் மக்கள் மட்டுமே. சிங்கள அரசின் தற்போதைய இலக்கு புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத் தமிழர்களது பலத்தைச் சிதைப்பதாகவே உள்ளது.

புலம்பெயர் தமிழீழ மக்களது பலத்தைச் சிதைப்பதானால்,

1. தேசியத் தலைவர் அவர்களது இருப்பை மறுதலிக்கும் சிந்தனையை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2. தாங்கள் தோற்றுவிட்டதாகவும், தமது தாயகக் கனவு சாத்தியமற்ற வகையில் கலைந்து விட்டது. அதனால், அது பற்றிப் பேசுவதையும் விட்டுவிட்டு சிங்கள இனவாதத்திற்குட்பட்டு சமரசமாக வாழ முயற்சிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வரவேண்டும்.

3. சிங்கள தேசம் இனி ஒரு போதும் வெல்ல முடியாத பலம் பொருந்திய சக்தி. அதனை எதிர்த்துப் போராடுவது சாத்தியமற்றது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

4. விடுதலைப் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பு மீதான நம்பிக்கையைத் தகர்க்கும் வகையிலான தமது பிரச்சாரங்களை ஏற்றுக்கொண்டு அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.

இந்த நான்கு கட்டங்களிலான நடவடிக்கைகள் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் முழுமையாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. சிங்கள தேசம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடிக்க ஒட்டுக் குழுக்களையும், கருணா குழுவையும், ஆனந்தசங்கரியையும் பயன்படுத்தியதோ, அது போலவே புலம்பெயர் தேசங்களிலும் பல குழுக்களை உருவாக்கி, அவற்றைப் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் செயல்படுவதற்கான அத்தனை வளங்களையும் அள்ளிக் கொடுத்து வருகின்றது.

தேசியத் தலைவர் அவர்களது இருப்பை மறுதலிக்கும் முதல் நடவடிக்கை கே.பி. மூலமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, கே.பி.யின் நிதி வழங்கலுடன் செயற்படும் தமிழ்த் தொலைக்காட்சி முற்று முழுதாகப் பயன்படுத்தப்பட்டது. நினைக்கவே நடுக்கும், கேட்பதற்கே சகிக்காத, சொல்வதற்கே நா எழாத சிங்கள தேசத்தின் பரப்புரையை கச்சிதமாகவே மேற்கொண்டது.

ஆனாலும், புலம்பெயர் தமிழர்களது தேசியப் பற்றும், தேசியத் தலைவர் மீதான நேசித்தலும் கே.பி. மீது திரும்பியது. கைக்கு எட்டாத தொலைவில் இருந்து கொண்டு, சிங்கள தேசத்தின் பரப்புரையைப் பிரதிபலித்த கே.பி. மீதான கோபம் அவரது ஊடகமான தமிழ்த் தொலைக்காட்சி மீது திரும்பியது. சில நாடுகளில் தமிழ்த் தொலைக்காட்சி கட்டமைப்புக்கள் மீது மக்களால் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் அதிர்ந்து போன தமிழ்த் தொலைக்காட்சி தான் ஒளிபரப்பிய தேசியத் தலைவர் குறித்த அறிவித்தலை நிறுத்தியதுடன், அதற்காகப் புலம்பெயர் தமிழர்களிடம் மன்னிப்பும் கோரித் தன்னை அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டது.

அதன் பின்னரும், புலம்பெயர் நாடுகளில் கே.பி. ஊடாக சிங்கள அரசுக்கான முகவர்களாக நியமிக்கப்பட்ட சிலர் தேசியத் தலைவர் அவர்களது இருப்புக் குறித்த மறுதலிப்புக்களை வெளியிட்டு வந்த போதும், அவை புலம்பெயர் தமிழர்களால் நிராகரிக்கப்பட்டதனால், தேசியத் தலைவருக்குப் பால் வார்க்கும் அவர்களது திட்டங்களும் முறியடிக்கப்பட்டது.

