Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெரியோரின் நகைச்சுவைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரியோரின் நகைச்சுவைகள்

annaar.jpg

சிலுவையும் சீடர்களும்

ஒரு முறை சட்டமன்றத்தில் - அப்போது நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு டில்லி செல்வதாக இருந்ததால் அவரைப் பாராட்டி வாழ்த்திப் பேசினார். கழக உறுப்பினர் ஒருவர் சி.சுப்ரமணியத்தை இயேசு பெருமானோடு ஒப்பிட்டு வெகுவாகப் புகழ்ந்து பாராட்டினார்.

குறுக்கிட்ட சுப்ரமணியம் இயேசுநாதரைப் போல் சிலுவையில் அறையாமல் இருந்ததால் சரி என்றார்.

இயேசு நாதருடைய சீடர்தான் அவரைக் காட்டிக்கொடுத்தார் என்று உடனே எழுந்துக் கூறினார் அண்ணா!

அவையில் சிரிப்பொலி எழுந்தது.

உங்கள் கட்சிக்காரர்களால்தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற தொந்தரவு ஏற்படலாமே தவிர எங்களால் அல்ல என்பதை இவ்வளவு அழகாக நகைச்சுவையுடன் அண்ணா குறிப்பிட்டார்.

சம்பந்தி சண்டையா?

சட்டமன்றத்தில் வினாயகம் என்பவர் எழுந்து, “மிருகக்காட்சி சாலையில் நான் கொடுத்த ஆண் புலிக்குட்டியை சரியாகக் கண்காணிப்பதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். கொடுத்த பெண் புலிக்குட்டி நன்றாக வளர்க்கப்படுகிறதே!” என்று புகார் கூறினார்.

உடனே அண்ணா, ”சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்” என்று பதில் கூறினார்.

புகார் கூறியவர் உட்பட அனைவரும் சிரித்தனர்.

புளியமரத்தின் சாதனை

பேரறிஞர் அண்ணா தமிழக மக்களின் நல்லாதரவைப் பெற்று, முதல்வராக வீற்றிருந்த சமயம், ”விலைவாசி குறைந்துள்ளது” என்று அண்ணாவும் உறுப்பினர்களும் கூறியதைக் கேட்ட எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் கேலியாக - புளி விலை குறைந்துள்ளதே அது யார் சாதனை? என்று கேட்கிறார்.

அண்ணா அமைதியாக எழுந்து ”அது புளியமரத்தின் சாதனை” என்றார்

அவை சிரிப்பில் முழ்குகிறது! கேட்பவருக்கு எப்படி இருந்திருக்கும்?

ஊசி போட்டாச்சா?

அறிஞர் அண்ணா தோழர் இராசகோபால் என்பவரை அடிக்கடி கிண்டல் செய்து கொண்டேயிருப்பார். ஒரு சமயம் தோழர் இராசகோபால் அவர்கள் அண்ணாவிடம் வந்து தம்மை இரவு எலி ஒன்று கடித்து விட்டதாகக் கூறினார்.

அண்ணா அவர்கள் சிரித்துக் கொண்டே எலியா? உன்னையா? என்று கேட்டார்.

”ஆமாங்க! என்னைத்தான் எலி கடித்துவிட்டது!” என்று தோழர் இராசகோபால் இரக்கம் தோன்றக் கூறினார்.

”ஊசி போடனுமே! ஊசி போட்டாச்சா?” என்று அண்ணா கேட்க, உடனே இராசகோபால் இன்னும் போட்டுக்கலிங்க! என்று கூறினார்.

உடனே அண்ணா யாருக்கு ஊசி என்று இராசகோபாலைப் பார்த்துக் கேட்டார்.

எனக்குத்தான்! என்று இராசகோபால் அவசரமாகக் கூறினார்.

அண்ணா அவர்கள் சிர்த்துக்கொண்டே உனக்கல்ல! அந்த எலிக்கு ஊசி போட்டாச்சா என்றுதான் கேட்டேன்! என்றார்.

”எலிக்கு ஏன் ஊசி?” என்று இராசகோபால் கேட்க,

அதற்கு அண்ணா, அதனுடைய விஷம் உன்னைப் பாதிப்பதை விட, உன்னுடைய விஷம் அதனை அகிமாகப் பாதிக்கச் செய்திருக்கும்!” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

நாட்கள் எண்ணப்படுகின்றன

ஒரு முறை சட்டமன்றத்தில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த வினாயகம் என்பவர் அண்ணாவைப் பார்த்து, "Your Days are numbered" (உங்களுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன) என்று கூறினார்.

