Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் தியேட்டரில் பார்த்த எந்திரன்

Featured Replies

ஊருக்கு போன காலகட்டத்திலை ஏதோ அலுவலாக யாழ் நகரம் வந்தம் இருந்தம் என்று இல்லாமால் ..ஒரு படம் இங்கு பார்த்தால் என்ன என்று தினவு எடுத்திச்சு ..வெளிநாட்டு தியேட்டர்களில் அல்லது டிவிடிக்களில் பார்க்காத படமா ..அப்படி என்ன பெரிய படமாக பார்த்து கிளிக்க போறம் என்று அலுப்படித்தாலும் பார்த்தே தீருவேன் என்ற உறுதியுடன் அந்த இரண்டு மணி சோ பார்க்க நடையை கட்டினேன் .பார்க்க நான் தேர்ந்த எடுத்த படம் எந்திரன் ..அந்த படம் ராஜா தியேட்டரில் வந்து இரண்டு அல்லது மூன்று கிழமை தான் அப்பொழுது இருக்கும் ....25 வருடங்களின் முன்னர் ஒரு புதுப்படம் வந்து அதுவும் முன்னனி நாயகர்கள் நடித்திருந்தால் ...என்ன கோலாகாலம் என்னனென ஆர்ப்பாட்டங்கள் இருக்கும்.இந்த பிரபல நடிகர்களின் படங்கள் ஓடுவதன் காரணமாக முழுமையாக நிரம்பாத யாழ் நகரமே அப்பொழுது நிரம்பி வழியும் ...

ஆனால் அங்கு போகும் போது யாருமே இல்லை தனித்து விடப்பட்ட கட்டவுட் எந்திரன் ரஜனி.தான் ஆடாமால் அசையாமால் நின்று கொண்டு இருந்தார். பிறகு மெல்ல மெல்ல சிலர் வர தொடங்கினர் .அப்படி வந்தவர்கள் அநேகர் இளம் ஜோடிகள் படம் பார்ப்பதுக்கு ஆர்வம் உள்ளவர்கள் போல காணப்படவில்லை ..ஒதுங்க இடம் தேடி வந்தவர்கள் போலவே காணப்பட்டனர் . வெளிநாட்டில் இருந்து வரும் காசில் சும்மா ஊதி பெருத்து வெறும் பட்டோபம் காட்டும் நபர்களாகவே எனக்கு தெரிந்தது.இந்த பனியிலும் குளிரிலும் ஏதோ ஏதோ வழியில் உழைத்து இங்கு அனுப்பு பணத்தில் என்ன செய்வது என்று தெரியாமால் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று பார்க்கும் போது பட்டது.,ராஜா தியேட்டரின் உள் சுவர்களில் எனது கண்கள் நோட்டமிட்டன. பல கறுப்பு வெள்ளை பிறேம் போட்ட படங்கள் மாட்டி இருந்தன. அதில் அந்த காலம் எம்ஜீஆர் நடித்த ஒளிவிளக்கு படத்தின் வெள்ளிவிழா நிகழ்வின் படங்கள் இருந்தன.அந்த வெள்ளிவிழா கொண்டாட்டத்துக்கு எம்ஜீஆர் மற்றும் சரோஜதேவி போன்றோர் இந்தியாவிலிருந்து யாழ் வந்த போது ரசிகர்களை கட்டு படுத்த முடியாமால் ராஜா தியேட்டர் ஒரு பக்க மதிலையே அப்போது உடைத்தார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.

