Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டில் தொடர்கிறது படுகொலைப் பயங்கரம்! மூன்று வாரங்களுக்குள் மூன்றாவது சம்பவம் சரசாலையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டில் தொடர்கிறது படுகொலைப் பயங்கரம்! மூன்று வாரங்களுக்குள் மூன்றாவது சம்பவம் சரசாலையில்

மூன்று நாள்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து தந்திரமாகக் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் வெட்டுக் காயங்களோடு சடலமாக நேற்று மீட்கப்பட்டார்.

இந்த அதிர்ச்சிதரும் சம்பவம் தென்மராட்சி சரசாலைப் பகுதியில் நடை பெற்றுள்ளது.

மீசாலை, புத்தூர் சந்தியைச் சேர்ந்த மகேந்திரசெல்வம் திருவருட்செல் வன் (செல்வன்) (வயது 28) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட வராவார். தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் படுகொலைச் சம்பவங்களால் குடாநாட்டு மக்கள் பயத்தால் உறைந்துபோயுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது :

வாகனங்களைக் கொள்வனவு செய்து பின்னர் அவற்றை விற் பனை செய்யும் தொழிலில் ஈடு பட்டுவந்த இந்த இளம் குடும் பஸ்தரின் வீட்டுக்குக் கடந்த திங்கட்கிழமை மாலை 6 மணி யளவில் மோட்டார் சைக்கிளில் இரு நபர்கள் வந்தனர்.

"கனகம்புளியடிச் சந்தியில் ஒரு வாகனம் விற்பனைக்காக இருக்கிறது. வந்து பார்க்க முடி யுமா?' என்று கூறித் தந்திர மாகக் குறித்த குடும்பஸ்தரான செல்வனை அழைத்துச் சென் றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களோடு சென்ற செல் வனைக் காணாது இரவு முழு தும் குடும்பத்தினர் தேடிய லைந்தனர். இந்தச் சமயத்தில் வீட்டாரின் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள் பெருந் தொகைப் பணத்தைக் கேட்டு மிரட்டினர். குறித்த தொகைப் பணத்தைத்

தராவிட்டால் செல்வனைக் கொலை செய்து விடுவோம் எனவும் அச்சுறுத்திவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டனர். அடுத்த நாள் காலை செல்வனின் குடும்பத்தினர் சாவகச்சேரிப் பொலிஸில் அதுகுறித்து முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று புதன்கிழமை மாலை மூன்று மணியளவில் சரசாலை, வேம்பிராய் வீதியில் இயற்கைத்திடல் காளிகோயிலுக்கு அண்மையாக உள்ள கல்குவாரி ஒன்றின் அருகே வெட்டுக் காயங்களோடு உடைகள் களையப்பட்டு உள்ளாடையுடன் மாத்திரம் செல்வனின் சடலம் வீசப்பட்டுக் கிடந்தது. இதுபற்றி அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனாவைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

படுகொலை செய்யப்பட்ட செல்வன் நீண்டகாலமாக வன்னிப்பகுதியிலும் வசித்துவந்தாரெனவும், ஒரு வருடத்துக்கு முன்னரே நலன்புரி நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேறினார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. “செல்வன் கொண்டுசென்ற மோட்டார் சைக்கிளையும் ஆவணங்களையும் கொலையாளிகள் எடுத்துச் சென்றிருப்பதாகவும், சடலத்தின் நிலையைப் பார்க்கும்போது செல்வன் இரு நாள்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் எனவும் சடலத்தை நேரில் பார்த்த அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

சரசாலைச் சம்பவம் குறித்து இராணுவப் பேச்சாளர் உபயமெதவெலவிடம் வினவியபோது, மேற்குறித்த சம்பவம் தொடர்பாகத் தனக்கு இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என அவர் நேற்றிரவு உதயனுக்குத் தெரிவித்தார். இதேவேளை பொலிஸ் தரப்புத் தகவல்களைப் பெறுவதற்காகச் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டபோது,"தற்போதுதான் விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறோம். நாளை (அதாவது இன்று) காலைதான் விளக்கமளிக்க முடியும்' என்ற பதிலே கிடைத்தது.

கடந்த மூன்று வாரங்களுக்குள் நடைபெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் இருவர் காவுகொள்ளப்பட்ட அதிர்ச்சியிலிருந்து பயங்கரத்திலிருந்து குடாநாட்டு மக்கள் மீள்வதற்கிடையில் மூன்றாவது கொலைச் சம்பவமும் நடைபெற்றிருக்கிறது. இதனால் குடாநாட்டுமக்கள் மத்தியில் பெரும் பீதிநிலை உருவாகியுள்ளது

http://www.uthayan.innovay.net/pages/news_full.php?nid=3397

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.