Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2011 ஆங்கிலப் புத்தாண்டுப்பலன்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜோதிடர் சந்திரசேகர பாரதி வழங்கும்

2011 ஆங்கிலப் புத்தாண்டுப்பலன்கள்

வாசக நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இப்புத்தாண்டு துவாதசி, விசாக நட்சத்திரம், சித்தயோகம், கன்னியா லக்னத்தில் பிறக்கிறது. லக்னத்தையும் 3, 11-ஆம் இடங்களையும் குரு பார்ப்பதுடன், சனி, சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியோரையும் குரு பார்ப்பதால் இந்த ஆண்டில் பிற நாட்டுத் தொடர்பு வலுப்பெறும்.

சகோதர ஒற்றுமை கூடும். தகவல் தொடர்பு இனங்களால் ஆதாயம் கூடும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களால் அதிகம் ஆதாயம் பெறலாம்.

குருவின் நட்சத்திரத்தில் சந்திரன் அமர்ந்து, குருவால் பார்க்கப்படுவதால் நாடு சுபிட்சம் பெறும்.

மக்கள் மனதில் தெய்வபக்தி கூடும். அறப்பணிகள் வளரும். கோயில்கள் புதுப் பொலிவு பெறும். தனகாரகன் குரு தன் சொந்த வீட்டில் வலுத்திருப்பதால் பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சி காணலாம்.

கணிதம், வியாபாரம், எழுத்து, பத்திரிகை, புத்தக வெளியீடு, கடல் வாணிபம், திரவப்பொருள், தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற துறைகளில் நல்ல முன்னேற்றம் காணமுடியும்.

லக்னத்துக்கு 4-ல், தனுசில் சூரியன், செவ்வாய், ராகு ஆகியோர் இருப்பதாலும், தனுசு போர்க் கருவிகளைக்குறிக்கும்ராசி என்பதாலும், நெருப்பு ராசி என்பதாலும் போர் பயம் ஏற்படும். விபத்துக்கள் அதிகரிக்கும்.

நெருப்பு, ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் ஆகியவற்றால் சேதம் உண்டாகும்.

4-ஆம் இடம் நிலம், மனை, வீடு, வாகனங்களைக் குறிப்பதால் சொத்துக்களுக்குச் சேதம் உண்டாகும்.

3,8-ஆம் வீட்டோன் செவ்வாயும், விரயாதிபதி சூரியனும் ராகுவுடன் கூடுவதால் அரசியல் தலைவர்களின் உடல்நிலை பாதிக்கும். கெட்ட பெயரும் வரும். அரசியலில் ஈடுபாடு உள்ளவர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும்.

கேது 10-ல் இருப்பதால் ஆன்மிகத்தொடர்புள்ளவர்கள் வளர்ச்சி காண வாய்ப்பு உண்டாகும்.

பொதுவாக இந்தப் புத்தாண்டில் ரிஷப, கடக, கன்னி, விருச்சிக, கும்ப ராசிக்காரர்களுக்கு 7-5-2011 வரையிலும்,

அதன்பிறகு மிதுன, சிம்ம, துலா, தனுசு, மீன ராசிக்காரர்களுக்கும் நற்பலன்கள் உண்டாகும்.

ஒவ்வொருவருக்கும் ஜனன கால ஜாதகம் என்று ஒன்று உண்டு. ஜாதகப்படி சுப யோக பலம் உள்ள தசை, புக்தி,

அந்தரங்கள் நடப்பவர்களுக்கு இப்புத்தாண்டில் நற்பலன்கள் அதிகரிக்கும்.

கோசாரமும், தசா புக்தியும் சாதகமாக உள்ளவர்களுக்கு சுப பலன்கள் இரட்டிப்பாகும்.

இனி ஒவ்வொரு ராசிக்காரருக்கும் இந்தப் புத்தாண்டில் விளையக்கூடிய பொதுப்பலன்களைப் பார்ப்போம்.

மேஷம்:

ராசிக்கு 6-ல் சனி இருப்பதால் உழைப்புக்குரிய பயனைப் பெறுவீர்கள். எதிரிகள் அடங்கிப் போவார்கள். செய்துவரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். தொழிலாளர்களது கோரிக்கைகள் ஒருசில நிறைவேறும். சுரங்கங்கள், ஆலைகள், தோட்டங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். குரு 12-ல் அமர்ந்து, 4, 6, 8-ஆம் இடங்களைப் பார்ப்பதால் சுகம் கூடும். பிரச்னைகள் குறையும். ஆயுள் பலம் அதிகரிக்கும். நிலபுலங்கள் லாபம் தரும். சுக்கிரன், புதன் ஆகியோர் 8-ல் அமர்ந்து, 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் கலைஞர்களது திறமை பளிச்சிடும். திடீர்ப் பொருள் வரவு உண்டாகும். விபரீத ராஜயோகம் உண்டாகும். மாதர்களது எண்ணம் ஈடேறும்.