எனது வயது மாதிரி உள்ளவர்கள் ஒரு தரும் படத்துக்கு அங்கு வருகை தந்து இல்லாமையால்

எனக்கு ஓரு மாதியாக இருந்த மாதிரியும் இருந்தது. ஓரு மாதிரியாக இல்லாத மாதிரி இருந்தது.நுழைவு சீட்டு வழங்கும் இடத்தில் பல்கனி ,சூப்பர் பல்கனி என எழுதி இருந்தது ..ஒரு சூப்பர் பல்கனி தாங்க என்று நான் சொல்லி முடிக்க முன்பு என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு அண்ணை வெளியிலிருந்தா ..உங்கா உதுகளின் அட்டாகசாம் தாங்க முடியவில்லை ..சூப்பர் சூப்பிரில்லாதது என்று இப்ப ஒன்று மில்லை எல்லாம் ஓன்று தான் இப்ப என்றார்...தாங்க அந்த ஓன்றை என்று கேட்டு வாங்கி உள்ளே நுழைந்து நல்லா சுற்றும் விசிறி கீழுலுள்ள கதிரையில் இடம் பிடித்து கொண்டேன் . எனது நல்ல காலமோ கெட்ட காலமோ தெரியாது என்னை சுற்றி அந்த இளம் ஜோடி பட்டாளங்கள் ,அமர்ந்திருந்தது

படம் இன்னும் தொடங்கவில்லை ஆனால் அதுக்கு முன்பே அங்கே அவர்கள் படம் காட்ட தொடங்கி விட்டார்கள்.அத்தோடை இந்த மேலே சுற்றும் விசிறி உடம்பில் இருந்து வெளியில் கொட்டு வேர்வையை உறிஞ்சி எடுக்க போதுமானதாக இல்லை .. ஆனால் அதை விட சுற்ற வர உறிஞ்சும் சத்தங்கள் இயல்பாக வந்து கொண்டிருந்தது .என்ன கோலா பன்ரா ஸ்ரோவிலை சத்தத்தோடை குடித்து கொண்டிருக்கனம் போலை என நினைத்து கொண்டிருக்க. கன காலம் கண்டு இப்ப எங்கை என்ற படி ஒரு குரல் .எனது தனிமையை பறை சாற்றியபடி இருந்த வெறுமையான பக்கத்து கதிரையில் அமர்ந்தது

அந்த குரலுக்கு சொந்தக்காரனை மேலும் கீழும் நான் பார்த்து கொண்டிருக்கும் தவிப்பை கண்ட அவர் . என்ன அதுக்கிடையிலை மறந்து போனீங்களே?. அதுக்கிடையிலே என்று அவர் சொன்னது ஏறக்குறைய இருப்பத்தைந்து முப்பது வருட காலப்பகுதியை. இவர்களைப் போல காலத்தின் அளவுகளை நன்மை என்றால் என்ன தீமையென்றால் என்ன உணர்ந்து உணர்வூர்பாக வாழ்பவர்களா நாங்கள். எங்கையோ எதையோ தொலைத்து விட்டு தொலைத்தது எது என்னவென்று தெரியாமால் எங்கேயோ தேடி கொண்டிருப்பவர்கள் அல்லவா நாங்கள் , முன்பு ஓடும் எலி எங்கேயோ ஓட காரணம் தெரியாமால் பின்னால் ஓடும் எலி கூட்டம் போல உள்ள கூட்டங்கள் அல்லவா நாங்கள் .குளிர் பனி குவியலுக்குள் உணர்வுகளை புதைத்து விட்டு வாழ்பவர்கள் அல்லவா நாங்கள்..இப்படி எண்ணி கொண்டிருக்க அவர். என்ன கனக்க யோசிக்கிறியள் ?முன்னுக்கு பின்னுக்கு பக்கத்திலை நடக்கிற திருவிளையாடலையா ?என்று கேள்வியை அவரே கேட்டு அவரே பதிலை சொன்னார் . இதெல்லாம் இப்ப இங்கை சகஜம் பாருங்கோ என்று.அந்த காலம் ஜரோப்பாவிலை இதெல்லாம் சகஜம் என்று தங்கள் நினைப்புகள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து சொன்னவர்கள் வாயாலே இப்படி சொல்ல வைக்கும் கால மாற்றத்தை நினைத்து பார்த்தேன்.

