Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்கள் பிணத்தை எண்ணிக் கொண்டிருந்த போது கருணாநிதி பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்கள் பிணத்தை எண்ணிக் கொண்டிருந்த போது கருணாநிதி பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார்.

IMG_9149.jpg

ஈழத் தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருந்த போது, ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணத்தை கருணாநிதி குடும்பத்தினர் எண்ணிக் கொண்டிருந்தனர் என்று பழ.நெடுமாறன் குற்றம் சாட்டினார்.

சென்னை தியாகராயா நகரில் இன்று மாவீரர் நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பழ.நெடுமாறன் சிறப்புரை ஆற்றினார்.

இந்தக் கூட்டத்தில் பேசும் போது, ஈழத்தில் புலிகள் இயக்கம் நடத்திய போர் எந்த நாட்டின் ஆதரவும் இல்லாமல் நடைபெற்றது. உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த சுதந்திர இயக்கங்கள், ஆதரவோடு நடைபெற்றன. ஆனால் புலிகளின் போர், எவ்வித ஆதரவும் இல்லாமல் நடைபெற்ற போராகும்.

ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகி பிணங்களை எண்ணிக் கொண்டிருந்த போது, ஒரு லட்சத்து எழுபத்தாராயிரம் கோடியை எண்ணிக் கொண்டிருந்தார் கருணாநிதி. எத்தனை போராட்டங்கள் ? அத்தனை போராட்டங்களையும் கருணாநிதிதான் நீர்த்துப் போகச் செய்தார். சாகும் வரை உண்ணாவிரதம் என்ற நாடகம்…. காலையில் உணவு உண்டு விட்டு, மதியம் வீட்டுக்கு உணவு உண்ண செல்லப் போகிறோம் என்பதை அறிந்தே உண்ணாவிரதம் இருந்தார்.

இமயமலையை வெற்றி கண்ட டென்சிங்குக்குக் கூட அவ்வளவு வரவேற்பு இருந்திருக்காது. ஆ.ராசாவுக்கு அவ்வளவு வரவேற்பு அளிக்கப் பட்டது விமானநிலையத்தில். எதற்காக இந்த வரவேற்பு என்றால், எங்கே ராசா பணத்தை வாங்கி யாரிடம் கொடுத்தோம் என்பதை சொல்லி விடப் போகிறாரோ என்ற பயத்தில் தான் அத்தனை பேரையும் அனுப்பி வைத்திருந்தார் கருணாநிதி.

மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதுவது மட்டுமே தனது கடமை என்று கருணாநிதி நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் சிங்களர்கள் கட்டாயக் குடியேற்றம் செய்யப் பட்டு வருகிறார்கள். தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமை கூட கிடையாது ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு கடிதம் எழுதுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார். ஆனால் மன்மோகன் சிங் கருணாநிதியின் எந்தக் கடிதத்துக்கும் பதில் அனுப்பியதாக தெரியவில்லை. எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்குச் சென்று, தமிழர்களை குடியமர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார், அதே நேரத்தில் ராஜபக்ஷேவின் கஷ்டங்களையும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். ஆனால் அவர் இலங்கை சென்ற உண்மையான நோக்கம் 2000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்பந்தம் போட்டு கையெழுத்திடுவதற்காகத் தான். சம்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு 500 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. ராணுவ உதவிகளும் செய்யப் படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

புலிகள் அழிந்து விட்டனர் என்று கொக்கரிப்பவர்கள் எதற்காக ராணுவ உதவி செய்ய வேண்டும் ? இலங்கையின் பாதுகாப்பு செலவுகள் இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் கூடியிருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் அருகில் இருப்பது இந்தியா மட்டும் தான். புலிகள் அழிந்து விட்டார்கள் என்றால், இந்தியா மீது போர் தொடப்பதற்காக இந்தியாவே உதவி செய்கிறதா ? ஆனால், ராஜபக்ஷவுக்கு பிரபாகரன் இறக்கவில்லை என்பது தெரியும். அதனால்தான் ராணுவச் செலவுகளை அதிகரித்திருக்கிறார்.

ஐந்தாவது விடுதலைப் போர் நிச்சயம் நடக்கும். அப்போது தமிழகத்தில் உள்ள இளைஞர்களும் அந்தப் போரில் கலந்து கொள்ள வேண்டும். 1935ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டில் ப்ரான்கோ என்ற சர்வாதிகாரி ஜனநாயக அரசை வீழ்த்தி விட்டு, ஆட்சியை கைப்பற்றினான். அவனை எதிர்ப்பதற்காக உலகெங்கும் பல்வேறு இளைஞர்கள் தங்களை ப்ரான்கோவிற்கு எதிரான போரில் இணைத்துக் கொண்டனர். அவ்வாறு இணைத்துக் கொண்டவர்களில் இந்திரா காந்தியும் பெரோஸ் காந்தியும் அடங்குவர். இந்திராவை பார்க்கச் சென்ற ஜவஹர்லால் நேரு, இந்திராவை உனக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை, அதனால் நீ செல்ல வேண்டாம் என்று தடுத்து விட்டு, பெரோஸ் கானையும் அவர் தோழர்களையும் ஸ்பெயின் நாட்டின் எல்லை வரை சென்று வாழ்த்தி வழியனுப்பினார். அது போல தமிழக இளைஞர்களும் ஈழம் சென்று போரிட வேண்டிய தேவை ஏற்பட்டால் செய்ய வேண்டும் என்றார்.

IMG_9159.jpg

டுத்து பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.

அவர் பேசுகையில் புலிகள் மூட்டிய தணல் இன்னும் அணையவில்லை. இந்த மாவீரர் நாளை தலைவர் பிரபாகரன் மதுரையில் குண்டடிபட்டு இறந்த சங்கர் என்கிற சிவக்குமரன் நினைவாகவும், 1989 அன்று உள்ளபடி அது வரை களத்தில் இறந்த 1027 பேரின் நினைவாகவும் ஆண்டுதோறும் மாவீரர் நாளாக கொண்டாட வேண்டும் என்று விரும்பினார். அதன் படியே மாவீரர் நாள் கொண்டாடப் பட்டு வருகிறது.

