Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவுகள் நிஜமாகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகள் நிஜமாகிறது

அந்தத் தரிப்பிடத்தையும் கடந்து பஸ் சென்று கொண்டிருந்து

வழக்கமாக இந்தப் பஸ்ஸில்தான் அந்தப்பெண்ணும் பயணம் செய்வாள். ஆனால் இன்று அவளைக் காணாதது சந்துருவின் மனதுக்குள் ஏதோ மாதிரியாக இருந்தது.

அந்தப் பெண் இந்தப் பயணப்பொழுதுகளில் மிகவும் வாட்டசாட்டமாகவே காணப்பட்டாலும் அவளது உள்ளத்திலே ஏதோ ஒரு சோகம் குடிகொண்டிருப்பதை மட்டும் அவனால் ஊகித்து உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

தினமும் அவனுடன் பயணம் செய்யும் அப்பெண்ணோடு அவன் இதுவரை கதைத்ததில்லை. ஆனால் கண்கள் கதை பேசி உதடுகள் உண்மை சொல்ல மறுத்து புன்முறுகல் செய்த நாட்கள் பலவுண்டு.

ஆயினும் எப்படியாவது அப்பெண்ணுடன் கதைக்கவேண்டும்.. போல் சந்துருவின் மனம் தவித்தது. இருப்பினும் முன்னுக்குப் பின் அறிமுகமில்லாத ஒரு பெண்ணுடன் எப்படி பேச்சை ஆரம்பிப்பது…..? அதற்கான சந்தர்ப்பம் வராதா….? இப்படியாக அவனுக்குள் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

எப்படியாவது இன்று அப்பெண்ணுடன் கதைப்பதற்காய் காத்திருந்தும் அவள் வராதது அவனுக்குக் கிடைத்த முதல் ஏமாற்றம் என்றுதான் சொல்லவேணடும்.

சுற்றிவளைக்காமல் சொல்லுவதானால்…. அப்பெண்ணை சந்துருவுக்கு மிகவும் பிடித்திருந்தது அழகியென்று சொல்லுமளவுக்கு இல்லாவிட்டாலும் இவனது கண்களுக்கு அவள் அழகியாகவே தென்பட்டாள் ஆனால் இத்தனை ஆண்டுகளாக தளர்ந்து விடாமல் இருந்த தன் மனதிற்குள் இந்த மங்கை நுளைந்து கொண்டது எப்படி …..? யாரென்றே தெரியாத அப் பெண் மீது தன்னுள்ளம் மையல் கொண்ட காரணம்தான் என்ன…? தனக்குள் எழும் கேள்விகளுக்கு விடை தேடி அவனது மனமும் அலைத்தொடங்கியது

அறிமுகமற்ற இரு உள்ளங்கள் சந்தித்துப் பழகி தங்களுக்குள் ஓர் புரிந்துணர்வை ஏற்படுத்திய பின்பு அந்த உள்ளங்களிடத்திலே தோன்றும் இனமறியாத அன்புதானே “காதல்” காதல் வயப்பட்ட உள்ளங்கள் தினமும் கற்பனை வானில் சிறகடித்துப் பறக்கும். கனவுகள் துயிலெழுப்பி தொந்தரவுகள் செய்து மகிழும். நெஞ்சுக்குள் இருப்பவள் தன் காதலை நிஜமாக ஏற்றுக் கொள்ளும்வரை நினைவுகளும் நிழலாய் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதுவும் காதல் வாழ்வின் அவலங்களுள் ஒன்றுதானே….. இப்படியாக சந்துருவின் மனதிற்குள் எண்ணங்கள் வர்ணயாலத்துடன் வந்துபோய்க் கொண்டிருக்க…அவன் இறங்கவேண்டிய அந்த தரிப்பிடம் வர இறங்கிக் கொள்கிறான்.

ஆயினும்….

விழியோரப் பார்வை பட்டு

விழித்திருக்கும் கண்களுக்குள்

களிநடனம் புரியும்.. கன்னியவளின்

காந்த விழிகள்..

கவர்ந்திழுத்து கதைகள் சொல்ல..

உதடுகளோ தெரியாத

அவள் பெயரை….

புனைபெயரில்உச்சரித்து..

தனக்குள்ளே தான் மகிழ..