தோற்றுவிட்ட இனமாகத் ஏற்றுக்கொண்டு சிங்கள தேசத்தை அண்டி வாழ்தல் மட்டுமே சாத்தியம் என்ற பஅவர்களது இரண்டாவது இலக்கு பல முனைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சிங்கள தேசத்தினால் ஈழத் தமிழர்கள்மீதான மனிதப் பேரவலத்தின் பின்னர் சில தமிழ் ஊடகவியலாளர்கள் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

பெரும்பாலும், இறுதி யுத்தத்திற்கு சில வருடங்களின் முன்னர் சிங்கள அரசால் புலம்பெயர் தேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களாகவே இவர்களை அவதானிக்க முடிகின்றது. சுவிசில் நிலை கொண்டுள்ள ஊடகவியலாளர் ஒருவர் மூலம் சிங்கள அரசு மேற்கொண்டுவரும் பிரச்சாரங்கள் சிங்கள ஊடகவியலாளர்களாலும் செய்ய முடியாத அளவு இன ஈனத்தனமாக உள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

இதே இலக்குப் பிரச்சாரங்களில், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் நாடு சென்று திரும்பிய இரண்டும் கெட்டான்கள் இதற்கான முயற்சிகளில் பயன்படுத்தப்பட்டார்கள். அங்கு சென்று திரும்பியபின்னர் இவர்கள் மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் பலவும் எரிச்சலூட்டுபவையாகவே உள்ளன. தமிழீழம் எங்கும் தேனும் பாலும் ஓடுவதாக இவர்கள் கூறுவது எதை என்பது புரியாததாகவே உள்ளது. தங்கக் கூடாக இருந்தாலும், அதில் வாழ விரும்பாத கிளிக்கு உள்ள உணர்வு கூட இவர்களுக்கு இல்லையே என்ற வேதனை நெஞ்சை அடைப்பதாக உள்ளது.

எங்கள் மக்களை அழித்த, எரித்த, புதைத்த, அவலப்படுத்திய சிங்கள இனவாதிகள் எல்லாம் இவர்களுக்கு எப்போது மச்சான், மாமன் ஆகினார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் சிங்கள அரசின் வழங்கலுடன் உருவாக்கப்பட்ட இணையத் தளங்களிலும் இத்தகைய இன விரோத கருத்துச் சிதைவுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அல்லது, இத்தகைய தேசிய உணர்வு சாராத இணையத் தளங்கள் சிங்கள தேசத்தால் அத்தகைய பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அண்மையில், பொங்குதமிழ் என்ற இணையத்தளத்தில் வெளியாகியுள்ள ‘நடைமுறைச் சாத்தியமற்ற போர்க் குற்ற விசாரணைப் பரபரப்பு’ என்ற தலைப்பிலான கட்டுரையின் உட்கிடக்கை சிங்கள தேசத்தின் இந்த நோக்கத்திற்குரியதாகவே நோக்கப்படுகின்றது.

சிங்கள தேசத்திற்கு எதிரான போர்க் குற்ற வழக்குகள் பதியப்படுவதை எந்தத் தமிழனும் எதிர்க்கவோ, நிராகரிக்கவோ போவதில்லை. அதில் வெற்றியா? தோல்வியா? என்பதற்கும் அப்பால், அதனூடாக ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட, எதிர்கொண்டுவரும் அவலங்கள் உலகின் முன் எடுத்துச் சொல்லும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது. அதன் மூலமாக, புலம்பெயர் தேசத்து மக்கள் ஈழத் தமிழர்களின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளும் நிலை உருவாக்கப்படுகின்றது.

அதைக் கருத்தில் கொள்ளாத இந்தக் கட்டுரையாளர் தனது மேதாவித் தனத்தை நிறுவி, சிங்களப் போர்க் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதைத் தடுக்கத் தன்னாலான முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஈழத் தமிழர்களில் ஒருவனாக, அவர்களிடையே வாழும் அதி புதிசாலியான கட்டுரையாளர் தனது அந்தப் புத்திசாலித்தனத்தை சிங்கள தேசத்தின் மீதான போர்க் குற்ற வழக்கிற்கான ஒழுங்குபடுத்தலுக்குப் பயன்படுத்துவதே நியாயமாக இருக்கும்.

