Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொல்லப்பட்டவர்கள் யாரும் அப்பாவித் தமிழர்கள் இல்லை, புலிகளே-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகளை மட்டுமே படையினர் கொன்றனர்!

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-06 07:11:36| யாழ்ப்பாணம்]

படையினர் எந்தவொரு தமிழ் குடிமகனையும் கொல்லவில்லை.அவர்கள் புலிப் பயங்கரவாதிகளை மட்டுமே கொன்றனர். எமது அறிவுறுத்தல் எந்தவொரு பொதுமகனையும் தாக்கக்கூடாது.இது ஒரு மனிதா பிமான நடவடிக்கை என்பதாகவே இருந்தது. இவ் வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச லண்டன் ரைம்ஸ் இதழுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்ற வென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரிட்டன் சென்றிருந்தபோது புலம்பெயர் தமிழ்க் குழுக்களின் எதிர்ப்பலைகள் காரணமாக அவர் நிகழ்த்த விருந்தஉரை யூனியன் ஏற்பாட்டாளர்களால் இரத்துச் செய்யப்பட்டது.அதன் பின்னர் லண்டன் ரைம்ஸ் அவருடன் மேற்கொண்ட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எதிரெதிர் தாக்குதலின்போது ஒன்று அல்லது இரண்டு பொதுமக்கள் தாக்குதலில் சிக்கியிருக்கக்கூடும்.என்பதை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி இது குறித்து தாம் கவனம் செலுத்வோம் என்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில்இராணுவ வெற்றி கண்டு 18 மாதங்களின் பின்னர் யுத்தக் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியமைக்காக இலங்கை குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கை இராணுவம் இறுதிக் கட்டயுத் தத்தின்போது மேற்கொண்ட சிவில் தாக்குதல்களால் சுமார் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல் லப்பட்டதாக ரைம்ஸ் இவ்வருடம் தகவல் வெளியிட்டிருந்தது.இது தொடர்பில் கேட்கப் பட்டபோது வெறுமையான புன்னகையுடன் நிதானமாக மறுத்தார் ஜனாதிபதி.

அனேகமாக பொது மக்கள் புலிகளாலேயே கொல்லப்பட்டனர்.அவர்களை புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர்.அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு அவர்கள் தப்பி வர முயற்சித்தபோது புலிகள் அவர்களை கொலை செய்தார்கள். எந்த நாடும் செய்ய இயலாத சாதனையாக நாம் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டுள் ளோம்.இப்போது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது என்றார்.

சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டியுள்ளது தொடர்பில் கேட்கப்பட்டபோது, அதனால் இப்போதோ எதிர்காலத்திலோ இலங்கையின் எந்தத் துறைமுகமும் சீனா வின் கடற்படைத்தளமாக இருக்காது. வீடியோக் காட்சிகள் தொடர்பான முழு விடயத்தையும் நான் நிராகரிக்கிறேன். இது போன்றதொரு வீடியோ முன்னர் ஒளிபரப்பாகியுள்ளது. எல்லாம் போலியானவை என்று கூறினார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான இரு முக்கிய குற்றச்சாட்டுக்கள் உள்ளன.முன்னாள் நண்பன் இந்நாள் எதிரி.மற்றும் முன்னாள் எதிரி பின்னாள் நண்பன் என்பவைகளே அவையாகும்.

ஒன்று சரத் பொன்சேகா.மற்றையது விநாயகமூர்த்தி முரளிதரன் என்பவர்கள் சம்பந்தப்பட்டதே அவை. இது குறித்து பதிலளித்தபோது, சரத் பொன்சேகா தொடர்பான விவகாரம் யாவும் சட்ட முறைக்குள் உட்பட்டதெனவும் முரளிதரன் குறித்துக் குறிப்பிடும் போது எவரையும் மன்னிக்க நாம் தயாராக உள்ளோம். அவர் ஜனநாயகப் பாதைக்கு வரமுடியுமானால் அவரைப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கூறினார். யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மீதான முழு அளவிலான விசாரணை ஏன் நடத்தப்பட வில்லை என்ற கேள்விக்கு, நாம் இதனை முன்பே செய்துள்ளோம். நாம் ஆணைக்குழுவையும் ஏற்படுத்தியுள்ளோம் என்று பதிலளித்தார்.