இப்போது புலிகள் இயக்கம் சந்தித்த பின்னடைவை பயன்படுத்திக் கொண்டு டிபிஎஸ்.ஜெயராஜ் போன்றவர்கள், இணையத்திலும் பல்வேறு இடங்களிலும் பொய்ச் செய்திகளை வெளியிட்டு தமிழர்களை குழப்ப வேண்டுமென செயல்பட்டுக் கொண்டு வருகிறன்றனர்.

பிரபாகரன் நிறைவாக இருப்பவர். அதனால் மறைவாக இருக்கிறார். தமிழர்கள் சந்தித்த போராட்டங்கள் என்பது உலகில் யாருமே சந்தித்திராத ஒரு போராட்டம். பாராளுமன்றத்தில் பிப்ரவரி 2009ம் ஆண்டு, இலங்கையில் வெறும் 70,000 தமிழர்கள் தான் இருக்கிறார்கள் என்று கூறினார்கள், ஆனால் இந்து நாளேட்டில் பேட்டி அளித்துள்ள ராஜபக்ஷேவே தற்போது 1,70,000 தமிழர்களை மீள் குடியேற்றம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்றால் எப்படி கூசாமல் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று பாருங்கள்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் ஒவ்வொரு 100 மீட்டருக்கும் ஒரு ராணுவ சாவடி ஒன்று உள்ளது. முதலில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தினரை அகற்ற வேண்டும்.

உலக வரலாற்றை தனது மகளுக்கு சிறையில் இருந்து கடிதமாக எழுதிய ஜவகர்லால் நேரு, சோழர்கள் மிகப் பெரிய கப்பற் படையை வைத்திருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் காஷ்மீர் போன்ற ஒரு சூழலை உருவாக்காதீர்கள். இந்தியாவில் பலருக்கு மூன்று வேளை உணவு கிடைக்காத ஒரு சூழலில் எப்படிப். பட்ட ஒரு ஊழலை திமுகவினர் செய்திருக்கிறார்கள் ? மன்மோகன் சிங் ராசாவுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு திறந்த முறையில் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்று கடிதம் எழுதுகிறார், ஆனால் ராசா வேலை அத்தனையும் முடித்து விட்டு, இப்படித்தான் செய்யப் போகிறேன் என்று மன்மோகன் சிங் செவிட்டில் அறைந்தது போல செய்கிறார், இதைக் கண்டு பிரதமர் கோபப் படாமல் அமைதியாக இருக்கிறார் என்றால் பகத்சிங் பிறந்த மண்ணில் பிறந்தவரா இவர் என்று வெட்கமாக இருக்கிறது ? மன்மோகன் எதற்காக அமைதியாக இருந்தார் ? காங்கிரசுக்கு அதில் பங்கு இருக்கிறதா அல்லது இனம் அழியும் போது அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்தற்கான கூலியாக கருணாநிதிக்கு அது வழங்கப் பட்டதா ?

வெறும் 66 கோடிக்காக ராஜீவ் காந்தி பதவியை இழந்தார். வெறும் இரண்டே இரண்டு லட்சத்திற்காக நிதி அமைச்சர் பதவியை டி.டி.கிருஷ்ணமாச்சாரி இழந்தார். இத்தனை கோடிகளை விழுங்கி விட்டு அமைதியாக உட்கார்ந்திருக்கிறார்களே ?

ன்ன திமிராக ஆ.ராசா விமான நிலையத்தில் ராஜினாமா செய்யமாட்டேன் என்று சொன்னார் ? அவ்வளவு திமிராகப் பேசியவர் டெல்லி சென்றதும் வாயை மூடிக் கொண்டு ராஜினாமா செய்தாரே எதற்காக ?

பாராளுமன்றத்தில் இந்திரா காந்தி கடைசியாக பேசிய பேச்சில் இலங்கை நாட்டில் தமிழர்கள்தான் பூர்வ குடிகள் என்று பேசியுள்ளார்.

சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்ததன் மூலம் கருணாநிதி திருவாளர் தேசியம் பிள்ளையாகி விட்டார். தமிழர்களுக்கு இழைத்த துரோகத்துக்காக மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் அனுபவிப்பார்கள். அறம் நின்று கொல்லும்.

இத்தனை ஊழல் செய்திருக்கிறாரே கருணாநிதி.. ? எவ்வளவு சம்பாதித்தாலும் 8 அடி மண்ணில் தானே போகப் போகிறோம்.. இத்தனை சொத்துக்களை சேர்த்து என்ன செய்யப் போகிறார் ? அதுவும் இப்போதெல்லாம் எலக்ட்ரிக் சுடுகாட்டில் போட்டால் 5 நிமிடத்தில் எரிந்து போய் விடுகிறதே.. ?

இப்போது வெளி வந்திருக்கும் உரையாடல்களையெல்லாம் கேட்கும் பொழுது எத்தனை உண்மைகள் வெளி வருகின்றன… ? டெல்லி சென்ற கருணாநிதி கேட்ட துறைகள் கிடைக்கவில்லை என்றதும் கோபித்துக் கொண்டு திரும்பி வந்தாரே… அவர் என்ன முல்லை பெரியாறுக்காக வந்தாரா ? காவிரிக்காக வந்தாரா ? மீனவர்கள் கொல்லப் படுகின்றனரே.. அதற்காக திரும்பி வந்தாரா ?

ராசாவைப் பற்றி ஏதாவது எழுதினால் தினமணியை பார்ப்பனர் என்று திட்டுகிறார். இதே பத்திரிக்கை பாராட்டி எழுதினால் அப்போது பார்ப்பனர் அல்லாத பத்திரிக்கை ஆகுமா தினமணி… ?