ஈழத் தமிழர்கள் தாங்கள் தோற்றுவிட்ட இனம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டுமானால், புலம்பெயர் தமிழர்கள் முள்ளிவாய்க்காலின் பின்னர் சிங்கள தேசம் எடுத்துள்ள ‘விஸ்வரூபத்தை’ ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற சிங்கள அரசின் மூன்றாவது இலக்கை ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த நோக்கத்தை நோக்கிய நகர்வாகவே இன்போ தமிழ் என்ற இணையத் தளத்தில் வெளியாகியுள்ள ‘கடல், வான், தரை என்று சிறீலங்காவின் முப்படைகள் ஆரம்பித்துள்ள பிரமாண்ட போர்ப்பயிற்சி….’ என்ற கட்டுரை உணர்த்துகின்றது.

கே.பி. குழுவினரால் இயக்கப்படும் இந்த இணையத் தளத்தின் கட்டுரைகளில் பெரும்பாலும் சிங்கள தேசத்தின் நான்கு இலக்குக்களும் இருப்பதை அவதானிக்கலாம். தொல்காப்பியன் என்ற பெயரில் பதியப்படும் கட்டுரைகளின் நோக்கம் தமிழ்ச் சிதைவுக்கானது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

இன்போ தமிழில் வெளிவரும் கட்டுரைகளில் பெரும்பாலும், தேசியத் தலைவர் அவர்களது இருப்பை நிராகரிப்பதாகவும், தமிழர்கள் நிமிரவே முடியாமல் தோற்றுவிட்டார்கள் என்ற சிங்களத்தின் இலக்கை நோக்கியதாகவும், வெல்லவே முடியாத சிங்களத்தின் பலம் என்பதை ஏற்றுக்கொள்ள வைப்பதாகவும், கே.பி. ரொம்ப… ரொம்பவும் நல்லவர் என்பதை ஏற்றுக்கொள்ளச் செய்வதாகவும், சிங்கள அரசின் விருப்பப்படி புலம்பெயர் விடுதலைக் கட்டமைப்புக்களை சிதைப்பதாகவும் இருப்பதை அந்த இணையத்தளத்தை இதுவரை தட்டிப் பார்த்தவர்கள் புரிந்து கொண்ட விடயமாக உள்ளது.

சிங்கள தேசத்தின் நான்காவது இலக்கான விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களைச் சிதைக்கும் நடவடிக்கைகள் பல தளத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. விடுதலைப் புலிகள் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுடன், புலம்பெயர் தமிழர்கள் தனக்கெதிராக மேற்கொள்ளும் போர்க் குற்றச்சாட்டை சிங்கள தேசம் மலினப்படுத்த முயற்சி செய்கின்றது. இந்தக் குற்றச்சாட்டுடன் சிங்கள தேசம் மேற்கொள்ளும் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்கள் மீதான தாக்குதலுடன், கே.பி. குழுவினர் மேற்கொள்ளும் பிரச்சாரங்களும் ஒத்துப் போகின்றது.

ஆக மொத்தத்தில், புலம்பெயர் தேசங்களில் சிங்கள அரசு பல்வேறு தமிழ் ஒட்டுக் குழுக்களை உருவாக்கி, விடுதலைப் புலிகளது புலம்பெயர் பலத்தை நிர்மூலமாக்குவதற்கு முயன்று வருகின்றது. சிங்கள தேசம் அச்சப்படும் வகையில் புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகள் பலத்துடன் உள்ளார்கள் என்பதால், இந்தத் தாக்குதல் வியூகங்கள் இலக்கை எட்டும் வரை விரிவு படுத்தப்பட்டே வரும். இதை முறியடிப்பதில்தான் ஈழத் தமிழர்களது வாழ்வு மீட்கப்படும் என்பதைப் புலம்பெயர் தமிழர்கள் முன்னரிலும் பார்க்க அதிகமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

- சுவிசிலிருந்து கதிரவன்

தமிழ்க்கதிர்

புலம்பெயர் தமிழீழ மக்களது பலத்தைச் சிதைப்பதானால்,

1. தேசியத் தலைவர் அவர்களது இருப்பை மறுதலிக்கும் சிந்தனையை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2. தாங்கள் தோற்றுவிட்டதாகவும், தமது தாயகக் கனவு சாத்தியமற்ற வகையில் கலைந்து விட்டது. அதனால், அது பற்றிப் பேசுவதையும் விட்டுவிட்டு சிங்கள இனவாதத்திற்குட்பட்டு சமரசமாக வாழ முயற்சிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வரவேண்டும்.

