Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

றொஹான் குணரத்தினா எம்மீது கடும் ஆத்திரம் கொண்டுள்ளதை நான் அறிவேன்: கலாநிதி இம்மானுவேல்

Featured Replies

உலகத் தமிழர் போரவையை கலைக்கவேண்டும் என தற்போது கூறும் றொஹான் குணரத்தினா என்பவர் முன்னர் பேராசிரியராக இருக்கவில்லை, ஒரு இரகசிய காவல்த்துறை அதிகாரியாக பணியாற்றியிருந்தார். அவர் என்னை பின்தொடர்ந்ததுடன், வேறு நாடுகளிலும் என்னை சந்தித்திருந்தார்.

நானும் அவரின் உளவறியும் வளர்ச்சியை கவனித்தே வந்துள்ளேன். தற்போது அவர் தன்னை தானே ஒரு உலகநிபுணர் என தெரிவித்துவருகின்றார். சிறீலங்கா அரசுடன் இணைந்து அவர் பணியாற்றுவதுடன், எம்மீது கடும் ஆத்திரம் கொண்டுள்ளதையும் நான் புரிந்து கொண்டுள்ளேன்.

உலகத் தமிழர் பேரவை கலைக்கப்படவேண்டும் எனவும், என்னைப்பற்றி பல விடயங்களை தவறாகவும் எழுதியுள்ளார் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் காலாநிதி இம்மானுவேல் அவர்கள் எமக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

நேர்காணலின் இரண்டாம் பாகம் வருமாறு:

கேள்வி: புலம்பெயர் தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு சிறீலங்கா அரசு தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. தற்போது அரசின் பிரச்சார பீரங்கியாக சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் அரச பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான துறையில் பணியாற்றும் பேராசிரியர் றொஹான் குணரத்தினா செயற்பட்டு வருகிறார். அவர் அண்மையில் த நேசன் என்ற வாரஏட்டுக்கு வழங்கிய நேர்காணலில் உலகத் தமிழர் பேரவையை அழிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். இது ஒரு வன்முறையை தூண்டும் செயல் அல்லவா? அவர் மீது நாம் சட்ட நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள முடியுமா?

பதில்: சட்டநடவடிக்கை தொடர்பில் நாம் எமது பலத்தையும், பணத்தையும் செலவிடுவது தவறு. ஆனால் றொஹான் குணரத்தினா என்பவரை எனக்கு நீண்ட காலம் தெரியும். அவர் 1997 ஆம் ஆண்டு சுவிற்சலாந்தில் ஒரு அனைத்துலக கூட்டம் நடைபெற்றபோது அதனுள் நுளைந்து என்னிடம் வந்து விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் நேர்காணல் ஒன்றை வழங்கமுடியுமா என கேட்டிருந்தார்.

எனது சிங்கள குரு மாணவர்கள் எனது நடவடிக்கைகள் தொடர்பில் அவருக்கு நன்றாக கூறியதால், நான் ஒரு நல்ல மனிதர் என அவர் தெரிவித்திருந்தார்.

நேர்காணல் வழங்க நான் மறுத்துவிட்டேன். பிரபாகரன் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு நான் யார் என தெரிவித்து நான் மறுத்துவிட்டேன். அப்போது அவர் பேராசிரியராக இருக்கவில்லை, ஒரு இரகசிய காவல்த்துறை அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.

அவர் என்னை பின்தொடர்ந்ததுடன், வேறு நாடுகளிலும் என்னை சந்தித்திருந்தார். நானும் அவரின் உளவறியும் வளர்ச்சியை கவனித்தே வந்துள்ளேன். ஸ்கொட்லாந்தில் உள்ள சென் அன்றுர்ஸ் பல்கலைக்கழகத்தில் செல் நிறுவனத்தின் பணத்தில் கல்விகற்று, தற்போது அவர் தன்னை தானே ஒரு உலகநிபுணர் என தெரிவித்துவருகின்றார். சிறீலங்கா அரசுடன் இணைந்து அவர் பணியாற்றுவதுடன், எம்மீது கடும் ஆத்திரம் கொண்டுள்ளதையும் நான் புரிந்து கொண்டுள்ளேன்.

உலகத் தமிழர் பேரவை கலைக்கப்படவேண்டும் எனவும், என்னைப்பற்றி பல விடயங்களை தவறாகவும் எழுதியுள்ளார். ஆனால் அது தொடர்பில் நாம் கருத்தில் எடுக்கப்போவதில்லை. சட்டநடவடிக்கை எடுப்பதும் தேவையற்றது. அவர்கள் இவ்வாறு புலம்பியவாறே இருப்பார்கள். ஆனால் நாம் அவர்களுக்காக எமது பணத்தையோ அல்லது நேரத்தையோ செலவிடுவது தேவையற்றது.