இந்த காங்கிரஸ் அரசாங்கம் ஈழத் தமிழர்களுக்கு இழைத்த அநீதிக்காகவே அதன் முழு காலமும் பதவியில் இல்லாமல் கவிழப் போகிறது என்று பேசினார் வைகோ..

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=182:2010-11-27-20-09-14&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்காலத்திற்கேற்றவாறு கருணாநிதிசந்ததிகள் அரசியலுடன் விளம்பரமும் வியாபாரமும் எனும் யுக்தியில் இடம்பிடித்து விட்டார்கள்.அகற்றுவது கடினம்.

இதுதான் பல நாடுகளில் நடக்கின்றது.

உதாரணத்திற்கு அரசியல் என்னவென்று தெரியாத இத்தாலிய பிரதமர்........

இவரிடம் பணமும் ஊடகங்களும் மட்டுமே மூலாதாரம்........ஏனையவைகள் தினசரி நாறிக்கொண்டிருக்கின்றன!

இதே மண்ணிலிருந்து வந்த................................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்காலத்திற்கேற்றவாறு கருணாநிதிசந்ததிகள் அரசியலுடன் விளம்பரமும் வியாபாரமும் எனும் யுக்தியில் இடம்பிடித்து விட்டார்கள்.அகற்றுவது கடினம்.

இதுதான் பல நாடுகளில் நடக்கின்றது.

உதாரணத்திற்கு அரசியல் என்னவென்று தெரியாத இத்தாலிய பிரதமர்........

இவரிடம் பணமும் ஊடகங்களும் மட்டுமே மூலாதாரம்........ஏனையவைகள் தினசரி நாறிக்கொண்டிருக்கின்றன!

இதே மண்ணிலிருந்து வந்த................................................

ஆ ...ரொம்ப நன்றி தோழர் குமாராசாமி.. ஒன்று(தமிழ்நாட்டு கோஸ்டிகல்) தேறாதவர்கள் இவர்கள் தேறமாட்டார்கள் .. ஊர் பக்கம் இந்த சீசனில் நன்றாக மழை பெய்தும் இன்றும் எவனும் ஏர் கலப்பையை தொடவில்லை பிரியாணி கோஸ்டிகளை அன்றெ அண்ணா கண்டுபிடித்தார் (1 ருபாய்க்கு ஒருபடி அரிசி) 3.50 க்கு விற்ற ரேசன் அரிசி 2.50க்கு குறைந்த் போனதாலே கருணா ஆட்சிக்குக்கு வந்தார்... ஆக இங்கு எவனும் உழைத்து சாப்பிட எவனும் விரும்பவில்லை ரைட்டு.. நிலமை இப்படியே போனால் கலி முற்றியது தமிழ்நாட்டில் இருந்துதான் ஆரம்பிக்கும்.. கூட்டி கொடுப்பவன் கூட அதிகரத்தினை கைப்பற்ற இங்கு இயலும்..

டிஸ்கி:

ஏனோ அந்த இத்தாலியை பற்றி பேசும் போது இந்த தோழருக்கு அடல் நினைவுக்கு வருகிறார் முள்ளை முள்ளால் எடுக்க வேணும்.. அவருக்கு முக்கிய பதவியை குடுத்து சோனியாவுக்கு எதிராக நிறுத்தி இருக்கலாம்.. கொம்பு சீவி விட்டிருக்கலாம்.. (கொம்பு சீவும் டெக்னாலஜி உள்ளுக்க தான் இங்க நடக்கும் போல தெரியுது :D )போக இனியாவது அரசியல் ரீதியாக .. (வெள்ளைகளை கரெக்ட் செய்து கலியாணம் செய்தாலும் பரவாயில்லை) இந்த இத்தாலிக்கு தகுந்த தக்காளியை(நோஸ்கட்) குடுக்க வேணும் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க-வின் மெகா 10 தவறுகள்! - ப.திருமாவேலன்

கடந்த 40 ஆண்டு கால தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத தலைப்புச் செய்தி! அவரை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோதான் அரசியல் நடந்தவேண்டிய நிர்ப்பந்தம் அனைத்துக் கட்சிகளுக்கும். 'வாழ்த்தினாலும் வசை பாடினாலும் அவர்கள் கருணாநிதி என்ற பெயரைச் சொல்லித்தானே ஆக வேண்டும்' என்று அவரே சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வார். உண்மையும் அதுதான்.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறார் கருணாநிதி. அதோடு சட்ட மன்றத்துக்கும் தேர்தல் வருமாமே என்ற கேள்வியையும் அவர் உதாசீனப்படுத்தவில்லை. 'தி.மு.க. செயற்குழு கூடித் தீர்மானிக்கும்' என்று மையமாகப் பதிலளித்தார். 'அதுக்கென்ன அவசரம்?' என்று எதிர்க் கேள்வி போடவில்லை. எனவே, தனது தலைவிதியைத் தீர்மானிக்கப் போகும் இரண்டு தேர்தலுக்காகவும் காத்திருக்கிறார் கருணாநிதி.

கடந்த இரண்டு தேர்தலையும் யாரைத் தனது பங்காளிகளாக வைத்துக்கொண்டு கருணாநிதி எதிர்கொண்டாரோ அவர்கள் இப்போது இல்லை. ஜெயலலிதாவைப் பலப்படுத்த அவர்கள் பயன்படலாம். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்று யாரும் இல்லை என்ற நிலைமை மாறி, இப்போது விஜயகாந்த் அப்படியரு அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில், தி.மு.கவின் நிலைப்பாடுகள், பலவீனங்கள் கட்சியின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் பூதாகாரமான விஷயங்களாக ஆகிக்கொண்டு இருக்கின்றன.

கருணாநிதியின் அபாரமான உழைப்பும் பிரசாரமும் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கத்தில் சறுக்கல்களும் அதிகமாகிக்கொண்டு வருகின்றன.