இறுதி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த 3 இலட்சம் மக்களில் மீள்குடியேற்றத்தை எதிர் பார்த்து 10 ஆயிரம் பேரே உள்ளனர். சிறுவர் போராளிகள் அனைவரும் விடுவிக்கப்பட் டுள்ளனர் எனத் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, புலிச் சந்தேக நபர்களின் பட்டி யலை வெளியிட தனது அரசாங்கம் மறுத்துள்ளதாகவும் அவ்வாறு தடுத்துவைக்கப் படட்டுள்ளவர்கள் பட்டியலை ரைம்ஸ் இத ழுக்கு காட்டுவதாகவும் ஆனால் அவர்களின் பெயர்களைப் பிரசுரிக்க அனுமதிக்க முடியா தெனவும் குறிப்பிட்டார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=13010

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்டவர்கள் யாரும் அப்பாவித் தமிழர்கள் இல்லை, புலிகளே-ராஜபக்சே பேச்சு

திங்கள்கிழமை, டிசம்பர் 6, 2010, 12:32[iST]

லண்டன்: மிகக் கொடூரமான முறையில் தங்களிடம் பிடிபட்டவர்களை சிங்கள ராணுவத்தினர் கொலை செய்த செயலை அந்த நாட்டு அதிபர் ராஜபக்சே நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

போரின்போது பிடிபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முறையாக நடத்தி விசாரணைக்குப் பின்னரே தண்டிக்க வேண்டும் என்பது சர்வதேச விதி, நியதி. மனித உரிமைகளுக்கே இதில் முதலிடம் என்பதும் அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்கும் நியதியாகும்.

ஆனால் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல், தங்களிடம் சிக்கியவர்களை, நயவஞ்சமாக பிடிக்கப்பட்டவர்களை மிகக் கொடூரமான முறையில் கொன்று குவித்தும், பாலியல் பலாத்காரம் செய்தும், உடல் உறுப்புகளை மோசமான காட்டு விலங்குகளைப் போல கதறிக் குதறி துண்டுபடுத்தியும் வெறியாட்டம் போட்டுள்ளது சிங்கள ராணுவம்.

ஹிட்லர் கூட இவர்களைப் பார்த்து பயந்துநடுங்கிப் போயிருப்பான் உயிருடன் இரு்நதிருந்தால். யூதர்கள் கூட இவ்வளவு மோசமான, அவலமான மரணத்தையும், சித்திரவதையையும் நிச்சயம் சந்தித்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ஈழத்துத் தமிழர்களும், அவர்களுக்காக போராடி விடுதலைப் புலிகளும் மிக மோசமான சித்திரவதைகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் ஆளாகியுள்ளனர்.

இதுதொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. உலக மக்களை இது உலுக்கி எடுத்து வரும் போதிலும், இலங்கை அரசையோ அல்லது அந்த அரசுக்கு சப்பைக் கட்டு கட்டி, கண்மூடித்தனமான ஆதரவு தெரிவித்தவர்களையோ எந்த வகையிலும் சலனப்படுத்தவில்லை. மாறாக இந்த செயலைநியாயப்படுத்தியுள்ளார் ராஜபக்சே.

லண்டனுக்குப் போய் உயிர் பிழைத்தால் போதும் என்ற ரீதியில் தப்பி ஓடி வந்த ராஜபக்சே லண்டன்டைம்ஸ் இதழுக்கு இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில்,

இலங்கை படையினர் பயங்கரவாதிகளை மாத்திரம் கொலை செய்தார்கள். எந்த ஒரு குடிமகனையும் இலங்கை ஒருபோதும் கொலை செய்யவில்லை.