அண்ணா அவர்கள் புன்முறுவல் பூத்த முகத்துடன் அமைதியாக எழுந்து, "My Steps are measured" (என்னுடைய காலடிகளை எடுத்து வைக்கிறேன்) என்றார்.

ஆட்டிறைச்சி மட்டும் வேண்டாம்

ஒரு முறை அறிஞர் அண்ணாவைப் பார்க்க சிலம்புச் செல்வர் ம.பொ.சி அண்ணா இல்லத்துக்கு வந்தார்.

அண்ணா ம.பொ.சி.க்கு விருந்தளிக்க எண்ணி அசைவ உணவுக்குச் சொல்லி அனுப்பினார்.

உடனே ம.பொ.சி “ஆட்டு இறைச்சி மட்டும் வேண்டாம்.” என்றார்.

“எதற்கு? ” என்றார் அண்ணா.

“டாக்டர் கொலஸ்ட்ரல் (கொழுப்பு) ஜாஸ்த்தியா இருக்குன்னுட்டார்” என்றார் சிலம்பு செல்வர்.

உடனே அண்ணா நகைச்சுவையாக ”அடடே, அந்த விஷயம் அவருக்கும் தெரிஞ்சு போச்சா? ” என்றார்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பெரியோரின் நகைச்சுவை தொடருமா நுணா! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரியோரின் நகைச்சுவை தொடருமா நுணா! :rolleyes:

பெர்னாட்ஷாவின் நகைச்சுவை!

இவர் வயலின் கலைஞரா?

பெர்னாட்ஷா ஒரு வயலின் கச்சேரியைப் பார்க்கச் சென்றிருந்தார். வயலின் கச்சேரி முடிவில் அதன் பெண் நிர்வாகி ஷாவைப் பார்த்து, "வயலின் கலைஞரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

உடனே ஷா "இவர் எனக்கு பாதரவ்ஸ்கியை (பாதரவ்ஸ்கி இன்னொரு இசைக் கலைஞர்) நினைவூட்டுகிறார்" எனப் பதிலளித்தார்.

வியப்புற்ற அந்த நிர்வாகி "பாதரவ்ஸ்கி ஒரு வயலின் கலைஞர் இல்லையே..." என்றார் சட்டென்று.

அமைதியாக ஷா, "இவரும் தானே!" என்று பதிலளித்தார்.

நிர்வாகி வாயடைத்துப் போனார்.

அழகுப் பெண்ணின் வயது

தன் அழகில் கர்வம் கொண்ட பெண் ஒருத்தி பெர்னாட்ஷாவிடம் வந்தாள். "என் வயது என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்." என்றாள்.

ஷா அவளை மேலும் கீழும் பார்த்தார். பின் உன் பற்களைப் பார்த்தால் 18 வயது போல் தெரிகிறது. கூந்தலைப் பார்த்தால் 19 வய்துக்கு மதிப்பிடலாம். தோற்றத்தைப் பார்த்தால் 16 என்றே சொல்லலாம்." என்றார்.

பெருமையில் பூரித்துப் போனாள் அந்தப் பெண். "என் அழகைப் புகழ்ந்ததற்கு நன்றி. சரியான வயதைச் சொல்லுங்களேன்." என்றாள்

உடனே ஷா "இன்னுமா தெரியவில்லை. 18, 19, 16 மூன்றையும் கூட்டிப்பார். 53 வருகிறதல்லவா? அதுதான் உன் சரியான வயது" என்றார்.

அந்தப் பெண் அசடு வழிய நின்றாள்.

திருமணம் செய்து கொள்ளலாமா?

பெர்னாட்ஷா மீது விருப்பம் கொண்ட ஒரு அழகிய பெண்மணி அவள் ஒருநாள் அவரிடம் வந்து, "நான் பேரழகி. நீங்கள் அறிவுச் சுரங்கம். நாமிருவரும் திருமணம் செய்து கொண்டால் பிறக்கும் குழந்தை என்னைப் போல் அழகாகவும், தங்களைப் போல அறிவாளியாகவும் இருக்கும்" என்றாள்.