அவை இவை...

1. ஸ்டாலினா... அழகிரியா?

தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டன் முதல் தினமும் அடிக்கடி தலைமைக் கழகம்வந்துபோகும் அமைச்சர்கள் வரை அத்தனை பேருக்கும் உள்ள சந்தேகம், 'யார் தங்களுக்குத் தலைமை தாங்கப் போகும் அடுத்த தலைவர்' என்பதுதான். ஸ்டாலின் ஆட்களும் அழகிரி ஆதரவாளர்களும் தங்கள் அணியைப் பலப்படுத்தி வருவது ஒரு பக்கம் இருக்கட்டும், கருணாநிதியும் ஒருவகையில் இதற்கொரு காரணியாக இருப்பதுதான் தொண்டனின் மெகா குழப்பத்துக்கு முதல் காரணம்.

'சாதாரண தொண்டனாக இருந்து இளைஞரணிச் செயலாளராக மாறி, இன்று அமைச்சராகி உங்கள் ஆசீர்வாதத்தால் இன்னும் என்னென்னவோ ஆகப்போகின்ற...'' என்று ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டு உச்சி முகர்வார் தலைவர். அப்படிப்பட்ட ஸ்டாலின் மதுரைக்குப் போனால், அங்கிருக்கும் அழகிரி ஆதரவுப் பிரமுகர்கள் அந்தப் பக்கமாக எட்டியே பார்க்காததைத் ஒரு கட்சித் தலைவராகத் தட்டிக் கேட்க மாட்டார். தூத்துக்குடியில் ஸ்டாலின் கலந்துகொண்ட விழாவில் அவரைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, அப்படியே மதுரை கிளம்பி வந்து அழகிரிக்குத் தலைவர் ஆராதனை செய்வதைப் பார்த்து திக்குத் தெரியாமல் தவிக்கிறான் தொண்டன். அமைச்சர்களும் யார் பேச்சுக்கு கருணாநிதியிடம் மதிப்பு என்று தெரியாமல் தவிக்கிறார்கள். மதுரையில் அழகிரியின் ஆதிக்கத்தை எதிர்த்து ஸ்டாலின் பக்கமாகக் கம்பி நீட்டிய பிரமுகர் - திருமங்கலம் முத்துராமலிங்கம். ஸ்டாலினும் அழகிரியும் ஒரே ஒரு மாதம் ஒன்று சேர்ந்ததால், என்ன செய்வதென்று புரியாமல் வேறு கட்சிப் பக்கமே தாவிவிட்டார்! அப்படியரு தடுமாற்றத்துக்கு மொத்த தொண்டனையும் அழைத்துப் போவதாக இருக்கிறது கருணாநிதியின் நடவடிக்கைகள்.

தி.மு.க-வுக்கு அடுத்த தலைவராக ஸ்டாலின், அழகிரி யார் வேண்டுமானாலும் வரட்டும். அதற்கான குழப்பம் நிர்வாக மட்டத்தில் எதிரொலித்து பல்வேறு குழப்பங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. அமைச்சர்கள், அதிகாரிகள், போலீஸ் வட்டாரம், மாவட்டச் செயலாளர்கள் வரை கருணாநிதி காட்டி வரும் 'ரஜினி ஸ்டைல் குழப்பம்' பல்வேறு விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் திண்டாடவைக்கிறது.

2. தயாநிதி மாறன் விவகாரம்

தி.மு.க-வில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டது தயாநிதி மாறன் குடும்பப் பத்திரிகை. இது கட்சிக்குள் 'குட்டிக் கலாட்டா' ஏற்படுத்த... தயாநிதி தனது மந்திரி பதவியைத் துறக்க வேண்டி வந்தது. இப்படியரு கருத்துக் கணிப்பு வெளியிட்டதால் கோபப்பட்ட அழகிரியின் ஆதரவாளர்கள், அந்த பத்திரிகை அலுவலகத்தை அடித்து கொளுத்தியதில் அப்பாவி இளைஞர்கள் மூன்று பேர் அநியாயமாக இறந்துபோனார்கள். தி.மு.க. அரசாங்கத்தின் சட்டம்--ஒழுங்கு பராமரிப்பு மதுரையில் கேள்விக்குறியானது. விவகாரம் அரசியலாவது புரிந்து வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டார் கருணாநிதி. அந்த சம்பவத்துக்குப் பிறகு கருணாநிதி பெயரால் போட்டி தொலைகாட்சி துவங்கப்பட்டதும், அதற்கான சீரியல் தயாரிப்பது, சினிமா ஆட்களைத் தங்கள் பக்கமாக இழுப்பது, புதிய சினிமாக்களை வாங்குவது, சுமங்கலி கேபிளுக்கு மாற்றாக அரசு கேபிள் இணைப்புத் திட்டத்தைத் தொடங்குவது, கேபிள் டி.வி. ஆபரேட்டர்களைத் தங்கள் பக்கமாக இழுப்பது... போன்ற காரியங்களில் 'கலைஞர்' தொலைக்காட்சியும் அரசுத் தரப்பும் மாறி மாறி நடத்திய ஆக்ஷன்கள் காரணமாக, முதல்வரின் பெரும்பகுதி கவனம் அதிலேயே செலவானதாக தி.மு.க-வுக்குள்ளேயே பேச்சு கிளம்பியது.

3. 'சீனியர் சபா'?!