நாம் எமது அமைப்புக்களை பலப்படுத்தி, எமது பாதையில் சென்றுகொண்டிருக்க வேண்டும். அக்கம், பக்கம் இருந்து குட்டி நாய்கள் குரைத்துக்கொண்டுதான் இருக்கும். நாம் அதனை கவனத்தில் எடுக்காது, எமது பாதையில் பயணிக்க வேண்டும்.

கேள்வி: விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலில், சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவும், முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் பிரதம குற்றவாளிகள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தற்போது, அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர். மேற்குலகத்தின் இந்த நிலைப்பாட்டை தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை பெறுவதற்கு எவ்வாறு சாதகமாக மாற்ற முடியும்?

பதில்: மேற்குலகத்தின் இந்த நிலைப்பாட்டை நாம் கவனமாக பயன்படுத்த வேண்டும். கவனமாக என்று ஏன் இதனை கூறுகின்றேன் என்றால், அமெரிக்கா தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன. எதிர்காலத்தில் வேறு நாடுகள் தொடர்பிலும் தகவல்கள் வெளிவரலாம். நாம் அவற்றை கவனமாக உள்வாங்கவேண்டும்.

அவற்றை நாம் எவ்வாறு கையாளவேண்டும் என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தற்போது சர்வதேச ரீதியில் பல சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையில் நாம் எமது காய்களை நுட்பமாக நகர்த்தவேண்டிய நிலையில் உள்ளோம்.

நாம் பலவற்றை அறிந்திருந்தாலும், எதிரிகளுடனும், முன்னர் எமக்கு எதிராக செயற்பட்ட நாடுகளுடனும் பேசவேண்டிய நிலை ஏற்படலாம். இன்று எமக்காக அமெரிக்காவோ அல்லது, பிரித்தானியாவோ முன்னின்று குரல் கொடுக்கலாம். இந்தியாவும் ஏதாவது எதார்த்த ஒழுக்கத்துடன் பேசலாம். ஆனால் நாம் அவர்கள் கடந்த காலத்தில் எமக்கு எதிராக என்ன செய்தார்கள் என்பதை மறக்காது, எல்லோரினதும் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே தான் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுக்களை நாம் கவனமான கையாளவேண்டும். உதாரணமாக தற்போது ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அதாவது சிறீலங்காவிலும் பார்க்க இந்தியா தான் அதிக குற்றங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் நாம் இவற்றை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு, எவ்வாறு கோழி ஒன்று தனது சிறகை விரித்துக்கொண்டு நீரில் நடக்கின்றதோ அதனைப்போல நாமும் கவனமாக இவற்றை பயன்படுத்தி எமது காய்களை நகர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி: சிறீலங்கா அரசினால் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களில் பெருமளவானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது 20,000 இற்கும் குறைவான மக்களே முகாம்களில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி, முகாம்களில் இருந்தது போலவே வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் முகாம்களில் இருந்தபோது அவர்களின் நிலை தொடர்பில் அனைத்துலக சமூகம் அதிக கவனம் செலுத்தியிருந்தது, ஆனால் தற்போது அது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவது குறித்து என்ன கருத்தை தெரிவிக்க விரும்புகிறீர்கள்?

பதில்: நிட்சயமாக, தற்போது பல செய்திகள் முதன்மைப்படுத்தப்படுவதால் நாம் இந்த மக்கள் தொடர்பான செய்திகளை சற்று மறந்துவிடுகின்றோம். நீங்கள் தெரிவித்ததுபோல 300,000 மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களில் பெருமளவான மக்கள் விடுவிக்கப்பட்டபோதும், அவர்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளோ, உணவு வசதிகளோ சரியாக வழங்கப்படவில்லை.

இந்த மக்களுக்கான உதவிகள் என்ற போர்வையில் சிறீலங்கா அரசு வெளிநாடுகளில் இருந்து பெருமளவான நிதிகளை பெற்றுக்கொண்டபோதும், அவர்கள் அந்த மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. யு.என்.எச்.சி.ஆர் எனப்படும் ஐ.நாவின் அமைப்புக்கூட அங்கு சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்படவில்லை.