இவ்விரவும் அவளுக்காய்

விடியாமல் இருப்பதற்கு..

இயற்கையிடம் மனுக்கொடுக்க

இதயம் தவித்திருக்க

நாளைய பொழுதாவது..

புதுக்கதை சொல்லிப் புலரட்டும்.

என்று அவன் மனம் நினைத்துக்கொள்கிறது.

ஆனால் வழமைபோல் அன்றும் அதே ஏமாற்றம்தான்.. அவள் வரவில்லை. நாட்களும் வாரங்களாகி…வாரங்கள் மாதங்களைப் பிரசவித்துக் கொண்டிருந்தன. கனவுகளும் காத்திருக்க மறுத்து மெதுவாக கலைந்து செல்ல ஆரம்பித்தன

அப்போது அத்தி பூத்ததுபோல் அன்று அவள் வந்தாள். முகத்தில் அதே சோகத்தின் களை தென்பட்டது. ஆயினும் வெளியில் காட்டிக்கொள்ளாதபடி தன்னை சுதாகரித்துக்கொள்வதையும் சந்துருவின் கண்கள் கவனிக்கத் தவறவில்லை. அத்தப் பெண்ணும் பஸ்சிற்குள் ஏறியவுடன் சந்துருவைக் கண்டதும் புன்முறுகல் செய்துவிட்டு எதிரே இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு ஜன்னலினூடாக பார்வையை செலுத்துகிறாள்…. ஆனால் அவளது இதயம் இழந்துவிட்ட எதையோ தேடிக் கொண்டிருப்பதை சந்துருவின் உள்ளம் ஊகித்துக் கொள்வதோடு இன்று எப்படியும் அவளிடம் குசலம் விசாரித்துக் கொள்ளவும் மனம் திடசங்கற்பம் கொள்கிறது.

எனி னுன் எதை எப்படி விசாரிப்து….? மனதிற்குள் ஒரு படபடப்பு ஏற்பட்டாலும் தனக்குள்ளே அரும்பியிருக்கும் அந்த புனிதமான உறவை அவளிடம் தானே பகிர்ந்து கொள்ள முடியும். இப்படி எண்ணங்கள் இதமாக நெஞ்சுக்குள் இளையோடிக்கொண்டிருக்க… அந்தப் பெண் இறங்க வேண்டிய அந்தத் தரிப்பிடத்தில் இவனும் இறங்கிக் கொள்கிறான்.

அவ்விடத்தில் சந்துருவை சற்றும் எதிர்பார்த்திராத அவள்… மீண்டும் அதே புன்முறுகலுடன் அன்னமென அவன் முன்னே நடந்து செல்ல.. இவனும் பதிலுக்காய் புன்னகைத்துவிட்டு நிழலாய் பின் தொடர்ந்து செல்ல சடுதியாய் அவள் இவனை திரும்பிப்பார்க்க கண்கள் முந்திக்கொண்டு குசலம் விசாரிக்க..

“என்ன நீண்ட நாட்ளாய் காணவில்லை வாஞ்சையுடன் வினவினான் சந்துரு”"

“ஆமாம் ” என தலையை அசைத்தவள்.. கண்களிலிருந்து பெருகிய கண்ணீர்த்துளிகளை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி தனது கைக்குட்டையால் கண்களை ஒற்றிக்கொள்கிறாள். ஏதோ சொல்ல வந்தும் முடியாமல் அவள் தவிக்க உதடுகள் பற்களுக்கிடையில் சொருகிக் கொள்ள அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“நான் உங்கள் மனதை புண்படுத்தி விட்டேனா”….? கேட்டான் சந்துரு

இல்லை என்று தலையை அசைத்தாள்.

“உங்கள் பெயரை நான் அறியலாமா.”…? என்று சந்துரு கேட்க

“பிரியங்கா” என்றாள். பதிலுக்கு

என் பெயர் சந்துரு என்று தன்னையும்அறிமுகம் செய்துவிட்டு

உங்கள் இதயம் ஏதோவொரு வேதனைத்தீயில் வீழ்ந்து வெந்துகொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது. இதற்கு முடிந்தளவு முயற்சித்து என்னால் இயன்றளவு பரிகாரம் செய்ய காத்திருக்கிறேன். என்றான் சந்துரு.