கருணாநிதியின் அமைச்சரவையில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், சுப.தங்கவேலன் ஆகியோர் கட்சிக்காக உழைத்தவர்கள். மூத்த உறுப்பினர்கள். தங்கள் வாழ்க்கையைப் பல்லாண்டு காலம் கட்சிக்காகச் செலவு செய்தவர்கள். ஆனால், அவர்களால் அரசாங்கப் பணிகளை வேகமாகவும் விவேகமாகவும், வேண்டிய பொறுமை காட்டியும் செய்ய இயலவில்லை என்ற பேச்சு அதிகாரிகள் மத்தியில் இருப்பது முதல்வரின் காதை எந்தளவு எட்டியதோ தெரியவில்லை. மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைச் சரியாகக் கவனித்து உள்வாங்கிக்கொள்ள வீராசாமியால் முடியவில்லை. அதேபோன்றுதான் வீரபாண்டி ஆறுமுகமும் அடிக்கடி பொறுமை இழக்க ஆரம்பித்துவிட்டார். துரைமுருகனுக்கு அறுவை சிகிச்சை செய்ததால் சில மாத காலம் தனது இலாகாவை பொன்முடி வசம் ஒப்படைத்தார். மீண்டும் வந்து துறையை துரைமுருகன் பற்றிக்கொண்டாலும், ஜோக் அடித்து முதல்வரைச் சந்தோஷப்படுத்துகிற அளவுக்கு துறையின் அதிகாரிகளை வேலை வாங்க அவரால் முடியவில்லை. கோ.சி.மணியும் அவ்வாறே சிரமத்தின் உச்சத்தில்! ஆனால், இப்படிப்பட்டவர்களுக்கு அமைச்சர் பதவி தராமல் தவிர்க்க கருணாநிதியால் இயலவில்லை. ஏன், இலாகா மாற்றம் செய்யக்கூட கருணாநிதியால் இயலவில்லை.

முதலமைச்சரின் செயலாளர்களாக இருக்கும் ராஜரத்தினம், தேவராஜ், ராஜமாணிக்கம் மூவரும் ஓய்வு பெற்ற அதிகாரிகள். சண்முகநாதன், மருதநாயகம் ஆகியோரும்கூட ஓய்வு பெற்றவர்கள்தான். 'முதலமைச்சர் அலுவலகம் சீனியர் சபா மாதிரி இருக்கிறது' என்று காமென்ட் கிளம்ப... பிரபாகரன் ஐ.ஏ.எஸ்., இப்போது அவசர அவசரமாக நியமிக்கப்பட்டார். முகதாட்சண்யம், பழக்கம், ஆரம்ப காலத்தில் இருந்து உடன் இருந்தவர்கள் என்று பலருக்குப் பதவிகள் கொடுக்கும்போது அதனால் வரும் சிரமங்கள் தி.மு.க. ஆட்சியின் நிர்வாகக் குழப்பங்களாக உருவெடுக்கின்றன. தெரிந்தும் இதை முதல்வரால் தடுக்க முடியவில்லை என்றே கோட்டையில் கிசுகிசுக்கிறார்கள்.

4. காற்றில் பறந்த கொள்கைகள்

'நீங்கள் மாவட்டச் செயலாளராக யாரை வேண்டுமானாலும் நியமித்துக்கொள்ளுங்கள். அவர் பகுத்தறிவாள-ராக இருக்க வேண்டும்' என்று கட்சிப் பொதுக் குழுவில் பரமத்தி சண்முகம் சொன்னார். 'அதெல்லாம் முடியாதுய்யா'--படக்கென்று மறுத்தாராம் கருணாநிதி. கட்சியின் பொருளாதாரக் கொள்கை 'விஞ்ஞான சோஷலிசம்' என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. இன்று உலகமயமாக்கல் கொள்கையை அச்சு மாறாமல் பின்பற்றுகிறது தி.மு.க. மாநில சுயாட்சி என்ற முழக்கத்தைக் மத்திய அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்கக்கூட தி.மு.க. முயற்சிக்கவில்லை. நெடுஞ்சாலை மைல் கல்லில் இந்தி எழுத்தை எழுதிவைத்தது டி.ஆர். பாலுவின் துறை.

சூரியநாராயண சாஸ்திரி என்ற சம்ஸ்கிருதப் பெயரை பரிதிமாற்கலைஞர் என்று அந்தத் தமிழறிஞர் மாற்றிக்கொண்டார். அவருக்கு வெளியிட்ட அஞ்சல் தலையில் சூரியநாராயண சாஸ்திரி என்றே அச்சடித்தவர் மத்திய அமைச்சர் ஆ.ராசா. கடந்த தி.மு.க. ஆட்சியின் தமிழ் வளர்ச்சிக்கு என தனி அமைச்சர் நியமிக்கப்பட்டார். இன்று அதுவும் இல்லை. இப்படி பகுத்தறிவு, பொருளாதாரம், அரசியல், மொழி என அனைத்து முனைகளிலும் வைத்திருந்த கொள்கைகள் காலப்போக்கில் காற்றில் பறந்ததால்... அந்தக் கொள்கை-களுக்காகவே தி.மு.க. மீது பிரியம் காட்டியவர்கள் பின்னுக்குப் போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

5.வினையே பங்கு தராததால்தான்!

2004 நாடாளுமன்றத் தேர்தல், அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தல் ஆகிய இரண்டிலும் வலுவான கூட்டணி தி.மு.க. தலைமையில் அமைந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் 40 தொகுதிகளையும் கைப்பற்றினார்கள். சட்டமன்றத் தேர்தலில் வைகோவைத் தன் பக்கம் அழைத்து நிறுத்தினார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் தங்கள் ஆதரவை வெளியில் இருந்து கொடுத்தன. அவர்களுக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்திருந்தால் இந்த இரண்டாண்டுகளாக அவர்கள் கொடுத்த குடைச்சலும் இதனால் ஏற்பட்ட குழப்பமும் நடந்திருக்காது.

