Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது தாயகத்தின் பொருளாதார நிலமை

Featured Replies

சிறிய முதல்: நிறைவான வருமானம்

நாம் ஊரில் வாழ்ந்தகாலங்களை மீட்டால் எல்லா வீட்டிலும் கோழி, ஆடு, மாடு வளர்த்துள்ளோம். ஆனால் நாம் எங்கள் வீட்டில் எப்ப கோழிக்கறி ஆக்குவார்கள். வீட்டில் யாருக்காவது சுகயீனம் என்றால் இல்லை என்றால் கோழிக்கு சுகயீனம் என்றால் மட்டுமே. கோழிக்கு சுகயீனம் என்றால் மற்றக் கோழியையும் பிடித்து சமைப்போமா இல்லை அதுகும் எப்ப தூங்கி விழுமோ அப்பதான் கோழிக்கறி. வேள்வி, தீபாவளி தான் ஆட்டுக்கறி. இப்படி கால்நடைகள் வளர்ப்பில் அனுபவம் நிறையவே உண்டு.

கால் நடை வளர்ப்பு பற்றி சகலரும் அறிந்தாலும் அதன் பலாபலன்கள் நாம் பெரிதாய் அனுபவிக்கவில்லை. கோழி.ஆடு,மாடு வளர்ப்பதில் இன்று நிறைவான இலாபம் பெறமுடியும். பத்து கோழியுடன் ஆரம்பித்தால் அதில் இருந்து ஒரு குறுகிய காலத்தில் கோழிப்பண்ணை முதலாளியாக முடியும். இதே போல் சகல கால்நடை வளர்ப்பு முறைகளையும் தொழிலாக்க முடியும்.

இந்த தொழிலை சுகாதாரமாகவும். சுத்தமான இடத்தில் ஒழுங்காக செய்தால் நாமும் முன்னேறலாம்.

இன்று நமது ஊரில் இருந்து பல இளைஞர்கள் வெளிநாடு செல்வதே நோக்கம் கொண்டவராய் இருக்கிறார்கள்.இது தப்பல்ல. ஆனால் இன்று பல இலட்சம் கட்டியும் வருபவர் எத்தனை இளைஞர்கள் அதிலும் எத்தனை இளைஞர்கள் அகதி அந்தஸ்த்தை பெறுகிறார்கள். எனவே தான் ஊர் நோக்கிய தொழில்களை உருவாக்க வேண்டும். அவரவர்கள் தங்கள் தொழில்தராதங்கள் கண்டறியப்பட்டு முதலீடு செய்தால் பலர் இதனால் முன்னேறுவதோடு நமது கிராமத்தையும் நிறைவு கண்ட கிராமமாக உருவாக்கலாம்.

என்ன நீங்க மட்டும் வெளிநாட்டில இருக்கலாம் ஏன் பாருங்கோ நாங்கள் வரப்படதோ என்று முனகுவது எனக்கு கேட்க்குது. இன்றைய அரசியல் நிலையில் வெளிநாடுகளில் அகதி நிலை மறுக்கப்படுகின்றது. வெளிநாட்டின் பொருளாதாரங்கள் வீழ்ச்சி கண்டுள்ளதால் பலர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். புரிந்தவர்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் புரியவில்லை என்பவர்கள் புரிய முயற்ச்சிக்கவும்.

விவசாயம் அதாவது ஊரவரின் காணிகள் பயன்படுத்தாமல் இருந்தால் அதை வருமானத்தின் ஒரு பகுதி காணி உரிமையாளருக்கு என்ற அடிப்படையில் எடுக்கலாம். இந்த காணிகளில் சொட்டுநீர் திட்டமிடல் மூலம் மரக்கறி பயிரிடல் முறைகள். ஊடுருவல் பயிரிடல் முறைகள். அதாவது ஒரு பெரும் பயிர்களுக்கு இடையில் அல்லது வாழை, தென்னை, பலா ,மா போன்றவற்றின் கீழ் சில பயிர்கள் உண்டாக்க முடியும்.

கணனிகள் மூன்று அல்லது நாலு வாங்கிப்போட்டு கணனி வகுப்புக்கள் மூலம் சம்பாதிக்க முடியும்.

சிறு ஆடைத்தயாரிப்பு நிலையம்.

பன்பொருள் கைத்தொழில் பேட்டைகள்.

இந்த திட்டங்களின் ஆர்வம் உள்ளவர்களுக்கு புலம்பெயர் மக்கள் நிதியம் உருவாக்கப்பட்டு அந்த நிதிய மூலம் கடன் அடிப்படையில் பல உதவிகள் செய்ய முடியும்.

- நன்றி பாலகுமார் தங்கராஜா

Edited by akootha

  • 3 weeks later...
  • Replies 55
  • Views 13.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வெளிநாட்டு உழைப்பில் வாழவே இன்றைய பொருளாதார நிலமை இடமளிக்கின்றது

யாழ்ப்பாண மக்கள் விரும்பியோ விரும்பாமலோ வெளிநாட்டு உழைப்பில் வாழவே இன்றைய பொருளாதார நிலமை இடமளிக்கின்றது.

1977இலிருந்து சுயபொருளாதார கட்டமைப்பிலிருந்து விலகி திறந்த பொருளாதாரத்திற்குள் நுழைந்த‍தன் விளைவு இது.

யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் ஆசிரியருக்கு ஒருமாத‍த்திற்கு ரூபா 25000க்குள்ளாகவே சம்பளம் கிடைக்ககூடியதாக இருக்கின்றது. ஐந்து பேர் கொண்ட குடும்பமொன்றுக்கு இன்று அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தினமொன்றுக்கு 1000 ரூபா தேவை. அவ்வாறென்றால் அந்த குடும்பத்திற்கு மாதமொன்றுக்கு 30000.00 ரூபா தேவை. இந்த நிலமையில் அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்றால் தான் கட்டுப்படியாகும். இது மத்தியதர வர்க்கத்தின் நிலமை. ஆனால் அடித்தட்டு மக்களின் நிலமை. கடைச்சிப்பந்திகளுக்கு மாதம் ரூபா2000 இலிருந்து 8000 வரை மட்டுமே சம்பளம் வழங்கும் நிலமை இருப்பதாக அறிகின்றேன். இந்த நிலையில் தான் யாழ்ப்பாண மக்கள் புலம்பெயர்ந்த மக்களின் உதவியை கோரவேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கின்றார்கள்.

இந்த கடைச்சிப்பந்திகள் தாங்களும் வெளிநாட்டுக்கு செல்லவிரும்புகின்றார்கள் என்பதே யதார்த்தமான உண்மை நிலையாகும். பாதுகாப்பு ஊழியர்களுக்கு ரூபா8000 இலிருந்து 15000 வரை சம்பளம் கிடைக்க கூடியதாக இருக்கின்றது. ஆனால், அந்த வேலை இப்போது ஒப்பந்த அடிப்படையில் கம்பனி ஊடாகவே வழங்கப்படுகின்றது. மேசன் தொழிலாளிகளுக்கு மாதமொன்றுக்கு 8000 ரூபாவிலிருந்து 16000 ரூபாவுக்குளே வருமானம் வரக்கூடியதாக இருக்கும். இவர்களும் டோகாவுக்கோ அல்லது அதுபோன்ற சிறு நாடுகளுக்கு போகத்தான் விரும்புகின்றார்கள். இந்த சூழலில் தான் நாம் எமது கிராமத்தின் புலம் பெயர்ந்த கிராமத்தவரின் பங்களிப்பில் விருப்புள்ளவர்களாக இருக்கின்றோம்.

- அழ.பகிதரன் முகாமையாளர்.சங்கானை இலங்கை வங்கி.

Edited by akootha

  • தொடங்கியவர்

சங்கிலியன் காலத்திற்கு பின்பு இன்றுவரை சாதகமான பொருளாதார கொள்கை இல்லை - பேராசிரியர் வி.பி.சிவநாதன்

யாழ்ப்பாணத்தில் சங்கிலியன் காலத்திற்கு பின்பு சாதகமான பொருளாதாரக் கொள்கையை பின்வந்த அரசுகள் முன்வைக்கவில்லை என வராலாற்று பொருளியல் பேராசிரியர்.வி.நித்தியானந்தத்தின் ஆய்வின் முடிவுடன் தானும் உடன்படுவதாக யாழ் பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் வி.பி.சிவநாதன் கூறியுள்ளார்.

யாழ்ப்பாண சிந்தனைக் கூடத்தின் ஏற்பட்டில் யாழ் மாவட்டத்ததை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம்? என்பது தொடர்பான செயலமர்வு யாழ்.தியாகிகள் அறக்கொடை நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. இங்கு 'நிதி மற்றும் அபிவிருத்தி கொள்கைகள்' எனும் தலைப்பில் உரையாற்றும் போதே வி.பி.சிவநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு பேராசிரியர் மேலும் தெரிவிக்கையில்:

வடகிழக்கு தமிழ் மக்கள் அரசியல் உரிமையை கேட்டதால் அரசு ஒதுக்கியதா?

அல்லது

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாராளுமண்றத்தில் குறைவாக உள்ளதால் ஒதுக்கப்பட்டார்களா?

அல்லது

ஏற்கனவே உள்ள தமிழர் பிரதிநிதிகள் கூட பொறுப்பு வாய்ந்த அமைச்சு பதவியை பெறாமையால் ஒதுக்கப்பட்டார்களா?

என்ற கேள்விகள் எம்முன்னே உள்ளன.

அந்நியராட்சியின் போதோ அல்லது பேரினவாத அரசின் ஆட்சிகளின் போதோ வடகிழக்கின் வளங்களை நல்ல முறையில் பயன்படுத்தக் கூடியதாக கொள்கைகள் வகுக்கப்படவில்லை. மாறாக இப்பிரதேச வளங்களை சுரண்டக் கூடியதாகவும் தமிழர்கள் தங்கிவாழ்வோராக மாற்றுவதற்கும் பொருத்தமான பொருளாதார கொள்கைகளே முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.

இனியாவது வடகிழக்கின் பொருளாதாரக் கொள்கை தொடர்பாக விழிப்படைய வேண்டும். குறிப்பாக தமிழ் சமூகம் நிலத்தினை சொந்தமாக வைத்திருப்பதற்குப் பொருத்தமான நில சீர்திருத்தம் அவசியம். எமது பிரதேச உற்பத்திகள் தொடர்பான விலை சமிக்ஞைகளை முறைப்படுத்தி வழங்க யாராவது முன்வரவேண்டும். பிரதேச இளம் பருவ கைத்தொழில்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும்.

சந்தைப் பொருளாதார கொள்கையையே அரசு பின்பற்றுகிறது. இங்கு போட்டிச் சூழல் பொருளாதாரத்தை வளர்க்கும்தான். ஆனால் எல்லா விதத்திலும் நலிவுற்றுப் போய்விட்ட தமிழ் சமூகம் போட்டி போட்டு முன்னேறுவது எப்படி? இதனால் பொருளாதாரத்தாலும் தமிழர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள் என பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

இச்செயலமர்விற்கு யாழ்மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் அனுசரணை வழங்கியிருந்தது. இந்நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற உத்தியோகஸ்தர்கள், அபிவிருத்தி ஆர்வலர்கள் என பலர் வருகை தந்திருந்தனர்.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={BEF572EC-730D-43F4-9FEE-65933975A2EB}

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஒரு நாட்டின் அபிவிருத்தியில் முதுகெலும்பாக இருப்பது வணிகத்துறை என்பதை எவரும் மறுக்க முடியாது

வணிகத்துறை என்பது ஒரு நாட்டின் அபிவிருத்தியின் முதுகெலும்பு என்பதையாவரும் அறிவார்கள். அதேபோல் ஒரு கிராமத்தின் அல்லது நகரத்தின் பொருளாதார வளர்ச்சி அல்லது அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தின் வளர்ச்சி வீதம் என்பது அந்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார நிலையை உலகுக்கு எடுத்துக் காட்டுவதாகவுள்ளது.

இவ்வாறு சாவகச்சேரி கைத்தொழில் வணிக மன்றத்தின் தலைவர் லயன் வ. ஸ்ரீ பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் நடைபெற்ற மன்றின் 37ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் தலைமையுரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்: இன்றைய நவீன உலகில் பனிப்போர் மறைந்து ஆயுத வலிமையைக் காட்டும் போர் குறைவடைந்து பொருளாதாரத்தை மையமாக வைத்து அதனை நிலை நாட்டுவதற்காகவே பொருளாதார யுத்தம் ஒன்று மறைமுகமாக உலக நாடுகளிற்கிடையே நடைபெற்று வருகின்றது.

எனவே வணிக நடவடிக்கை என்பது ஒவ்வொரு கட்டங்களிலும் செல்வாக்குச் செலுத்தும் ஓர் காரணியாகவே விளங்குகின்றது. அந்த வகையில் தென்மராட்சிப் பிரதேசத்தில் முக்கியமாக சாவகச்சேரி நகரும் அதன் வணிக நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. இப் பிரதேசத்தின் எழுச்சி அல்லது வளர்ச்சி என்பது இம் மையத்திலிருந்தே எப்போதும் ஆரம்பிக்கும். ஆகவே வணிகர்களின் செயற்பாடும் வணிகர்களை ஒருங்கிணைத்துத் தலைமை தாங்கும் சாவ கச்சேரி கைத்தொழில் வணிக மன்றமும் முக்கிய அமைப்பாக எப்போதும் இப் பிரதேசத்தில் திகழ்கின்றது.

கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் வணிகர்மன்றம் இப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காகவும் மீள் குடியேற்றத்திற்கும் எவ்வளவு பாடுபட்டுள்ளது என்பதை அறியலாம். அதே போன்று சென்ற வருடத்தில் வணிகம் மட்டுமல்ல சிறந்த கல்விச் சேவை யுடன் சமூக நலசேவைகளையும் எமது மன்று முன்னெடுத்துச் செல்வதை யாவரும் அறிவர். அதே போல் வரும் காலங்களிலும் இத் திட்டங்கள் மென்மேலும் பெருகிட வேண்டும் என நான் ஆசைப்படுகின்றேன்.

தேவையுடையோர்க்கு சேவை செய்வதினூடாக நாம் ஆத்மதிருப்தியைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதை மன்றின் சமூக நலத்திட்டங்களிற்குப் பங்களித்த பங்காளிகள் நன்கு உணர்ந்திருப்பார்கள். "எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' என முற்காலத்தில் குருவின் சேவையை மெச்சியிருந்தாலும் தற்காலத்தில் எழுத்தறிவித்து பொருள் உதவியோனும் இறைவன் ஆவான் என நான் சொல்ல விரும்புகிறேன்.