3. சிங்கள தேசம் இனி ஒரு போதும் வெல்ல முடியாத பலம் பொருந்திய சக்தி. அதனை எதிர்த்துப் போராடுவது சாத்தியமற்றது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

4. விடுதலைப் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பு மீதான நம்பிக்கையைத் தகர்க்கும் வகையிலான தமது பிரச்சாரங்களை ஏற்றுக்கொண்டு அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.

தமிழர் ஒற்றுமையை, பலத்தை சிதைப்பதற்கு மேலே கூறப்பட்டுள்ள நான்கு சிங்கள திட்டங்களும் நம்பகத்தன்மையை கொண்டன. கடந்த 18 மாதங்களும், சிங்களம் நடந்து கொள்ளும் விதங்களும் இதை உறுதி செய்கின்றன.

ஆனால், சிங்களம் நினைப்பது போல அதன் வழியில் எல்லாம் நடக்கும் இல்லை என்றில்லை.

சிங்களத்துக்கு இந்தியா உட்பட மேற்குலக நாடுகள் ஆதரவு குறைந்து வருகின்றது.இதை புலம் பெயர் சமூகம் சரியாக பயன்படுத்தல் வேண்டும்.

சிங்கள மக்கள் இன்று மகிந்த குடும்பத்தை ஒரு சர்வாதிகாரியாக பார்க்க தொடங்கியுள்ளனர். பொருளாதாரம் நலிவடையும் பொழுது இந்த கசப்புணர்வு இன்னும் பூதாகரமாகும். எனவே, சர்வதேச ரீதியாக, ஜி. எஸ். பி. நிற்பாட்டது போல, பொருளாதார தடைகளை கொண்டுவரல் வேண்டும்.

