Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து

Featured Replies

தமிழக புத்தகக் கண்காட்சியில் புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து

கி.செ.துரையால் அலைகள் இணையத்தளத்தில் பதினெட்டு தினங்கள் தொடர்ச்சியாக எழுதப்பட்டு தற்போது தமிழகத்தில் நூல் வடிவில் வந்துள்ள புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து என்ற நூல் தமிழக புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வந்துள்ளது.

கண்காட்சியில் நூல்களை வாங்குவோரிடையே இந்த நூல் பெரிதும் ஆர்வமாக வாங்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒரு கோடி நூல்கள் விற்பனைக்கு வந்துள்ள பெரும் புத்தகச் சந்தையில் ஈழத் தமிழரின் புதுமாத்தளன் சோகம் ஆர்பாட்டங்கள் எதுவுமின்றி அமைதியான பயணத்தை தொடங்கியுள்ளது.

இந்த நூலின் வெளியீட்டுவிழாவும் அறிமுக விழாவும் விரைவில் டென்மார்க்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வேலுப்பிள்ளை மனோகரனின் அணிந்துரையுடன் இந்த நூல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=53916

Edited by akootha

  • 5 weeks later...
  • தொடங்கியவர்

ஒரு மாவீராங்கனையின் தாய் எழுதும் திறனாய்வு மடல்..

கண்டிப்பாக படிக்க வேண்டிய கருத்துள்ள கடிதம்…

சென்னை

நாள் 27.01.2011

அன்புடன் திரு. துரை அவர்களுக்கு,

முதலில் உளமார்ந்த நல்லாசிகள் பாராட்டுதல் கலந்த நல் வாழ்த்துக்கள்.

புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து என்ற புத்தகத்தைப் படித்தேன். படித்தல் நிறைவுறும் முன்பாகவே அது வெறும் புத்தகமல்ல.. ஒவ்வொரு ஈழத்தமிழனுக்குமான பொக்கிஷம் என்பதை உணர்ந்தேன். உணர்ந்தவண்ணமே அந்தப் பதினெட்டு நாட்களின் பயணத்தை நிறைவு செய்தேன். இந்தப் புத்தகத்தை அல்ல.. பொக்கிஷத்தை அறிமுகம் செய்தமைக்காக சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு எனது உளமார்ந்த நன்றியை முதலாகக் கூற வேண்டும்.

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளலை அறிந்திருக்கிறோம். மகாபாரதம் கேட்டிருக்கிறோம், இராமாயணம் படித்திருக்கிறோம். கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவரும் கேளிர் .. ஒன்றல்ல இரண்டல்ல .. பல நூறு தடவைகள் எமக்குள் எதிரொலி செய்கிறது.

ஆயினும் என்ன ?

இவை யாவற்றுள்ளேயும் புதைந்து கிடக்கின்ற அற்புதத்தை – வாழ்க்கையின் உன்னதத்தை – ஊடுருவிப் பார்க்கின்ற சிந்தனைத்திறன் – நானறிந்தவரை – இதுவரை யாருக்கும் ஏற்பட்டதில்லை உங்களைத்தவிர..

புயலுக்குள் புதுமை கண்டு, அதைப் புதுமாத்தளனோடு இணைத்து, புலம் பெயர் தமிழர் உன்னதம் பெறுவதற்கான செய்தியாகக் கொடுத்திருக்கிறீர்கள்..

பாராட்டுகிறேன்…

2009 மே – பதினெட்டாம் நாளுக்குப் பிறகு தமிழினம் சோர்ந்துபோய்க் கிடக்கின்றது. எல்லாமே முடிந்துவிட்டது என்ற ரீதியில் விரக்தியின் விளிம்புக்கு வந்து நிற்கிறது. , எங்கள் விடுதலைப் போராட்டம் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாகவே பின்நோக்கிப் போய்விட்டது.. தமிழன் இனி நிமிர்வது எங்ஙனம்…? , என்ற மனப்பாங்குதான் ஏறக்குறைய எல்லோரிடமும் காணப்படுகிறது.

, ஆடுகளம் , சமமாக இல்லாத இடத்தில் நம் ஈழத்தமிழ் வீரர்கள் மோதினார்கள்… அவர்கள் அழிக்கப்படவில்லை.. இப்போரில் அவர்களுக்கே வெற்றி..

எனவும்,

தனது சிறிய படையணியினரோடு உலகத்தையே துணிந்து எதிர்த்த பிரபாகரன் அடைந்தது தோல்வியா… ?

