Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு IMF உதவிகளை வழங்கவுள்ளது :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு IMF உதவிகளை வழங்கவுள்ளது :

14 டிசம்பர் 2010

ஐக்கிய நாடுகளின் பிரகடனங்களுக்கு அமைவாக விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு ...

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு IMF உதவிகளை வழங்கவுள்ளது :

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் காணப்படுவதாகவும், அந்த சொத்துக்களை சுவீகரித்துக் கொள்ள அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் பிரகடனங்களுக்கு அமைவாக விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் 1267ம் மற்றும் 1373ம் பிரகடனங்களின் சொத்துக்களை சுவீகரி;ப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரகடனங்களை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கக் கூடிய சிக்கல்களுக்கு சர்வதேச நாணயம் நிதியம் தீர்வுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் 1267ம் பிரகடனத்தின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கள், பயங்கரவாதிகள் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்களை முடக்குதல், பயணக் கட்டுபாடு விதி;த்தல், ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களை தடைசெய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என இந்தப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1373ம் பிரகடனம் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை பிரகடனங்களை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் குறைந்தபட்சம் 15 நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாதிகளின் சொத்துக்களை முடக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் பல நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

GTN

இலங்கை அரசாங்கத்தால் வெளிநாடுகளில் இருக்கும் சொத்துக்களை சுவீகரிக்க சட்ட பூர்வமாக எதுவும் முடியாது... KP போல யாராவது தாங்களாக கொண்டு போய் குடுத்தால் உண்டு... இல்லை இவை புலிகளின் சொத்துக்கள் எண்று அரசு எந்த நாட்டில் இருக்கிறதோ அந்த நாட்டில் உரிய சாட்டிசியங்களை காட்டினால் அந்த சொத்துக்களை அந்த நாடுகள் சுவீகரித்துக்கொள்ளும்... இலங்கை அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டிய அவசியம் அந்த நாடுகளுக்கு கிடயாது...

இது ஏற்கனவே நடந்தவை தான்...

IMF குழு ஒன்று மீண்டும் சிங்களம் வருகின்றது:

- கொடுத்த கடனை உறுதியளித்த திரைகளில் செலவீடு செய்கிறார்களா?

- மீண்டும் திருப்பி செலுத்தக்கூடிய வலு உள்ளதா?

- நாட்டின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என பார்க்கப்படும்?

இவை தான் IMF அவற்றின் வேலைகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.