அந்த வகையில் ஏழைச் சிறார்களுக்கு கல்விக்காக ஊக்கமளிக்கின்ற வணிகப் பெருமக்கள் அப்பயனாளிகளின் குடும்பங்களின் ஆசீர்வாதத்தால் நல்ல வாழ்க்கையைப் பெறுவார்கள் என்பது திண்ணம். 2001/ 2012 ஓர் அபிவிருத்தியின் ஆண்டாக இருக்கும்

என பொதுவாகச் சொல்லப்படுகின்றது. அந்த வகையில் எமது நகரமும் நன்கு திட்டமிட்ட வகையில் வணிகர்களின் நலனைப் பாதிக்காதவாறு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட எல்லோரிடமும் வேண்டுகின்றேன். தென்மராட்சி பிரதேசத்தின் நிர்வாக மையங்களான பிரதேச செயலகத்துடனும் நகராட்சி மன்றத்துடனும் எப்போதும் எமது வணிகர் மன்றம் ஒத்திசைந்தே செயலாற்றும். செயலாற்றவும் விரும்புகின்றது என்றார்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=7825:2011-02-20-02-57-00&catid=74:jaffna&Itemid=102

சிறிய முதல்: நிறைவான வருமானம்

நாம் ஊரில் வாழ்ந்தகாலங்களை மீட்டால் எல்லா வீட்டிலும் கோழி, ஆடு, மாடு வளர்த்துள்ளோம். ஆனால் நாம் எங்கள் வீட்டில் எப்ப கோழிக்கறி ஆக்குவார்கள். வீட்டில் யாருக்காவது சுகயீனம் என்றால் இல்லை என்றால் கோழிக்கு சுகயீனம் என்றால் மட்டுமே. கோழிக்கு சுகயீனம் என்றால் மற்றக் கோழியையும் பிடித்து சமைப்போமா இல்லை அதுகும் எப்ப தூங்கி விழுமோ அப்பதான் கோழிக்கறி. வேள்வி, தீபாவளி தான் ஆட்டுக்கறி. இப்படி கால்நடைகள் வளர்ப்பில் அனுபவம் நிறையவே உண்டு.

கால் நடை வளர்ப்பு பற்றி சகலரும் அறிந்தாலும் அதன் பலாபலன்கள் நாம் பெரிதாய் அனுபவிக்கவில்லை. கோழி.ஆடு,மாடு வளர்ப்பதில் இன்று நிறைவான இலாபம் பெறமுடியும். பத்து கோழியுடன் ஆரம்பித்தால் அதில் இருந்து ஒரு குறுகிய காலத்தில் கோழிப்பண்ணை முதலாளியாக முடியும். இதே போல் சகல கால்நடை வளர்ப்பு முறைகளையும் தொழிலாக்க முடியும்.

இந்த தொழிலை சுகாதாரமாகவும். சுத்தமான இடத்தில் ஒழுங்காக செய்தால் நாமும் முன்னேறலாம்.

இன்று நமது ஊரில் இருந்து பல இளைஞர்கள் வெளிநாடு செல்வதே நோக்கம் கொண்டவராய் இருக்கிறார்கள்.இது தப்பல்ல. ஆனால் இன்று பல இலட்சம் கட்டியும் வருபவர் எத்தனை இளைஞர்கள் அதிலும் எத்தனை இளைஞர்கள் அகதி அந்தஸ்த்தை பெறுகிறார்கள். எனவே தான் ஊர் நோக்கிய தொழில்களை உருவாக்க வேண்டும். அவரவர்கள் தங்கள் தொழில்தராதங்கள் கண்டறியப்பட்டு முதலீடு செய்தால் பலர் இதனால் முன்னேறுவதோடு நமது கிராமத்தையும் நிறைவு கண்ட கிராமமாக உருவாக்கலாம்.

என்ன நீங்க மட்டும் வெளிநாட்டில இருக்கலாம் ஏன் பாருங்கோ நாங்கள் வரப்படதோ என்று முனகுவது எனக்கு கேட்க்குது. இன்றைய அரசியல் நிலையில் வெளிநாடுகளில் அகதி நிலை மறுக்கப்படுகின்றது. வெளிநாட்டின் பொருளாதாரங்கள் வீழ்ச்சி கண்டுள்ளதால் பலர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். புரிந்தவர்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் புரியவில்லை என்பவர்கள் புரிய முயற்ச்சிக்கவும்.

விவசாயம் அதாவது ஊரவரின் காணிகள் பயன்படுத்தாமல் இருந்தால் அதை வருமானத்தின் ஒரு பகுதி காணி உரிமையாளருக்கு என்ற அடிப்படையில் எடுக்கலாம். இந்த காணிகளில் சொட்டுநீர் திட்டமிடல் மூலம் மரக்கறி பயிரிடல் முறைகள். ஊடுருவல் பயிரிடல் முறைகள். அதாவது ஒரு பெரும் பயிர்களுக்கு இடையில் அல்லது வாழை, தென்னை, பலா ,மா போன்றவற்றின் கீழ் சில பயிர்கள் உண்டாக்க முடியும்.

கணனிகள் மூன்று அல்லது நாலு வாங்கிப்போட்டு கணனி வகுப்புக்கள் மூலம் சம்பாதிக்க முடியும்.

சிறு ஆடைத்தயாரிப்பு நிலையம்.

பன்பொருள் கைத்தொழில் பேட்டைகள்.

இந்த திட்டங்களின் ஆர்வம் உள்ளவர்களுக்கு புலம்பெயர் மக்கள் நிதியம் உருவாக்கப்பட்டு அந்த நிதிய மூலம் கடன் அடிப்படையில் பல உதவிகள் செய்ய முடியும்.

- நன்றி பாலகுமார் தங்கராஜா

நல்லதொரு பதிவு, ஆனால் அங்கு உள்ளவர்களுக்குச் சொல்லிப் புரியாது... :rolleyes: இணைத்தமைக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புகளுக்கு நன்றி akootha .

  • தொடங்கியவர்

தமிழ்ப் பிராந்திய அபிவிருத்திக்கு புத்திஜீவிகளின் அமைப்புத் தேவை

உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. அந்த மாற்றத்திற்கேற்ப நாமும் மாறாவிட்டால் உலக மாற்றம் எங்களைத் தள்ளி விழுத்தி ஏறி மிதித் துச் சென்றுவிடும்.இங்கு உலக மாற்றம் என்பது பண்பாட்டு மாற் றங்களையோ அல்லது கலாசார மாற்றங்க ளையோ குறிக்கவில்லை. மாறாக கல்வி, பொருளாதார அபிவிருத்தி பற் றியே இங்கு பிரஸ்தாபிக்கப்படுகிறது.

நீண்டகால யுத்தம் எங்களை நாசம் செய்ததென்பதற்கு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இருந்தும் யுத்தத்தையே சதா உச்சரித்து எங்கள் எதிர்காலத்தைத் தொலைத்துவிடுவதென்பது பேராபத்தாகிவிடும். எனவே எங்களின் எதிர்காலம் கருதிய அபிவிருத்தித் திட்டங்கள், உற்பத்தி முயற்சிகள், வேலைவாய்ப்புகளை முன்னெடுத்தல் தொடர்பில் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்தச் சிந்தனையில் தாமதமோ, தடையோ ஏற்படுமாயின் தமிழினத்தின் எதிர்காலம் கடும் இருள் சூழ்ந்ததாக அமையும் என்பதில் ஐயமில்லை.

எனவே தமிழ்ப் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்தி பற்றிச் சிந்திக்கவும் பொருத்தமான திட்டங்களைத் தீட்டவும் முன்வர வேண்டும். தமிழ்ப் புத்திஜீவிகளின் ஒன்றிணைவு கல்வி, மருத்துவம், பொருளாதாரம், விவசாயம், கைத்தொழில், கடற்றொழில் உற்பத்தி, நீர் விநியோகம், வேலைவாய்ப்பு, நகர அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி என்றவாறு தனித்தனிக் குழுக்களாக இயங்க முடியும்.இவ்வாறு இயங்கும் குழுக்கள் தத்தம் துறை சார்ந்த விடயங்களில் ஆலோசனை, அறிவுரை வழங்குவதுடன் அது தொடர்பான திட்டங்களை அமுல்படுத்துவதில் நேர்த்தியாகவும் செயற்படும் போது அதனால் எமது மக்கள் பெரும் நன்மை அடைய வாய்ப்புண்டாகும்.

அதிகாரத்தில், அரச பதவிகளில் இருப்பவர்களே அறிவாளிகள் என்ற நினைப்பில் அமுல்படுத்தப்படும் திட்டங்கள் எந்தப் பயனையும் தர மாட்டா என்பதை திறந்த மனத்தோடு அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.எனவே அரச அதிகாரங்களில் - பதவிகளில் இருப்பவர்களும், புத்திஜீவிகளும் இணைந்து கொள்ளும்பொழுது தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளை வெற்றிகரமாக முன்னெ டுத்துச் செல்லவும் - அந்தத் திட்டங்கள் எதிர்கால அபிவிருத்தி முன்னெடுப்புகளுக்கு உதவுவதாகவும் அமையும்.

எனவே தமிழ்ப் புத்திஜீவிகள் அடங்கிய துறைசார் குழுக்களை உடனடியாக அமைத்து அந்தக் குழுக்கள் தமிழ்ப் பிராந்தியங்களின் அபிவிருத் தியை மட்டும் மையமாகக் கொண்டு சுயாதீன மாக இயங்கவும் வழிவகுக்க வேண்டும். இது விடயத்தில் தமிழ்ப் நாடாளுமன்றப் பிரதிநிதிகள், பல்கலைக்கழகங்கள், அரச அதிபர்கள், உள்ளூராட்சி சபைகள், பொறுப்பான திணைக்களங்கள் அனைத்தும் ஒன்றுகூடி இதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கையில் இறங்க வேண்டும். இல்லையேல் புழுதிப் புயலில் சிக்கித்தவிக் கும் யாழ்ப்பாண நகரம் போலவே எல்லாம் இருக்கும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=16673

  • தொடங்கியவர்

25 மாதங்களில் உச்சநிலையைத் தொட்டுள்ள சிறிலங்காவின் பணவீக்கம்

Sri Lanka’s Inflation Accelerates to Highest Level in 25 Months

http://www.bloomberg.com/news/2011-02-28/sri-lanka-s-inflation-accelerates-to-highest-level-in-25-months.html

கடந்த 25 மாதங்களில் என்றுமில்லாதளவுக்குச் சிறிலங்காவின் பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் மோசமாக அதிகரித்திருக்கிறது.

இது மத்திய வங்கியின் வட்டி வீதத்தைக் குறைப்பது என்ற எண்ணத்தைக் குழப்புவதாக அமையக் கூடும் என்று ‘புளூம்பேக்‘ இணையத்தளத்தில் அனுச ஒன்டாட்ஜி எழுதியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்திக்குறிப்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

சிறிலங்காவின் புள்ளிவிபரத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் கொழும்பில் நுகர்வோர் விலைச்சுட்டி கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் 6.8 சதவீதமாக இருந்தது.

ஆனால் தற்போது அது 7.8 சதவீதமாக அதிகரித்து விட்டது.

‘புளூம்பேக் நியூஸ்‘ எட்டுப் பொருளியல் வல்லுநர்களின் துணையுடன் மேற்கொண்ட மதிப்பீட்டை அடுத்து பெப்ரவரி மாதம் நுகர்வோர் விலைச்சுட்டி 7.4 வீதத்தினால் அதிகரித்திருக்கும் எனக் கூறியிருந்தது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் ஏழு மாதங்களில் மூன்றாவது முறையாக கடந்த ஜனவரியில் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் கடன் வாங்குவதற்கான செலவைக் குறைத்திருந்தார்.

இந்த நடவடிக்கையானது இந்தியா தொடக்கம் சீனா வரையிலான சிறிலங்காவின் அயல் நாடுகள் தத்தமது நாடுகளில் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு முற்றிலும் மாறானதாகும்.

சிறிலங்காவில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்த போதும் தனது அயல் நாடுகளை விட விலைவாசி உயர்வு ‘குறைவாகத் தான்’ உள்ளது என கூறியிருக்கும் கப்ரால் தனது அறிக்கையில் அதற்கான புள்ளிவிபரங்கள் எதனையும் மாற்றவில்லை.

“சிறிலங்காவில் பணவீக்கம் அவ்வளவு மோசமானதாக இல்லை என்பதால் கொழும்பு கவலைப்பட வேண்டிய தேவை எதுவுமில்லை” என என்.டீ.பி நிறுவனத்தின் ஆய்வுப் பகுதிக்கான பணிப்பாளராக உள்ள வருண சிங்கப்புலி கூறுகிறார்.

“எது எவ்வாறிருப்பினும் நிலைமையை மோசமடையாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான, வரியின் அளவைக் குறைத்தல் உள்ளிட்ட ஏனைய வழி வகைகள் தொடர்பாகவும் கொழும்பு ஆராய வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

மாதாந்தம் 120 அலகுகளுக்கு மேல் குறிப்பிட்ட ஒரு வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப்பட்டால், அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு அலகிற்குமான மின் கட்டணத்தை கடந்த ஜனவரி முதல் 8 சதவீதத்தினால் அரசாங்கம் அதிகரித்திருந்தது. அதேநேரம் அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான மின்கட்டணத்தை 25 சதவீதத்தினால் குறைந்திருந்தது.

கடந்த ஜனவரி தொடக்கம் பெப்ரவரி மாதத்தின் முதல் பகுதி வரை நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தொடர்மழை பொழிந்ததன் விளைவாக நெற்பயிர்கள், தானியங்கள் மற்றும் காய்கறிப் பயிர்கள் என அனைத்துமே அழிந்து விட்டன.

இந்தப் பெருவெள்ளத்தின் விளைவாக 61பேர் மரணமடைந்ததோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.

சிறிலங்காவில் காய்கறிகள் மற்றும் தானியங்களுக்கான தட்டுப்பாட்டை சிறிலங்கா எதிர்கொள்ளும் என விவசாய அமைச்சைச் சேர்ந்த மூத்த அதிகாரியான கே.ஈ.கருணாதிலக கூறுகிறார்.

நுகர்வுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பாக ‘கூர்ந்து’ அவதானிக்க வேண்டும் என கடந்த மாதம் மத்திய வங்கி ஆளுனர் கப்ரால் விடுத்திருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்காவில் விலைவாசி அதிகரிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு முனைப்பாக பால்மாவுக்கான வரியை 29 ரூபாவினாலும் ஒரு லீற்றர் பெற்றோலுக்கான வரியை ஐந்து ரூபாவினாலும் குறைந்திருந்தது.

