Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வை உலகுக்கு தெரிவிக்கும் வாய்ப்பை திசை திருப்பிவிட்டனர்

Featured Replies

(விசு கருணாநிதி, லோரன்ஸ் செல்வநாயகம்)

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழ கத்தின் உரையில் தெளிவுபடுத் துவதற்கு நான் திட்டமிட்டி ருந்தேன். இதனூடாக எமது திட்டம் சர்வதேச மயப்படுவதைத் தடுப்பதற்காக சிலர் செயற்பட்டு நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளனரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து ஜனாதிபதி நேற்று உரையாற்றினார். சுமார் 50 நிமிடம் சபையில் பேசிய அவர் மேலும் கூறியதாவது; வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்படவில்லை எனச் சிலர் இனவாத ரீதியாகக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். பிரித்தானியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் இதன் ஒரு வெளிப்பாடே. ஆனால் வடக்கு, கிழக்கை கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னுரிமை அளித்திருக்கின்றோம்.

இதேவேளை, இராணுவத்திற்குள் பிரச்சினைகளை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். இராணு வத்திற்குள் சந்தேகத்தை தோற்றுவித்து பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி செய்யாதீர்கள் என நான் கேட்டுக் கொள் ளுகின்றேன்.

வரவு - செலவுத்திட்டம் மீதான விமர்சனங்கள் மீது கவனம் செலுத்துவேன். சிலர் தாம் விரும்புவதை எங்களுக்கூடாகச் செய்வதற்கு முயற்சி செய்கின்றார்கள்.

பாதுகாப்பு செலவீனம் தொடர்பாக சபையில் பேசப்பட்டது. வரவு - செலவுத் திட்டத்தில் 209 பில்லியனில் 88 வீதம் அதாவது 184 பில்லியன் ரூபாயைத்தான் பாதுகாப்புக்குச் செலவிடுகிறோம். பாதுகாப்புச் செலவீனம் என்னும் போது மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல் கொழும்பு நகர அபிவிருத்தி போன்றவைகளும் உள்ளடங்கியவை என்பதை மறந்துவிடக் கூடாது.

படையினர் இப்போது முழுமையான அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். 2010 ஆம் ஆண்டு சமாதான ஆண்டாகும். அதேநேரம் பூரண நிதியா ண்டாகும்.

தேசிய பாதுகாப்புக் கருதி நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. உலகில் சிறந்த சமாதான படையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பயங்கரவாதம் மீண்டும் ஏற்படாத முதலீடாக பாதுகாப்புச் செலவீனத்தைக் கருத முடியும்.

இதேநேரம், பட்ஜட் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் மார்ச் மாதத்தில் இடம்பெறும். இதற்கு எதிர்க்கட்சியினரும் அழைக்கப்படுவர்.

நீதிமன்றக் கட்டமைப்பை சர்வதேசமயப்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். இதற்கு இடமளியாது நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை பேணப்படும்.

இலங்கை மண்ணில் கால்வைத்திராத சிலர் இலங்கையைப் பயன்படுத்தி தமது தேவைகளை நிறைவேற்றப் பார்க்கின்றனர்.

  • தொடங்கியவர்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழ கத்தின் உரையில் தெளிவுபடுத் துவதற்கு நான் திட்டமிட்டி ருந்தேன். இதனூடாக எமது திட்டம் சர்வதேச மயப்படுவதைத் தடுப்பதற்காக சிலர் செயற்பட்டு நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளனரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

ஆஆஆஆஆ.... தப்ப விட்டுட்டம்! ... தீர்வாம்???36_1_4.gif

உந்த தீர்வை ஒக்ஸ்போட்டிலை தான் சொல்ல வேணுமே கொழும்பிலை வைச்சு சொன்னால் தெரியாமல் போகுமோ....???

இதை நம்பவும் தமிழருக்கை ஒரு கூட்டம் இருக்கு எண்டது தான் கசப்பான உண்மை...