பெர்னாட்ஷா உடனே சொன்னார், "சரி... என்னைப் போன்ற அழகும், உன்னைப் போன்ற அறிவும் கொண்டதாகக் குழந்தை பிறந்தால் என்னாவது?" என்றார்.

அந்தப் பெண்மணி தலைகுனிந்து நின்றாள்.

பஞ்சத்திற்குக் காரணம்?

செஸ்டர்டன் என்ற எழுத்தாளர் ஒருமுறை பெர்னாட்ஷாவை சந்திக்க வந்திருந்தார். ஷா மிகவும் ஒல்லியாக இருந்தார். செஸ்டர்டன் மிகவும் உடல் பருத்து குண்டாக இருந்தார்.

செஸ்டர்டன், பெர்னாட்ஷாவைப் பார்த்து, "உங்களைப் பார்த்தால் இந்த நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடுவது போல் இருக்கிறது." என்று கிண்டலாக சொன்னார்.

அதற்கு அமைதியாக, "நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், உங்களைப் பார்த்தால் பஞ்சத்திற்குக் காரணமே நீங்கள்தான் என்று புரிந்து கொள்வார்கள்." என்றார்.

செஸ்டர்டன் அதற்குப் பிறகு வாயே திறக்கவில்லை. :rolleyes:

பைத்தியக்காரத்தனமான கேள்வி

பெர்னாட்ஷாவைப் பார்த்து அவருடைய நண்பர் ஒருவர், "பெர்னாட்ஷா, திடீரென்று உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்.

அதற்குப் பெர்னாட்ஷா, "கடவுளுக்கு நன்றி சொல்வேன்" என்றார்.

குழப்பமடைந்த நண்பர், "கடவுளுக்கு நன்றியா? ஏன்?" என்று கேட்டார்.

"பைத்தியக்காரத்தனமான கேள்விகளைக் கேட்கும் உங்களைப் போன்றவர்கள் என்னை நெருங்கப் பயப்படுவார்கள் அல்லவா? அதனால்தான்" என்றார் ஷா அமைதியாக.

அந்த நண்பர் அசந்து போய்விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏய் யாரங்கே, சுடச் சுட ஒரு மசால் வடை! நன்றி நுணா உடனே தட்டி விட்டிட்டீங்கள் ! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணதாசனின் நகைச்சுவைகள்

"நன்கொடை என்பது என்ன?"

"வாங்குகிறவனை நன்றாக ஆக்குவது. கொடுப்பவனை None ஆக ஆக்குவது."

*********

"ஒரு பிரபல நடிகையின் தாய் பொதுத் தேர்தலில் ஓட்டுப் போட முடிவதில்லை"

"ஏன்?"

"ஓட்டுப் போடும் வயது இன்னும் வரவில்லை"

*********

"கலியுகத்தில் கண்ணன் என்னென்ன நட்க்குமென்று சொன்னபோது மற்றுமொரு கருத்தையும் சொல்லியிருக்கிறான்"

"அதுவென்ன மற்றுமொரு கருத்து?"

"நடிகையின் பாட்டி அந்த நடிகைக்கே மகளாக நடிப்பாள்"

*********

"காந்தியைப் போல் எல்லோரும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்?"

"கடலை வியாபாரம் நன்றாக நடக்கும்."

*********

"பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலுள்ள பலரை விசாரித்ததில்..."

"எப்படி பைத்தியமானார்கள்?"

"சினிமா நடிகைகளை மேக்கப்பில்லாமல் பார்த்ததினால்"

*********

நன்றி: கண்ணதாசன் செப்பு மொழிகள் நூல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபானந்தவாரியார் பேச்சின் நகைச்சுவைகள்

variar.jpg

கடைசிப் பிள்ளை

கிருபானந்தவாரியார் பாரதம் சொல்லிக் கொண்டு இருந்தார். சகாதேவன் பற்றி சொல்ல வேண்டி வந்தது.

"சகாதேவன் கடைசிப் பிள்ளை. கடைக்குட்டி. அவன் சிறந்த ஞானி. பொதுவாகவே கடைக்குட்டிகள் ஞானியாக இருப்பார்கள். காரணம் அப்பனுக்கு ஞானம் வந்த பிறகு பிறக்கிறவன் கடைக்குட்டி பிள்ளை :D அல்லது இவன் பிறந்த பிறகு அப்பன் ஞானியாகி விடுவான். என்ன ஞானம் என்கிறீர்களா? இனி குழந்தை பெறவே கூடாது என்ற ஞானம்."