வெள்ளப் பெருக்கினால் அரிசியின் விலை தற்காலிகமாக அதிகரித்தாலும் சிறிலங்காவின் பொருளாதார நிலைமைகள் ஒப்பீட்டு ரீதியில் சிறப்பாகவே உள்ளது என சிறிலங்காவுக்குச் சென்றிருந்த அனைத்துலக நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் பிறயன் எயிட்கென் கடந்த பெப்ரவரி 18ம் நாளன்று குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி வீதமானது 2011ம் ஆண்டு 8.5 வீதத்தினாலும் 2012ம் ஆண்டு 9 சதவீதத்தினாலும் அதிகரிக்கும் என கடந்த மாதம் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டிருந்தார்.

இன்றைய நிலையில் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 8 சதவீதமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.nerudal.com/nerudal.26507.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இலங்கையின் பொருளாதாரத்தில் சுனாமி ஏற்பட வாய்ப்பு

எண்ணெய் வள நாடுகளில் இடம்பெறும் அரசியல் கிளர்ச்சிகள் மற்றும் ஜப்பானில் எற்பட்ட சுனாமி என்பவற்றால் இலங்கையின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்நோக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடுமையான பாதிப்பை எதிர்நோக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதரா ரீதியாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அது பாரிய பாதிப்பாக இல்லை என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். லிபியாவின் திரிபொலி உள்ளிட்ட துறைமுகங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

"எகிப்தின் அரசியல் குழப்பங்களால் இலங்கைக்கு அதிக பாதிப்பில்லை. வட ஆபிரிக்க நாடுகளுக்கு கென்யாவே பெரும்பாலும் தேயிலையை ஏற்றுமதி செய்கிறது. ஆனாலும் நாம் ஆரம்ப பின்னடைவையே சந்தித்துள்ளோம்" என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான யேமன், ஜோர்தான், அல்ஜீரியா, ஈரான், ஓமான் போன்ற நாடுகளில் அரசாங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் தோன்றியுள்ளன. இதனால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருமானம் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜப்பானில் ஏற்பட்டுள்ள பூகம்பம் மற்றும் சுனாமி அழிவுகளாலும் இலங்கையின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு உதவி ஜப்பானில் இருந்தே கிடைக்கிறது.

2009 ஆம் ஆண்டு வரை இலங்கையின் பிரதான உதவி வழங்குனராக ஜப்பானே இருந்து வந்தது. கடந்த ஆண்டு அந்த இடத்தை சீனா பிடித்துக் கொண்டது. ஆனாலும் ஜப்பானில் ஏற்பட்டுள்ள அழிவுகள் இலங்கையின் பொருளாதாரத்தைப் பாதிக்க வாய்ப்பில்லை என்று இலங்கையின் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=30438

  • தொடங்கியவர்

குறுங்கடன் - 1

பொதுவாக வலைப்பதிவுகளில் அதிகம் பேசப்படாத ஒரு செய்தி குறுங்கடன் (microfinance).

பின்தங்கியுள்ள ஒரு நாட்டில் நவீன பொருளாதார வளர்ச்சி ஏற்பட ஆரம்பிக்கும்போது, அந்த வளர்ச்சி சீராக அனைத்து மக்களுக்கும் போய்ச் சேராது.

நிலத்தையும் கைவினைப் பொருள்களையும் மட்டுமே நம்பியிருந்த, இயந்திரமயமாதலுக்கு முந்தைய, சமுதாயத்தில் தனி ஒருவர் தன் வருமானத்தைத் தடாலடியாகப் பெருக்கச் சாத்தியங்கள் குறைவாக இருந்தது. அவர் முரட்டுத்தனமாகப் பிறரது நிலங்களைக் கையகப்படுத்தினாலோ அல்லது பல அடிமைகளைக் கொண்டு அவர்களது உழைப்பில் தன் செல்வத்தைப் பெருக்கினாலோதான் சாத்தியம். இயந்திரமயமானதும், மூலதனம்தான் முக்கியமான செல்வம் என்றானது. பொருள்களுக்கான பெரும் தேவை இருந்தது. பொருள்களும் எளிதானவை. எனவே மூலதனம் இருந்தால், அதனைக் கொண்டு ஆலை ஒன்றை ஏற்படுத்தி, அதில் பலரை வேலைக்கு வைத்து, அவர்கள் உருவாக்கும் உற்பத்தியைக் கொண்டு லாபம் ஈட்டலாம்.

ஆனால் இன்றைய நவீன பொருளாதாரம் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. வெறும் மூலதனம் மட்டும் போதாது. மூளை நிறைய வேண்டும். ஒரு தொழிலை ஆரம்பித்தால் லாபம் கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. இதை கம்யூனிஸ்டு சித்தாந்திகள் புரிந்துகொள்வதே இல்லை. சொல்லப்போனால், இன்று மூளை மட்டும் இருந்தாலே போதும். மூலதனத்தைக் கொடுக்க வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களும் தனிப்பட்ட பணக்காரர்களும் உள்ளனர். மூளை என்றால் என்ன? ஒரு நல்ல ஐடியா. இந்தக் குறிப்பிட்ட சந்தையில், இந்தவிதமான பொருளை, இந்தத் தரத்தில் உற்பத்தி செய்து, இந்த விலைக்கு விற்றால் லாபம் சம்பாதிக்கலாம் என்ற ஐடியா. மூலதனத்தைவிட இதுபோன்ற ஐடியாக்களே முக்கியமானவை என்பதை நிதியுடையோர் புரிந்துகொண்ட காரணத்தால் உருவானவையே வென்ச்சர் கேபிடல் அமைப்புகள். இந்தத் தொழில்கள் பொருள் உற்பத்தியாக இருக்கலாம், சேவை வழங்குதலாக இருக்கலாம்.

நவீன பொருளாதாரத்தில் இப்படி எண்ணற்ற நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை உருவாக்குபவர்களால் நிறைய லாபம் சம்பாதிக்க முடிகிறது; இந்த நிறுவனங்களில் வேலை செய்வோரும் நிறையச் சம்பளம் பெற முடிகிறது. ஆனால் இந்த வாய்ப்புகளை அனைவரையும் சென்றடைவதில்லை.

முதலில் வேலை வாய்ப்புகளை மட்டும் பார்ப்போம். பெரும்பாலான அதிக சம்பளம் தரக்கூடிய நவீன வேலைகளை எடுத்துச் செய்ய ஒருவர் அதி புத்திசாலியாக எல்லாம் இருக்கவேண்டியதே இல்லை. அடிப்படையான சில திறன்கள் பெற்றவராக இருந்தாலேயே போதும். நுகர்வோர் சேவையை வழங்க, நன்கு பேசத் தெரிந்தவராக இருக்கவேண்டும். ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் நன்கு உரையாடத் தெரிந்தவராக இருக்கவேண்டும். விற்பனைத் துறையில் இருந்தால் நைச்சியமாகப் பேசி, எதிராளியை நிறையப் பொருள்களையோ சேவைகளையோ வாங்குமாறு செய்யவேண்டும். நன்கு பேச்சுவார்த்தை நடத்தத் தெரிந்தவராக இருக்கவேண்டும். எதிராளி பேசுவதைச் சட்டென்று புரிந்துகொள்ளக்கூடியவராக இருக்கவேண்டும். கணினிப் பயன்பாட்டுத் திறன் அவசியம். இன்னும் பலப் பல திறன்கள் உள்ளன. இந்தத் திறன்களுக்கும் பள்ளி, கல்லூரி பாடங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

பெரும்பாலும் நகர்வாழ் மாணவர்கள், மத்தியதரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் இந்த வேலைகளைப் பெறுகிறார்கள். அவர்களது குடும்பங்கள் வேகமாக முன்னேறவும் செய்கின்றன.

இந்த வாய்ப்பு இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இவர்களுக்கு குறைந்த சம்பளத்திலேயே வேலைகள் கிடைக்கின்றன. உள்ளார்ந்த திறன்கள் எவை என்பதை அறிந்துகொள்ளாமல், தவறாக, ஆங்கிலப் படிப்பு மட்டுமே போதும் அல்லது எஞ்சினியரிங் படிப்பு மட்டுமே போதும் என்று நினைத்துக்கொண்டு நிறையப் பணம் செலவுசெய்து தரமற்ற கல்வி நிலையங்களில் சேர்ந்து, எதையும் கற்றுக்கொள்ளாமல் வேலை தேட வந்து, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

தீர்வுதான் என்ன? அடிப்படையில் நம் கல்வி முறையைப் பெரிதும் மாற்றவேண்டும். என் கணிப்பில் பாடத்திட்டம் என்பது முக்கியமே அல்ல. சிலபஸ் என்ற பெயரில் ஏகப்பட்ட விஷயங்களைப் புகுத்தி, அதைச் சரியாகச் சொல்லித்தரத் தெரியாத ஆசிரியர்கள் கையில் மாட்டிக்கொண்டு பெரும்பாலான மாணவர்கள் நாசமாகப் போகிறார்கள். கல்விமீதே அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. என்னைப் பொருத்தமட்டில், 90% மாணவர்களின் தேவை, படிக்க, புரிந்துகொள்ள, எழுத, பேசக் கற்றுத்தருவதே. ஆங்கிலமும் தாய்மொழியும் அவசியம். முடியாவிட்டால் தாய் மொழியிலாவது மேலே சொன்ன நான்கையும் நன்றாகச் செய்யத் தெரியவேண்டும். அவை தாண்டி, ஏதேனும் ஒரு துறையை அவரவர் விருப்பம் சார்ந்து படித்துக்கொள்ளலாம். கணக்கு, அறிவியல், கணினி புரோகிராமிங், வரலாறு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதற்குமுன் தமிழிலும் ஆங்கிலத்திலும் சரியான திறன் வருமாறு செய்தல் வேண்டும். இதைப்பற்றி இங்கே மேலும் எழுதுவது இந்தக் கட்டுரைத் தொடரை வேறு திசையில் இழுத்துச் செல்லும் என்பதால் இத்தோடு விட்டுவிடுகிறேன்.

***

வேலைகளுக்கு வெளியே, சுயதொழில் புரிவதில் வேறொரு பிரச்னை உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோருக்கு வங்கிக் கணக்கே கிடையாது. வங்கிகளைப் பொருத்தமட்டில் அவர்கள் அனைவரும் தீண்டத்தகாதவர்கள். வளரும் நாட்டில் எண்ணற்ற சிறுதொழில் வாய்ப்புகள் தென்படுகின்றன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஒவ்வொருவருக்கும் இரண்டு விஷயங்கள் தேவை. முதலாவது: ஓரளவுக்கான படிப்பு அல்லது சுய சிந்தனை. இரண்டாவது: கொஞ்சம் சொந்த மூலதனம், மீதம் கடன்.

நீங்கள் தெருவோரத்தில் ஒரு பெட்டிக்கடை வைக்க விரும்பலாம். அல்லது சில கோழிகளை வாங்கி முட்டை போடச் செய்து அவற்றை விற்க விரும்பலாம். இறால் வளர்க்க விரும்பலாம். தையல் தைத்துச் சம்பாதிக்க விரும்பலாம். கையேந்தி பவன் திறந்து சுடச்சுட சோறு விற்க விரும்பலாம். பரோட்டாக் கடை திறக்கலாம். சாண்ட்விச் விற்கலாம். பூ விற்கலாம். மொபைல் சிம் கார்டு விற்கும் பிசினஸ் செய்யலாம். ஒரு கார் வாங்கி, கால் டாக்ஸி நெட்வொர்க்கில் இணைந்துகொள்ளலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை மேலே சொன்ன இரண்டும். அடிப்படை வரவு செலவுக் கணக்கு தெரிந்திருக்கவேண்டும். லாபம் எது, நஷ்டம் எது என்று தெரிந்திருக்கவேண்டும். பணத்தை இழந்துவிடக்கூடாது. மற்றொரு பக்கம், மூலதனம் தேவை.

இந்த மூலதனம் எங்கிருந்து வரும்? தேவையான மூலதனம் அனைத்தையும் சொந்தமாகவே சேர்த்துவிட முடியுமா? பெரும்பாலானோருக்கு இது முடியாது. சொந்தக்காரர்களிடம் பெறமுடியுமா? அவர்களுக்கே சோற்றுக்கு வழி இல்லை. அப்போது ஓர் ஏழைக்கு வழிதான் என்ன?

அதுதான் தெருவுக்குத் தெரு வங்கிகள் உள்ளனவே?

ஆனால் இந்த வங்கிகளுக்குத் தினம் செல்வோர் யார் என்று பாருங்கள். நகரின் மக்கள் தொகையில் கீழே இருக்கும் 80% பேர் வங்கிக்குச் செல்லவே மாட்டார்கள். அவர்கள் சீட்டு கட்டிப் பணம் சேர்த்து, ஏலம் எடுப்பார்கள். பயங்கர வட்டிக்குக் கடன் வாங்கி அதில் மூழ்குவார்கள். மொத்தத்தில் அவர்களது தேவைக்கு ஏற்ப பணம் அவர்களுக்குக் கிடைக்காது. மறுபக்கம், பிசினஸ் செய்தித்தாள்களில் குறிப்பிட்ட நிறுவனம் கடன் பத்திரங்களை வெளியிட்டு 15,000 கோடி ரூபாய் கடன் பணம் திரட்டியது என்று செய்தி வரும். இங்கே இவர்களுக்கோ 15,000 ரூபாயைப் புரட்டுவது கடினம்.

இவர்கள் வளம் பெற வழியே இல்லையா?

  • தொடங்கியவர்

குறுங்கடன் - 2 - எல்லோருக்கும் கடன்

கடன் பற்றி பல்வேறு கலாசாரங்களிலும் மதங்களிலும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இஸ்லாம், வட்டிக்குக் கடன் தருதலை அனுமதிப்பதில்லை. யூதர்களும் ஆரம்பத்தில் வட்டிக்குக் கடன் தருதலை அனுமதிக்கவில்லை. ஆனால் நாளடைவில், யூதர் அல்லாதோருக்கு யூதர்கள் வட்டிக்குக் கடன் கொடுக்கலாம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆரம்பகாலக் கிறிஸ்தவமும் வட்டிக்குக் கடன் கொடுத்தலைக் கடுமையாக எதிர்த்தது. எனவே இயல்பாகவே ஐரோப்பா முழுமையிலும் கிறிஸ்தவர்கள் கடன் வாங்குபவர்களாகவும் யூதர்கள் அவர்களுக்குக் கடன் கொடுப்பவர்களாகவும் ஆனார்கள்! பின்னர் வங்கித் தொழில் என்ற ஒன்று ஐரோப்பாவில் ஆரம்பித்ததும், யூதக் குடும்பங்களே அதில் முதன்மையாக இருந்தன. அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டு அங்கு குடியேற்றங்கள் நடந்தபின்னும் இதுவே தொடர்ந்தது. வட்டிக்குக் கடன் கொடுத்தல் பற்றியும் அதற்கான விதிகள் பற்றியும் நாரத தர்மசாஸ்திரம் விரிவாகவே பேசுகிறது. பாஸ்கராசார்யா போன்றோரின் கணிதப் புத்தகங்களில் வட்டியைக் கணக்கிடுவது எப்படி என்றெல்லாம் கணக்குகள் வருகின்றன. தமிழ்க் காப்பியங்களில் வருவோர், வட்டிக்குக் கடன் வாங்கி, பொருள் வாங்கி, வாணிபம் செய்து பொருள் ஈட்டுதல் அல்லது பொருள் இழத்தல் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை நாம் காணலாம். கம்ப ராமாயணம், கடன் பெற்றார் நெஞ்சம் போல ராவணன் கலங்கியதைச் சொல்வதிலிருந்து கடன் வாங்கினவர் கடனைத் திருப்பச் செலுத்த முழுமையான முயற்சிகளை மேற்கொள்வதை அறியலாம். இந்தியாவில் சில குறிப்பிட்ட சாதியினர் கடன் தருதலில் ஈடுபடுவதைப் பார்த்துள்ளோம்.