வியாபாரம் பெருகும். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 9-ல் சூரியன், செவ்வாய், ராகு ஆகியோர் இருப்பதால் வெளிநாட்டுத் தொடர்பு ஓரளவு பயன்படும். மக்களாலும், தந்தையாலும் அளவோடு நலம் உண்டாகும். 3-ல் உள்ள கேது மனோபலத்தைக் கூட்டுவார். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புக்கள் குறையும்.

மே 8-ஆம் தேதி முதல் குரு ஜன்ம ராசிக்கு இடம் மாறி, 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்ப்பதால் மக்கள் நலம் சீர்பெறும். கணவன் மனைவி உறவு நிலை பலப்படும். கூட்டாளிகள் சாதகமாக இருப்பார்கள். தந்தை நலம் திருப்தி தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் பயன் கூடப் பெறுவீர்கள். புனிதப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை உண்டாகும். உழைப்புக்குரிய பயன் கிடைக்கத் தவறாது. அரசுப்பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உற்சாகமான சூழ்நிலை உருவாகும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 8-ஆமிடத்துக்கும் கேது 2-ஆமிடத்துக்கும் மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். பயணத்தால் அனுகூலமிராது.

விஷத்தாலும், விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட நேரலாம். வீண்வம்பு கூடாது. நவம்பர் 15 முதல் சனி 7-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. 10-ஆம் வீட்டோன் சனி தன் உச்ச ராசியான துலாத்தில், ராசிக்கு 7-ல் இருப்பதால் தொழிலில் முன்னேற்றம் காணலாம். 11-ஆம் வீட்டோன் சனி உங்கள் ராசிக்குப் பாதகாதிபதி என்பதால் சில சங்கடங்களும் உண்டாகும். சிலருக்கு இரண்டாவது திருமணம் செய்ய வாய்ப்புக் கூடிவரும். சனியைக் குரு பார்ப்பதால் அதிகம் சங்கடங்கள் ஏற்படாதவாறு நீங்கள் காக்கப்படுவீர்கள். குரு பிரீதி செய்யவும். முருகனை வழிபடவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 7, 8.

திசை: வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு.

தெய்வம்: முருகன்.

ரிஷபம்:

குரு பலம் ஓங்கியிருக்கிறது. லாப ஸ்தானத்தில், தன் சொந்த வீட்டில் இருக்கும் குரு உங்கள் ராசிக்கு, 3, 5, 7-ஆம் இடங்களைப் பார்ப்பதுடன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி ஆகியோரையும் பார்ப்பதால் திட, வீர, பராக்கிரமம் வெளிப்படும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். விளையாட்டு, விநோதங்களிலும்; போட்டிப் பந்தயங்களிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். பங்குதாரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். திறமைக்குரிய பயன் கிடைத்துவரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். நல்லவர்களும் வல்லவர்களும் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வப் பணிகள் ஈடேறும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும்.

வாழ்க்கைத்துணைவரால் ஆதாயம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள், மருத்துவர்கள், இரசாயனத்துறைகளைச் சேர்ந்தவர்கள், விஞ்ஞானிகள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.

புத்திசாலித்தனம் பளிச்சிடும். மாணவர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள்.

2-ல் கேதுவும், 8-ல் சூரியன், செவ்வாய், ராகு ஆகியோரும் இருப்பதால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். நெருப்பு, மின்சாரம், ஆயுதம், விஷம் ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படும்;

எச்சரிக்கை தேவை. மே 8-ஆம் தேதி முதல் குரு 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. வீண் செலவுகளும் இழப்புக்களும் உண்டாகும். சுப காரியங்கள் நிகழத் தாமதம் ஏற்படும். மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். ஜூன் 6 -ஆம் தேதி முதல் கேது ஜன்ம ராசிக்கும் ராகு 7-ஆமிடத்துக்கும் மாறுவதும் சிறப்பாகாது. மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவைப்படும். கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

கூட்டாளிகளிடம் விழிப்புத் தேவை. நவம்பர் 15 முதல் சனி 6-ஆமிடம் மாறுவதும் தன் உச்ச ராசியில் உலவுவதும் குருவின் பார்வையைப் பெறுவதும் விசேடமாகும். இதனால் உடல் நலம் சீராகும். எடுத்த காரியங்கள் இனிது நிறைவேறும். பொதுநலப்பணிகளில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றி காணலாம். வாழ்க்கைத் தரம் உயரும். மற்றையோர் உங்களைப் பாராட்டுவார்கள். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். கடன் தொல்லை குறைய ஆரம்பிக்கும். தொழில் முன்னேற்றத் திட்டங்களைத் தீட்டி,

அவற்றில் வெற்றியும் பெறுவீர்கள்.

சர்ப்ப சாந்தி செய்யவும். லட்சுமி அஷ்டோத்திரம் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 8.

திசை: வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.

தெய்வம்: மகாலட்சுமி.