புலம்பெயர்ந்த மக்களாகிய நாம் தான் தொடர்ந்து இதன் மீது கவனயீர்ப்பு செலுத்தவேண்டும். எமக்கு பல பணிகள் உள்ளபோதும் இதனையும் கைவிடாது நாம் கவனம் செலுத்தவேண்டும்.

முகாம்களில் உள்ள மக்களை விடுவியுங்கள்”; என்று சிறிய மட்டைகளில் அச்சிட்டு, பிரித்தானியா முழுவதும் முன்னர் நாம் விநியோகித்திருந்தோம். அவ்வாறான செயற்பாடுகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படவேண்டும் என நாம் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும்.

எமது போராட்டங்களில் முன்னெடுக்கப்படவேண்டிய பல பொறுப்புக்கள் இருக்கின்றன. பல முனைகள் பல வழிகளில் உள்ளன. நாம் அத்தனை வழிகளிலும் போராடவேண்டும். மீள்குடியேற்றப்பட்ட மக்கள் மட்டுமல்லாது, சரணடைந்து இன்று தடுப்புக்காவலில் உள்ளவர்கள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தவேண்டும். அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவேண்டும் எனவும், அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் நாம் போராடவேண்டும்.

ஏனெனில் நீங்கள் கூறியதுபோல, இந்த மக்கள் தற்போது நிரந்தரமாக மரங்களின் கீழ் வாழவும், ஏழைகளாக வாழவுமே நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். எனவே எங்களின் கவனம் அவர்கள் மீது தொடர்ந்து இருத்தல் வேண்டும்.

எமக்கு முன் உள்ள போராட்ட சவால்கள், வடிவங்கள் ஏராளம். அதற்கு நாம் எமது அமைப்புக்களை அவைக்கேற்ப பலப்படுத்த வேண்டும். எமக்குள் பல குழுக்களை உருவாக்கி, ஒவ்வொரு குழுவினரும் வேறுபட்ட பணிகளை பொறுப்பில் எடுத்து மேற்கொள்ளவேண்டும். எல்லோரும் ஒரே பணியை செய்யமுடியாது. எனவே பணிகளை பகிர்ந்துகொள்வது மிக மிக முக்கியமானது. அதற்குரிய திறமையான உறுப்பினர்களை நியமித்து பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

முற்றும்.

http://www.eelamenews.com/?p=40687

  • தொடங்கியவர்

மகிந்தாவை காப்பாற்ற கத்தோலிக்க சிங்கள மதகுருமார் கடுமையாக முயற்சித்தனர்:

கலாநிதி இம்மானுவேல் (சிறப்பு நேர்காணல்):

பாகம் 1: http://www.yarl.com/forum3/index.php?showtopic=78906

மகிந்தாவை காப்பாற்ற கத்தோலிக்க சிங்கள மதகுருமார் கடுமையாக முயற்சித்தனர்:

கலாநிதி இம்மானுவேல் (சிறப்பு நேர்காணல்):

பாகம் 1: http://www.yarl.com/forum3/index.php?showtopic=78906

”நாம் பலவற்றை அறிந்திருந்தாலும், எதிரிகளுடனும், முன்னர் எமக்கு எதிராக செயற்பட்ட நாடுகளுடனும் பேசவேண்டிய நிலை ஏற்படலாம். இன்று எமக்காக அமெரிக்காவோ அல்லது, பிரித்தானியாவோ முன்னின்று குரல் கொடுக்கலாம். இந்தியாவும் ஏதாவது எதார்த்த ஒழுக்கத்துடன் பேசலாம். ஆனால் நாம் அவர்கள் கடந்த காலத்தில் எமக்கு எதிராக என்ன செய்தார்கள் என்பதை மறக்காது, எல்லோரினதும் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே தான் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுக்களை நாம் கவனமான கையாளவேண்டும். உதாரணமாக தற்போது ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அதாவது சிறீலங்காவிலும் பார்க்க இந்தியா தான் அதிக குற்றங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் நாம் இவற்றை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு, எவ்வாறு கோழி ஒன்று தனது சிறகை விரித்துக்கொண்டு நீரில் நடக்கின்றதோ அதனைப்போல நாமும் கவனமாக இவற்றை பயன்படுத்தி எமது காய்களை நகர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.”

நல்ல கருத்து ஆனால்.. சிலபேர் அவர்களோட நிகழ்சி நிரலுக்கு ஏற்ப நடக்கினம் என்று சொல்வாங்கள். பாதர் கவனமாக நடவுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.