நெதர்லாந்தில் தொடங்கிய நவீன வங்கிச் சேவை இங்கிலாந்தை அடைந்து, அங்கிருந்து ஐரோப்பாவில் பரவி, பிரிட்டிஷார் மூலமாக இந்தியாவுக்கும் வந்தது. சென்னையில் ஆர்பத்நாட் வங்கி மூழ்கியதை அடுத்து இந்தியர்கள் தங்களுக்கென சுதேசி வங்கி ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டே இந்தியன் வங்கி, சில செட்டியார்களால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியா சுதந்தரம் பெறுவதற்குமுன்னரேயே பல வங்கிகள் செயல்பாட்டில் இருந்தன. சுதந்தரத்துக்குப் பிறகு, இந்திரா காந்தி காலத்தில் பல பெரிய வங்கிகள் கட்டாயமாக தேசியமயமாக்கப்பட்டன. இந்தியன் வங்கியும்கூட அப்படித்தான் தேசியமயமாக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 1990-களின் தாராளமயமாக்கலின்போது தனியாரும் வங்கிகள் தொடங்கலாம் என்று உரிமம் தரப்பட்டு சில தனியார் வங்கிகள் உருவாகின. முற்றிலும் அந்நிய நாட்டின் வங்கிகளும் இந்தியாவில் சேவையைத் தர முடியும். இந்திய வங்கிகளில் அந்நிய நாட்டு அமைப்புகள் குறிப்பிட்ட அளவு பங்குகளை வைத்திருக்கமுடியும்.

பெருமளவு வங்கிச் சேவைகள் வளர்ந்தாலும் இவை ஏழைகளைச் சென்றடைவதில்லை என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். காரணம், இந்த வங்கிகள் அனைத்துமே, கடன் பெறத் தகுதியானோர் என்போருக்கே கடன் தரலாம். யாருக்குக் கடன் பெறத் தகுதி உண்டு என்பதை எப்படித் தீர்மானிப்பது என்பதற்கான சில விதிமுறைகள் (norms) உள்ளன. இதில் பெரும்பாலான மக்கள் விலக்கப்பட்டுவிடுவார்கள்.

வீட்டுக்கு எதிராகக் கடன், தங்கம் அல்லது பிற மதிப்புள்ள சொத்துகளுக்கு எதிராகக் கடன் என்பது கால காலமாக நிகழ்ந்துவரும் ஒன்று. வீடு கட்டக் கடன், வாகனம் வாங்கக் கடன் ஆகியவை கடந்த இருபது ஆண்டுகளில் பெருமளவு வளர்ந்தன. கிரெடிட் கார்டுகள், என்ன ஏது என்று கேள்வி கேட்காமல், ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் இருக்கக்கூடிய அளவுக்குத் தனிநபர் கடன்களை அளித்தன. இதற்கான வட்டி அதிகம். பின்னர் வங்கிகள் நேரடியாகவே பெர்சனல் லோன் என்ற தனிநபர் கடன்களை எந்தவித பாதுகாப்பும் வைத்துக்கொள்ளாமல் தர ஆரம்பித்தன. ஒரு முறை கடன் வாங்கி சரியாகத் திருப்பிக் கட்டியிருந்தால் தானாகவே அடுத்தமுறை அதிகக் கடன் தர வங்கிகள் தயாராக இருந்தன.

அரசு வேலையில் இருப்போருக்கு பொதுத்துறை வங்கிகள் எளிதில் கடன் கொடுத்தன. தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் மாதச் சம்பளக்காரர்களுக்கு, அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் கௌரவத்துக்குப் பொருந்தினாற்போல கடன் கிடைத்தது. சுயதொழில் புரிவோருக்குக் கடன் பெறுதலில் சிக்கல் இருந்தது. ஆனால் இப்போது ஆண்டாண்டுக்குச் சரியாக வருமான வரி கட்டுவோருக்கு நல்ல கடன்கள் கிடைக்கின்றன. மருத்துவர்களுக்கு கிளினிக்கில் கருவிகள் வாங்கக் கடன் கிடைக்கிறது. சுயதொழில் புரிவோர் சில பல லட்சங்களுக்கு அல்லது கோடிகளுக்கு ஆலைக்கான கருவிகளை வாங்கக் கடன் கிடைக்கிறது.

ஆனால் தெருவோர ஏழைக்கு கையேந்தி பவன் வைக்கத் தேவையான 10,000 ரூபாய் அல்லது இஸ்திரி வண்டி அமைக்கத் தேவையான 5,000 ரூபாய்தான் கடனாகக் கிடைப்பதில்லை. இவர்கள் பெரும்பாலும் வட்டிக் கடைகளை நம்பி, வாழ்க்கையை அழிக்கவேண்டியுள்ளது.

***

பங்களாதேசத்துக்காரர் முகமது யூனுஸ். அது கிழக்கு பாகிஸ்தானாக இருந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் பொருளாதாரத்தில் பிஎச்.டி முடித்துவிட்டு அங்குள்ள ஒரு கல்லூரியில் வேலை செய்துவந்தார் அவர். முஜிபுர் ரஹ்மான் கைது செய்யப்பட்டு, மேற்கு பாகிஸ்தான் துருப்புகள் கிழக்கு பாகிஸ்தானில் அட்டகாசம் செய்து, அதன் விளைவாக அகதிகள் இந்தியாவுக்கு வந்ததும் இந்தியா தன் படைகளை அனுப்பி பங்களாதேசத்துக்கு விடுதலை பெற்றுத்தந்தது. உடனேயே தாய்நாட்டை முன்னுக்குக் கொண்டுவர என்று யூனுஸ் தன் வேலையை விட்டுவிட்டு பங்களாதேசத்துக்குத் திரும்ப வந்தார்.

அங்கே பல்கலைக்கழக வேலை ஒன்றை எடுத்துக்கொண்டு பொருளாதாரப் பாடத்தை நடத்தினார். ஆனால் வகுப்பறை பொருளாதாரமும் தெருவின் பொருளாதாரமும் ஒத்துப்போகாததைக் கண்டார். தன் மாணவர்களுடன் அருகில் இருந்த கிராமத்துக்குச் சென்று அங்குள்ள மக்களின் தினசரி வேலை என்ன, எப்படி வருமானம் பெறுகிறார்கள் என்று பார்வையிட்டார். அந்த கிராமத்துப் பெண்கள் பிரம்பு பிளாச்சால் கூடை முடைபவர்கள். கையில் காசு இல்லாத காரணத்தால் தரகர்களிடமிருந்தே மூலப்பொருளை வாங்கி, கூடை முடைந்ததும் அவற்றை தரகர்களிடமே அவர்கள் சொன்ன காசுக்கே விற்றுவந்தார்கள். நாள் முழுதும் வேலை செய்தாலும் கையில் கிடைப்பதோ சில டாக்காக்கள் மட்டுமே. சொந்தமாகக் கொஞ்சம் பணம் இருந்தால் தாங்களே மூலப்பொருள்களை வாங்கி, கூடைகளை முடைந்து நல்ல விலைக்கு விற்கமுடியும் என்றும் தங்கள் அதே உழைப்பை அதிக வருமானமாக மாற்றமுடியும் என்று அந்தப் பெண்கள் சொன்னார்கள்.

உடனேயே யூனுஸ் தன் கையிலிருந்து அவர்களுக்குக் கொஞ்சம் பணத்தைக் கடனாகக் கொடுத்தார். அடுத்த சில நாள்களில் அந்தப் பெண்கள் பெறும் வருமானம் அதிகமானது. இதே செயலை நாடு முழுவதும் ஏன் செய்யக்கூடாது என்று அவருக்குத் தோன்றியது.

அப்போதுதான் இது எளிதான செயல் அல்ல என்பதை அவர் உணர்ந்தார். முதலில் வங்கிகள் இந்த மக்களுக்குக் கடன் தர விரும்பவில்லை. தானே சொந்தமாக அவர்களுக்கு ஜவாப்தாரியாக இருப்பதாக யூனுஸ் சொன்னதும் ஒரு வங்கி கடன் தர முன்வந்தது. ஆனால் ஒவ்வொரு கடன் விண்ணப்பத்திலும் யூனுஸ் கையெழுத்திடவேண்டியிருந்தது. வங்கிகளுக்கு அதிக விருப்பம் இல்லாத காரணத்தால் தானே ஒரு வங்கியை உருவாக்கிவிட யூனுஸ் நினைத்தார்.

அப்போது ஜெனரல் எர்ஷாத், ராணுவப் புரட்சி மூலம் பங்களாதேசத்தின் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தார். அவரது நிதியமைச்சராக இருந்தவர் யூனுஸின் நண்பர். அவர்மூலமாக எர்ஷாதின் அனுமதியுடன் கிராமின் வங்கி உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் அரசு 60% பங்கும் கடன் பெறும் மக்கள் மீதம் 40% பங்கும் கொண்டதாகத் தொடங்கப்பட்ட வங்கியில் பின்னர் அரசின் பங்கு 40%-கக் குறைக்கப்பட்டது.

கிராமின் வங்கி குறுங்கடன் என்ற முறையைக் கொண்டுவந்தது. கொடுக்கப்படும் கடன் தொகை மிகக் குறைவானது. 2,000 டாக்கா அல்லது அதைப்போலத் தொடங்கி, பின்னர் 5,000 டாக்கா என்றுதான் ஆரம்பக் கடன் இருந்தது. இந்தத் தொகைக்கு வட்டி உண்டு. Equated Weekly Instalments எனப்படும் வாரா வாரத் தொகை மூலம் முதல், வட்டி இரண்டும் சேர்த்து அடைக்கப்படும். கிராமின் வங்கி தொடங்குவதற்கு முன்னமேயே யூனுஸ் நேரடி அனுபவமாக சிலவற்றைக் கண்டுகொண்டார்.

1. பெண்கள்தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துகிறார்கள். ஆண்கள் பணத்தை நாசமாக்கிவிடுகிறார்கள். அவர்களை நம்பிக் கடன் கொடுப்பது உருப்படாது.

2. விவசாயத்துக்குக் கடன் கொடுப்பது உபயோகமானதல்ல. ஏனெனில் எப்படியும் அரசு விவசாயத்துக்கு கொடுக்கும் கடனை அவ்வப்போது தள்ளுபடி செய்துகொண்டே இருக்கும். எனவே தனியாரிடம் வாங்கும் கடனையும் திருப்பிச் செலுத்த விவசாயிகள் விரும்புவதில்லை.

எனவே பெண்களுக்குக் கடன் கொடுத்து, அவர்கள் ஏதேனும் சிறு தொழில் செய்வதுமூலம் அவர்கள் வாழ்க்கையை மாற்றலாம் என்று யூனுஸ் முடிவுசெய்தார்.

பெண்கள் கடனைத் திருப்பிக்கொடுப்பார்கள் என்றாலும் அவர்கள் கட்டாயமாகக் கடனைத் திருப்பிக்கொடுக்க என்ன செய்வது என்று யோசித்ததில் உருவானதுதான் குழுக்கடன். மொத்தம் ஐந்து நபர்கள் கொண்ட குழுக்களை கிராமின் வங்கி உருவாக்கும். இந்தக் குழுவில் ஒவ்வொருவர் வாங்கும் கடனுக்கும் மற்றவர்களும் சேர்ந்து பொறுப்பு. ஒருவர் கடனைக் கட்டாவிட்டாலும் மற்றவர்கள் கட்டவேண்டும். ஆனால் எந்தவித ஆவணமும் கிடையாது. அப்படி இருக்கும்போது மக்கள் ஏன் கடனைத் திரும்பச் செலுத்தவேண்டும்?

ஒரு குழுவில் இருக்கும் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் கடன் கிடைக்காது. இருவருக்கு மட்டும்தான். அவர்கள் ஒழுங்காகக் கட்டினால்தான் மற்ற இருவருக்குக் கொடுக்கப்படும். நால்வரும் கட்டி முடித்தால்தான் குழுத் தலைவருக்குக் கடன் கிடைக்கும். அவர் ஒழுங்காகக் கட்டினால்தான் மீண்டும் அடுத்த கடன் குழுவின் பிற உறுப்பினர்களுக்குக் கிடைக்கும். கடன்மூலம்தான் வாழ்க்கை உயருகிறது என்னும்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து கட்டியாகவேண்டிய கட்டாயமாகிறது.

இந்த முறையில் பிரச்னையே இல்லையா? மக்கள் எல்லாம் வளம் பெற்று பங்களாதேசம் உலகிலேயே முதன்மை நாடானதா? கடனுக்கு எதிரான இஸ்லாமிய முல்லாக்கள் நிறைந்த பங்களேதேசம் யூனுஸை எப்படி எதிர்கொண்டது? அரசியல் உலகில் அவருக்கு எந்த மாதிரியான சிக்கல்கள் எழுந்தன?

அடுத்த பாகத்தில் இவற்றைப் பார்ப்போம்.

  • தொடங்கியவர்

குறுங்கடன் - 3 - சுய உதவி

முகமது யூனுஸ் பங்களாதேசத்தில் அறிமுகப்படுத்திய குறுங்கடன் மாதிரிக்குப் பெயர் ‘கிராமின் மாதிரி’. யூனுஸ் ஒரு ‘லாப நோக்குள்ள’ நிறுவனத்தைத்தான் தொடங்கினார். லாபம் அவசியம் என்பது யூனுஸின் கருத்து. ஆனால் அந்த லாபம் அதிகமாக இருக்கக்கூடாது. லாபத்தை மீண்டும் மீண்டும் முதலீடு செய்து கொடுக்கக்கூடிய கடன்களை அதிகரிக்கவேண்டும். இதுதான் அவரது கருத்து.