மிதுனம்:

கோசாரப்படி முக்கியமான கிரகங்கள் அனுகூலமாக இல்லாததால் வருட முன்பகுதி சாதாரணமாகவே காணப்படும். எதிலும் முழுமையான பயனைப் பெற முடியாமல் போகும். அலைச்சல் கூடும். தொழிலில் சிறுசிறு பிரச்னைகள் உண்டாகும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். கோபத்தால் மற்றையோரது அதிருப்திக்கு ஆளாவீர்கள். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. கூட்டாளிகளால் சங்கடங்கள் ஏற்படும். எதிரிகள் இருப்பார்கள். யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழகலாகாது. மக்களால் மன அமைதி குறையும்.

குரு 10-ல் அமர்ந்து 2, 4, 6-ஆம் இடங்களைப் பார்ப்பதால் குடும்பநலம் சீராகவே இருந்துவரும். நிலம், மனை, வீடு, வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய பொருட்களும் சேரும். எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். கடன் தொல்லை கட்டுக்குள் அடங்கியிருக்கும். பேச்சில் திறமை வெளிப்படும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். 10-ஆம் வீட்டோன் குரு 9-ஆம் வீட்டோன் சனியைப் பார்ப்பதால் தான, தரும காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள், காண்ட்ராக்டர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

மே 8-ஆம் தேதி முதல் குரு 11-ஆமிடம் மாறி, 3, 5, 7-ஆம் இடங்களைப்பார்ப்பதால் பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். தொழில் அதிபர்களுக்கு ஆதாயம் கூடும். புதிய தொழில் துறைகளில் ஈடுபாடு உண்டாகும். தொட்டது பொன் ஆகும். மன உற்சாகம் கூடும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். முயற்சி பலிதமாகும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும்

வாழ்க்கைத்துணைவராலும் நலம் கூடும். பொன்னும் பொருளும் சேரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 6-ஆமிடத்துக்கும் கேது 12 -ஆமிடத்துக்கும் மாறுவதால் வெளிநாட்டு வர்த்தகம் லாபம் தரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.

ஆன்மிகப்பணிகளுக்காகச் செலவு செய்வீர்கள். நவம்பர் 15 முதல் சனி 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் சனியைக் குரு பார்ப்பதாலும், சனி 9-ஆம் வீட்டோனாகி 5-ல் இருப்பதாலும் மக்களால் பாக்கியம் உண்டாகும். மகன் அல்லது மகளுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வெளிநாட்டில் படிப்பதற்கும் வாய்ப்புக் கூடிவரும். சர்ப்ப சாந்தி செய்யவும். குருவை வழிபடவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

திசை: வடக்கு, தென்கிழக்கு.

தெய்வம்: மகாவிஷ்ணு.

கடகம்:

பெரும்பாலான கிரகங்கள் அனுகூலமாக இருப்பதால் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். தெய்வ தரிசனம், சாது தரிசனம் ஆகியவை கிட்டும். பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். எதிரிகள் விலகிப் போவார்கள். செல்வாக்கும் மதிப்பும் உயரும். முயற்சி பலிதமாகும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பெற்றோர் நலம் சிறப்பாக இருந்துவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும். தொழிலாளர்களது கோரிக்கைகளில் சில ஈடேறும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும். விஞ்ஞானிகள் பாராட்டுக்களுக்கு உரியவர்கள் ஆவார்கள்.

இரசாயனத்துறையினருக்கு அனுகூலமான போக்குத் தென்படும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.

நிர்வாகத்துறையினருக்கு வளர்ச்சி கூடும். அயல்நாட்டு வர்த்தகம் பெருகும். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும்.

வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கும், வேலை பார்க்க விரும்புபவர்களுக்கும் அதற்கான வாய்ப்பு கனிந்துவரும். மே 8-ஆம் தேதி முதல் குரு 10-ஆமிடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் 9-ஆம் வீட்டோன் 10-ல் உலவுகிறார் என்பதால் புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். 6-ஆம் வீட்டோன் 10-ல் இருப்பதால் தொழில் ரீதியாகச் சில பிரச்னைகள் ஏற்படும். குரு 10-ல் அமர்ந்து, 2, 4, 6-ஆம் இடங்களைப் பார்ப்பதால் பொருளாதார நிலை சீராகவே இருந்துவரும். சுகம் கூடும். பிரச்னைகள் கட்டுக்குள் அடங்கியிருக்கும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 5-ஆமிடத்துக்கு மாறுவது சிறப்பாகாது. இதனால் மக்கள் நலம் பாதிக்கும். மறதியால் அவதி உண்டாகும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் உண்டாகும். கேது 11-ஆமிடம் மாறுவதால் மன உறுதி கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும்.