இவ்வாறு விளக்கிய வாரியார் கூட்டத்தினரை பார்த்து, " இங்கே யாராவது கடைக்குட்டிப் பிள்ளைகள் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். 10 அல்லது 15 சிறுமியர்கள் எழுந்து நின்று தாங்கள் கடைக்குட்டிகள் என்றார்கள்.

வாரியர் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. "உட்காருங்க! யார் எந்த விஷயத்தை முடிவு செய்றதுன்னு கிடையாதா? உங்களோட அம்மா அப்பா என்ன முடிவுல இருக்காங்களோ. வீட்டுக்குப் போய் உதை வாங்காதீங்க" என்றார்.

இறக்கை முளைக்குமா?

ஒரு சொற்பொழிவில் கிருபானந்த வாரியார் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, "ராம நாம மந்திரத்தை சொன்ன உடன், இறக்கைகள் வெட்டப்பட்ட சம்பாதியின் இறக்கைகள் மீண்டும் முளைத்தன'' என்றார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு இளைஞன் குறுக்கிட்டு, வாரியாரிடம் ஒரு கேள்வி கேட்டான்.

"ஒரு கிளியின் இறக்கைகளை நான் வெட்டி விடுகிறேன். நீங்கள் ராம நாமத்தைச் சொல்லி அதற்கு இறக்கை முளைக்கச் செய்திடுங்கள், பார்ப்போம்'' என்றார்.

வாரியாரும் அதற்கு நகைச்சுவை ததும்பவே பதில் சொன்னார்.

"கிளிக்கு இறக்கை நிச்சயம் முளைக்கும். நான் சொன்னால் முளைக்குமா என்று தெரியாது. சித்துக்களை செய்தவர்கள் சொன்னால் கட்டாயம் முளைக்கும்'' என்றார்.

சொல்லின் செல்வர்

ஒரு ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனை சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார்.

போய்க்கொண்டிருந்தவர்கள் யாரை சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.

வாரியார் தொடர்ந்தார், ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .''

தர்மத்துக்கு என் சொத்து

ஒரு ஊரில் மிகப் பெரிய செல்வந்தர் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் மிகவும் கருமியாக கஞ்சத்தனத்துடன் வாழ்ந்து வந்தார்.

அந்த ஊரில் நடைபெறும் கோவில் சீரமைப்பு, பள்ளிக் கட்டடம் கட்டுதல், கிராம மேம்பாடு போன்ற பல நல்ல செயல்பாடுகளுக்காக ஊர் பொதுமக்கள் பலமுறை போய் கேட்டும் ஒரு பைசா கூட கொடுக்காதவர்.

தீடிரென படுக்கையில் விழுந்தவர் சாகும் தருவாயை அடைந்தார். உடனே ஊர் பொதுமக்களை அழைத்து "எனக்குப் பிறகு எனது சொத்துக்கள் அனைத்தும் தருமத்திற்கே!" என்றார்.

ஊர் மக்களுக்கெல்லாம் அதிர்ச்சி, ஆச்சரியம்.

உடனே அங்கிருந்த ஊர் முக்கிய பிரமுகர் செல்வந்தரிடம், "ஐயா! உங்கள் சொத்துக்கள் அனைத்தும் தருமத்திற்கு தர ஒப்புக் கொண்டதற்கு மிக்க நன்றி! இந்த சொத்துக்களை கல்வி வளர்ச்சிக்காக உபயோகிக்கலாமா? அல்லது மருத்துவமனை கட்ட உபயோகிக்கலாமா?" என்று கேட்டார்.

அதற்கு அந்த பெரியவர் "அட நீங்க ஒண்ணு, இந்த சொத்துக்கள் அனைத்தும் எனது மனைவி தருமம் என்கிற தருமாம்பாளுக்கே சொந்தம்” என சொன்னாராம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காந்தியின் நகைச்சுவை

ஒலிபெருக்கிக்காரரின் குடை

காந்தியடிகள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மழை பெய்தது. மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் நனைந்து கொண்டே காந்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒருவர் குடையை விரித்து காந்தியின் தலைக்கு மேலே பிடித்தார். இதைக் கண்ட காந்தி, "மக்கள் எல்லாம் நனையும் போது எனக்கு மட்டும் எதற்குக் குடை?" என்று கேட்டார்.

