Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு நன்கொடையாளர்களின் நிதிக்கு என்ன நடந்தது? ஜே.வி.பி கேள்வி

Featured Replies

வெள்ள அனர்த்தத்திற்கு நிவாரணமாக வழங்கும் பொருட்டு பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் வழங்கிய பெருமளவிலான உதவிக்கு என்ன நடந்தது என மக்கள் விடுதலை முன்னணி இன்று புதன்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

ஊடகவியலாளர் மாநாடொன்றில் ஜே.வி.பியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா பின்வரும் விடயங்களை குறிப்பிட்டார்.

உலக உணவு திட்டம் 29 லொறி நிவாரண பொருட்களை வழங்கியது. சீனா 30 மில்லியன் ரூபா வழங்கியது. ஜப்பான் 27 மில்லியன் ரூபா வழங்கியது. அமெரிக்கா 300,000 டொலர் வழங்கியது. இதை விட ஒவ்வொரு அரச ஊழியரும் ஒரு நாள் சம்பளத்தை வழங்கினர்.

விமான நிலைய அதிகார சபை ஊழியர்கள் ஒரு மில்லியன் ரூபா நன்கொடை வழங்கினர். இந்தியா 25 தொன் நிவாரண பொருட்களை அனுப்பியது. இதைவிட ஐக்கிய நாடுகள் சபை 51 மில்லியன் அமெரிக்க டொலர் தரவள்ளது. பாகிஸ்தான் 100,000 அமெரிக்க டொலர் வழங்கியது. இத்தாலி 27 மில்லியன் யூரோ வழங்கியது. சீனா 165 மில்லியன் இன்னும் தரவுள்ளது.

இவ்வளவு பணமும், நிவாரண பொருட்களும் எங்கே போனது என அரசாங்கம் விளக்க வேண்டும் என ரில்வின் சில்வா கூறினார்.

முல்லைதீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய சென்ற ஜே.வி.யினர் அரச அதரவு சக்திகளால் துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்தியாராச்சி மீதான கொலை குற்றச்சாட்டை அரசாங்கம் வாபஸ் பெற்றுள்ளது. எல்.ரி.ரி.ஈயின் முக்கிய தலைவரான குமரன் பத்மநாதன் அரச பாதுகாப்புடன் பயணம் செய்கிறார் எனவும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/15894-2011-02-02-13-16-58.html

  • கருத்துக்கள உறவுகள்

ரில்வின், நீங்கள் ஒன்றாக இருந்த போது சுனாமிக்கு உலக நாடுகள் சுனாமிக்கு கொடுத்த காசுக்கணக்கே இன்னும் வரவில்லை.உங்களுக்கும், தற்போதைய அமைச்சர் அது தான் பிரச்சார பீரங்கிக்கும் தெரியாததா?.இப்போ நீங்கள் தனிமை பட்டதும் கேள்வி கேட்பது நல்ல முன்னேற்றம். கவனம்.மகிந்த தனக்கு எதிராக யார் கருத்து சொன்னாலும் தண்டனை வழங்குகிறார்.முடிந்தால் டுனீசியா, எகிப்து போல ஏதாவது மக்கள் புரட்சி செய்ய முடியுமா என பாருங்கள்.ஒரு காலத்தில் இனவாதிகளாக இருந்தவர்கள் இனி மாறிவிடுவீர்கள் என தமிழ் மக்கள் நினைக்கவே மாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.