அறப்பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். நவம்பர் 15 முதல் சனி 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 7-ஆம் வீட்டோன் 4-ல் உலவுவதால் நலம் உண்டாகும். சொத்துக்கள் சேரும். 8-ஆம் வீட்டோன் 4-ல் உலவுவதால் சில இடர்ப்பாடுகளும் உண்டாகும். சனியைக் குரு பார்ப்பதால் சனியால் விளையக்கூடிய கெடுபலன்கள் குறையும் என்றே சொல்லலாம். குரு, ராகு ஆகியோருக்கு வருடப் பின்பகுதியில் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 4, 8, 9.

திசை: தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.

தெய்வம்: முருகன், சக்தி.

சிம்மம்:

குரு 8-லும் சனி 2-லும் இருப்பது சிறப்பாகாது. முக்கியக் கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாதததால் சில இடர்ப்பாடுகள் ஏற்படவே செய்யும். மனத்தில் ஏதேனும் சலனம் இருந்துவரும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண அரும்பாடுபடவேண்டிவரும். மக்களால் மன வருத்தம் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு குரு பார்வையால் விலகும். சுக்கிரனும் புதனும் 4-ல் அமர்ந்து குரு பார்வையைப் பெறுவதால் சொத்துக்கள் சேரும். சுகம் கூடும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆடை, அணிமணிகள் சேரும். 5-ல் சூரியனும் செவ்வாயும், ராகுவும் இருப்பதால் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். என்றாலும் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கம் அதிகரிக்கும். 11-ல் உலவும் கேது மனோபலத்தைக் கூட்டுவார்.

ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கும் அறப்பணியாளர்களுக்கும் ஞானிகளுக்கும் அனுகூலமான போக்குத் தென்படும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். குரு 12-ஆமிடத்தைப் பார்ப்பதால் வீண் செலவுகள் குறையும். சுபச் செலவுகள் கூடும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். புதிய சொத்துக்களை வாங்கவும் செலவு செய்வீர்கள். மே 8-ஆம் தேதி முதல் குரு 9-ஆமிடம் மாறுவது விசேடமாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடிவரும். மகப்பேறு பாக்கியம் கிட்டும்.

ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். தொழில் அதிபர்களது எண்ணம் ஈடேறும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். வெளிநாடு சென்று படிக்கவும், வேலை பார்க்கவும் வாய்ப்புக் கூடிவரும். தெய்வப் பணிகள் நிறைவேறும். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். சாதுக்கள், ஞானிகள் தொடர்பு உண்டாகும். அதனால் மனத்தெளிவும் பிறக்கும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 4-ஆமிடத்துக்கு மாறுவது சிறப்பாகாது. அலைச்சல் கூடும். உடல் சோர்வு ஏற்படும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். கேது 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். நவம்பர் 15 முதல் சனி 3-ஆமிடம் மாறுவது விசேடமாகும். ஏழரைச் சனி முற்றிலுமாக விலகுகிறது. தடைகள், குறுக்கீடுகள் அனைத்தும் விலகி, வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உருவாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மற்றையோர் உங்களைப் போற்றிப் புகழுவார்கள். செல்வாக்கும் மதிப்பும் உயரும். முக்கியமான எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். உற்சாகமாக நடைபோடுவீர்கள்.

துர்கையையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6, 7, 9.

திசை: வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு, தெற்கு.

தெய்வம்: முருகன், ருத்திரன்(சிவன்).

கன்னி:

குரு 7-ல் அமர்ந்து உங்கள் ஜன்ம ராசியையும் 3, 11-ஆம் இடங்களையும் பார்ப்பதுடன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி ஆகியோரையும் பார்க்கிறார். இதனால் ஜன்மச் சனியின் பாதிப்பு குறையும். உடல் நலம் சீராகவே இருந்துவரும். மனக்குழப்பங்கள் விலகும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். ஆதாயம் பெருகும். பண வரவு கூடும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். உத்தியோகத்தில் வளர்ச்சி காணலாம்.

பகுதி நேரப்பணியின் மூலமும் வருமானம் கிடைக்கும். முயற்சி வீண்போகாது. முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். கூட்டுத் தொழில் லாபம் தரும். நண்பர்களும் கூட்டாளிகளும் உதவுவார்கள். எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கியிருக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டு என்றாலும் பாதுகாப்பும் தேவை. வெளிநாட்டுப் பயணத்திட்டம் சிலருக்கு நிறைவேறும். 4-ல் சூரியன், செவ்வாய், ராகு ஆகியோர் உலவுவதால் நெருப்பு, மின்சாரம், கூரிய ஆயுதங்கள், வெடிப்பொருட்களால் விபத்து ஏற்படலாம்; எச்சரிக்கை தேவை.