அதை செவிமடுத்ததும்.. “தரிசனத்துக்கு உதவாத சாக்கடைப் பூக்களாக ஆண்டவனாலேயே ஒதுக்கிவைக்கப்பட்ட அபலைப்பெண்களது அவலங்களை எங்கு சென்று முறையிட்டாலும் அது மீள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது சந்துரு” என்றாள்.

“எங்களுக்குள் ஏற்படும் மனச்சுமைகளை இறக்கிவைப்பதற்கும் எழும் கேள்விகளுக்கும் எமக்குள்ளேயே தேடியும் விடை கிடைக்காத போது மனதுக்குப் பிடித்த ஒருவருடன் இதை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதில் தவறில்லைத்தானே”…? கேட்டான் சந்துரு.

மனம் ஒரு பக்குவமான நிலைக்கு வந்த பின்பு இப்படித்தான் நானும் இருந்தேன்… ஆனால் அந்த அன்புக்குரியவரை இப்போது இழந்து தவிக்கிறேன் என்றாள் பிரியங்கா.

“என்ன சொல்கிறீர்கள்.”…? என்று பதட்டத்துன் சந்துரு வினவ..

தன் சோகக் கதையை சொல்ல ஆரம்பித்தாள் பிரியங்கா. …

இ ளமைக் காலத்தின் கோலங்கள் எனக்குள் ஏற்படுத்திய உராய்வினால் காதல் எனும் தேனருவியில் நனைந்து நானும் மதனும் மனதைப் பறிகொடுத்து மகிழ்ந்திருந்தோம் . நான்பணிபுரியும் அதே கம்பனியில்தான் அவரும் தொழில் பார்த்தார். மிகவும் நல்லவர். எந்த வித தீய பழக்கங்களும் இல்லாதவர். ஏழ்மையிலே வாழ்ந்து பல துன்பங்களை அனுபவித்த அவருக்கு… நான் வாழ்க்கைத் துணைவியாக வந்து விட்டால் தன் வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த ஒரு பாக்கியமாகக் கருதுவேன் என்று அடிக்கடி கூறுவார். அந்த அளவுக்கு என்னை அவர் மிகவும் நேசித்தார். எங்களது காதல்ப்பயணமும் எவ்வித இடர்களுமின்றி இன்பமாகவே நகர்ந்து கொண்டிருந்தது. என்று கூறும்பொழுது நெஞ்சினுள் குமுறியெழும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துத் தடுமாறி… பின்பு மீண்டும் தொடர்ந்தாள்.

விடுமுறைக்காக பெற்றோரைப் பார்க்கச் சென்றவர் மீண்டும் திரும்பி வரவேயில்லை. அப்போதுதான் அங்கே அந்த சுனாமி அனர்த்தமும் நிகழ்ந்தது.

“ஆனால் அவரது குடும்பத்திலும் உறவினர்களும் பலர் இந்த அனர்த்தத்துக்குப் பலியாகியிருப்பதாக பின்புதான் அறிந்தேன். எனினும் மதன் இன்னும் உயிருடன் இருப்பதாகவே என் மனம் சொல்கிறது. அதனால்தான் அவரது நினைவுகளுடன் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறேன்.” அதுமட்டுமல்ல ஒவ்வொரு பொழுது புலரும்பொழுதும் இன்றாவது என் மதனை என்னுடன் சேர்த்துவைக்க மாட்டாயா என்றுதான் இயற்கைத்தாயை என் மனம் வேண்டி நிற்கும்” என்றாள். அப்போது கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் ஆறாய்ப்பெருகி வழிந்துகொண்டிருக்க அந்த காலைப் பொழுதிலும் எங்கிருந்தோ காற்றோடு தவழ்ந்து வந்த அந்தப் பாடல் நெஞ்சுக்குள் நெரிஞ்சி முள்ளாய்த் தைத்தது

இதைக் கேட்டதும் அவலம் நிறைந்த அப்பெண்ணின் உள்ளக் குமுறலுக்கு ஆறுதல் கூற இவனது மனம் நினைத்தாலும் .. தடுமாறி நிற்கும் தன் மனம் இதற்குத் தகுதியுள்ளதா…..? என்று அவனுக்குள் கேள்வி எழுந்தது.