.இவர் சொன்ன மாதிரி இப்ப தான் சகஜம் என்று இல்லை எப்பவும் உது சகஜமாக தான் இருந்தது ..ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து சங்ககாலத்து களவியலூடாக எனக்கு தெரிய ராணி தியேட்டர் பொக்ஸ் றூம் வரையும். சுஜாதா சிவாஜி திரை படத்தில் ஒரு வசனம் எழுதி இருப்பார் தமிழ் பெண்களை பார்க்க யாழ்ப்பாணம் தான் போகவேணும் என்று..இந்த வசனம் யாரை திருப்தி படுத்தியதோ இல்லையோ தெரியாது .நிச்சயம் இன்னும் யாழ்ப்பாணிய சிந்தனை உள்ள இந்த கலாச்சார காவலர்களை கட்டாயம் திருப்தி படுத்தி இருக்கும் . இந்த வெளி உலகம் தெரியாத வெறும் புத்தகத்துக்குள் மட்டும் தலை ஓட்டி கொண்டிருந்த இந்த அம்மு பேபிகளுக்கு தான் நான் இப்படி சொல்வது கோபம் வரும் என நினைக்கிறேன்.

படம் இடைவேளையை தாண்டி ஓடி கொண்டிருந்தது.படத்தோடை ஒட்ட முடியவில்லை..படத்தின் கதை போக்கை முன்பே ஊகிக்க கூடியதாய் இருந்தது ..இந்த சீறீதர் காலத்து முக்கோண காதல் கதையை கம்பியூட்டர் கேம் போல படத்திலை காட்டினம் அவ்வளவு தான் ..இந்த படத்தில் புதிதாக கதை இருக்கிற மாதிரி தெரியலை .அதுக்குள்ளை என்ரை கதை அவன்ரை கதை என்று சண்டை சச்சரவு வேறை ...இப்படி பார்க்க போனால் முப்பது வருடங்களுக்கு முன்னால் எனக்கு உதே மாதிரியான சாயலில் கதை சொன்ன மெக்கானிக் அண்ணையுமெல்லோ வழக்கு போடோணும் .

இந்த படம் போரடித்தமையால் எனது மனம் இந்த கதை போல சொன்ன அந்த மெக்கானிக் அண்ணையுடன் பழகிய கால சம்பவங்களின் நினைவுகள் படம் முடியும் மட்டும் போரடிக்காமால் வைத்து கொண்டு இருந்தது..

இந்த மெக்கானிக் அண்ணை எனக்கு எனது பதின்ம வயதுகளில் இருந்து பழக்கம் ..எனக்கு எப்படி இவருடன் பழக்கம் ஏற்பட்டது எனக்கு ஞாபகம் வருகுதில்லை.எனக்கு மட்டுமல்ல என்னோடை வயதை ஒத்த பல நண்பர்களுக்கும் நடுத்தர வயதை அண்மித்த இவருடன் சிநேகபூர்வமான பழக்கம் இருந்தது. மெக்கானிக் அண்ணை தனக்கு தானே தீவிர இடதுசாரி பொதுவடமை வாதி என முத்திரை குத்தி கொண்டவர்,எட்டாம் வகுப்பு படித்த அவரால் அவருக்கு சித்தாந்த வகுப்பு எடுக்கும் ஆசான்களின் திறமையால் என்னவோ உலக நடப்புகளை அழகாக கதைப்பார் .அதுமட்டுமன்றி சமூகத்தின் மேலுள்ள பார்வையை ஆடாமால் அசையாமால் ஓரு நேர்கோட்டில் பார்க்க வைத்த எங்களின் பள்ளி வீட்டு அறிவை விட வித்தியாசமான கோணத்தில் காட்டி அவர் பொழிப்புரை செய்ததது எங்களுக்கு புதிதாகவும் ஆவலாகவும் இருந்திருக்க கூடும். அதனால் எங்களுக்கு அவரிடம் ஒரு நெருக்கம் ஏற்பட்டு இருக்க கூடும்.

எனக்கு பழைய குமுதம் விகடன் கார்ட்டூன்களை விரும்பி பார்க்கும் பழக்கம் இருந்தது ..அதில் ஒரு கார்ட்டூனில் ஒரு கரும் பயங்கர பூதம் சீன பகுதி இலிருந்து இந்தியாவின் வடகிழக்கு பகுதியான அருணாசல பகுதியில் இரு கைகளை வைத்து ஆக்கிரமிப்பிக்கிறாதாக இருந்தது. எங்களின் தாய் நாடாக எங்களுக்கு சொல்லி தந்த இந்தியா மேலே கை வைக்கிற ஒன்று மேலே கோபம் வெறுப்பு வராதா என்ன? என்ன தான் பழகினாலும் மெக்கானிக் அண்ணையிடம் ஒரு நாள் கேட்டே விட்டேன் இதை காட்டி என்ன உங்கடை கொம்னீயூஸ்ட் என்று.