மே 8-ஆம் தேதி முதல் குரு 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. பொருளாதார நிலையில் வளர்ச்சி காண அரும்பாடுபடவேண்டிவரும். சுகம் குறையும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. கூட்டாளிகளால் குழப்பம் உண்டாகும். நண்பர்கள் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். ஜன்ம சனிக்குக் குருவின் பார்வை விலகுவதால் உடல் நலம் பாதிக்கும். மனத்தில் நிம்மதி குறையும். தலை சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது. ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 3-ஆமிடத்துக்கு மாறுவதால் அலைச்சல் குறையும். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். பிற மொழி, மதங்களைச் சேர்ந்தவர்கள் உதவுவார்கள். கேது 9 -ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. தந்தை நலம் பாதிக்கும். தொலைதூரத் தொடர்பின்போது விழிப்புத் தேவை. நவம்பர்

15 முதல் சனி 2-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. என்றாலும் 5-ஆம் வீட்டோன் 2-ல் அமர்ந்து, குருவின் பார்வையைப் பெறுவதால் குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். ஸ்பெகுலேஷன் துறைகள் ஓரளவு லாபம் தரும். 6-ஆம் வீட்டோன் 2-ல் இருப்பதால் கண், வாய், முகம் சம்பந்தப்பட்ட நோய்நொடிகள் ஏற்படும். பேச்சால் சில பிரச்னைகள் உண்டாகும். நாவடக்கம் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.

சனி, ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும். வருடப் பின்பகுதியில் குருப் பிரீதியும் செய்யவேண்டும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 6, 7, 8.

திசை: வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு.

தெய்வம்: மகாவிஷ்ணு.

துலாம்

உங்கள் ராசிக்கு 2-ல் சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியோர் உலவுவதாலும், குரு 6-ல் இருந்தாலும், 10, 12, 2-ஆம் இடங்களையும், குறிப்பிட்ட இடங்களில் உள்ள கிரகங்களையும் பார்ப்பதால் குடும்ப நலம் திருப்திகரமாக இருந்துவரும். முக்கியமான ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைத்துவரும். மன உற்சாகம் கூடும். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் உங்களுக்கு உதவி புரிவார்கள். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். வீண் செலவுகள் குறைந்து, சுபச் செலவுகள் கூடும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். 3-ல் சூரியன், செவ்வாய், ராகு ஆகியோர் இருப்பதால் திட, வீர, பராக்கிரமம் கூடும். எதிரிகள் விலகிப் போவார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்பால் அதிகம் பயன் பெறுவீர்கள். 9-ல் கேது இருப்பது சிறப்பாகாது. தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். தொலைதூரத் தொடர்பின்போது விழிப்புத் தேவை. குரு 6-லும், சனி 12-லும் உலவுவதால் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். தொழிலாளர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் வேலைப்பளு அதிகரிக்கும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும்.

மே 8-ஆம் தேதி முதல் குரு 7-ஆமிடம் மாறுவது விசேடமாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும்.

பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். கூட்டாளிகளாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் கூடும். பயணத்தால் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும். திறமைக்குரிய உயர்வு நிச்சயம் உண்டாகும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை பார்க்கவோ விரும்புபவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும்.

உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் அனுகூலம் உண்டாகும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 2-ஆமிடத்துக்கும் கேது 8-ஆமிடத்துக்கும் மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். விஷ பயம் உண்டாகும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். நவம்பர் 15 -ஆம் தேதி முதல் சனி உங்கள் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவது சிறப்பாகாது. ஜன்மச் சனியின் காலம் ஆரம்பமாகிறது என்றாலும் அவர் உங்கள் ராசிக்கு யோக காரகன் என்பதாலும், நட்பு வீட்டில், உச்ச ராசியில் சஞ்சரிப்பதாலும், குருவால் பார்க்கப்படுவதாலும் நலம் புரிவார். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். அயல்நாட்டுத் தொடர்பு வலுப்பெறும்.

கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். உடல் ஆரோக்கியம் சீர்பெறும். காரியத்தில் வெற்றி கிட்டும். குரு, சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்துவரவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 5, 6.

திசை: வடக்கு, தென்கிழக்கு.

தெய்வம்: மகாலட்சுமி.

விருச்சிகம்:

உங்கள் ராசிக்கு 5-ல் குரு உலவுவதாலும், ஜன்ம ராசியையும், 9, 11-ஆம் இடங்களையும் குரு பார்ப்பதாலும் விசேடமான நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள். மன மகிழ்ச்சி கூடும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியத்தைப் பெறுவீர்கள். பண வரவு திருப்தி தரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். நற்பணிகளில் ஈடுபடுவீர்கள். தெய்வானுகூலம் உண்டாகும். சாதுக்கள், மகான்களைச் சந்தித்து, அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். மக்களால் உங்கள் மதிப்பு உயரும். தந்தையாலும், சகோதர, சகோதரிகளாலும் அனுகூலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை நிகழும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். சனி 11-ல் உலவுவதால் செய்தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். மே 7-ஆம் தேதிக்குள் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். நீண்ட நாளைய எண்ணங்களும் இப்போது நிறைவேறும். சொத்துக்கள் சேரும். நிலபுலங்களால் ஆதாயமும் கிடைக்கும்.