இதற்காகத்தானோ என்னவோ காதலுக்கும் கண் இல்லை என்பார்கள்….! காரணம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமல் கண்டதும் மனம் காதல் கொள்வதனால்… பின்பு ஏற்படுகின்ற கசப்பான நினைவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மனம் தவிப்பதென்பது.. காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் ஒருவரை கட்டுமரம் கொண்டு காப்பாற்ற நினைப்பதைப் போன்றதெல்லவா… இவ்வாறு சந்துருவின் உள்ளமும் நினைத்துக்கொள்கிறது.

அந்த வேளையில் பிரியங்காவின் தோழி லாவண்யா அவ்விடத்திற்கு வரவும் … இருவரும் விடைபெற்றுச் சென்றனர். ஆனாலும் இருவரது சந்திப்புகள் மட்டும் அடிக்கடி தொடர்ந்துகொண்டே இருந்தன.

ஆயினும் சந்துருவின் மனதுக்குள் புதிய சோகம் ஒன்று புரையோடி புதுவடிவம் பெற்றது. இந்த சுனாமி அனர்த்தத்துக்கு எத்தனைபேர் அனாதைகளாகி அவஸ்தைப் படுகிறார்கள்…..? எத்தனைபேர் விதவைகளாகியுள்ளனர்……? இன்னும் எத்தனைபேர் ஊனமாகி மனநிலை பாதிக்கப்பட்டு நிழல் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்…..? இவர்களுக்கு ஒரு மறுவாழ்வு நிச்சயம் தேவை. இப்படியெல்லாம் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதிய நானும் இந்த அவலம் நிறைந்த இவர்களது வாழ்க்கையில் பங்கு கொண்டால் என்ன….? என்று இந்த நல்ல மனமும் நினைத்துக்கொள்ள… நெஞ்சுக்குள் பிரியங்காவின் நினைவுகள் தினமும் வலம் வரத்தொடங்கின.

இப்படியாக மாதங்களும் கடந்துகொண்டிருக்க.. பிரியங்காவின் பெற்றோரோ உள்ளூர்த் தரகரின் உதவியுடன் மகளுக்கு வரன் தேட ஆரம்பித்தனர். ஆரம்பத்திலே பிரியங்கா இதை மறுத்தாலும்.. இயற்கையே தன் காதலை ஏற்றுக்கொள்ளாதபோது.. அதை எண்ணி மனமுடைந்து வாழ்வதை விட.. பெற்ற மனங்களாவது இத்திருமணத்தின் மூலம்திருப்தியடையட்டும் என நினைத்துக்கொள்கிறாள்.

திருமணத்திற்கு மறுப்புத்தெரிவித்திருந்த மகள் சம்மதம் தெரிவித்ததுகண்டு பெற்ற மனங்கள் பேருவகை கொண்டன.

இச்செய்தியை பிரியங்காவின் தோழி லாவண்யா மூலம் சந்துரு அறிந்து கொண்டு அந்தத் தரகரின் உதவியை நாட.. தரகரூடாக தகவல் இருவருடைய பெற்றோரையும் சென்றடைய.. அவர்களும் இதற்கு சம்மதித்தனர்.

சில நாட்களின் பின்னர் ….இந்த இரு உள்ளங்களும் சந்தித்துப் பழக காரணமாய் இருந்த அந்த பஸ் தரிப்பிடத்தில்..லாவண்யாவை பியங்கா சந்தித்து. இத்திருமணத்தை முற்றாக மறுப்பதாகத் தெரிவித்தாள். காரணம்:

ஒரு நல்ல உள்ளத்தின் எதிர்காலம் என்னால் இருளடைந்து விடக்கூடாது. என்ற நல்லெண்ணத்தில்தான் கூறுகிறேன். எப்படியிருந்தாலும் நான் மனதால் களங்கப்பட்டவள். பெற்றவர்களது எதிர்பார்ப்புகள் பிள்ளைகளது பலவீனங்களால் ஏமாற்றமாகி விடக்கூடாது என்பதனால் தான் திருமணத்திற்கே சம்மதித்தேன். தயவு செய்து என் பெற்றோரிடம் இதை எடுத்துச் சொல்வாயா…? என்று கூறி லாவண்யாவின் கரங்களைப் பற்றிப்பிடித்துக் கெஞ்சினாள்.

