Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியுடனான சந்திப்பு திருப்தியளிக்கவில்லை

Featured Replies

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ் கட்சிகளின் அரங்கத்திற்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமானது என்று கூற முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான 16 பேர் கொண்ட தமிழ் கட்சிகளின் அரங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நண்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பு சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் தொடர்ந்து இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது தமிழ் மக்களின் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் என்பவை உள்ளடங்கிய 8 அம்சங்களை கொண்ட மகஜரொன்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதாக தமிழ் தேசிய விடுதலை முன்ணனியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/11900-2010-11-26-09-51-38.html

  • தொடங்கியவர்

கொழும்பில் தமிழர், முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்களவர்கள் குடியேறுவதை தவறென்பது எப்படி? : ஜனாதிபதி கேள்வி

கொழும்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேறுவதை தவறு என எப்படி கூற முடியும் என ஜனாதிபதி கேள்வி தமிழ்க்கட்சிகளின் அரங்கத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் தமிழ்க்கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியதாக இசந்திப்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் பங்குபற்றிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி என். குமரகுருபரன் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.

மேல் மாகாண சபை உறுப்பினருமான குமரகுருபரன் , இச்சந்திப்பு தொடர்பாக மேலும் கூறுகையில்,

வடக்கில் இராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்படுவது குறித்து தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார். அதற்கு ஆக்ரோஷமாக பதிலளித்த ஜனாதிபதி, கொழும்பில் தமிழ், முஸ்லிம்கள் ஆதிக்கம் முடியுமென்றால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேறுவதை எப்படி தவறு எனக் கூறமுடியும் என கேள்வி எழுப்பினார்.

அத்துடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமுடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆனால், சிறு குற்றங்களுக்காக சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் கைதிகள் தொடர்பான வழக்குகளை அவர்களின் விரைவான விடுதலைக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு தான் உத்தரவிடுவதாக தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திற்கு ஜனாதிபதி வாக்குறுதியளித்தார் என்றார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/11911-2010-11-26-11-46-24.html

இணைக்க அரசியல் என்று திரும்ப திரும்ப மஹியிட்ட போற ஆட்களுக்கு இன்னும் மஹிந்த சுடச்சுட கேள்வி கேட்கவேணும் அப்போதுதான் அந்த பக்கம் போகாமல் இருப்பாங்கள்.

தமிழன் இலங்கை முழுவதிலும் சிங்கள அரசு தமிழனிடம் பறித்த சொத்துக்களை அகப்படும் போதெல்லாம் மீண்டும் கைப்பற்ற வேண்டும். நீதி நியாயம் பார்த்து பேசி ஒன்றும் நிகழப் போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.