மே 8-ஆம் தேதி முதல் குரு 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மறதியால் அவதி ஏற்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரலாம். சுப காரியத்துக்காகக் கடன் வாங்க வேண்டிவரும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு உங்கள் ஜன்ம ராசிக்கும் கேது 7-ஆமிடத்துக்கும் மாறுவதும் சிறப்பாகாது. இந்த ஆண்டு முழுவதுமே ராகு, கேது ஆகியோரின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும்.

கூட்டாளிகளால் பிரச்னைகள் சூழும். உடல் நலனில் கவனம் தேவைப்படும். மதிப்பு குறையும். நவம்பர் 15-ஆம் தேதி முதல் சனி 12-ஆமிடம் மாறுகிறார். ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

உடல்நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். சனி தன் உச்ச ராசியில் இருப்பதாலும், குருவால் பார்க்கப்படுவதாலும் அதிகம் சங்கடங்கள் ஏற்படாதவாறு நீங்கள் காக்கப்படுவீர்கள். ஜாதக பலமும் சாதகமாக இருக்குமானால் கவலைப்படத் தேவையில்லை. மே 8 முதல் குரு பிரீதி செய்வது அவசியமாகும். நவம்பர் 15 முதல் சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 8, 9.

திசை: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு, மேற்கு.

தெய்வம்: சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி.

தனுசு

ராசிநாதன் குரு 4-ல் அமர்ந்து 10-ஆமிடத்தையும், சனியையும் பார்க்கிறார். 8, 12-ஆம் இடங்களையும் குரு பார்ப்பதால் செய்துவரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். உழைப்புக்குரிய பயன் கிடைக்கவே செய்யும்.

சோர்வுக்கு இடம் தரலாகாது. நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். பிரச்னைகள் கட்டுக்குள் அடங்கியிருக்கும். வீண் செலவுகள் குறையும். சுபச் செலவுகள் கூடும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஜன்ம ராசியில் சூரியன், செவ்வாய், ராகு ஆகியோர் இருப்பதால் அலைச்சலைத் தவிர்க்க முடியாமல் போகும். அதனால் உடல் அசைதி ஏற்படும். உஷ்ணாதிக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட நேரலாம். 7-ல் கேது இருப்பதால் கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. பக்குவமாகப் பேசிப் பழகுவது நல்லது. கூட்டாளிகளால் பிரச்னைகள் சூழும்.

புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். வெளிநாட்டுத் தொடர்புடன் வர்த்தகம் புரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும். தொழிலாளர்கள், விவசாயிகள், பொது நலப்பணியாளர்கள் ஆகியோருக்கெல்லாம் அனுகூலமான போக்கு நிலவிவரும்.

மே 8-ஆம் தேதி முதல் குரு 5-ஆமிடம் மாறுவது விசேடமாகும். மனத்துக்கு இனிய சம்பவங்கள் வாழ்க்கையில் இடம் பெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், சட்ட வல்லுனர்கள், பொருளாதார நிபுணர்கள், நீதிபதிகள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை உருவாகும். மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 12-ஆமிடத்துக்கு மாறுவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். கனவு தொல்லை தரும். அதனால் தூக்கம் கெடும். கேது 6-ஆமிடத்துக்கு மாறுவதால் மனத்துணிச்சல் கூடும். எதிர்ப்புக்கள் குறையும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நவம்பர் 15-ஆம் தேதி முதல் சனி 11-ஆமிடம் மாறி, குருவின் பார்வையைப் பெறுகிறார்.

உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டோன் 11-ல் உலவுவதாலும் தன காரகனால் பார்க்கப்படுவதாலும் ஏராளமான செல்வம் குவியப் போகிறது. 3-ஆம் வீட்டோன் சனி 11-ல் இருப்பதால் சகோதரராலும் அனுகூலம் உண்டாகும். முயற்சி பலிதமாகும். வீடு மாற்றம் நல்லவிதமாக அமையும். நீண்ட நாளைய எண்ணங்கள் இப்போது சுலபமாக நிறைவேறும்.

வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். வாழ்வில் நல்ல திருப்பத்தைக் காண்பீர்கள். வாழ்க்கைத் தரம் நிச்சயம் உயரும்.

கால நேரத்தைச் சரிவரப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுங்கள். ஜாதகப்படி இந்த நேரத்தில் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் பருத்தி புடவையாய் காய்த்தது போலாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 6, 8.

திசை: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.

தெய்வம்: சிவன், முருகன்.

மகரம்

6-ல் கேதுவும், 11-ல் சந்திரன், புதன், சுக்கிரனும் இருக்கிறார்கள். இதனால் உங்கள் மனத்தில் உற்சாகம் கூடும். எதிரிகளை வெல்வீர்கள். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அறநிலையங்களில் தொடர்பு கொண்டு பணிபுரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டாளிகள் உதவுவார்கள். தந்தையால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். 3-ல் குருவும், 12-ல் சூரியன், செவ்வாய், ராகு ஆகியோரும் இருப்பதால் மற்றையோரால் ஏமாற்றப்பட நேரலாம். பணம், பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. அரசாங்கத்தாரால் பிரச்னைகள் சூழும். அரசு அபராதம் கட்ட நேரலாம். ஜாதக பலம் இல்லாதவர்களுக்கு மரணத்துக்கு நிகரான கண்டம் உண்டாகும். உடல்நலனில் கவனம் தேவை. கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. யாருக்கும் ஜாமீன் கொடுக்கலாகாது.

பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது அவசியமாகும். மேலதிகாரிகளின் சொற்படி நடந்து கொண்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். உங்கள் பொறுப்புக்களை மற்றையோரிடம் ஒப்படைக்கலாகாது. குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிக்கலாகாது.

உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் பொறுப்புணர்ந்து காரியமாற்றுவது அவசியமாகும். சிலர் சொத்துக்களை விற்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக நேரலாம். மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். அதனால் தூக்கம் கெடும். பயணத்தால் அனுகூலமிராது. மே 8-ஆம் தேதி முதல் குரு 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் அவர் 8, 10, 12-ஆம் இடங்களைப் பார்ப்பதனால் பிரச்னைகள் குறையத் தொடங்கும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காண வாய்ப்புக் கூடிவரும்.

வீண் செலவுகளும் இழப்புக்களும் இனி இராது. ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 11-ஆமிடம் மாறுவதால் அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

புதியவர்களது தொடர்பு பயன்படும். கேது 5-ஆமிடம் மாறுவதாலும், கேதுவுக்கும் 5-ஆம் வீட்டுக்கும் 12-ல் குரு இருப்பதாலும் மக்கள் நலம் பாதிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். மறதி உண்டாகும். நவம்பர் 15 முதல் சனி 10-ஆமிடம் மாறி வலுப்பெறுவதாலும், குருவால் பார்க்கப்படுவதாலும் செய்து வரும் தொழிலில் விசேடமான வளர்ச்சியைக் காணலாம். வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு ஆதாயம் கூடும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். விண்வெளி சம்பந்தப்பட்ட இனங்களில் தொடர்புடையவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், கறுப்பு நிறப்பொருட்கள், பழைய பொருட்கள் ஆகியவற்றால் ஆதாயம் கிடைக்கும். உழைப்பு வீண்போகாது. சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பதவிகளும் முக்கியப் பொறுப்புக்களும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 7, 8.

திசை: வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு.

தெய்வம்: ஐயப்பன், ஆஞ்சநேயர்.

கும்பம்:

ராசிநாதன் சனி 8-ல் இருந்தாலும் 2-ல் தன் சொந்த வீட்டில் இருக்கும் குரு பார்ப்பதால் அஷ்டமச் சனியின் பாதிப்புக்கள் குறையவே செய்யும். குரு பலம் இருப்பதால் பொருளாதார நிலை உயரவே செய்யும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், இரசாயனத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு செழிப்புக் கூடும். 5-ல் கேது இருப்பதால் மனத்தில் ஏதேனும் சலனம் உண்டாகும். மக்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு ஏற்படும். 10-ல் சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியோர் இருப்பதாலும், 10-ஆம் வீட்டை குரு பார்ப்பதாலும் செய்துவரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும்.

கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். 11-ல் சூரியன், செவ்வாய், ராகு ஆகியோர் இருப்பதால் அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமையால் சாதனை பல ஆற்றுவீர்கள். மற்றையோர் உங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

எலக்ட் ரிக்கல், எலக்ட் ரானிக்ஸ் இனங்களால் லாபம் கூடும். வெளிநாட்டுப் பயணத்தாலும், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வியாபாரம் மற்றும் தொழிலாலும் லாபம் கூடும்.

உடல் நலம் சீராக இருந்துவரும். மே 8-ஆம் தேதி முதல் குரு 3-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. கொடுக்கல்-வாங்கல் இனங்களில் எச்சரிக்கை தேவை. சுப காரியங்கள் நிகழத் தாமதம் உண்டாகும். மற்றையோரால் ஏமாற்றப்பட நேரலாம்; விழிப்புத் தேவை. மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். குடும்பத்தில் குழப்பங்கள் சூழும். யாருக்கும் ஜாமீன் கொடுக்கலாகாது. குடும்பத்தாராலும், பெரியவர்களாலும் சிறுசிறு பிரச்னைகள் சூழும்.

மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 10-ஆம் இடம் மாறுவது சிறப்பாகும். தொழிலில் வளர்ச்சி காணலாம். கேது 4-ஆமிடம் மாறுவதால் அலைச்சல் கூடும். தாய் நலம் பாதிக்கும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வழக்கு, வியாஜ்ஜியங்களில் ஈடுபட வேண்டிவரும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலமிராது. நவம்பர் 15 முதல் சனி 9-ஆமிடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும், அவர் உங்கள் ராசிநாதன் என்பதாலும், குருவால் பார்க்கப்படுவதாலும், சுக்கிரனின் வீட்டில் உலவுவதாலும் நலம் புரிவார். தொலைதூரத் தொடர்பு பயன்படும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கேதுவுக்குப் பிரீதியாக விநாயகரை வழிபடவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 6.