அப்போது லாவண்யா.. உன்னை மணப்பதற்கு சந்துரு மனப்பூர்வமாக சம்மதித்த பின்புதான்.. இத்திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு நல்ல உள்ளத்தைப் புரிந்துகொண்டு மறுப்புத்தெரிவிக்காமல் அவரை மணந்துகொள்.

அதுமட்டுமல்ல நீ காதலித்த மதன் இனி வரமாட்டார். நாம் வேலை செய்யும் கம்பனியில் அவருடைய வெற்றிடத்துக்குத்தான் என்னை இந்தக் கம்பனியின் நிர்வாகி சிபாரிசு செய்தார். காரணம் மதனது இறப்பினால் ஏற்பட்ட அனுதாபம்தான்.. நான் இங்கு வேலைக்கமர்ந்து சில நாட்களிலேயே சந்துருவின் உள்ளத்தில் நீ இருக்கிறாய் என்பதை அறிந்து கொண்டேன் . அதனால்தான் இந்த உண்மையை சொல்லாமல் மறைத்தேன். இதற்கும் ஒரு காரணமுண்டு ஏனென்றால் நீ மனப் பூர்வமாக நேசித்த அந்த மதனுடைய தங்கைதான் நான். என்று மூச்சுவிடாமல் கூறிமுடிக்க…

அந்தக் கணப் பொழுதில் அந்த இரு உள்ளங்களும் இயற்கையை நொந்து மனதுக்குள் குமுறி அழுதது அவர்களுக்கு மட்டுமல்லவா தெரியும்….

அப்போது அங்கு வந்த சந்துரு இவர்களிடத்திலே காணப்பட்ட மௌனத்தைப் புரிந்துகொண்டு.. பரியங்காவைப் பார்த்து.. உண்மைதான் பிரியங்கா லாவண்யாமூலமாக அனைத்தும் அறிந்த பின்புதான் இந்த முடிவுக்கு வந்தேன். வரையாத ஓவியமாய் நீ எனக்குள் இருகிறாய். தூரிகை கொண்டு உன்னை தினம் தொட்டு மனம் சுகம் காண்கின்றது.

இந்த ஓவியம் உயிரோவியமாய் என் உயிரோடு கலந்து விட்டால்.. நினைவுகள் நிஜமாகும் என்று நம்புகிறேன். என கூறிமுடிக்க.. பிரியங்கா மௌனமாய் நின்றாள்

அப்போது ஆகாயத்தை கௌவியிருந்த கருமுகில் கூட்டங்களும் ஆங்காங்கே கலைந்து செல்ல மழை மெதுவாக தூறல்போட வானமும் இந்தமணமக்களை வாழ்த்திக்கொண்டிருந்தது.

http://sivanes.wordpress.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றிவளைக்காமல் சொல்லுவதானால்…. அப்பெண்ணை சந்துருவுக்கு மிகவும் பிடித்திருந்தது அழகியென்று சொல்லுமளவுக்கு இல்லாவிட்டாலும் இவனது கண்களுக்கு அவள் அழகியாகவே தென்பட்டாள் ஆனால் இத்தனை ஆண்டுகளாக தளர்ந்து விடாமல் இருந்த தன் மனதிற்குள் இந்த மங்கை நுளைந்து கொண்டது எப்படி …..? யாரென்றே தெரியாத அப் பெண் மீது தன்னுள்ளம் மையல் கொண்ட காரணம்தான் என்ன…? தனக்குள் எழும் கேள்விகளுக்கு விடை தேடி அவனது மனமும் அலைத்தொடங்கியது.

நல்ல கதை நுணா, பாராட்டுக்கள்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இசையும் கதையும் போல நன்றாய் இருக்கிறது .

பகிர்வுக்கு நன்றி நுணா......

இசையும் கதையும் போல நன்றாய் இருக்கிறது .

இசையும் கதையும் போல எனக்கும் பட்டது. நல்ல ஆக்கம் நுணா. ஆனால் லாவண்யா மதனின் தங்கையாக வருவது கொஞ்சம் நெருடுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.