எனவும்,

உங்களுடைய பேனா ஒவ்வொரு ஈழத் தமிழனையும் தெம்பேற்றுகிறது. இது காலத்தின் தேவை, ஒரு தேசத்தின் கட்டாயம். இந்த நூல் பட்டிதொட்டி எங்கும் போய்ச் சேர வேண்டும் என்பதே என் ஆதங்கம்.

நடக்குமா.. ? நடக்க வேண்டும்…

பிரபாகரன் தன்னைக் காட்டிக் கொடுத்த சில புலித்தம்பிகளை புதுமாத்தளனில் நேரடியாகக் கண்டார்..

, தம்பி தமிழீழம் பிறக்க முன்னர் நீ பிறந்துவிட்டாயே.. ! என்று அவர்களைப் பார்த்து சிரித்தபடி சொன்னார், என்ற வரிகளைப் படித்து துடித்துப்போனேன். பெருகிவந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை.

அடுத்த வினாடியே..

, திரும்பிப் பார்க்காதே.. !, என்ற மாபெரும் தத்துவம் எனக்கு முன்னால் நிற்பது தெரிந்தது.

உதிர்ஷ்டிரனையும், மகலனையும் சொல்லி .. இந்தத் தத்துவத்தோடு இணைத்து.. இறுதியில் காது கொடுத்துக் கேட்டுப்பார் ! என்கிறீர்கள். இதோ இப்பொழுதும் கேட்கிறேன்..

எங்கள் அருமைத் தலைவன் ..

என்போன்ற தாயாருக்கெல்லாம் இனிய மகன்..

ஓர் அற்புத வரலாற்றின் பிறப்புக்காக திரும்பிப் பாராமலே நடந்து கொண்டிருக்கிற அந்தக் காலடி ஓசைகளை..

அவனை எங்கள் தேசத்தின் பிள்ளையை, இந்தப் பயணத்தில் நீ நிச்சயம் வெற்றி பெறுவாய் மகனே.. என்று மனம் திறந்து ஆசீர்வதிக்கிறேன். விரைவில் எங்களிடம் வந்துவிடு தலைவா..! என்ற ஆதங்கத்தோடு.

2009 மே 18 ற்குப் பிறகு தமிழன் தமிழனாக இல்லை. உயிர் கொடுத்தவர்களும், அநியாயமாக உயிர் பறிக்கப்பட்டவர்களும் போய்ச் சேர்ந்துவிட, அவரவர் உயிரே அவரவர்க்கு சுமையாகிவிட்டதான ஒரு கொடுந்துயரம்..

தமிழன் என்றால் , தலை நிமிர்வு , என்பதாய் அர்த்தப்படுத்தி வாழ்ந்தோமே இன்று உலகமே நம்மைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறதே..

இது ஏன் நடந்தது..? எப்படி நடந்தது.. ? கனவில்கூட நினைத்துப் பார்த்திராத இந்த அவலத்திற்கு யார் அல்லது எது காரணம் ?

இதுபோன்ற விடை தெரியாக் கேள்விகளோடு ஒரு வெறுமையான வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ் இதயங்களின் மத்தியில் மற்றுமொரு முக்கியமான கேள்வியும் :

தமிழீழம் என்ற இலட்சியக் கனவோடு சாவைத்தழுவிக் கொண்ட, வெடிகுண்டு சுமந்து வெடித்துச் சிதறி மண்ணுக்குள் புதைந்து போன பல்லாயிரம் மாவீரர்களுடையை அசையாத நம்பிக்கை வீணாகிப் போனதா..?

சத்தியம், தர்மம், நீதி, கடவுள் என்பதெல்லாம் வெறும் கதைகள்தானா..? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பேனா விடை தருகிறது.

, தியாகமே வடிவான போராளிகள் மண்ணுக்குள் இருக்கிறார்கள்.. அவர்கள் இதைக் காப்பாற்றுவார்கள்.., என்று உறுதியோடு பிரபாகரன் நம்புகிறார். – என்ற வரிகள்.

, பிரபாகரன் என்ற பிரகாச ஒளி இப்புவியில் பரவும்.. ,

நம்புவோம்.. காத்திருப்போம்.. !

இவ்வாறு நம்பிக்கை தந்த உங்களுடைய பேனா உங்களுடைய 10 வது கதையில் வாசகர் நெஞ்சங்களைக் கலங்கவும் வைக்கிறது. டைட்டானிக் கப்பலை புதுமாத்தளனோடு ஒப்பிடும் நீங்கள், , டைட்டானிக் பெரிய கப்பல்தானே.. அது ஒரு காலமும் உடையாது என்ற நம்பிக்கையுடன் பயணித்த மடமைச் செயலை எண்ணி வருந்திய கப்பல் தலைவன் கடைசியில் டைட்டானிக்கோடு சேர்ந்து தானும் மூழ்கி உயிரை மாய்க்கிறான் என்றும் எழுதியுள்ளீர்கள்.