அரசாங்கத்தின் மீது அ.தி.மு.க. வைத்த குற்றச்சாட்டுகளைவிட கூட்ட-ணிக் கட்சிகளாக இருந்த பா.ம.க-வும் மார்க்சிஸ்ட்டும் வைத்த விமர்-சனங்கள்-தான் அதிகம். அவர்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்திருந்தால் சில தி.மு.க-வினர் மந்திரி ஆக முடிந்திருக்காது. ஆனால், கூட்டணியாவது கெட்டியாகியிருக்கும். சில தனி மனிதர்களைத் திருப்திப் படுத்துவதற்காக சில கட்சிகளை இழந்து, இன்று நாலு பக்கமும் இடி வாங்கும் நிலை வந்திருக்காது. பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் கூட்டணி ஆட்சிக்கும் தயார் என்றுதான் தேர்தலுக்கு முன் கருணாநிதி பேட்டி தந்தார். ஆனால், வெற்றி பெற்றதும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை. பகிர்ந்து கொடுத்திருந்தால் இன்று தி.மு.க. அரசுதான் அத்தனைக் குழப்பத்துக்கும் காரணம் என்று கூட இருந்தவர்களே மக்களோடு சேர்ந்து 'சிங்கிள் குற்றவாளியாக' நிறுத்தியிருக்க மாட்டார்கள்!

6. கூட்டணிக் கட்சிகளைக் காரணம் இல்லாமல் பகைத்தது.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து கூட்டணியை விட்டு கம்யூனிஸ்ட்டுகள் விலகியதில் சிக்கல் ஆரம்பமானது. அப்போது காங்கிரஸை கம்யூனிஸ்ட்டுகள் விமர்சிக்க ஆரம்பித்தார்கள். இதெல்லாம் டெல்லி விவகாரம் என்று அமைதியாக இருக்காமல், விமர்சனக் களத்தில் குதித்தார் ஆற்காடு வீராசாமி. 'அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் அடுத்த தேர்தலில் காணாமல் போவார்கள்' என்று அவர் ஆரம்பித்ததும்தான் கம்யூனிஸ்ட்டுகள் பதில் தர வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அதை கட்டுப்படுத்தாமல் கவிதை அஸ்திரம் தொடுத்து, மார்க்சிஸ்ட் எம்.பி-யை வம்புக்கு இழுத்தார் கருணாநிதி. கம்யூனிஸ்ட்டுகள் மொத்தமாகக் கம்பி நீட்ட, இந்த இரண்டு விஷயங்கள் காரணமானது.

அதற்கு முன்னால் கழட்டிக்கொண்டவர் டாக்டர் ராமதாஸ். ராமதாஸ் தடங்கல் போட்ட திட்டங்களை-எல்லாம் தள்ளி வைத்து மக்கள் நலப் பணிகளில் பின்னுக்குப் போகவும் தயாராக இருந்த இதே தி.மு.க. அரசு, தனிநபரான காடுவெட்டி குரு விவகாரத்தில் சீறிக்கொண்டு பாய்ந்து கைது செய்தது! குருவின் குதர்க்க பேச்சையட்டிய நிகழ்வுகளால் கூட்டணி துண்டானது. இந்த உடைப்பு மக்களை எந்த வகையிலும் தி.மு.க. மீது அனுதாபத்தோடு பார்க்க வைக்கவில்லை. கடைசியாக இருந்தது காங்கிரஸ்தான். அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே மாநில மந்திரி பதவி மீது குறிவைத்து வந்தார்கள். கருணாநிதி அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தங்கபாலு குரல் கொடுத்ததைத் தொடர்ந்து... திருச்சியில் திடீரென்று 'சோனியா சொன்னால் பொதுக்குழுவைக் கூட்டி விவாதிக்கலாம்' என்று கருணாநிதி இறங்கி வருவதைப் போல காட்டிக்கொண்டதும் காங்கிரஸார் துள்ளிக் குதித்தனர். அன்றைய தினமே காட்சிகள் மாறி... டெல்லிக்கு அழைத்து தங்கபாலு கண்டிக்கப்பட்டார். சும்மா இருந்த காங்கிரஸாருக்கு இது சுரீரென்றது. காரணம் தேடிக்கொண்டே இருந்தார்கள். இலங்கைப் பிரச்னை வெடிக்கவும், 'கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ஜெயலலிதா அணுகுமுறைதான் சூப்பர்' என்று பட்டவர்த்தனமாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழக காங்கிரஸ்காரர்கள்.

"நெடுமாறனிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும். 'சோ' ராமசாமியும் திட்டக் கூடாது... இப்படியரு எல்லார்க்கும் இனியராக இருக்க நினைக்கிற எங்கள் தலைவரின் குணம்தான் இன்று எம்.பி-க்கள் ராஜினாமா என்று கெடு வைத்து சபதம் போடுகிற அளவுக்கு அவரைக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. வைகோ தொடங்கி எத்தனை பேரை எங்கள் அரசு கைது செய்தாலும் குழப்பம் பண்ணுகிற தமிழக காங்கிரஸார் திருப்தி அடையவே மாட்டார்கள். அவர்களின் நோக்கம் 'மந்திரி சபையில் இடம் கொடுக்காமல், டெல்லியை வைத்து தண்ணி காட்டிய கருணாநிதிதானே, தவிர பிரபாகரன் அல்ல!" என்பது தி.மு.க-விலேயே நிலவும் வருத்தமான கருத்து.

7. பல்டிகள் பலவிதம்

யோசித்து முடிவுகள் எடுப்பார். எடுத்த முடிவில் கடைசி வரை உறுதி-யாகவும் இருப்பார் என்று கருணா-நிதிக்குப் பெயர் உண்டு. ஆனால்,சமீப காலமாக அவர் அடித்து வரும் பல்டி களுக்கு அளவில்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது.

600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்-படுத்துபவர்களுக்குக் கூடுதல் மின் கட்டணம் என்ற அவரது அறிவிப்பை யாரும் ஏற்கவில்லை. ஆற்காடு வீராசாமியைத் தவிர. எதிர்க்கட்சிகள் கண்டித்ததும் வாபஸ் வாங்கினார். இது கடைசியாக வந்த வாபஸ் அறிவிப்பு! அதற்கு முந்தையது பெரிய பட்டியல்!

இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் பணி மூப்பு அடிப்படையில் இருக்கும் என்று முந்தைய தி.மு.க. ஆட்சியில் போடப்பட அறிவிப்பை, இந்த அரசு வந்ததும் மாற்றினார்கள். இதை எதிர்த்து வழக்குகள் பாய்ந்தது. எதிர்த்து வாதாடினார்கள். வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை போனது. கடைசியில் அப்படியே ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டார்கள். ஹெல்மெட் கட்டாயம் சட்டமும் அங்ஙனமே! 'போட்டால் நல்லது... போலீஸ் பிடிக்க வேண்டாம்' என்று பிற்பாடு குழப்பக் களஞ்சியமாக மாறியது. ஒகேனக்கல் திட்டத் துவக்க விழாவை ஊரறிய நடத்தி வெளிச்சமிட்டு, கர்நாடகத்துக் கண்களை உறுத்தி அது விவகாரமாக மாறிய பின்... டெல்லியிலிருந்து வந்த மறைமுக பிரஷரால் 'கர்நாடகாவில் புது அரசு அமைந்த பிறகு, அது பற்றி பேசலாம்' என்று பின் வாங்கினார் கருணாநிதி. பால் விலை உயர்வும்கூட மூன்று நாட்கள் திருத்தித் திருத்தி அறிவிக்கப்பட்டன.

தாம்பரம் அருகே சேட்டிலைட் சிட்டி, பொருளாதார மண்டலங்கள், பன்னாட்டு விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வது என்ற அறிவிப்புகள் ராமதாஸின் எதிர்ப்பில் முனை மழுங்கிப் போனது. இது போதாது என்று கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அவர்களே கூட்டமாக வந்து திருப்பிக் கொடுத்துவிட்டுப் போன சம்பவங்களும் நடந்தன.

இப்படி எந்த முடிவுகள் எடுத்தாலும் அதில் தீர்க்கமான முன்யோசனைகள் முதல்வருக்குப் போய்ச் சேராமல், மாற்றுக் கட்சிகளின் விமர்சனங்களைப் புறந்தள்ளக்கூடிய உறுதியும் இல்லாமல், நல்ல விஷயங்களைக்கூட காவு கொடுப்பதை தி.மு.க. அரசு தனது அடையாளமாக்கிவிட்டது!

8. ஜெயலலிதா செய்ததெல்லாம் சரி!

தனியார் ஏலம் எடுத்து நடத்தி வந்த மதுக்கடைகளை டாஸ்மாக் வசம் மாற்றி இதன் மூலம் கிடைக்கும் பணம் அரசுக்குச் சொந்தம் என்று ஜெயலலிதா அறிவித்தார். 'அரசாங்கம் சாராயம் விற்கலாமா' என்று கேட்டார் எதிர்க்கட்சியாக இருந்த கருணாநிதி. இரண்டு ஆண்டுகளாக இந்த அரசும் அதே காரியங்களைத்தான் செய்து வருகிறது. மணல் அள்ளும் காரியங்களையும் அரசு வசம் கொண்டுவந்தது அ.தி.மு.க. இது சிலர் கொள்ளை லாபம் பார்க்கவே பயன்படும் என்றது தி.மு.க! இப்போதும் மணல் அள்ளும் முறை பற்றிய மிகக் கடுமையான விமர்சனங்கள்! அரசு கேபிள் ஆரம்பிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா மசோதா தாக்கல் செய்ததும் கவர்னரைப் பார்த்துவிட்டு வந்து, மசோதா முடிவுக்கு கடும் எதிர்ப்பு காட்டினார் கருணாநிதி. இப்போது ஜெயலலிதா அரசைவிட மிகத் தீவிரம் காட்டினார் அரசு கேபிள் அமைப்பதில் (பிறகு, சொந்த காரணங்களுக்காக அதை தி.மு.க. அரசே மந்தப்படுத்தி வைத்திருப்பது தனிக் கதை!). இப்படி ஜெயலலிதா சொல்லி செயல்படுத்திய முக்கிய திட்டங்களை அப்படியே வழி மொழிந்ததன் மூலம் ஜெ. செய்தது எல்லாம் சரிதானோ என்ற எண்ணம் மக்கள் மனதில் வந்துவிட்டது.

மேலும், ஜெயலலிதா மீதும் அவரது ஆட்சியில் செய்யப்பட்ட முறைகேடுகள் என்றோ பெரிய அளவில் வழக்குகள் இந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்படவில்லை. ஏற்கெனவே போட்ட வழக்குகளிலும் அணுகுமுறை திருப்தியாக இல்லை என்று தி.மு.க-வுக்குள்ளேயே கருத்து இருக்கிறது. "ஏன் இந்த வழவழப்பு?" என்று உடன்பிறப்புகள் கேள்வியில் அதிருப்தி நிறைய தெரிகிறது.