குடை பிடிப்பவரோ காந்தியின் சொல்லைக் கேட்கவில்லை. தொடர்ந்து குடையைப் பிடித்துக் கொண்டே இருந்தார்.

உடனே காந்தி கூட்டத்தினரைப் பார்த்து சிரித்துக் கொண்டே , "இவர் குடை பிடிப்பதைப் பார்த்தால் ஒலிபெருக்கிக்குச் சொந்தக்காரராக இருப்பார் போலிருக்கிறது. அதனால்தான் ஒலிபெருக்கி நனையாமல் இருக்க குடை பிடித்துக் கொண்டிருக்கிறார்." என்றார்.

இதைக் கேட்ட கூட்டத்தினர் அனைவரும் பலமாகச் சிரித்தனர்.

எனக்குப் பயன்படக் கூடியது.

காந்திஜி லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஆங்கிலேயர் ஒருவரும் அதே கப்பலில் பயணம் செய்தார்.

பயணத்தின் போது காந்திஜியை அவர் அடிக்கடி கிண்டல் செய்து கொண்டு வந்தார் அவர். காந்தியடிகளோ இதைக் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. வெறுத்துப் போன ஆசாமி, காந்தியை நக்கலடித்து சில கவிதைகளை எழுதினார். அதை காந்தியிடம் கொடுத்து,"படித்துப் பாருங்கள்" என்றார்.

கவிதைகளைப் படித்து ஆசாமியின் நக்கலைப் புரிந்து கொண்டார். ஆனாலும் அது குறித்து கவலைப்படவில்லை.

மறுநாள் காலை அந்த ஆசாமி காந்தியடிகளைப் பார்க்க வந்தார். காந்திஜியிடம் ,"என் கவிதைகள் எப்படி? பயனுள்ளதாக இருந்திருக்குமே?" என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டார்.

காந்தியடிகள் சிரித்துக் கொண்டே "ஓ..! தாங்கள் கொடுத்த கவிதைகளை ஒன்று விடாமல் படித்தேன். அதில் எஅன்க்குப் பயன்படக்கூடிய அம்சத்தை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்." என்று கூறி அந்தக் காகிதத்தில் குத்தியிருந்த குண்டூசியை எடுத்துக் காட்டினார். நீங்கள் கொடுத்ததில் இதுதான் எனக்குப் பயன்படக் கூடியது."என்றார்.

அந்த ஆங்கிலேயரின் முகத்தில் ஈயாடவில்லை.

நீர்வீழ்ச்சியை விட பெரியது.

காந்தியடிகள் ஒருமுறை கர்நாடக மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த சிலர் காந்திஜியிடம், "ஜோக் நீர் வீழ்ச்சியைப் பார்க்க வருகிறீர்களா?" என்று கேட்டனர்.

அந்த அன்பர்களிம் அழைப்பைத் தட்டிக் கழிக்க விரும்பாத காந்தியடிகள்,"நீங்கள் மழையைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? நன்கு கவனித்திருக்கிறீர்களா? வானத்திலிருந்து வருகிறது. வானிலுள்ள கருமேகங்களிலிருந்து வருகிறது. நீர்வீழ்ச்சி மலையிலிருந்து அல்லவா விழுகிறது. மலையை விட உயர்ந்த இடத்திலிருந்து வருகிறது மழை. அதற்கு இணை அதுவேதான். அதற்கு அடுத்தல்லவா நீர் வீழ்ச்சி எல்லாம்..."என்று அவர்களைச் சிரிக்க வைத்தார். சிந்திக்கவும் வைத்தார்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DR.-S-Radhakrishnan1.jpg

டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் ஐரோப்பியர்கள் ஒரு முறை கேட்டார்கள்,''எங்கள் ஊரில் மக்கள் ஒன்று,கருப்பாக இருக்கிறார்கள் அல்லது,வெள்ளையாக இருக்கிறார்கள்.ஆனால் உங்கள் ஊரில் வெள்ளை, பழுப்பு,பழுப்பு கலந்த சிவப்பு,மஞ்சள்,வெளிர் மஞ்சள்,கருப்பு என்று பல்வேறு நிறங்களில் இருக்கிறார்களே,அது ஏன்?''ராதாகிருஷ்ணன் சட்டென்று பதில் சொன்னார்,''கழுதைகள் ஒரே நிறத்தில் இருக்கின்றன.குதிரைகள் பல்வேறு நிறங்களில் இருக்கின்றன..''