கீழே, நவீன கெமுனு, தலைமை போர்க்குற்றவாளி, பல உண்மைகளை தெளிவாக சொல்லியுள்ளார்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்படவில்லை எனச் சிலர் இனவாத ரீதியாகக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். பிரித்தானியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் இதன் ஒரு வெளிப்பாடே. ஆனால் வடக்கு, கிழக்கை கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னுரிமை அளித்திருக்கின்றோம்.

கொடிய போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற ரீதியில் எமது மக்களுக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்ப்பர்க்காவிட்டலும்

நாட்டின் மக்கள் விகிதாசார அடிப்படையில் கூட எமது மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை.

இது தொடரும் இன பாகுபாட்டையும் இனவாதத்தையும் காட்டுகின்றது.

வரவு - செலவுத்திட்டம் மீதான விமர்சனங்கள் மீது கவனம் செலுத்துவேன். சிலர் தாம் விரும்புவதை எங்களுக்கூடாகச் செய்வதற்கு முயற்சி செய்கின்றார்கள்.

மேலும் சர்வதேச நாணய நிதி அமைப்பு அரசை இன்று ஐரோப்பாவில் போல அரச செலவுகளை குறைக்க சொல்வது இங்கு இவர்களுக்கு பிடிக்கவில்லை. அதன் விளைவால் வருங்காலங்களில் கடன் அதிக நெருக்கங்களின் மத்தியில் தான் தரப்படும். கூடிய வட்டி வீதமும் அறவிடப்படும்.

பாதுகாப்பு செலவீனம் தொடர்பாக சபையில் பேசப்பட்டது. வரவு - செலவுத் திட்டத்தில் 209 பில்லியனில் 88 வீதம் அதாவது 184 பில்லியன் ரூபாயைத்தான் பாதுகாப்புக்குச் செலவிடுகிறோம். பாதுகாப்புச் செலவீனம் என்னும் போது மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல் கொழும்பு நகர அபிவிருத்தி போன்றவைகளும் உள்ளடங்கியவை என்பதை மறந்துவிடக் கூடாது.

படையினர் இப்போது முழுமையான அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். 2010 ஆம் ஆண்டு சமாதான ஆண்டாகும். அதேநேரம் பூரண நிதியா ண்டாகும்.

தேசிய பாதுகாப்புக் கருதி நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. உலகில் சிறந்த சமாதான படையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பயங்கரவாதம் மீண்டும் ஏற்படாத முதலீடாக பாதுகாப்புச் செலவீனத்தைக் கருத முடியும்.

இலங்கை சிங்களத்தால் தொடர்ந்தும் ஒரு இராணுவ மயமாக்கப்பட்ட நாடக்கத்தான் இருக்கும்,

தமிழருக்கு ஒரு அரசியல் உரிமையும் வழங்கப்பட மாட்டாது !

மொத்தத்தில், நாம் சிங்களத்தை பொருளாதார ரீதியாக தொடர்ந்தும் பலவீனப்படுத்தல் வேண்டும்,

எனது அரசியல் உரிமைகளுக்காக போராடியே ஆகவேண்டும்.

போர்க்குற்றவாளி மகிந்த தனது சிங்கள பற்றிய கவலையை 1988 ம் ஆண்டு சொல்கிறார்... தமிழ் மக்களை பற்றி அவருக்கு கவலை எப்போதும் இல்லை என்பதுக்கான ஆதாரம் இது... அதோடு ஆவர் இந்தியாவை வெறுப்பவர்... இந்தியாதான் அவருடன் ஒட்டி உறவாட நினைக்கிறது என்பதையும் சொல்கிறது...

http://www.youtube.com/watch?v=QLnyUswWhYk&NR=1

Edited by தயா

எலும்புத் துண்டின் பின்னால் அலையும் இந்திய ஓநாய்களுக்கு இதெல்லாம் விளங்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.