Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிராபத்து: யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் குடும்பஸ்தர் தஞ்சம்

Featured Replies

செவ்வாய்க்கிழமை, ஜனவரி 11, 2011

யாழ். குடாநாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உயிர் அச்சுறுத்தல் எனக் கூறி மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சரணடைந்துள்ளார்.குடாநாட்டில் மீண்டும் படுகொலைகள் இடம்பெற்று வருவதன் காரணமாகவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பிரஸ்தாபகுடும்பஸ்தர் நேற்று சரணடைந்துள்ளார்.இவரை மனித உரிமைகள் ஆனைக் குழுவின் யாழ். அலுவலக அதிகாரிகள் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.இதேவேளை, யாழ்.மனித உரிமை ஆனைக்குழு அலுவலக இணைப்பதிகாரி த.கனகராஜ் விடுமுறையில் சென்றுள்ளதால் இது சம்பந்தமாக மேலதிக தகவல்கள் எதனையும் தரமுடியாதுள்ளதாக அங்கு கடமையில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Add new comment

uthayan

புலம்பெயர் தமிழர்கள், அமைப்புக்கள் தமிழ்மக்களிற்கு எதிராக தொடரும் குற்றங்களை தடுத்து நிறுத்த தாமும், மற்றும் சர்வதேச அமைப்புக்கள் / அரசுகள் ஊடாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஐரோப்பாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் உயிரச்சுறுத்தல் எனக் கூறி, யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் சரணடைந்தார்.

நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கடந்த சில வாரங்களாக யாழ் குடாநாட்டில் பல படுகொலைகள் இடம்பெற்றுள்ள நிலையில், இடம்பெயர்ந்து ஐரோப்பிய நாடு ஒன்றில் வசித்த பின்னர் யாழ்பாணம் திரும்பிய ஸ்ரீரங்கன் என்பவர் நேற்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் சரணடைந்தார்.

ஆணைக்குழு அதிகாரிகள் அவரை யாழ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். இன்று அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

2006 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தில் படுகொலைகள் பல இடம்பெற்ற வேளையில், உயிரச்சுறுத்தல் காரணமாக நூற்றுக்கணக்கானோர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்திலும், நீதிமன்றங்களிலும் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலமாக அத்தகைய முறையில் யாரும் சரணடையவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.cmr.fm/thamilfm/Newclients/NewsDetail.aspx?ID=5919

புலம்பெயர் தமிழர்கள், அமைப்புக்கள் தமிழ்மக்களிற்கு எதிராக தொடரும் குற்றங்களை தடுத்து நிறுத்த தாமும், மற்றும் சர்வதேச அமைப்புக்கள் / அரசுகள் ஊடாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ம்ம்ம்ம்......... இங்கு நாம், நாம் கொடுத்த பணங்கள் எல்லாம் உருத்திரகுமாரை உடைக்கவல்லவா திரிகிறோம்?????? எங்கே இவைகளை கவணத்தில் எடுக்கிறோம்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.