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் ஒரு முறை அழுக்குத் தோற்றமுடைய நீக்ரோ சிறுவன் ஒருவனை சந்தித்தார்.அவனிடம்,''உன் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தால் உனக்கு பத்து ரூபாய் தருகிறேன்,''என்றார்.அவனும் முகத்தை நன்றாகக் கழுவிக் கொண்டு வந்து பத்து ரூபாயைப் பெற்றுக் கொண்டான்.''இந்தப் பணத்தைக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்?''என்று ஐன்ஸ்டீன் கேட்க,பையன் சொன்னான்,'உங்களது தலை முடியை வெட்டிக் கொண்டு வந்தால்,இந்தப் பணத்தைத் தங்களுக்குத் தரலாம்என்று நினைக்கிறேன்.'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெர்னாட்ஷா ஒரு நிகழ்ச்சியில் ஒரு அழகிய மங்கையை சந்தித்தார்.ஆயிரம் பவுண்ட் தொகையை அவளிடம் கொடுத்து,ஒரு நாள் இரவை அவருடன் கழிக்க முடியுமா எனக் கேட்டார்.அந்தப் பெண் உடனடியாக,''நான் திருமணமானவள்;மரியாதைக்குரியவள்.என்னிடமிப்படிக் கேட்பதற்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம்?''என்று கோபப்பட்டாள்.ஷா உடனே பத்தாயிரம் பவுண்ட் தருவதாகச் சொன்னார்.அவள் இன்னும் கோபத்துடன்,தன கணவனைக் கூப்பிடுவேன் என்றாள்.''சரி,பத்து லட்சம் பவுண்ட் தருகிறேன் யாருக்கும் தெரியப்போவதில்ல.என்ன சொல்கிறாய்?''என்று கேட்டார் ஷா.அந்தப்பெண் யோசித்துவிட்டுத் தன சம்மதத்தைத் தெரிவித்தாள்.உடனே ஷா,''இப்போது நான் பத்து பவுண்ட் தான் தருவேன் என்று சொன்னால் நீ என்ன செய்வாய்?''என்று கேலியாகக் கேட்டார்.அந்தப்பெண் சீற்றத்துடன்,''நீங்கள் என்னை அவமானப்படுத்துகிரீர்கள்.என்னை யார் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?''என்று வெடித்தாள்.ஷா,''அம்மணி நீங்கள் யார் என்பதை ஏற்கனவே நிர்ணயித்துவிட்டோம்.எவ்வளவு விலை என்பதைப் பற்றித்தான் இப்போது விவாதித்துக் கொண்டு இருக்கிறோம்.என்று அமைதியாகக் கூற அந்தப்பெண் தலை கவிழ்ந்து அங்கிருந்து சென்றாள்.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிரேக்க தத்துவ மேதை சாக்ரடீஸ், தாம் குடியிருப்பதற்காக ஒரு வீடு கட்டிக் கொண்டிருந்தார். அது மிகவும் சிறியதாக இருந்தது. அவரைப் பார்க்க வந்த ஒருவர், சாக்ரடீஸிடம், ‘‘உலகம் புகழும் தத்துவ ஞானியான தாங்கள் இவ்வளவு சிறிய வீடு கட்டுகிறீர்களே, இது எப்படி போதும்?’’ என்று கேட்டார். ‘‘இந்தச் சிறிய வீட்டை நிரப்பும் அளவுக்காவது உண்மையான நண்பர்கள் கிடைப்பார்களா என்பது எனது சந்தேகம்’’ என்று பதில் சொன்னார் சாக்ரடீஸ். கேள்வி கேட்டவர் அதன் பிறகு பேசவே இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் ஐரோப்பியர்கள் ஒரு முறை கேட்டார்கள்,''எங்கள் ஊரில் மக்கள் ஒன்று,கருப்பாக இருக்கிறார்கள் அல்லது,வெள்ளையாக இருக்கிறார்கள்.ஆனால் உங்கள் ஊரில் வெள்ளை, பழுப்பு,பழுப்பு கலந்த சிவப்பு,மஞ்சள்,வெளிர் மஞ்சள்,கருப்பு என்று பல்வேறு நிறங்களில் இருக்கிறார்களே,அது ஏன்?''ராதாகிருஷ்ணன் சட்டென்று பதில் சொன்னார்,''கழுதைகள் ஒரே நிறத்தில் இருக்கின்றன.குதிரைகள் பல்வேறு நிறங்களில் இருக்கின்றன..'