சர்வதேச மனித ஆர்வலர்கள் மத்தியில் தொடர்ந்தும் அங்கு தாயகத்தில் நடக்கும் உரிமை மீறல்களை பிரச்சாரம் செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்கள் மற்றும் சிங்களத்தேசத்தின் புலம்பெயர் புலனாய்வாளர்களுக்கு வணக்கம், தேசியத்தலைவர்பற்றிய, தமிழ்த் தேசியம்பற்றிய, நாளை நாம் முன்னெடுக்கப்போகும், தமிழர் விடுதலைக்கான அரசியல் மற்றும் போராட்ட பாதைபற்றிய சில மயக்கங்கள் தற்போதும் எம்மிடத்தில் உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். காரணம் தேசியத்தலைவரது தலைமையலேயே நாம் இதுவரை ஒன்றபட்டிருந்ததன் காரணமாக அவர் களத்தில் இருந்து அகற்றப்பட்டதும் (தற்காலிகமாகவோ அன்றேல் நிரந்தரமாகவோ) எமக்கு இச்செய்திக்குக் கருத்தெழுதும் தருணத்திலும் ஒரு மயக்கநிலை இருக்கவேசெய்கின்றது. ஒரு இனத்தின் விடுதலை என்பது நினைத்தமாத்திரத்தே கிடைத்துவிடும் கடைப்பண்டமல்ல, காலங்கள் பல காத்திருத்தல்வேண்டும் சும்மா மூலையில் குந்தியிரந்தில்லை. இந்த உணர்வைக்கூட நாம் கடந்த ஐந்து பத்தாண்டுகாலத்தில் உணர்ந்து கொள்ளாதுவிடின் எனது யாழ் கள நண்பர் கூறியதுபோல் இயற்கை "எமை சீரிய அறிவுடன் படைக்கவில்லை" என்பதே உண்மை.. நான் அந்தப்பக்கமும் இல்லாத, இந்தப்பக்கமும் இல்லாத கடந்த முப்பது வருடகால, ஈழத்தமிழர்களது தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்ட காலத்தையும், அதணோடு இணைந்து இந்தியா உபகண்டத்தினதும், இந்துசமுத்திரப்பிராந்தியத்தினதும், தற்போதைய விடுதலைவேண்டிப்போராடும் இனங்கட்கிடையே பெரும்பூதமாக எழுந்திருக்கும் உலகப்பயங்கரவாதப் பூச்சாண்டியையும் அதணோடிணைந்த உலகமயமாக்கலையும் அவதானித்தேவரும் பல்லாயிரக்கணக்கான தமிழ்தேசியத்தின்பால் பற்றுதல் உள்ள சாதாரண தமிழ்பொதுமகன். இதேநேரம் ஒன்றை ஊங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்பகிறேன் உலகில,; மனித ஆற்றலுக்கு இயலாதவை எதுவும் இல்லை அது தனிமனித ஆற்றலாக இருக்கலாம் அன்றேல் ஒரு இனத்தின் கூட்டாற்றலாக இருக்கலாம். ஆகவே ஒட்டுக்குளுக்களோ அன்றேல் சிங்களத்தினதும் தமிழர் விரோததேசமாம் இந்தியாவினதும் புலம்பெயர் புலனாய்வாளர்களும் ஒன்றுதிரண்டு வந்திடினும் உங்கள் பருப்புவேகாது பாதியலேயே பானை உடைந்துவிடும். ஏமைவழிநடாத்த எமதினத்திலிருந்து எமது தலைவன் எழுந்துவருவான் அதுவரை நாம் காத்திருப்போம். இதனை உங்கள் எஜமானர்கட்குச் சொல்லுங்கள். இது எமது தேசத்தின் மீட்புக்காய் தமது இன்னுயிர்களையும் உடற்குருதியையும் ஈகம்செய்த ஆயிரமாயிரம் மாவீரர்த்தெய்வங்கள்மேல் சத்தியமென இப்புனித மாவீரர்வாரத்தில் அவ் ஒவ்வொரு ஈகையாளரது திருமுகங்களையும் என் மனக்கண்நிறுத்தி சத்தியம் செய்கிறேன். ஏளனதும் ஏகடியமும் பேசுவோரே நீங்கள்மட்டுமே முடிந்துபோவீர் மற்றவையெல்லாம் நிரந்தரம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏமைவழிநடாத்த எமதினத்திலிருந்து எமது தலைவன் எழுந்துவருவான் அதுவரை நாம் காத்திருப்போம். இதனை உங்கள் எஜமானர்கட்குச் சொல்லுங்கள். இது எமது தேசத்தின் மீட்புக்காய் தமது இன்னுயிர்களையும் உடற்குருதியையும் ஈகம்செய்த ஆயிரமாயிரம் மாவீரர்த்தெய்வங்கள்மேல் சத்தியமென இப்புனித மாவீரர்வாரத்தில் அவ் ஒவ்வொரு ஈகையாளரது திருமுகங்களையும் என் மனக்கண்நிறுத்தி சத்தியம் செய்கிறேன். ஏளனதும் ஏகடியமும் பேசுவோரே நீங்கள்மட்டுமே முடிந்துபோவீர் மற்றவையெல்லாம் நிரந்தரம்.

அதன் காலத்தை மட்டும் சிங்களத்தின் நகர்வுகள் தீர்மானிக்கும்

நன்றி ஜயா

... மீண்டும் மெல்லமாக குட்டையை குழப்பும் ... ஏற்கனவே நாறடித்து விட்டீர்கள்! தற்போது கொஞ்சம் தெளிவாக வந்து கொண்டிருக்க ... மீண்டும்!!!!??? ஏதோ கண்டு பிடித்த பெரும் உண்மையை கதைக்கிறார் எனும் பெயரில் ... சில தெளிந்தவர்களையும், வேண்டாம் போங்கள் என்கிறார் இக்கதிரவன்!!! ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.