Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடபகுதியில் ஒபரேசன் JPA; நடவடிக்கை; மஹிந்தவின் அடுத்த தந்திரம்

Featured Replies

ஈழநாதம் 02/02/2011 புதன் கிழமை

வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்பும் பணிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையினையும் சர்வதேச நிறுவனங்களையும் ஈடுபடுத்த அரசாங்கம் தீரானித்துள்ளது . "Joint Plan for Assistance for Northern Province in 2011" (JPA) எனப்படும் இந்த திட்டத்தில் அரசாங்கம், வடக்கு மாகாண சபை, ஐக்கிய நாடுகள் சபை, அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், அரச அதிபர்கள் ஆகியோர்கள் பங்குபற்றுவர்.

இவ்வாறான ஓர் பொறிமுறையினையே ஐக்கிய நாடுகள் சபை 2009 இல் அரசாங்கத்திடம் கொடுக்கப்பட்டபோது அரசாங்கம் அதனை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு சண்டித்தனமும் காட்டியது.

ஆனால் இப்போ அரசாங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக கூறுகின்றது.

இந்த திட்டத்தின்படி வடக்கில் நீண்டகால அபிவிருத்திக்கான தேவைகள் பகுப்பாய்வு ஒன்று செய்யப்படும், ஒருவருடம், மூன்று வருடம் என திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை வெளினாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள், ஐ, நா அமைப்புக்களுக்கு வழங்கபப்டும். இவர்கள் பணி செய்வார்கள். ஆனால் அரசாங்கமும் பங்காளியாக இதில் பங்குபற்றுமாம்.

ஏன் இந்த மாற்றம்?

அரசாங்கத்தினால் வடக்கை அபிவிருத்தி செய்ய முடியாது என்பது தெட்ட தெளிவு காரணம் சர்வதேச அமைப்புக்களை புறக்கணித்ததனால் நிதி உதவிகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை. எடுத்துக்காட்டாக அண்மையில் வெள்ள நிவாரணத்திற்கு கூட கேட்கபப்ட்ட 51 மில்லியன் டொலர் கிடைக்கவில்லை.

வடபகுதிக்கும் கேட்கப்பட்ட தொகை பெருமளவில் கிடைக்கவில்லை.

அண்மையில் இலங்கை விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவிகளுக்கான பணிப்பாளர் இராஜபக்‌ஷவை சந்தித்து கொடையாளர் ஏன் பின்னடிக்கின்றார்கள் எனவும் கூடவே ஐக்கிய நாடுகளின் பிரசன்னம் களத்தில் இருந்தால்தான் நிதியினை பெறமுடியும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையானது 2009 இல் பான்கி மூனிற்கு வாக்குறுதி அளித்ததன் படி பணிகளை நிறைவேற்றினால் மட்டுமே தம்மால் உதவ முடியும் எனவும் ஐ. நா ஆலோசனை கூறியுள்ளது.

பசில் இராஜபக்‌ஷ மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி நிதிகளுக்கான நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பசில் இராஜபக்‌ஷ மஹிந்தவிடம் விசேட அனுமதி பெற்றே இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வாங்கியுள்ளதாக தகவல். ஆனால் இதுபற்றி கோத்தபாய இன்னமும் வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவின் எதிர்பார்ப்பு

மஹிந்த இராஜபக்‌ஷ நிதி வளங்களை பெறுவதற்கான திட்டமே இந்த கூட்டுத்திட்டம் என்பது எல்லோருக்கும் தெரியும் கூடவே வெளி நாடுகளில் தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயர்களை இந்த கூட்டுத்திட்டம் மூலம் நிர்மூலமாக்கலாம் எனவும் திட்டமிடுகின்றார் மஹிந்த. ஆனால் யாரின் திட்டம் வெற்றி பெறப்போகின்றது என்பதனை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

http://www.eelanatham.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.