9. கேலிக் கூத்தாகும் கட்சித் தேர்தல்

'ஜனநாயக முறைப்படி கட்சித் தேர்தல் நடத்தும் ஒரே கட்சி' என்று தி.மு.க-வினர் பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். ஆனால், இம்முறை நடந்து வரும் உள்கட்சித் தேர்தலிலோ, போட்டி போட நினைப்பவர்களுக்குத் தாக்கல் செய்ய மனு கொடுக்கவே மறுப்பதாகக் குற்றச்சாட்டு மலைமலையாய் தலைமைக் கழகத்தில் குவிந்துகொண்டு இருக்கிறது. கிளைக் கழகச் செயலாளர் தேர்தலில் போட்டியிடக் கூட மாவட்டச் செயலாளர் மனது வைத்தால்தான் முடியும். கஷ்டப்பட்டு மனு வாங்கிவிட்டால் அதற்குப் பணம் கட்டிய பில் வாங்க முடியாது. இவ்வளவையும் மீறி மாவட்டச் செயலாளரை 10 தடவை பார்த்து தலைமைக்கு 100 தடவை போன் செய்வதற்கு, போட்டியிடாமல் சும்மாவே இருக்கலாம் என்று ஒதுங்கும் தலைகளையும் பார்க்க முடிகிறது. கிளைக் கழகத் தேர்தலில் இந்த நிலைமை என்றால் நகரச் செயலாளர் பதவிக்கு மாவட்டச் செயலாளரை மீறி யாரும் போட்டி போட முடியாது. அப்படியே மீறி நடந்தாலும் வேண்டாதவர் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது என்றால், இருக்கிற மொத்த கோஷ்டியிலும் ஆளுக்கு ஒருவருக்கு சான்ஸ் அடிக்கிற மாதிரி குழு அமைத்து அறிவித்துவிட்டு அமைதியாகிவிடுகிறார்கள். மாவட்டச் செயலாளர் பதவி மொத்தமும் நியமனம்தான். 'தலைவர் சொல்லிட்டார்... தளபதி சொல்லிட்டார்...' என்று நியமனங்கள் மளமளவென்று நடந்து முடிகிறதாம். அனைத்து ஒன்றியங்களையும் நகரங்களையும் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த மாவட்டச் செயலாளர்களாக ஒரு காலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி.மணி, செஞ்சி ராமச்சந்திரன், திருச்சி செல்வராஜ் ஆகியோர் வலம் வந்தார்கள். அப்படிப்பட்ட அசைக்க முடியாத தலைகள் இன்று இல்லை. தலைமை தயவால் மாவட்டச் செயலாளர் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டவர்கள்தான் அதிகம். இவர்கள் தங்களுக்குக் கீழ் செல்வாக்கான நபர்கள் வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்கி-றார்கள். மீறி செல்வாக்கான ஆள் வந்து விட்டால் அவரது கிளையை அ, ஆ என்று பாகம் பிரித்து பலவீனமாக்கிவிடுவதாகவும் குமுறல் இருக்கிறது. இவை அனைத்தும் தலைமைக் கழகத்தின் பார்வையிலேயே சத்தம் இல்லாமல் செய்து முடிக்கப்படுகிறது.

அத்தனையும் அருகில் நின்று பார்க்கும் அடிமட்டத் தொண்டனுக்கு, திகைப்பு தாங்கவில்லை. 'நம் கட்சியை நடத்துவது யார்?' என்ற கேள்விக்கு அவனிடம் பதிலே இல்லை!

10. காணவில்லை கட்டுப்பாடு!

'தி.மு.க. ஒன்றும் சங்கர மடமல்ல' என்பார் வாரிசு அரசியல் பற்றிப் பேச்சு வரும்போது. கலந்து பேசாமல் எடுக்கப்படும் தன்னிச்சையான முடிவுகளோ, குடும்பத்தின் தலையீடுகளோ தி.மு.க-வில் சாத்தியமே இல்லை என்ற அர்த்தமும் அதற்கு உண்டு. ஆனால், "இன்று பெரிய குடும்பத்தின் '3ஜி' (மூன்றாம் தலைமுறை) வரை சாலையில் பிரமாண்ட பேனர்களாக வந்து கட்சியில் தங்களுக்கான செல்வாக்கை நிலைநாட்டி வருகிறார்கள்" என்று எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் வைக்கின்றன.

மாறன் சகோதரர்களோடு வெடித்த மோதலின் போக்கை அடுத்தடுத்து எப்படிக் கொண்டுசெல்வது என்பதில் இருகூறாகப் பிரிந்து நின்றனர் கருணாநிதியின் குழந்தைகளான மு.க.அழகிரியும் செல்வியும்! கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை அமைச்சரவையில் வைத்திருப்பது தொடர்பாக ஸ்டாலின் - அழகிரிக்குள் இருவித கருத்துக்கள். கனிமொழிக்குப் பிடித்த அண்ணன் ஸ்டாலினா, அழகிரியா என்பதிலும் சிக்கல்கள்! கட்சியிலும் இதே நிலைமைதான். ஆண்டுதோறும் ஒரு முறையாவது பொதுக்குழு கூட்டுவார்கள். ஆட்சிக்கு வந்தது முதல் ஒரு முறைதான் நடந்துள்ளது. கட்சிக்கு முக்கியமே பேச்சாளர்கள்தான். சொற்பொழி-வாளர்கள் கூட்டமே சமீபத்தில் நடக்கவில்லை. இதுபோன்ற விஷயங்களை முன்பு அளவுக்கு முழுநேரமும் கவனிக்க முடியாத அளவுக்கு குடும்ப விவகாரங்களில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் இருப்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதையெல்-லாம் நன்கு புரிந்து வைத்திருக்கும் மிக முக்கிய அதிகாரிகள் சிலர், அந்தக் குடும்ப பேதங்களையே தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு... 'இங்கு தெரியாமல் அங்கும்... அங்கு தெரியாமல் இங்குமாக' தங்கள் விருப்பப்படி தயக்கமின்றி காரியங்களை நடத்திக்கொள்வதாகவும் வேதனைக் குரல்கள் கேட்கின்றன!

"எங்கள் தலைவர் நினைத்தால், அத்தனை விஷயங்களையும் தன் கட்டை விரலுக்கு அடியில் கொண்டுவந்து கட்டுப்படுத்திவிடுவார். ஆனால், அப்படி அவர் ஏன் நினைக்கவில்லை என்றுதான் புரியவில்லை" என்கிறார்கள் தி.மு.க-வின் உண்மைத் தொண்டர்கள்!

ம்... நடப்பது நடந்துதானே தீரும்!

( நன்றி: விகடன் )

சிங்கள பயங்கரவாதிகள் வீசிஎறிந்த பணத்தை எண்ணிக்கொண்டிருந்தது கருணாநிதி குடும்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.