அதுக்கு அவருக்கு அரசியல் வகுப்பு எடுத்தவர்கள் சொல்லி கொடுத்ததை வைத்து சொன்னாரோ அவராக சிந்தித்து சொன்னாரோ தெரியாது .அதுக்கு அவர் சொன்ன விளக்கம் காலனித்துவ காலத்தில் பிரிட்டிசார் இந்த நிலபரப்புகளுக்கள் முரண்பாடுகள் இருக்கவேணும் என்றதுக்காக திட்ட மிட்டு செய்த விடயம் இது என்றும் ..இப்படி கார்ட்டூன் போடுவது மூலம் கம்னீயூசத்தில் வெறுப்பு ஏற்பட செய்வதற்க்காக இந்த முதலாளித்தவ பத்திரிகைகள் செய்யும் திட்ட மிட்ட பிரச்சாரம் இது என்றும் கூறினார் , இப்ப எங்களுக்கு கம்னீயூசம் என்ற சொல்லோடை காலனீத்துவம் முதலாளித்துவம் என்ற இரண்டு புது சொற்கள் கூட தெரிந்து கொண்டோம்.

இப்படி பல கோணத்தில் நாங்கள் கேட்கும் சந்தேகத்துக்கு பதில் சொல்லும் மெக்கானிக் அண்ணை ஒரு நாள் தான் திருத்தும் இயந்திரங்களின் உதிரி பாகங்கள் காதல் செய்கின்றது தங்களுக்குள் அடிபடுகின்றன என்றும். தான் இரவில் இதை படுக்கும் போது உணர்கிறேன் என்றும் .இதை தன்னால் மட்டும் தான் உணர முடியுமென்று என்றும் கூறினார்......இவ்வளவு தெரிந்த மெக்கானிக் அண்ணை உப்பிடி லூசு மாதிரி கதைக்காலாமோ என்று பரிகசிக்க ..அதுக்கும் தனது பாணியில் சித்தாந்த விளக்கம் தர முற்பட்டார் . நாங்கள் எங்களுக்குள் கதைத்து கொண்டோம் .கோவூரின் மனோத்துவ கதை சம்பவங்கள் வரும் உள பிறழ்வு அடைந்த நாயகர்களில் ஒருவர் மாதிரி எங்கடை மெக்கானிக் அண்ணை மாறிவிட்டார் என்று

இப்படி உளப்பிறழ்ந்த மன நிலையில் தான் இந்த படத்தை எடுத்தவர்கள் எடுத்திருப்பார்களோ என நினைத்து கொண்டு படம் முடிய அவசரம் அவசரமாக பஸ் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்

http://sinnakuddy.blogspot.com/2010/12/blog-post.html

Edited by matharasi

  • கருத்துக்கள உறவுகள்

எந்திரன் பார்த்த கதை நன்றாக இருக்கின்றது. இப்ப மூட்டைட்பூச்சி கடிக்கிறதில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பல கோணத்தில் நாங்கள் கேட்கும் சந்தேகத்துக்கு பதில் சொல்லும் மெக்கானிக் அண்ணை ஒரு நாள் தான் திருத்தும் இயந்திரங்களின் உதிரி பாகங்கள் காதல் செய்கின்றது தங்களுக்குள் அடிபடுகின்றன என்றும். தான்

மெக்கானிக் அண்ணேய மாதிரி நீங்களும் பல கோணத்தில எழுதியிறுக்கிறீயள் போல கிடக்கு.....மனிதன் காதல் செய்தாலே சகிக்க முடியல் இதுல இந்திரம் காதல் செய்யுதாம் அதை நாங்கள் பார்க்க வேணுமாம் :D:D

Edited by putthan

எந்திரன் பார்த்த கதை நன்றாக இருக்கின்றது.