எமது அறிவுறுத்தல் எந்த ஒரு பொதுமகனையும் தாக்கக்கூடாது. இது ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்பதாகவே இருந்தது.

எதிரெதிர் தாக்குதலின் போது ஒன்று அல்லது இரண்டு பொதுமக்கள் தாக்குதலில் சிக்கியிருக்கவும் கூடும். இது குறித்து நான் கவனம் செலுத்துவேன்.

எனது ஆக்ஸ்போர்ட் யூனியன் பேச்சை ரத்து செய்ததில், அந்த யூனியன் தலைவர் தமிழ் குழுக்களால் அச்சுறுத்தப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கின்றேன் என்று பேசியுள்ளார் ராஜபக்சே.

இலங்கை ராணுவம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மேற்கொண்ட 20 000 பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பெரும்பாலான பொதுமக்கள் புலிகளாலேயே கொல்லப்பட்டனர். அவர்களைப் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர். அரசு கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு அவர்கள் தப்பி வர முயற்சித்தபோது புலிகள் அவர்களைக் கொலை செய்தார்கள்.

எந்த நாடும் செய்ய இயலாத சாதனையாக நாங்கள் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டுள்ளோம். இப்போது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டியுள்ளதால், இப்போதோ எதிர்காலத்திலோ இலங்கையின் எந்தத் துறைமுகமும் சீனாவின் கடற்படைத் தளமாக இருக்காது. இந்தியா அல்லது வேறு நாடாகவும் இது இருக்கலாம்.

தற்போது வெளியாகியுள்ள அனைத்து வீடியோக்களையும் நான் நிராகரிக்கிறேன். இது போன்றதொரு வீடியோவும் முன்னர் ஒளிபரப்பாகியுள்ளது. எல்லாம் போலியானவை.

சரத் பொன்சேகா தொடர்பான அனைத்தும் சட்டமுறைகளுக்கு உட்பட்டது. அதுகுறித்து நான் பேச விரும்பவில்லை. அதேபோல கருணாவுக்கு மன்னிப்பு தரப்பட்டது பெரிதாக்கப்படுகிறது. கருணா மட்டுமல்ல, எவரையும் மன்னிக்க நாம் தயாராக உள்ளோம். ஜனநாயகப் பாதைக்கு வர முடியுமானால் அவர்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணையை முன்பே செய்துள்ளோம். ஆணையத்தையும் ஏற்படுத்தியுள்ளோம்.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 3 லட்சம் மக்களில் மீள் குடியேற்றத்தை எதிர்பார்த்து 10,000 பேரே உள்ளனர். சிறுவர் போராளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார் ராஜபக்சே.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ராணுவம் கொழும்பில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மேற்கொண்ட 20 000 பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பெரும்பாலான பொதுமக்கள் சிங்கள ராணுவத்தினராலேயே கொல்லப்பட்டனர். அவர்களைப் சிங்கள ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர். புலிகளின் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு அவர்கள் தப்பி வர முயற்சித்தபோது சிங்கள ராணுவம் அவர்களைக் கொலை செய்தார்கள்.

எந்த நாடும் செய்ய இயலாத சாதனையாக அரச பயங்கரவாதத்தினை முறியடித்து புதிய ஆட்சியமைப்பை ஏற்றுள்ளோம். இப்போது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது.

புலிகளின் தாகம் ஒட்டுமொத்த இலங்கை... ரைட்டு

டிஸ்கி:

இது எனது எண்ணபாங்கு ரைட்டு... :D

சுயஉரிமைக்கு ஆசைப்படுகின்ற தமிழன் பயங்கரவாதி என்றால் அவர்கள் அழித்தது பயங்கரவாதிகளைத்தான்

தமிழன் எல்லாருமே பயங்கரவாதிகள் தானே.... ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.