Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ. நா . குழு இலங்கையில் கால் வைத்தால் போராட்டம் - விமல் வீரவன்ச

Featured Replies

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு இலங்கைவர நினைக்குமாயின் அதற்கு ஒருபோதும் இடமளிக்க கூடாதென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சும் இதற்கு முன்னர் இதே நிலைபாட்டில்தான் இருந்ததாகவும், அது தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா நிபுணர் குழு இலங்கை வரும் பட்சத்தில் பொய்சாட்சியங்கள் உருவாக்கப்பட்டு இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதனால் ஐ.நா நிபுணர் குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதி அளிக்கக் கூடாதென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அவ்வாறு உள்நுழைவார்களாயின் அதனை எதிர்க்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈழ நாதம்

ஆரம்பத்தில் இந்த ஐ. நா. பரிந்துரைக்குழுவை வரவேண்டாம் என்றது சிங்களம். தங்களது "நல்லிணக்க ஆணைக்குழு" நேர்மையாகவும் திறந்த கொள்கையுடனும் எல்லாவற்றையும் உள்வாங்கும் என சொல்லியிருந்தது. இது சர்வதேசத்தால் நிராகரிக்கப்பட்டது. இப்பொழுது ஐ. நா. பரிந்துரைக்குழுவை தங்கள் நாட்டுக்கு வர சொல்லுகிறது.

விமலை வைத்து பல காரியங்களை, தன்னால் செய்யமுடியாததை, சர்வதேசத்திற்கு எதிராக செய்துவருகின்றது. இந்த பரிந்துரை குழுவுக்கு ராஜீவ் காந்திக்கு விழுந்த மாதி அடி விழுமோ இல்லை "வெள்ளை புலிகள்" என ஆர்ப்பாட்டம் நடக்குமோ தெரியாது. ஆனால், எதாவது "சம் திங்" கொடுத்து இவர்களை தமது வலைக்குள் விழுத்த நிச்சயமாக முயற்சிக்கும்.

வீரவன்சவா கொக்கா?

அமைதியான நாடாக இலங்கை ஏற்கப்படவில்லை - அமைச்சர் விமல் கவலை

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிபடைந்து இரு வருடங்கள் முடிப டைந்த நிலையிலும் சில நாடுகள் இலங்கையை அமைதியான நாடாக ஏற்றுக்கொள்ள வில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள வீடமைப்பு நிர்மாணப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார். இவ் வைபவத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது.

உலகில் பாதுகாப்பு நாடாக இருந்த சுவீட னில் கூட குண்டுகள் வெடித்துள்ளன. ஆனால் போர் முடிபடைந்து இரண்டு வருடமாகியும் சில நாடுகள் இலங்கையை அமைதியான நாடாக இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தும் உல்லாசப்பிரயாணிகள் கூடுதலா னோர் இலங்கைக்கு வருகை தருகின்றனர். கடந்த வாரம் ஐக்கியதேசியக் கட்சியின் மாநாட்டின் போது அக் கட்சியின் உறுப் பினர்கள் தேசிய கீதத்திற்கு நடன மாடி கூச்சலிடுகின்றனர். தேசிய கீதம் என்பதில் ஒரு ஒழுக்கமான உணர்வு உள்ளது.

இத் தேசிய கீதம் இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களது மொழியிலேயே இருக்கவேண்டும். இதனைத் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து இசைப்பது நிறுத்தப் படல் வேண்டும். இதனைத் 1918 ஆம் ஆண்டின் யாப்பில் சிலர் உள்ளடக்கியுள்ளனர். என தனதுரையில் தெரிவித்தார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=13421

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.