கிராமின் ஆரம்பம் கடினமாகத்தான் இருந்தது. பெண்களுக்கு மட்டும்தான் கடன் என்பதை அவர்களது கணவர்கள் எதிர்த்தனர். பெண்ணுக்குக் கையில் பணம் கிடைத்தால் அவளுக்கு மதிப்பு கூடும். கணவர்களால் அடித்து நொறுக்கி ஆகாத்தியம் செய்யமுடியாது. ஆனால் நாளடைவில் ஆண்கள் வழிக்கு வந்தனர். முல்லாக்கள் வட்டியுள்ள கடனுக்கு எதிரான போராட்டத்தை முன்வைத்தனர். ஆனால் செயல்முறையில் மக்கள் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் குறுங்கடன் மெதுவாக, மிக மெதுவாகத்தான் பங்களாதேச மக்களுக்கு நன்மை செய்தது.

முதலில் கிராமின் வளரவேண்டியிருந்தது. உலக அளவில் பலரது நம்பிக்கையைப் பெறவேண்டியிருந்தது. பங்களாதேசம் இயற்கைப் பேரிடர்களால் எப்போதும் தாக்கப்படும் ஒரு தேசம். வெள்ளம், புயல், பயிர் நாசம். உணவுக்குக் கஷ்டம். அங்கு உருப்படியான அரசியலும் கிடையாது. எர்ஷாதின் சர்வாதிகார ஆட்சியை ஏறக்கட்டியபிறகு இரு பெண்கள் ஆக்ரோஷமான அரசியலை நடத்தினர் - இன்றும் தொடர்கின்றனர். ஒருவர் கொல்லப்பட்ட பங்களாதேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் மகளான ஷேக் ஹசீனா; தற்போதைய பிரதமர். இன்னொருவர் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர், ஜெனரல் ஜியாவுர் ரஹ்மானின் மனைவி பேகம் காலிதா ஜியா. இன்றுவரை இரு பெண்களுக்கும் இடையில் வெட்டுக் குத்துப் பழி. எர்ஷாதைப் பதவியிலிருந்து இறக்கமட்டுமே இருவரும் ஒன்று சேர்ந்தனர்.

பங்களாதேசத்தில் படிப்பறிவு இந்தியாவைவிடக் குறைவு. ஏழைமை இந்தியாவைவிட அதிகம். தொழில் வளர்ச்சி இந்தியாவைவிடக் குறைவு. அரசியல் இந்தியாவைவிட மோசம். அதனால் பங்களதேசத்தின் வளர்ச்சி மிக மிக மெதுவாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனாலும் பொதுவாக ஏற்கப்பட்ட ஒன்று, யூனுஸின் குறுங்கடன் பல லட்சம் ஏழைகளின் வாழ்க்கையை சற்றேனுமாவது முன்னுக்குக் கொண்டுவந்துள்ளது என்பதுதான்.

ஆனால் யூனுஸுக்கு ஏகப்பட்ட எதிரிகள் உள்ளனர். இதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது குறுங்கடன் என்பதையே எதிர்க்கும் உலகளாவிய இடதுசாரிகள். யூனுஸ் கார்பரேட் குழுமங்களின் கையாள் என்பதில் தொடங்கி, ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை என்பதுவரையில் இந்தக் குற்றச்சாட்டுகள் செல்கின்றன. பங்களாதேசத்துக்குள், மாற்று குறுங்கடன் நிறுவனர்கள் சிலரும் யூனுஸுக்குக் கிடைக்கும் உலகப் பெருமையைக் கண்டு பொருமுகிறார்கள். யூனுஸ்க்கு அமைதி நோபல் பரிசு கிடைத்ததும் அவர்மீது படியும் ஏச்சுகள் அதிகரிக்கவே செய்துள்ளன.

கிராமின் வெறும் குறுங்கடனுடன் நிற்கவில்லை. இந்தியா போலன்றி பங்களாதேசத்தில் பெரிய அளவில் தொழில்துறை கிடையாது என்று சொல்லியிருந்தேன் அல்லவா? கிராமின் வங்கிதான் புதிய பல தொழில்களுக்கு அடி போட்டுக்கொடுத்தது. நார்வேயின் டெலிநாருடன் இணைந்து கிராமின் டெலிகாம் என்ற செல்பேசி நிறுவனத்தை ஆரம்பித்தது. அதன்மூலம் போன் லேடீஸ் என்ற ஐடியாவை முன்வைத்து கிராமங்களில் குறுங்கடன்கள் மூலமாக, பெண்கள் நடத்தும் செல்பேசியால் ஆன பொதுத் தொலைபேசி முறையைக் கொண்டுவந்தது. முதன்முதலில் பங்களாதேசத்துக்கு உருப்படியான இண்டர்னெட் சேவையைக் கொண்டுவந்ததும் கிராமின் வங்கியின் கிராமின் இண்டெர்னெட்தான். பிரான்ஸின் குரூப் டானோனுடன் இணைந்து விடமின் கலந்த தயிர் தயாரித்து, ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு அவற்றை விற்க முனைந்தது கிராமின். இப்படி கிராமினின் பல்வேறு நிறுவனங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அதனால்தானோ என்னவோ, யூனுஸுக்கு 70 வயது ஆகிவிட்டது என்று அவரை கிராமின் வங்கியின் தலைமைப் பதவியிலிருந்து பங்களாதேச அரசு தூக்கிவிட்டது!

சில ஆண்டுகளுக்குமுன் காலிதா ஜியாவும் ஷேக் ஹசீனாவும் முடியைப் பிய்த்துக்கொண்டு சண்டை போட்டனர். தேர்தலுக்கு முந்தைய சண்டை இது. அப்போது யூனுஸ் ஒரு பெரிய தவறு செய்துவிட்டார். நோபல் பரிசு பெற்ற மிதப்பில் இருந்ததனாலோ என்னவோ, தானும் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அவர் முடிவு செய்தார். முன்னாள் பிரதமரும் இன்னாள் பிரதமரும் அடித்துக்கொள்ளும் சண்டை நாட்டு மக்கள் அனைவரையுமே வெறுப்பில் ஆழ்த்தியிருந்தது. தன்னை ஒரு மாற்றாக முன்வைக்க யூனுஸ் முன்வந்ததும் அரசியல்வாதிகள் அவருக்குக் கட்டம் கட்டினர். ஒருவிதமாக அரசியல் அமைதி வந்து, தேர்தல் நடத்தப்பட்டு, ஷேக் ஹசீனா ஜெயித்தார். அப்போதே யூனுஸுக்கு ஆப்படிப்பது என்று முடிவானது. ஹசீனா யூனுஸ்மீது பணம் கையாடல் குற்றச்சாட்டுகளை வைத்தார். பின்னர் இப்போது 70 வயதாகிவிட்டது; எனவே பதவியில் இருக்கமுடியாது என்ற சட்டப்படியான நடவடிக்கை.

யூனுஸ் இதனை எதிர்ப்பது எளிதல்ல. நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டுப் பார்த்தால், யூனுஸ் கட்சி வீக். அவர் பேசாமல் வேறு விஷயங்களில் இறங்கலாம். கட்சி பாலிடிக்ஸ் அவருக்குச் சரிப்படுமா என்று தெரியவில்லை.

***

இந்தியாவில் இதே நேரத்தில் வேறொரு சோதனை முயற்சி நடந்துகொண்டிருந்தது. சிட்பி, நபார்ட் போன்ற மத்திய அரசின் வங்கி அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் என்னும் முறையை ஊக்குவித்துக்கொண்டிருந்தன.

மக்களிடையே, குறிப்பாக, ஏழைகளிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுதான் இதன் அடிப்படை. மக்கள் 20 பேர் கொண்ட குழுக்களாகக் கூடி, ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகையை சேமிக்கவேண்டும். இவர்களுக்கு உதவ ஏதேனும் ஒரு தொண்டமைப்பு முன்வரும். இந்தப் பணத்தை ஏதெனும் ஒரு பொதுத்துறை வங்கியில் குழுக் கணக்காக எடுத்துக்கொள்வார்கள். இந்தப் பணத்திலிருந்து குழுவின் உறுப்பினர்களுக்கு குறிப்பிட்ட வட்டியில் கடன் கொடுக்கலாம். அவர் கடனைக் குறிப்பிட்ட தினத்துக்குள் கட்டிவிடவேண்டும். நாளடைவில் அந்த வங்கியே மேற்கொண்டு கொஞ்சம் பணத்தைக் குழுவுக்குக் கடனாகக் கொடுக்கும். அந்தப் பணத்தையும் குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் கடனாகக் கொடுத்துக்கொள்ளலாம்.

பிரையாரிட்டி செக்டர் என்ற கணக்கில் இதுபோன்ற சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் தருவதை மத்திய அரசு ஊக்குவிக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு பொதுத்துறை வங்கியும் குறிப்பிட்ட அளவு கடன்களை இந்த வழியில் கொடுக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த சுய உதவிக் குழுக்களைக் கட்டமைத்து இவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் தொண்டமைப்புக்கு மாநில அரசுகள் மானியத் தொகை கொடுத்தனர்.

லாபநோக்கற்ற அமைப்புகள் என்றாலும் இவற்றில் நிறைய ஊழல்களும் நிறைந்திருந்தன. இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களது பணம் பிறருக்குப் பயன்பட ஆரம்பித்தது. தேர்தல் நேரத்தில் ஒட்டுமொத்த ஓட்டுவங்கியாக குறிப்பிட்ட பணம் கைமாறினால் வாக்களிக்கப்படும் என்பதாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எந்த ஒரு தொண்டமைப்பாலும் சராசரியாக, 10-20 சுய உதவிக்குழுக்களுக்குமேல் நடத்தமுடியாது. இவர்களிடம் தேவையான தகவல் தொடர்பு மென்பொருள்கள் இருக்காது.

பணப் பட்டுவாடா என்பதைத் தாண்டி, ஸ்கில் பில்டிங் என்னும் திறன் மேம்பாடு இவர்களுடைய ஆதாரத் தேவை. ஆனால் எவ்வளவு குழுக்களில் இது முறையாக, ஒழுங்காக நடந்தது என்பது தெரியவில்லை.

***

மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்னும் அமைப்புகள் ஆங்காங்கே தோன்றி, மையமான தலைமை இல்லாமல் நடப்பதால், சில நன்மைகள் உண்டு, பல தீமைகள் உண்டு. பெயர் சொல்லும்படியாக ஓரிரு அமைப்புகளையே சொல்லலாம். ஆனால் ஸ்கேலபிலிடி கிடையாது. இவை அனைத்தும் அடிப்படையில் சேமிப்பையும் அதற்குப்பின் கடனையும் முன்வைக்கின்றன. ஆனால் பெரும்பாலான ஏழை மக்களுக்கு, சேமிக்கக் கையில் ஒன்றுமே இல்லை. அவர்களுக்குத் தேவை முதலில் கடன். பின் அதிலிருந்து வரும் வருமானத்தில் சேமிப்பு. பின் ஒழுங்கான குறுமுதலீடு, குறுங்காப்பீடு...

இங்குதான் மீண்டும் கிராமின் மாதிரி இந்தியாவுக்குள் புகுந்தது.

மூலம் : http://thoughtsintamil.blogspot.com/2011/03/3.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மிக பெரிய சூரியனாற்றல் மின் நிலையம்

மிக பெரிய சூரியாற்றல் மின் நிலையம் அண்மையில் திபெத்தின் தென்பகுதியிலுள்ள ரிகாசெ நகரில் கட்டியமைக்கப்பட துவங்கியுள்ளது. இந்த மின் நிலையம் கட்டி முடிந்தவுடன், திபெத்தில் மின்சார பற்றாகுறை தீர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மின் நிலையத்தைக் கட்டியமைக்க, 80 கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் பகுதி திட்டப்பணி, மே திங்கள் முடிவடையும்.

அது ஒரு 1 இலட்சம் திபெத் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கும்.

ஆண்டுதோறும் 7600 டன் நிலக்கரி செலவு குறையும்.

விளைவு 14 ஆயிரம் டன் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்படும்.

இது திபெத் உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டப்பணியாக கருதப்படுகிறது.

http://tamil.cri.cn/121/2011/04/01/63s106611.htm

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி

2010ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 8 விழுக்காடு வளர்ச்சியடைந்தது என்று அந்நாட்டின் மத்திய வங்கி ஏப்ரல் 11ம் நாள் அறிவித்தது.

நீண்டகால உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு, அமைதியான உள்நாட்டுச் சூழலில் பொருளாதாரத்துறையின் அனைத்து முக்கிய பிரிவுகளிலும் வளர்ச்சி பதிவானது. பணவீக்கமும் ஒற்றை இலக்க நிலையில் இருந்தது என்று மத்திய வங்கி தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த வரவு செலவின் பற்றாக்குறை அளவு 2009ம் ஆண்டின் 9.9 விழுக்காட்டிலிருந்து 2010ம் ஆண்டில் 7.9 விழுக்காடாக குறைக்கப்பட்டது. குறுகிய காலத்தில் நாட்டின் நிதிப் பற்றாக்குறையை 5 விழுக்காடாக குறைக்கமுடியுமென இலங்கை அரசு நம்புகிறது.

இலங்கைப் பொருளாதாரம் இவ்வாண்டு தொடர்ந்து விரைவாக அதிகரிக்கும் என்றும் ஆண்டு அதிகரிப்பு விகிதம் 8விழுக்காடாக இருக்கக்கூடும் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி மதிப்பிட்டுள்ளது.

இவ்வாண்டின் துவக்கத்தில் மீண்டும் பணவீக்கம் ஏற்பட்டுள்ளதால், இலங்கை இவ்வாண்டின் பிற்பாதியில் இறுக்கமான நிதிக் கொள்கையை நடைமுறைபடுத்தக் கூடும். பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், ஏற்றுமதிப் பொருட்களின் போட்டியாற்றலை உயர்த்தவும் இது உதவும் என்று தெரிகிறது.

http://tamil.cri.cn/121/2011/04/12/1s106844.htm

  • 1 month later...
  • தொடங்கியவர்

குறுங்கடன் - 4

சுய உதவிக் குழுக்கள் இந்தியாவில் குறுங்கடனை முன்னெடுத்துச் சென்ற அதே நேரம், 1990-களில் லாப நோக்குள்ள குறுங்கடன் கம்பெனிகள் இந்தியாவில் தோன்ற ஆரம்பித்தன என்று கடைசிப் பாகத்தில் எழுதியிருந்தேன்.

