Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறக்குமதி மூலம் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாது

Featured Replies

வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்திவிட முடியாது என அமைச்சர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹொரணை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது கருத்து வெளியிட்ட அவர், உள்நாட்டு உற்பத்திகளை உயர்த்துவதன் மூலம் மட்டுமே, பொருட்கள் சேவைகளின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியும் எனக் கூறினார்.

வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் எதிர்காலத்தில் வெளிநாடுகளிடம் கையேந்த நேரிடும். முக்கிய உணவுப் பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதே மிகவும் முக்கியமான இலக்காக அமைய வேண்டுமெனத் தெரிவித்தார்.

அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக அமைச்சர் ரட்னசிறி விக்ரமநாயக்க அண்மையில் பெரும் சர்ச்சைகளை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=6217

  • தொடங்கியவர்

கீழே சில அத்தியாவசிய பொருள்களின் விலைகள் ( கொழும்பு)

தேங்காய் - ரூபாய் 60

லீக்ஸ் கிலோ - ரூபாய் 150

பச்சி மிளகாய் கிலோ - ரூபாய் 500

தக்கலை கிலோ - ரூபாய் 372

உலகில் உயர்ந்துவரும் உணவு விலை, பல வளரும் நாடுகளில் பெரிய தாக்கத்தை உருவாக்கலாம்.

The food emergency

The global food scene is grim and the effect will penetrate the local market within months. An evaluation of the impact of the floods, especially the Maha paddy harvest, has still to be done - the government’s estimate is 14% but Cassandras say much higher. Rice price increases can be curbed since previous harvests have been good and buffer stocks are adequate. The vegetable scenario however is already very worrisome and worsening. Things could turn ugly by the middle of the year.

http://www.lakbimanews.lk/index.php?option=com_content&view=article&id=374:kumar-david-writes&catid=46:columns&Itemid=50

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் கடந்த 4 மாதமாக வெங்காயம், தக்காளி விலை அதிகமாக உயர்ந்திருந்தது. மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வெங்காயம் ரூ.80 வரை விற்கப்பட்டது. இதே போல் தக்காளி ரூ.60 வரை விற்கப்பட்டது.

6bca6f5c-c759-4b69-8387-6b03fdec27bc_S_secvpf.gif

வெங்காயம் விலையை குறைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்த நிலையிலும் ரூ.50 வரை வெங்காயம் விற்கப்பட்டது. நடுத்தர பெரிய வெங்காயம் ரூ.40 வரை விற்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் வெங்காயம் விலை ரூ.60 வரை உயர்ந்து விட்டது. தற்போது மழை காலம் முடிந்து வெயில் அடிக்க தொடங்கி விட்டதால் வெங்காய வரத்து அதிகமாக உள்ளது.

இதனால் விலை வேகமாக குறைந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் வெங்காய மொத்த கடையான நீல்கிரிசில் முதல் ரக பெரிய வெங்காயம் கிலோ ரூ.38க்கு விற்கப்படுகிறது. அதற்கு அடுத்த ரகம் ரூ.26க்கு விற்கப்படுகிறது. சுமாரான பெரிய வெங்காயம் கிலோ ரூ.20க்கு கிடைக்கிறது. இதை சில்லறை கடைக்காரர்கள் வாங்கி கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை லாபம் வைத்து விற்பார்கள். தற்போது கோயம்பேடுக்கு அதிக அளவில் வெங்காயம் வருவதால் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதே போல் தக்காளி கிலோ ரூ. 25 முதல் ரூ.28 வரை கோயம்பேட்டில் விற்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/2011/01/24112527/vengayam-in-tomato.html

எல்லா ஊர் நாட்டிலயும் விலைவாசி ஏறி போயிடுத்து .. :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.