திசை: வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

தெய்வம்: ஆஞ்சநேயர், ஐயப்பன்.

மீனம்:

ராசிநாதன் குரு ராசியிலேயே இருப்பதால் உங்கள் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். உடல் நலம் சீராகவே இருந்துவரும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்க்கும் குருவால் மக்கள் நலம் சீர்பெறும்.

வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். தந்தையால் நலம் கூடும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். 4-ல் கேதுவும் 7-ல் சனியும் இருப்பதால் கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. தாய் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். 9-ல் சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியோர் இருப்பதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்கும். மக்களால் பாக்கியம் கூடும். கலைத்துறையினருக்கும் மாதர்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். 10-ல் சூரியன், செவ்வாய், ராகு ஆகியோர் உலவுவதால் அரசுப் பணிகள் ஆக்கம் தரும்.

அரசியல்வாதிகளுக்குப் புதிய பதவிகளும் பொறுப்புக்களும் வந்து சேரும். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர், எலக்ரிக்கல் இனங்கள் லாபம் தரும். நெருப்பு, ஆயுதம், வெடிப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும்.

மே 8 முதல் குரு 2-ஆமிடம் மாறுவது விசேடமாகும். இதனால் குடும்ப நலம் சிறக்கும். பேச்சாற்றல் வெளிப்படும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணமுடியும். கொடுக்கல்-வாங்கல், ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோர் உங்களுக்கு உதவுவார்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். கடன் தொல்லை குறையும். பிரச்னைகள் எளிதில் தீரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். புதிய முயற்சிகள் கூடிவரும். தொழில் அதிபர்கள் செழிப்பான சூழ்நிலையைக் காண்பார்கள். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். ஜூன் 6-ஆம் தேதி முதல் ராகு 9-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். கேது 3-ஆமிடம் மாறுவதால் தாய் நலம் சீர்பெறும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீர வழிபிறக்கும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் உண்டாகும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். நவம்பர் 15 முதல் சனி 8-ஆமிடம் மாறுகிறார்.

அஷ்டமச் சனியின் காலம் ஆரம்பமாகிறது. அதிகம் உழைக்க வேண்டி வரும். வீண் செலவுகள், இழப்புக்கள் ஆகியவை ஏற்படும். சனியைக் குரு பார்ப்பதால் சனியால் விளையக்கூடிய கெடுபலன்கள் குறையும். கேது, சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து வருவது அவசியமாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 4, 6, 9.

திசை: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு.

தெய்வம்: சிவன், சக்தி, முருகன்.

vikatan

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய ராசிக்கு ஆங்கிலப் புத்தாண்டு நன்றாகவே சொல்லியிருக்கு. :icon_idea:

இணைப்பிற்கு நன்றி கறுப்பி.

அட நம்ம ராசிக்கு பறுவாயில்லைப்போல 2011... இணைப்பிற்கு நன்றி கறுப்பி... :icon_idea:

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

2011 கார்த்திகை 15 க்குப் பின் ஏழரை விலகுகிறது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

2011 கார்த்திகை 15 க்குப் பின் ஏழரை விலகுகிறது. :unsure:

சுவி, அன்று எங்களுக்கு பெரிய பாட்டி வைக்க வேண்டும்.... சரியா? :icon_idea:

சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களில் விழிப்புடன் இருக்கோணுமாம்... :o ஆஆஆ!!!! :D :D :)

என்ர ஜட்டியள் எல்லாத்தையும் கவனமா வைச்சிருக்கோணும்! :lol: :lol: :D

இணைப்பிற்கு நன்றி கறுப்பி :D

  • கருத்துக்கள உறவுகள்

சுவி, அன்று எங்களுக்கு பெரிய பாட்டி வைக்க வேண்டும்.... சரியா? :lol:

அட உங்களுக்கில்லாததா சிறி, பாட்டி என்ன புட்டியோடு , குட்டியும் உண்டு. ( நம்ம யாழ் குட்டியை சொன்னேன்)

.

நவம்பர் 15-ஆம் தேதி முதல் சனி 12-ஆமிடம் மாறுகிறார். ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. :lol:

சனீஸ்வரன் வாருங்கோ. தங்கள் வரவு நல் வரவாக‌ட்டும். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களில் விழிப்புடன் இருக்கோணுமாம்... :D ஆஆஆ!!!! :(:unsure: :unsure:

என்ர ஜட்டியள் எல்லாத்தையும் கவனமா வைச்சிருக்கோணும்! :) :) :D

இணைப்பிற்கு நன்றி கறுப்பி :)

சொத்து இருக்கிறவையள் தான் விழிப்பாய் இருக்கோனும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.