இந்தச் சோதனை பெரிய அளவில் ஆரம்பித்தது ஆந்திரப் பிரதேசத்தில். யார் முதலாவது கம்பெனி, யார் இரண்டாவது என்பது முக்கியமில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் குறுங்கடன் என்றாலே எல்லொரும் ஆந்திராவிலிருந்துதான் ஆரம்பித்தார்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாடு, கர்நாடகம் என்று ஆரம்பித்து, மஹாராஷ்டிரம், குஜராத் என்று விரிந்தது. ஆனாலும் ஆந்திராவில்தான் பெருமளவு பரவல் இருந்தது.

லாப நோக்குள்ள குறுங்கடன் நிறுவனங்களைப் பொருத்தமட்டில் அவர்கள் நேரடியாகத் தாக்கியது கந்து வட்டி லேவாதேவிக் காரர்களை. பொதுவாக தெருவோரத்தில் இருக்கும் வட்டிக்கடை முதலாளிகள் மாதத்துக்கு 3 வட்டி (36%) என்று ஆரம்பித்து 5 வட்டி (60%) வரை போவார்கள். சில ஸ்பெஷல் தருணங்களில் 10 வட்டியெல்லாம் உண்டு. முதலைவிட வட்டி அதிகமாகி, அடகு வைத்த பொருள் அம்போவாவதும் நடக்கும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இந்த வட்டிக்கடைகளை விட்டால் வேறு வழியே இல்லை. வீட்டில் திடீர் மருத்துவச் செலவு, கல்யாணம், ஊருக்குப் போகவேண்டும் என்றெல்லாம் வந்தால் வேறு எதுதான் போக்கிடம்?

லாப நோக்குள்ள குறுங்கடன் நிறுவனங்கள் 24% (2 வட்டி) என்று ஆரம்பித்து 36% என்றெல்லாம் வசூலிக்க ஆரம்பித்தனர். அடிப்படையில் லாப நோக்குள்ள குறுங்கடன் நிறுவனம் என்ன செய்கிறது? அவர்கள் முதலில் கொஞ்சம் மூலதனத்தை ஈக்விட்டி என்ற பெயரில் கொண்டுவருகிறார்கள். அந்த ஈக்விட்டியைக் கொண்டு இடத்தை வாடகைக்கு எடுத்து, ஆட்களை வேலைக்கு எடுத்து, ஒரு கடன் விநியோக நெட்வொர்க்கை உருவாக்குகிறார்கள். தம்மிடம் இருக்கும் ஈக்விட்டியைப் போல ஐந்து மடங்குவரை அவர்கள் வங்கிகளிடமிருந்து பணத்தைக் கடனாகப் பெறுகிறார்கள். இந்தப் பணத்தை குறுங்கடனாக ஏழைகளுக்குத் தருகிறார்கள். வங்கி என்ன வட்டிக்குக் கடன் தருகிறதோ அதற்கு மேல் இவர்கள் மக்களிடமிருந்து வசூலித்தால்தான் இவர்கள் கையில் பணம் மிஞ்சும். லாபமும் கிடைக்கும்.

ஆந்திராவில்தான் முதலில் சிக்கல் ஆரம்பித்தது. 2006-வாக்கில், இரண்டு குறுங்கடன் கம்பெனிகள் தம்மிடம் கடன் வாங்கியவர்களை மிரட்டிப் பணத்தைத் திருப்பித் தரச்சொல்லி நெருக்கடி தருவதாகவும் இதன் விளைவாகச் சில தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன என்றும் செய்திகள் வெளியாயின. உடனே ஆந்திர அரசு அந்த இரண்டு குறுங்கடன் கம்பெனிகளையும் தடை செய்ததுடன், பிற குறுங்கடன் கம்பெனிகளையும் அடக்க முற்பட்டது. குறுங்கடன் கம்பெனிகள் மிக அதிக வட்டி கேட்பதாக ஆந்திர அரசு குற்றம் சாட்டியது. ஆனால் உண்மையில் கிரெடிட் கார்ட் வட்டி அல்லது தெருவோர கந்து வட்டியுடன் ஒப்பிட்டால் குறுங்கட்ன வட்டி குறைவுதான்.

ஆனால் குறுங்கடன் நிறுவனங்கள் தவறே செய்யவில்லை என்று சொல்லமுடியாது. மூன்று தவறுகளைச் செய்தனர். ஒன்று, அமெரிக்காவில் நடந்த சப் பிரைம் பிரச்னைபோல. கடன் வாங்கினால் திருப்பித் தரமுடியாதவர்களையும் நெருங்கிச் சென்று கடன் வாங்கிகொள்ள வற்புறுத்தினர். திருப்பிக் கட்ட முடியாவிட்டால் மற்றொரு கடனை வாங்கி முதல் கடனைக் கட்டுமாறு ஆலோசனை கொடுத்தனர். இதெல்லாம் கடைமட்ட ஊழியர்கள் செய்த வேலை. அவர்கள் தம் டார்கெட்டை மட்டுமே மனத்தில் வைத்து இதில் ஈடுபட்டனர். இரண்டாவது, வட்டி என்று வசூல் செய்வது ஒருபக்கம் இருக்க, பிற செலவுகள் என்ற பெயரில் மேலும் கொஞ்சம் வசூலித்தது. (டாகுமெண்ட் சார்ஜ் என்ற ஒன்று இருக்கும். காப்பீட்டுத் தொகை என்று ஒன்று இருக்கும். இதைப் பற்றி எளிய மக்களுக்கு ஒன்றும் தெரியாது.) மூன்றாவது, கடன் தொகை திரும்ப வரவில்லை என்றால் முரட்டுத்தனத்தைப் பிரயோகிப்பது. அசிங்கமாகப் பேசுவது. மிரட்டுவது. இவற்றின் விளைவாகவே தற்கொலைகள் நிகழ்ந்தன.

ஆனால் இந்தக் குறைபாடுகளுக்காக இந்த நிறுவனங்களைத் தடை செய்வது நியாயமற்றது. கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கி, இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ளவே கட்டுப்பாட்டு அமைப்புகள் முயற்சி செய்திருக்கவேண்டும்.

ஆனால் இந்த நிறுவனங்களை யார்தான் கட்டுப்படுத்துகிறார்கள்?

http://thoughtsintamil.blogspot.com/2011/05/4.html

  • தொடங்கியவர்

யாழ் தொழிலாளர் சந்தை: புரியாத புதிர்

May 31, 2011

போரினால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்டத்தின் தொழிலாளர் சந்தை ஒரு புரியாத புதிராக இருப்பதாக அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தின் தலைவரான கலாநிதி முத்துக்கிருஷ்ண சர்வானந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஏனைய பகுதிகளில் வேலையில்லாதவர்களின் வீதம் கிட்டத்தட்ட 5 வீதமாக மாத்திரம் இருக்கும் நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்டத்தில் அந்த வீதம் அதன் இருமடங்காக இருப்பதாக அவர் கூறினார்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொழில் வாய்ப்புகளுக்கான போதுமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை அங்கு கடந்த போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள், அழிவுகள் போன்றவை தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள அவர், முன்னாள் போராளிகளைப் பொறுத்தவரை அவர்கள் மீதான தேவையற்ற சந்தேகங்கள் காரணமாக தொழில் முனைவோர் அவர்களுக்கு வேலைகளை வழங்க தயக்கம் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற சாதி வேறுபாடுகளும், உரிய தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதற்கு இளைஞர்களுக்கு ஒரு தடையாக இருப்பதாகவும், வெளிநாட்டில் இருந்து பல குடும்பங்களுக்கு வருகின்ற பணமும் இளைஞர்கள் தொழில் நாட்டம் இன்றி காணப்படுவதற்கு ஒரு காரணமாக திகழுவதாகவும் சர்வானந்தன் குறிப்பிட்டார்.

http://www.alaikal.com/news/?p=72442

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு சில ஆலோசனைகள்...

எங்களிடம் வேலையற்ற பட்டதாரிகள் தாராளமாக இருக்கின்றனர். இங்கு வேலையற்ற பட்டதாரிகள் யார் என்ற கேள்வி எழுமாயின் அரச வேலை கிடைக்காத பட்டதாரிகளே வேலையற்ற பட்டதாரிகள் என அழைக்கப்படுவர். ஆக, அரச வேலை மட்டுமே உத்தியோகம் என்ற நிலைமை உருவாகிவிட்டது. எந்தத் துறையில் பட்டம் பெற்றாலும் அரசு நியமனம் தரவேண்டும் என்ற நினைப்பால் மனித மூலதனம் வீணடிக்கப்படுவதைக் காணமுடியும்.

பல்கலைக்கழகத்தில் பட்டத்தை நிறைவு செய்ததன்பின் சுயமாகவோ அன்றி குழுவாகவோ இணைந்து நிறுவன ரீதியாக செயற்படும் மனப்பாங்கு எங்களிடம் மிகமிகக் குறைவு.

அரச வேலை கிடைத்துவிட்டால் அதிகாரிகள் ஏசினாலும் பேசினாலும் சீவியம் நடத்தலாம் என்ற நம்பிக்கையைத் தவிர நம்மவர்களிடம் தன்னம்பிக்கை அறவே இல்லையென்றே கூற வேண்டும்.இதற்கு மேலாக ஆபத்துக்களுக்கு முகம் கொடுத்து அதனை ஏற்றுக்கொண்டு சாதனை படைக்கும் ஆற்றலும் எங்கள் பட்டதாரிகளிடம் இல்லையென்றே கூறவேண்டும்.

சங்கீதத்தில் பட்டம் முடித்தால் இசை கற்பிக்கும் அமைப்புகளை உருவாக்கி இசை ஊடாக பொருளாதாரத்தை ஈட்டுவதோ, நடனத்தில் பட்டம் பெற்றால், நடனம் கற்க விரும்பும் பெற்றோர்களின் மனநிலை அறிந்து நடனக்கலை கலையகங்களை அமைத்து அதன்மூலம் வருமானம் ஈட்டுவதோ நமக்குப் பொருந்தாது. சங்கீதப் பட்டதாரிகளுக்கு விவசாயத் திணைக்களத்தில் வேலை. நடனப்பட்டதாரிக்கு கால்நடை அலுவலகத்தில் பணி. இப்படித்தான் எங்கள் நிலைமை இருக்கிறது.

வர்த்தகப் பட்டதாரிகளோ பங்குடமை, கம்பனி என்பனவற்றின் உருவாக்கம் பற்றி இம்மியும் சிந்தியாதவர்களாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையில் ‘கிளரிக்கல்’ வேலை செய்யும் சிந்தனையில் சீவியம் கழிக்கின்றனர். இதற்கு மேலாக, விவசாயப் பட்டதாரிகள் இருபது ஏக்கர் நிலத்தில் தென்னையும் அதனிடையே மரமுந்திரிகையும் நடத் தெரியாமல், கைத்தொழில் அதிகார சபையின் பதவி வெற்றிடத்துக்கு விண்ணப்பம் அனுப்பிவிட்டு தபாலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஓ! எம் இனிய பட்டதாரிகளே! உங்களுக்கு வேலையில்லாத இந்த காலத்தில் ஊர் சுற்றுவதில் தடைகள் இருக்க நியாயம் இல்லை. ஒரு தடவை யாழ்ப்பாணத்தை சுற்றி வாருங்கள். வீதியிலும் குச்சொழுங்கையிலும் கட்டிட நிர்மாணத்திலும் ஒப்பந்த வேலைகளிலும் ஈடுபட்டிருப்பவர்கள் பேசுகின்ற மொழியை ஒரு கணம் கேட்டுபாருங்கள். ஓ! எங்கள் மண்ணில் நாங்கள் பெறவேண்டிய வருமானம் ஏ-9 கடந்து தென்பகுதி செல்வதைக் காண்பீர்கள்.

என்ன செய்வது! எங்களுக்கு அரச வேலை தேவை. அந்தப் பாழாய்ப்போன சிந்தனையில் இருந்து நாம் விடுபடாதவரையும் தென்பகுதி நிறுவனங்களே எங்கள் பொருளாதாரத்தை தங்களுக்காக்கப் போகின்றன. நாம் என்ன செய்வது! எங்கள் பட்டதாரிகளும் கூட்டாக இணைந்து ஒரு ‘மெகா’ நிறுவனத்தை அமைத்தால்... அட! இந்த விருப்பம் எப்போது நிறைவேறும்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20021

  • தொடங்கியவர்

உயர் பொருளாதார வளர்ச்சி இலங்கையில் சாத்தியமில்லை - உலக வங்கி தெரிவிப்பு

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக இலங்கை அரசு எதிர்பார்த்திருந்த உயர் பொருளாதார வளர்ச்சி வீதத்தினை அடைவது சாத்தியமில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை கடந்த ஆண்டில் எட்டு சதவீத பொருளாதார வளர்ச்சியினை கண்டது. இதனை 2011, 2016இல் முறையே 8.5 வீதம், 9.5 வீதமாக அதிகரித்து, சராசரியாக எட்டு சதவீதத்திற்கும் மேலான வளர்ச்சி வீதத்தினை பதிவுசெய்ய இலங்கை அரசு எதிர்பார்த்திருந்தது.

எனினும் இது 2011, 2012, 2013இல் முறையே 7.5 வீதம், 6.8 வீதம், 6.4 வீதம் என 8 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியினையே இலங்கையால் பதிவுசெய்ய முடியும் என உலக வங்கி கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக உயர்வான பணவீக்கம், உயர்வான வரவுசெலவு திட்டப் பற்றாக்குறை மற்றும் உயர்ந்தளவான பொதுப்படுகடன்கள் போன்றவை தனியார் முதலீடுகளை வெளியேற்றுகின்றன. இதனால் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலான வளர்ச்சி வீதம் சரிவடையும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளின் பணவீக்கம் உயர்வாகவுள்ளன. ஆனால் இவை வட்டி வீதங்களை உயர்த்தி பணவீக்க அழுத்தங்களை சமாளிக்கின்றன. எனினும் இத்தகைய தீர்மானத்தினை இலங்கை இதுவரை மேற்கொள்ளவில்லை. இதனால் தொடர்ந்தும் இலங்கைப் பொருளாதாரம் பணவீக்க அழுத்தங்களுக்குள்ளேயே காணப்படுகின்றது.

இதன் விளைவாக வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறைகள் உயர்வடைவதுடன் இதுவே கடந்த ஆண்டில் மாலைதீவு, இந்தியா, இலங்கை ஆகியவற்றில் முறையே 20.7%, 8.8%, 7.9% என ஒப்பீட்டளவில் இலங்கையில் குறைவாகக் காணப்பட்டாலும் வருந்தத்தக்க நிலையிலேயே இலங்கையும் உள்ளது என உலக வங்கி தனதறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20085

  • 1 month later...
  • தொடங்கியவர்

சீன முதலீட்டாளர்களுக்கு இலங்கை வரவேற்பு

இலங்கையின் வளர்ந்துவரும் முதலீட்டு வாய்ப்புகளை மேலதிக சீன முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக சீனா மற்றும் இதர நாடுகளின் முதலீட்டாளர்களை கவரக்கூடிய சலுகைகளை இலங்கை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையின் தொழில்துறை மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 28ம் நாள் இதைத் தெரிவித்தார்.

மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையின் வணித்துறையினரை சந்திக்கவும், முதலீட்டு வாய்ப்புகளை ஆய்வு செய்யவும் உதவும் வகையில் 2012ம் ஆண்டில் சர்வதேச பொருட்காட்சி மற்றும் வணிகக் கருத்தரங்கை இலங்கை நடத்தவுள்ளது. இந்த முக்கிய நடவடிக்கையில், சீன முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்கள் பங்கேற்கவேண்டுமென எதிர்பார்ப்பதாக ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார்.

சீன தொழில் நிறுவனங்கள் இலங்கையின் மின்னனுவியல், உள்கட்டுமானம், ஆடைத்தயாரிப்பு, துறைமுகம் மற்றும் நவீன கட்டிடக் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளன.

http://tamil.cri.cn/121/2011/07/28/103s109299.htm

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆக்கங்கள் akootha. நன்றி இனைப்பிற்கு, இதை ஊரில் உள்ளவர்கள் பின் பற்றுவார்களா

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

நெருக்கடிகளின் கெடுபிடியில் வடபகுதிக் கடல் வளத்துறை

ஆக்கம்: கலாநிதி சூசை ஆனந்தன்

காலை முடக்கிக் கொண்டு படுத்திருந்த துட்டகைமுனுவிடம் அவனுடைய தாய், “ஏன் இப்படிக் காலை முடக்கிக் கொண்டு படுத்திருக்கிறாய்?” எனக் கேட்க, “வடக்கே தமிழனும் தெற்கே இந்து சமுத்திரமும் ஆக்கிரமித்து நிற்க, நான் எப்படி அம்மா காலை நீட்டி உறங்குவது” எனப் பதிலளித்தானாம்.

இது போலவே வடபகுதியில் கடலுக்கும் போக முடியாமல் படுத்திருந்த மகனிடம் அவனுடைய தாய், “ஏன்டா தொழிலுக்குப் போகாமல் முடங்கிக் கிடக்கிறாய் எனக் கேட்க, “வடக்கிலிருந்து இந்திய மீனவர்களும் தெற்கிலிருந்து சிங்கள மீனவர்களும் நமது கடலை ஆக்கிரமித்து நிற்க, நான் எங்கே அம்மா போய் மீன் பிடிப்பது' என்று பதிலளித்தானாம். இதுவே இன்றைய வடபகுதிக் கடல் வளத்துறையின் நிலை.

ஒருபுறம் வடபகுதியில் இந்திய மீனவர்கள் நூற்றுக்கணக்கில் ஆக்கிரமித்து நிற்க இன்னொருபுறம் தென்பகுதியில் உள்ள சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்து நின்று மீன்பிடியில் ஈடுபட்டு வருவதனால் வடபகுதி மீனவர்கள் என்றுமில்லாதவாறு இன்று பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இவை தவிர அகற்றப்படாத உயர் பாதுகாப்பு வலயங்கள், பயன்படுத்தப்பட முடியாத துறைமுகங்கள், ஆழ்கடல் மீன்பிடிக்கான வாய்ப்பின்மை போன்ற காரணிகளும் மேலும் இத்துறை சார்ந்த நெருக்கடிகளைத் துரிதப்படுத்தியிருக்கின்றது.

முன்பெல்லாம் கரையோரப் பகுதியிலிருந்து நாட்டின் உட்பகுதிகளுக்கு கடல் மீன்கள் சந்தைப்படுத்தப்படுவது வழக்கம். கடல் மீன்களுக்கே அதிக கிராக்கியும் காணப்பட்டது.

ஆனால் இன்று நிலைமை மாறி, உள்ளூர்ப் பகுதியிலுள்ள நன்னீர் நிலையங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நன்னீர் மீன்கள் கடற்கரையோரப் பகுதிகளில் சந்தைப்படுத்தப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது. மேலும் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு சந்தைப் பகுதியிலிருந்து பெரிய யூனா வகை மீனினங்கள் வடபகுதியிலுள்ள வியாபாரிகளால் கொள்வனவு செய்யப்பட்டு அப்பகுதி மீனவர்களுக்கு சந்தைப்படுத்தப்படுகின்ற ஒரு நிலையும் தோன்றியுள்ளது. இத்தகைய ஒரு நிலைக்குக் காரணம், வடபகுதியின் கரையோர மீன் உற்பத்தி மிக மோசமாகப் பாதிப்படைந்திருப்பதே ஆகும்.

அந்நிய மீனவர்களால் வடபகுதிக் கடல் வளங்கள் பெருந்தொகையாகச் சூறையாடப்பட்டுச் செல்வதனால் உள்ளூர் மீனவர்களின் உற்பத்தி பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றது.

குறிப்பாக வடபகுதிக் கடற்பிரதேசங்களில் இந்திய இழுவைப் படகுகள் வாரத்தில் மூன்று நாட்கள் கடலை ஆக்கிரமித்திருப்பதனால் அக் காலத்தில் உள்ளூர்ப் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது தொழில் வாய்ப்பை இழந்து விடுகின்றனர். மேலும் உற்பத்தி கூடுதலாகப் பெறப்படுகின்ற பகுதிகளில் தென்பகுதி மீனவர்கள் தொழிலில் ஈடுபடுவதனால் உள்ளூர் மீனவர்கள் பயத்தின் காரணமாக அப்பகுதிக்குச் செல்ல முடிவதில்லை. கரையைச் சார்ந்த பகுதியிலேயே சிற்றளவான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய

ஒரு நிலைக்கு இப்பகுதி மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சிறிய கடற்பரப்பில் இன்று என்றுமில்லாத உற்பத்தியிலீடுபடுகின்ற படகுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதனாலும் உற்பத்தி அளவு குறைவடைந்து செல்கின்றது.

மேற்குறித்த காரணிகளின் விளைவாக உள்ளூர் மீனவர்களால் பெறப்படுகின்ற உற்பத்தியின் அளவு பெரிதும் குறைவடைந்து காணப்படுகின்றது. அண்மைக்காலங்களில் நேரடியாக களநிலையை அவதானித்த வேளை, பெரும்பாலான படகுகள் தொழிலில் ஈடுபடுவதை நிறுத்தியுள்ளன. பெறப்படும் உற்பத்தி வருமானத்தை விட, நாளாந்த உற்பத்தி செலவு மிக அதிகமாக இருப்பதாகவும் இதனால் தொழில்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் தமது ஜீவனோபாயத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வாரத்தில் சில தினங்கள் மட்டும் கரைப் பகுதிகளில் உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் அறிய முடிகின்றது.

பொதுவாக வட பிரதேசம் மிகச் சிறந்த கடல் வள வாய்ப்புக்களைக் கொண்ட ஒரு பகுதியாகும். யுத்தத்தின் முன்னரான காலப் பகுதிகளில் அதிக மீன் உற்பத்தியைப் பெற்றுக் கொடுத்த ஒரு பிரதேசமாகவும் கடல் உணவுகளின் ஏற்று மதிகள் மூலம் மிகக் கூடுதலான அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுத்த ஒரு பிரதேசமாகவும் விளங்கியது.

இத்துறையில் தங்கி வாழ்ந்த மீனவர்களின் கடல்வளப் பொருளாதாரம் மிகச் செழிப்பாகக் காணப்பட்டது. யுத்த காலப் பகுதியில் ஏறத் தாழ மூன்று தசாப்தங்கள், கடல்வளத்துறையே ஏனைய துறைகளை விட மிக மோசமான பாதிப்புக்களைச் சந்தித்தது.

உயிழப்புக்கள், சொத்திழப்புக்கள், இடப் பெயர்வு, அகதி முகாமில் அவல வாழ்வு என்றவாறு இத்துறையில் தங்கி வாழ்ந்த மக்கள் சீரழிக்கப்பட்டிருந்தனர். எனினும் யுத்த காலப் பகுதியில் புலிகளினுடைய கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் மீன்பிடித் தொழில் தங்குதடையின்றி நடைபெற்று வந்தது. அரச கட்டுப்பாட்டிலிருந்த மீனவர்களில் குறிப்பாக யாழ். குடாநாட்டு மீனவர்களே பெரும் துன்பங்களை அனுபவித்து வந்தனர்.

எவ்வாறாயினும் 2009 இல் யுத்தம் முடிவுற்றபின்னர் வடபகுதி முழுவதும் அரச கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் மீன்பிடிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தடைகள் குறிப்பிடத்தக்க அளவில் நீக்கப்பட்டிருந்தன.

இடம்பெயர்ந்தவர்களில் பலர் மீண்டும் தமது சொந்த இடங்களில் திரும்பியிருந்தனர். தொழில் வாய்ப்பை இழந்த மீனவர்கள் வழமையான தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிகள் செய்த போது, தாம் எதிர்பார்த்தத்திற்கும் மாறாக “பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல' வடபகுதிக் கடற்பரப்பு முழுவதும் அந்நிய மீனவர்களுடைய ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு இங்குள்ள வளங்கள் அவர்களினால் வகை தொகையின்றி சூறையாடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

முக்கியமாக வடக்குக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களும் மன்னார் மற்றும் முல்லைத்தீவுக் கடற்பரப்பு பிரதேசங்களில் தென்பகுதி மீனவர்களும் பெருமளவில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதனால் உள்ளூர் மீனவர்கள் பெரும் பீதியும் பயமும் கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.

அந்நிய மீனவர்களை எதிர்க்கவோ, எதிர் கொள்ளவோ வலுவற்றவர்களாக இப்பகுதி மீனவர்கள் உள்ளனர்.அரசியல்வாதிகள் குறிப்பாக அரசுடன் அடி பணிந்துள்ள அரசியல்வாதிகளே நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து வயிற்றுழைப்பு நடத்துவதைத் தவிர, இக் கடல்வளத்துறை எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பாக குரல் எழுப்புவதற்கும் நாதியற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

இந்திய மீனவர்கள் விவகாரம்

இது மிக ஆழ வேரூன்றியுள்ள ஒரு பிரச்சினையாகவே உள்ளது. பாக்கு நீரிணை பகுதியிலும் பாக்கு விரிகுடாப் பகுதியிலும் இலங்கையின் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட இழுவை மடிகளைப் பயன்படுத்திய இந்திய மீனவர்கள் இன்று வடமராட்சிக் கிழக்குப் பகுதி சார்ந்தும் மன்னார்க் குடாவிலும் தமது தொழில் நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தி வருகின்றனர். இழுவை மடிகளோடு இன்று தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளையும் பயன்படுத்தி மிக்க கடல் வளங்களை சூறையாடிச் செல்லும் நிலை தொடர்கின்றது. அத்தோடு உள்ளூர் மீனவர்கள் பயன்படுத்துகின்ற வலைகளைச் சேதப்படுத்தி வரும் சம்பவங்களும் தொடர்கின்றன.

வாரத்தில் 50 வீதமான நாட்கள் இக்கடற் பிராந்தியங்கள் இந்திய மீனவர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இத்தகைய செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தக்கோரி உள்ளூர் மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், பேச்சு வார்த்தைகள் யாவும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. வழங்கப்பட்ட வாக்குறுதிகள் யாவும் இதுவரையும் நிறைவு செய்யப்படவில்லை.

தென்பகுதி மீனவர்கள் விவகாரம் யுத்த காலப் பகுதியில் தென்பகுதி மீனவர்களுடைய வருகை இப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. எனினும் யுத்தத்தின் பின்னர் தென்பகுதி மீனவர்களுடைய வருகையும் வடக்குப் பிரதேச கடற்பரப்பில் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முக்கியமாக மன்னார்ப் பிரதேசத்தில் தலைமன்னார், சவுத்பார் சிலாவத்துறை, முள்ளிக்குளம் போன்ற கரையோரப் பிரதேசங்கள் சார்ந்தும் முல்லைத்தீவுக் கரையோரப் பிரதேசங்கள் சார்ந்தும் இடம்பெயர்ந்து தற்காலிக குடியிருப்புக்களை அமைத்து அங்கு தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்ற நிலை காணப்படுகின்றது.

முல்லைத்தீவில் வடகரையோரம், மன்னாரில் முள்ளிக்குளம் இன்னமும் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை. முல்லைத்தீவு கரையோரங்களில் கரைவலைப்பாடுகள் பல தென்பகுதி மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவைச் சேர்ந்த கரையோர வலைப்பாட்டு மீனவர்களுக்கு அவை மறுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இவ்வாறாக மன்னாரிலும் முல்லைத்தீவிலும் முக்கிய கரையோர மீன்பிடி நிலையங்கள் தென்பகுதி, மீனவர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டமையானது இப்பகுதி மீனவர்கள் மத்தியில் பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தற்காலிகமாக ஏற்படுத்தப்படும் இந்த மீன்பிடி குடியிருப்புக்கள் நாளடைவில் நிரந்தரக் குடியிருப்புக்களாக மாற்றம் பெறுவதற்கான போக்குகளே காணப்படுகின்றன.

ஆழ்கடல் மீன்பிடி

வடபிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றை வடபகுதி மீனவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் அற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

குறிப்பாக வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சார்ந்து 210 மைல் தூரம் வரையான பகுதிக்கும் அதற்கப்பாற்பட்ட பகுதிகளும் ஆழ்கடலுக்கு சிறந்த பகுதிகளாகும். ஆயினும் இவற்றின் பயன்பாடு முழுவதும் தென் பகுதியிலிருந்து வரும் சிங்கள மீனவர்களின் “பல நாட் கலங்களால்' சூறையாடப்பட்டு வருகின்றன. குறித்த கடற்பகுதியில் தென்பகுதி மீனவர்கள் சில தினங்கள் தங்கியிருந்து மீனைப் பிடிக்கக் கூடிய வசதி கொண்டதாக “பல நாட் கலங்கள்' வடிவமைக்கப்பட்டுள்ளன.

வடபகுதி மீனவர்களிடம் இத்தகைய படகுகள் எவையும் இல்லை என்பது கவலைதரும் விடயமாகவே உள்ளது. ஐழுஆ நிறுவனத்தினால் வடமாகாண கடற்றொழில் சம்மேளனத்திற்கு வழங்கப்பட்ட “ஓசன் பேர்லின்' என்ற படகு தவிர வேறு எதுவும் இங்கு கிடையாது. இப்படகு கூட காரைநகர் கடற்படைத்தள துறைகத்திலிருந்தே தனது தொழில் நடவடிக்கைகளை தொடங்க வேண்டியிருப்பதுடன் தெற்குப் பகுதி மீனவர்களைக் கொண்ட தொழில் செய்ய வேண்டிய நிலையும் காணப்படுகிறது.