வாசித்தபோது இதயம் துணுக்குற்றது… எதையோ எமக்கு சொல்வதற்கான சூசகமான வரிகளா இவை.. ? என்ற நினைப்பில் மனம் பதைபதைப்பதை தவிர்க்க முடியவில்லை.

சொல்லுங்கள் தம்பி..

அதைச் சாதாரணமாகத்தானே எழுதினீர்கள்.. ? சூசகமாக எதையும் எமக்கு சொல்வதற்காக அல்லவே.. ?

போருக்குப் பிற்பட்ட காலமே கொடியது என்றும், அதன் பிறகுதான் உண்மையான அவலம் சமுதாயத்தைச் சூறையாடத் தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

எத்தனை பெரிய உண்மை இது..

கூடவே..

அறிஞர் மட்டத்திலான போர் மதிப்பீட்டு ஆய்வுக்குழுவை நாம் நியமிக்கவில்லை என்றும், அந்த மதிப்பீட்டை வைத்துத்தான் நாம் அடுத்த கட்டத்திற்கு போயிருக்க வேண்டும் என்றும் கூறுகிறீர்கள்.

ஆறாத்துயரிலும் கண்ணீரிலும் கிடக்கிற தமிழ் மக்களுக்கு முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்ற விடை தெரியா கேள்விகளில் இதோ சில :

இனி யார் எங்கள் வழிகாட்டி.. ?

அதைத் தெரிந்து கொள்ளும் அளவுகோல் எது ?

இப்போது வெளியிடப்படுகின்ற வகை வகையான அறிக்கைகள், பிரகடனங்கள், அறிவுறுத்தல்கள் என்பவற்றில் எதை சரியென்று கொள்வது ? எதை பிழையென்று தள்ளுவது ? தமிழனுக்கென ஒரு எதிர்காலம் இனி உண்டா.. இல்லையா.. ? குழப்பம் எங்கும் குழப்பம்.. எதிலும் குழப்பம். புலம் பெயர்ந்த பெயராத அனைத்து தமிழ் மக்களிடையேயும் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தை யார் சரி செய்வது.. ?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரியாதவரை தமிழ் சமுதாயம் சூறையாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கப் போகிறது என்பதே யதார்த்தம். மற்றுமொரு விடயம் பற்றி தெளிவுபெற விரும்புகிறேன்.

அறிஞரால் மீட்கப்பட்ட அழகிய டென்மார்க் என்ற அத்தியாயம் பின்வருமாறு கூறுகிறது.

, இனிமேல் ஐரோப்பாவில் எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் அதை ஆயுதம் மூலம் தீர்ப்பதில்லை என்று புது விதி எழுதினார்கள்… ,

, போரில் வென்றவர்களும் தோற்றவர்களும் ஒருவரை நோக்கி மற்றவர் ஆயுதத்தை தூக்குவதில்லை.. ,என்ற ஒப்பந்தம் எழுதப்பட்டது.

இதுபோன்ற ஒரு கோட்பாட்டைக் கடைப்பிடித்து, சிறீலங்காவில் எந்தவொரு பிரச்சனைக்கும் துப்பாக்கி வேட்டு தீர்க்கப்படக் கூடாது என்று ஒப்பந்தத்தை தமிழ் தலைவர்களும், சிங்கள தலைவர்களும் எழுதினால் முதல் அச்சம் தீரும்…, என்றதன் பின் வரும் பேராசிரியர் சபா. இராஜேந்திரனுடைய கருத்து நடை முறைச்சாத்தியமா..? ஒப்பந்தங்களை கிழத்தெறியும் சிறீலங்காவுடன் இனியும் ஓர் ஒப்பந்தமா.. ? இது எந்தக் காலத்திலும் நடக்கக்கூடிய ஒன்றா.. ?

தமிழருடைய தாயக நிலப்பரப்பு சூறையாடப்பட்டு, இன அடையாளங்கள் அழிக்கப்பட்டு, சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்ற இன்றைய சூழலில்..