கதை வாசித்து கருத்து சொன்ன கிருபனுக்கு எனது நன்றிகள்...முந்தி கலரியில் பார்த்த மூட்டம் கடிச்சுது ,,,இப்ப பல்கனியில் எல்லாம் பார்த்தனாங்கள்,,,,பல்கனி காரரின் இரத்தத்தை மூட்டை பூச்சி சீண்டாதோ என்னவோ தெரியலை ..கடிச்ச மாதிரி தெரியலை :D :D

மெக்கானிக் அண்ணேய மாதிரி நீங்களும் பல கோணத்தில எழுதியிறுக்கிறீயள் போல கிடக்கு...

புத்தனுக்கு எனது நன்றிகள் ...அதுதானே ..நீங்கள் சொன்ன மாதிரி மனித காதலுக்கே என்னும் விடை கிடைக்கவில்லை ..எந்திரம் வேற என்னென்ன கோதாரி கதை வைத்து எல்லாம் எடுக்க போறங்களோ தெரியாது :):(

  • கருத்துக்கள உறவுகள்

எந்திரன் பார்த்த கதை அழகு.

அப்போது ஏற்பட்ட அனுபவங்கள், பழையதை மீட்டிப்பார்த்த உணர்வுகளும் அழகே.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஊருக்கு போறிருந்தபோது இதே தியேட்டரில் மாதவன் நடித்தபடம் ஒன்று பார்த்தேன்.

பக்கத்திலிருந்த 15 வயதுக்குட்பட்ட பெடியள் செய்த சேட்டைகளைத்தாங்காது அவர்களுடன் பிரச்சினைப்படத்தொடங்க அங்குள்ள எனது மைத்துணர் என்னை சமாதானப்படுத்தினார். இது அளவுக்கு மிஞ்சி வளர்ந்துவிட்டது உன்னால் அவர்களைத்திருத்தவோ சமாளிக்கவோ முடியாது என்று. வரும்போது சொல்லவேண்டிய இடத்தில் சொல்லிவிட்டுவந்தேன். அவர்கள் என்னைவிட வேதனைப்பட்டார்கள் தங்களது கைகள் எவ்வாறு கட்டப்பட்டுள்ளது என்று.

Edited by விசுகு

நானும் ஊருக்கு போறிருந்தபோது இதே தியேட்டரில் மாதவன் நடித்தபடம் ஒன்று பார்த்தேன்.

பக்கத்திலிருந்த 15 வயதுக்குட்பட்ட பெடியள் செய்த சேட்டைகளைத்தாங்காது அவர்களுடன் பிரச்சினைப்படத்தொடங்க அங்குள்ள எனது மைத்துணர் என்னை சமாதானப்படுத்தினார். இது அளவுக்கு மிஞ்சி வளர்ந்துவிட்டது உன்னால் அவர்களைத்திருத்தவோ சமாளிக்கவோ முடியாது என்று. வரும்போது சொல்லவேண்டிய இடத்தில் சொல்லிவிட்டுவந்தேன். அவர்கள் என்னைவிட வேதனைப்பட்டார்கள் தங்களது கைகள் எவ்வாறு கட்டப்பட்டுள்ளது என்று.

யாழ்ப்பாணத்தில் செய்ய கூடாதா? :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் செய்யலாம் ஐயா

மற்றவனுக்கு தொந்தரவு இல்லாமல்....?

எங்கும் செய்யலாம் ஐயா

மற்றவனுக்கு தொந்தரவு இல்லாமல்....?

அரசங்கமே தடை செய்யவில்லை நீங்கள் தனியாளுக்காக இடம் வலம் எல்லாம் பாக்கலாமா? :D

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது இவற்றை அவர்கள் ஊக்குவிக்கிறார்கள்

மற்றும்படி எமது அரசிடம்தான் நான் முறையிட்டேன்

தற்போது இவற்றை அவர்கள் ஊக்குவிக்கிறார்கள்

மற்றும்படி எமது அரசிடம்தான் நான் முறையிட்டேன்

எந்த அரசு? :D

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் நித்திரையாக நடிப்பவனின் கதைதான்

மன்னிக்கவும்

நன்றி

தங்களது நேரத்திற்கு......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.