எல்லாமே அருமையான பதிவுகள். இணைப்புக்களுக்கு நன்றிகள் நுணாவிலான்.

  • 9 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிஞர் அண்ணாவின் இந்தி எதிர்ப்பு காலத்தில் அண்ணா டெல்கி சென்ற போது ஒரு பத்திரிகையாளர் உங்களவர்கள் டெல்கி வந்தால் மூன்றே மாதத்தில் கிந்தியை கற்றுக்கொள்கிறார்கள்.ஏன் நீங்கள் மட்டும் கிந்தி படிப்பதை எதிர்க்கிறீர்கள் என்றாராம்.அதற்கு அண்ணா வேடிக்கையாக மூன்று மாதத்துக்கு மேல் கற்க கிந்தியில் என்ன இருக்கிறது என்றராம்.

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழை வந்தது ஏன்?

வடசென்னையில் உள்ள விநாயகர் கோவிலில் வாரியார் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஏராளமான பக்தர்கள் சொற்பொழிவு நடைபெறும் இடத்தில் இடம் பிடித்து அமர்ந்து விட்டார்கள். வாரியார் வருகைக்காக அவர்கள் காத்திருந்தனர்.

அந்த நேரத்தில் திடீரென்று மழை. வந்தவர்கள் அனைவரும் கோவிலுக்குள் சென்று மிக நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள். சொற்பொழிவாற்ற வந்த வாரியார், தான் பேசும்போது, எடுத்த எடுப்பிலேயே அதுபற்றி குறிப்பிட்டு பேச ஆரம்பித்தார்.

"கந்தபுராண சொற்பொழிவு, கந்தபுராண சொற்பொழிவு என்று வால் போஸ்டரை வருணலோகம் வரை ஒட்டிவிட்டார்கள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அன்பர்கள்.

வருண பகவான் பார்த்தார்: “ஆ! சூர பத்மனின் சிறையில் இருந்து நம்மை விடுவித்த முதல்வன் (முருகன்) கதை அல்லவா இது? நாமும் கேட்க வேண்டுமே என்று அவரே வந்து விட்டார். அது தான் மழை!” என்று வாரியார் குறிப்பிடவும், எல்லோரும் வாய்விட்டு சிரித்து கைதட்டிவிட்டனர்.

கைத்தட்டல் அடங்கியதும், "நீங்கள் எல்லோரும் நெருக்கமாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். அதனால் தான், திறந்தவெளியில் இருந்த உங்களை நெருக்கமாக அமரும்படி செய்து விட்டார் வருண பகவான்" என்று வாரியார் மேலும் குறிப்பிட்டபோது, மீண்டும் கைத்தட்டல் எழுந்து அடங்கியது.

முருகனுக்கு அப்பாவான சிவாஜி

கிருபானந்த வாரியார் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது சிவனின் அருமை பெருமைகளை கூறி வந்தார்.

திடீரென்று, ஒரு சிறுவனை பார்த்து, "முருகனின் அப்பா பெயர் என்ன?" என்று கேள்வி கேட்டார்.

அந்த சிறுவன் சற்றும் தயங்காமல், "சிவாஜி" என்று பதில் கூறினான்.

வாரியார் எந்தவித அதிர்ச்சியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், சமயத்திற்கு ஏற்றது போல், "பையன் கூறுவது சரி தான்" என்றார்.

இதைக்கேட்டு கூட்டத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை புரிந்து கொண்ட வாரியார், "பெரியவர்களை நாம் காந்திஜி, நேருஜி என்று மரியாதையுடன் அழைப்பது இல்லையா? அது மாதிரி தான் அந்த பையன் சிவனை "சிவாஜி" என்று மரியாதையுடன் அழைத்து இருக்கிறான்" என்று கூறவும், கூட்டத்தினர் மீண்டும் சிரிப்பலையில் ஆழ்ந்தனர்.

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.