பேராசிரியர் கூறுவது போல வெளிநாட்டில் உள்ள இளைஞர் தாயகத்தை மேம்படுத்தும் நோக்குடன் பாதுகாப்பாக..! அங்கு போய்வரக்கூடிய சூழல் எவ்வாறு ஏற்பட முடியும் ? , தாயகம் , என்பதே ஒரு கேள்விக்குறியாகி நிற்கும் நிலையில் அவருடைய இந்தக் கருத்து யதார்த்தத்தில் இருந்து வெகு தூரம் விலகிப் போயிருப்பதாகவே உணர முடிகிறது.

( பேராசிரியருடைய கருத்தை விமரிசிப்பது எனது நோக்கமல்ல .. என் மனதில் பட்டதை எழுதுகிறேன்.. தவறு எனில் மன்னிக்க வேண்டுகிறேன்.. )

இனி…

, குற்றமற்ற ஒரேயொரு இனமாய் நிற்கும் ஈழத்தமிழன் குரல் இறைவன் திருச்சபையில் கேட்கும்.. ! ,

, பிரபாகரன் முன்னைவிட வேகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.. ,

, நேதாஜி திரும்பவில்லை பிரபாகரன் திரும்புவார்.. ! ,

, அன்பான தமிழீழ மக்களே .. ! , என்ற அவருடைய குரல் நம் காதுகளில் மறுபடியும் ஒலிக்கும்..

, இறப்பே இல்லா இளவரசன் , என்ற புதிய கொன்ஸ்பிரேசன் தியரி..

தமிழைப் புதிதாய்ப் பிறக்க வைக்கும் வலிமை மேற்படி வாசகங்களுக்கு நிச்சயம் உண்டு.

புலம் பெயர் தமிழருக்கெல்லாம் இந்தப் புத்தகம் பெருமளவில் போய்ச் சேர வேண்டும்.

தமிழினம் புத்துயிர் பெற வேண்டும்.

மேலும்,

என்னைப்பற்றி சில வரிகள்..

பிறந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்து தமிழ் நாட்டில் வசிப்பவள்..

பிரபாகரன் என்கின்ற தனிப் பெருந் தலைவனை மகனாக நேசிக்கின்ற ஒரு தமிழிச்சி..

அந்தப் பெருமகனை நேரில் காணவும், உரையாடவுமான அரிய வாய்ப்பினை ஒரு சில தடவைகள் பெற்றவள்.

தமிழீழக் கனவை நெஞ்சில் சுமந்து, மண்ணில் புதையுண்டு போன ஒரு மாவீராங்கனையை வயிற்றில் சுமந்தவள்..

உங்களைப் போன்ற சமூகப் பிரக்ஞையுள்ள எழுத்தாளர்கள் படைக்கின்ற போர்க்கால இலக்கியங்கள், அறிவின்மை என்ற பாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கிற ஒரு சமூகத்தை பகுத்தறிவு சமவெளிக்குள் கொண்டுவரக்கூடிய வலிமை உள்ளவை.

இதுபோன்ற பயனுள்ள விடயங்கள் இன்னும் நிறைய எழுதுங்கள். விடுதலை என்ற உன்னதம் நோக்கி ஒவ்வொரு புலம் பெயர் தமிழனும் அடியெடுத்து வைக்க நேரானதும், சீரானதுமான பாதைக்கு உங்களுடைய எழுத்து அழைத்து செல்லட்டும். எனது வாழ்த்துக்களும் நல்லாசிகளும்.

அன்புடன்,

சாவித்திரி

சென்னை – தமிழ்நாடு.

http://www.alaikal.com/news/?p=56774

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி அகூதா.

வீராங்கனையைப் பெற்ற வீரஅன்னையே இதயங்களை ஊடறுத்துச் செல்கிறது. உங்கள் வைரமொழிகள். உங்களது ஏக்கமும் எங்களது ஏக்கமும் ஒரு புள்ளியில் சந்திக்கிறது. காலம் ஒருநாள் எமக்கானதாகும் என்ற நம்பிக்கையோடு நகர்வோம் தாயே.

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுகளம் , சமமாக இல்லாத இடத்தில் நம் ஈழத்தமிழ் வீரர்கள் மோதினார்கள்… அவர்கள் அழிக்கப்படவில்லை.. இப்போரில் அவர்களுக்கே வெற்றி

என்றைக்குமே எங்களுக்கு ஆடுகளம் சமமாக இருந்ததில்லை! இருக்கப் போவதும் இல்லை, இந்தியா இருக்கும் வரைக்கும்!

ஆடும் விதத்தை மாற்றுவது தான் எமக்கு விடப்பட்டுள்ள ஒரே வழியாகும்!

அதற்கான நகர்வுகள் தான் எங்கள் தற்போதைய தேவையாகும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.