இத்தொழிலில் ஈடுபடுவதற்கான கப்பலோட்டம், மாலுமி சாஸ்திரம் பயின்றிருப்பது அவசியம், அத்துடன் பொருத்தமான துறைக வசதியும் இப்பகுதியில் தேவை. துறைமுகங்கள் அனைத்தும் பாதுகாப்பு படையினரின் வசமுள்ளது. மீனவர்கள் இதனைப் பயன்படுத்த முடியாத நிலையே இன்றும் தொடர்கிறது. மேலும் இத்தகைய படகு ஒன்றினை கொள்வனவு செய்ய 80 இலட்சம் முதல் கோடி ரூபா வரையில் முதலீடு தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய சூழலில் வடமராட்சியிலுள்ள 3லீ தொன் உள் இணைப்பு படகுகள் சில ஆழ்கடலுக்குச் சென்று ஓரு தினங்கள் மட்டும் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற போதிலும் குளிரூட்டல் மற்றும் தகவல் தொடர்பாடல் வசதியின்மை, துறைமுக வசதியின்மை இவர்களுக்கு பெரும் தடைக்கற்களாக அமைந்துள்ளன.

சுருங்கக் கூறின் வடபிரதேச ஆழ்கடல் வள மானது தென்பகுதி மீனவர் வேட்டைக் களமாக மாறியிருக்கிறது.

கடலட்டை வர்த்தகத்தில் மாபியாக்கள்

உள்நாட்டில் நுகரப்படாத ஏற்றுமதியில் மிக உயர்ந்த விலையைப் பெறுகின்ற கடலகப் பொருட்களில் கடலட்டை, சுறாச் செட்டை, சங்கு போன்றவை முக்கியமானவை. குறிப்பாக வடபகுதி கடற்பரப்பில் கடலட்டைகள் மிகச் செறிவாகப் பரம்பியுள்ளன. சுழியோடிகள் மூலமாகவும் ரோலர் மீன்பிடி (இழுவை மடி) மூலமாகவும் இந்த கடலட்டைகள் சேகரிக்கப்படுகின்றன. சாதாரணமாக ஓர் இழுவைப் படகின் மூலம் கடலட்டைகள் மட்டும் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபா வரை உற்பத்தி செய்யப்படுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையின் கடற்பரப்பினுள் இவை மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய மீன் வளங்களின் மிகையான வளச் சுரண்டலுக்கும் அடித்தள அழிவுக்கும் இது காரணமாக இருப்பதனாலேயே இழுவை மடிக்கு இத்தடைகள் உள்ளன.

எனினும் இலங்கை வடபகுதி மீனவர்களும் இந்திய இழுவைப் படகுகளும் இதனை மீறி இந்த மடிகளைப் பயன்படுத்துவதற்கு காரணம் கடலட்டைகள் மற்றும் இறால் உற்பத்தி மூலம் பெருந்தொகையான வருமானத்தைப் பெறுவதனாலேயேயாகும்.

முக்கியமாக கடலட்டைகள் உற்பத்தி செய்வதும் அவற்றை கரையில் கொண்டு சேர்ப்பதும் இந்தியாவில் முற்றுழுதாகத் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் சராசரியாக ஒருநாளில் ஆயிரத்துக்கும் அதிகமான இழுவைப் படகுகள் வடபகுதி கடற்பரப்பினுள் அத்துமீறி இந்த கடலுணவுகளைப் பிடிக்கின்றன.

ஆகக் குறைந்த மட்டத்தில் ஒரு நாளில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான கடலுணவுகள் எமது கடற்பரப்பில் இருந்து இந்திய இழுவைப் படகுகளால் சூறையாடப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல மில்லியன் ரூபா பெறுமதியான கடலட்டைகள் எங்கே? அவை இந்திய இழுவைப் படகுகளால் உற்பத்தி செய்யப்பட்டு இரகசியமான முறைகளில் தனிப்பட்டோ அல்லது உடன் கடல் அட்டைகளாகவோ இலங்கைக்கே கடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் அண்மையில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பல தொகை நிறையுடைய உயர்ந்த அட்டைகள் பிடிபட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அவ்வாறெனில் இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் கும்பல்கள் யார்? இத்தகைய மோசடி வர்த்தகத்தில் வன்னியின் அமைச்சர் ஒருவர் மன்னாரில் இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இது உண்மையும் கூட.

கடலட்டைகள் மூலம் பல மில்லியன்களை வருமானம் பெறுவோர்களுக்கு அரசியல் ரீதியிலான ஆதரவு இருக்கும் வரையில் இந்த இழுவைமடித் தொழில்களை நிறுத்துவதென்பது சாத்தியமாகப் போவதில்லை. பல சுற்றுப் பேச்சுக்கள், மகஜர்கள், வேலை நிறுத்தம், ஊர்வலங்கள் என பல தடவைகள் மேற்கொண்ட போதிலும் இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அனைத்தும் பூச்சிய நிலையிலேயே உள்ளன

மீனவர்களுக்கிடையிலான தகராறுகள் இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் மயப்படுத்தப்பட்ட பிரச்சினையாகவே இன்று வளர்ந்துள்ளன.

எவ்வாறாயினும் போர் முடிவுற்ற காலப் பகுதியினுள் வடபகுதி மீனவர்கள் என்றுமில்லாதவாறு பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது மட்டும் உறுதியாகியுள்ளது. ஒருபுறம் இந்திய மீனவர்களும் மறுபுறம் இலங்கை தென்பகுதி மீனவர்களும் வடக்கு கடற்பரப்பையும், கரையோரப் பகுதிகளையும் ஆக்கிரமித்து நிற்கும் நிலை தொடர்ந்து அதிகரித்துள்ள போதிலும் சற்றேனும் இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகள் கண்டறியப்படவில்லை.

இந்திய மீனவர்களுக்கும், தென்பகுதி மீனவர்களுக்குமே இன்று வடக்கின் வசந்தம் வீசுகிறது ஒழிய வடபகுதி மீனவர்கள் அரசியல் சூறாவளிக்குள் சிக்கித் திக்கு முக்காடும் நிலையே தொடர்கிறது.

மூலம்: வீரகேசரி - ஆவணி 14, 2011

Edited by akootha

  • தொடங்கியவர்

லிபியா: இலங்கை தேயிலை ஏற்றுமதி பாதிப்பு

லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்புகள் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் தேயிலை ஏற்றுமதியில் கென்யா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருக்கின்ற இலங்கை, அதன் தேசிய பொருளாதாரத்தில் முக்கிய வருமானத்தை தேயிலை மூலம் ஈட்டி வருகின்றது.

ரஷ்யாவுக்கான பெரும்பகுதி ஏற்றுமதிக்கு அடுத்தபடியாக, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இரான், சிரியா, இராக், லிபியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இலங்கை தேயிலை ஏற்றுமதி செய்துவருகின்றது.

கடந்த பல மாதங்களாக லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் நீடித்துவருகின்ற அரசியல் குழப்ப நிலைமைகளும், இரான் மீது நீடிக்கின்ற பொருளாதார தடைகளும் தொடர்ந்தும் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சிப் போக்கையே காண்பிக்கும் நிலை உள்ளதாக கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை விரிவுரையாளர் கலாநிதி எம். கணேசமூர்த்தி தமிழோசையிடம் தெரிவித்தார்.

'தொழிலாளர்களையும் பாதிக்கும்'

ஏற்கனவே இலங்கையில் அதிகரித்துள்ள தேயிலை உற்பத்திச் செலவு தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுக்களில் முக்கிய விடயமாகி வருகின்ற நிலையில், இந்த புதிய ஏற்றுமதி வீழ்ச்சியும் தொழிலாளர்களுக்கே பலத்த அடியாக அமைந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொழிலாளர்களின் வேலை நாட்களைக் குறைப்பதன் மூலம் தேயிலை கம்பனிகள் தமது வருமான இழப்பைத் தவிர்க்க முயற்சிக்கலாம் என்றும் கலாநிதி எம்.கணேஷமூர்த்தி கருத்து தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான வர்த்தக உறவுகள் ஏற்கனவே அரசியல் காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேயிலையில் தன்னிறைவு அடைந்துள்ள இந்தியாவோ இலங்கையுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை வளர்த்து வருகின்ற சீனாவோ இந்த விடயத்தில் இலங்கைக்கு உதவ முடியாது என்றும் பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

http://www.bbc.co.uk...teaexport.shtml

Edited by akootha

சிறிய முதல்: நிறைவான வருமானம்

நாம் ஊரில் வாழ்ந்தகாலங்களை மீட்டால் எல்லா வீட்டிலும் கோழி, ஆடு, மாடு வளர்த்துள்ளோம்.

.

..

இந்த தொழிலை சுகாதாரமாகவும். சுத்தமான இடத்தில் ஒழுங்காக செய்தால் நாமும் முன்னேறலாம்.

...

..

- நன்றி பாலகுமார் தங்கராஜா

நல்லதொரு பதிவு.

இங்கு சொல்லப்படுகின்ற நுன் செயற்பாடுகளில் (micro activities) உள்ள நன்மைகள்:

செலவுகள் (over heads) குறைவு. எரிபொருள், நீர், நில விரையம் குறைவு.

ஒரு பெரிய தோட்டதில் ம‌ரக்கறி உற்பத்தி செய்து ஊருக்கு விற்கும் பொழுது

நீர் இறைக்கும் பம்பி,உழவு வாகனம், சந்தைக்கு கொண்டுசெல்லும் வாகனம், மருந்து தெளிக்கும் இயந்திரம் என்று எல்லாவற்றிற்கும் எரிபொருள் வேண்டும். இதே மரக்கறியை வீட்டுத் தோட்டத்தில் செய்தால் இந்த எரிபொருள் தேவையற்றது. அதே நேரம் ஒரு சிறிய வீட்டுத் தோட்டத்தை மிகவும் வினைத்திறன் ( efficient and effective ) மிக்க முறையில் ஒருவர் ஒரு அலகு நிலத்திற்கு அதிக விளைச்சல் தரக்கூடிய விதத்திலும் செய்ய முடியும். பெரிய தோட்டத்தை கமக்காரன் மரக்கறி செய்வதை விடுத்து வேறு வர்த்தக பெறுமதி கூடிய பயிர்களை உற்பத்தி செய்யலாம். உதாரணமாக எள்ளு, பாசிப்பயறு, உளுந்து, கௌபி ..

வீட்டுத் தோட்டம் சூழல் மாசடைவதையும் குறைக்கும்.

பாலை பாஸ்டர் (Pasteurization) செய்யும் உபகரணங்கள் மற்றும், சிறிய பொதி செய்யும் உபக‌ரணம் போன்றவற்றை இளைஞ்ஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டு முயற்சி மூலம் வாங்க முடியும். இவற்றை உள்ளூரிலும் உற்பத்தி செய்ய முடியும். இதன் மூலம் உள்ளூர் பால் தொழிற்துறை வளர முடியும். இந்த உபகரணங்கள் ஒப்பீட்டளவில் சிறியவை. குறைந்த முதலீடு போதும்.

கோழித்தீனி செய்யும் உபகரணங்களை உள்ளூரிலேயே செய்யலாம். இவற்றின் தொழில்நுட்பம் மிகவும் அடிப்படையானது / எளிமையானது. இதன் மூலம் கோழித்தீனியை உள்ளூரில் உற்பத்தி செய்யலாம். இதற்கு கடற்தொழிலில் வரும் தேவையற்ற‌ மீன் துண்டுகள், தானியங்கள் போன்றன தான் தேவை.

நல்லெண்ணை உற்பத்தி. இன்று ஏனைய எண்ணைகள் கான்சரை தோற்றுவிக்கின்றன என்று நம்பப்படுவதால் நல்லெண்ணைக்கு மீண்டும் கிராக்கி. உள்ளுர் எள்ளு உற்பதி மூலம் அவர்களுக்கு வருமானம். அதே நேரம் இயந்திர செக்கு வைத்து அதை ஒரு சிறிய தொழிற்சாலையாகவும் நடத்தலாம்.

சிறிய இரும்பு கடைச்சல் / வெல்டிங் தொழிற்சாலை. ஒப்பீட்டளவில் அதிக முதலீடு தேவையில்லை. இரும்பு அலுமாரிகள், கப்பேர்ட்டுகள், கட்டில்கள் போன்றன இவற்றின் மூலம் உள்ளூரில் உற்பத்தி செய்ய முடியும்.

.

Edited by esan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஐ.நா. அறிக்கையை உதாசீனம் செய்தால் பொருளாதார தடைகள் ஏற்படலாம் - சிங்கள வர்த்தக அமைப்புக்கள்

தொடர்ந்தும் ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பிரேரணைகளை உதாசீனம் செய்தால் மேற்குலகம் சிங்கள நாடு மீது பொருளாதார தடைகள் விதிக்கலாம் என அஞ்சுவதாக பல பாரிய வர்த்தக நிறுவனங்களின் சம்மேளனங்கள் கூறியுள்ளன.

Sri Lanka businesses warn against economic sanctions

Sep 02, 2011 (LBO) - Sri Lanka's large trade have criticized a report by a UN panel alleging human rights abuses in a civil war that ended in 2009, and warned against international economic sanctions.

The panel called for probes in to allegations of war crimes by both sides of the conflict in the latter stages of a 30-year war between the state and the Tamil Tiger separatists.

The report was issued by the Ceylon Chamber of Commerce, Federation of Chambers of Commerce and Industry of Sri Lanka, National Chamber of Commerce of Sri Lanka and the Joint Apparel Association Forum, based in Sri Lanka's capital Colombo.

The chambers said the Panel of Experts’ Advisory Report to the UN Secretary General on the final stage of the 30-year civil war that ended in May 2009 was biased, over-stepped its mandate and lacked credibility.

The business chambers said they were concerned about the contents of the advisory of the United Nations panel of experts saying it may impact on inter-ethnic confidence building and national reconciliation.

The Sri Lanka's ruling administration has also rejected the report by the UN panel of experts but it has been backed by the Tamil National Alliance, a minority party which won local polls in the north recently.

Pressure on Sri Lanka by the international community including economic sanctions would hurt ordinary people and affect the process of ethnic reconciliation, the trade chambers said.

"Economic stability will be pivotal to reparative justice and sustainable regeneration," they said.

http://www.lankabusi...p?nid=180790447

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.