Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செல்பேசி, கோபுரங்களால் உடல் நலக்கேடு

Featured Replies

செல்பேசி, கோபுரங்களால் உடல் நலக்கேடு

செல்பேசி பயன்படுத்துவதாலும், அதன் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள செல்பேசி கோபுரங்களினாலும் நினைவிழப்பு, கவனச் சிதறல், ஜீரணக் கோளாறு, தூக்கம் கெடுதல் உள்ளிட்ட பல உடல் நலக்கேடுகள் ஏற்படுகின்றன என்று மத்திய அமைச்சரவைக் கூட்டுக் குழு ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நுண்ணிரியல் துறை, தொலைத் தொடர்புத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த 8 வல்லுனர்களைக் கொண்ட குழு, செல்பேசிகளாலும், செல்பேசிக் கோபுரங்களாலும் ஏற்படும் பாதிப்பை அறியும் ஆய்வை மேற்கொண்டது.

இந்த ஆய்வின் அடிப்படை, செல்பேசி சேவை தரும் நிறுவனங்கள் சேல்பேசியில் இருந்தும், செல்பேசி கோபுரங்களில் இருந்தும் வெளியாகும் கதிர்வீச்சு அளவை உடல் ஏற்கும் அளவிற்கு உட்பட்டு வெளியிடுகின்றனவா (Specific Absorption Rate - SAR) என்பதை அறிவதும், அதற்கு மேல் இருப்பின் அப்படிப்பட்ட சேவைகளை நிறுத்துவதற்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பதாகும்.

தொலைத் தொடர்புத் துறை விதிமுறைகளின்படி,

1. மிக நெருக்கமான குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், விளையாட்டுத் திடல்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு அருகே செல்பேசி கோபுரங்கள் அமைக்கப்படக்கூடாது.

2. செல்பேசி கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதி்ர்வீச்சு (மின் காந்த அலை) 6 நிமிடத்திற்கு சராசரியாக ஒரு கிலோவிற்கு 2 வாட் அளவிற்கு 10 கிராம் சராசரி எடை அளவிற்குத்தான் இருக்க வேண்டும்.

3. எங்கெல்லாம் மக்கள் அதிக அளவிற்கு கதிர்வீச்சை எதிர்கொள்கின்றனரோ, அந்த இடங்களில் இந்த அளவை ஒரு கிலோவிற்கு 1.6 வாட் சராசரிக்கு குறைக்க வேண்டும்

என்று (இது அமெரிக்க அரசின் தொலைத் தொடர்பு ஆணையம் நிர்ணயித்துள்ள அளவாகும்) அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று இக்குழுவின் உறுப்பினர் முனைவர் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வில் பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் செல்பேசி கோபுரங்களில் இருந்து வெளிப்படும் மின் காந்த அலை அளவை நிர்ணயிக்கும் தேச கொள்கையும், வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வகுக்கப்படும் என்று இக்குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய அறிவியல் மருத்துவக் ஆய்வுக் கழகத்தின் முனைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியுள்ளார். இவை மத்திய சுகாதார அமைச்சகத்தின் நிபுணராக இக்குழுவில் இடம் பெற்றுள்ளார்.

“செல்பேசியை ஒருவர் பயன்படுத்தும்போது, அவருடைய தலைப்பகுதிதான் மிக அதிகமாக வெப்பமடைகிறது,

http://tamil.webdunia.com/miscellaneous/health/news/1102/03/1110203036_1.htm

  • தொடங்கியவர்

மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துவதினால் மூளைக்கட்டி ஏற்படும் ஆபத்து

மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் மற்றும் செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், தற்போது மூளைக்கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.

மொபைல் போன் அல்லது கார்ட்லெஸ் போனை அதிகமாக பயன்படுத்துவதினால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்து ஏராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக நீண்டகாலமாகவே பலவிதமான சர்ச்சைகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில்,தற்போது இந்தியாவின் குர்காவ் நகரில் உள்ள ஏபிஜே பொறியியல் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானி ஆர்.பி. துபே மற்றும் அவரது குழுவை சேர்ந்தவர்கள், மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துவதினால், அதிலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்க அலைகளால் ஏற்படக்கூடிய உடல் நல பாதிப்புகள் குறித்து மிக ஆழமாக ஆராய்ச்சி செய்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில்,மொபைல் போனை நீண்ட நேரம் பயன்படுத்தும்போது வெளிப்படும் கதிரியக்க அலைகளின் அளவு, உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்துவதாக உள்ளது தெரியவந்துள்ளதாக துபே தெரிவித்துள்ளார்.

http://tamil.webdunia.com/miscellaneous/health/articles/1101/28/1110128037_1.htm

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

  • Cell Phones Affect Areas of the Brain, Study Shows
  • But experts don't yet know if effect is harmful
  • particularly in children and adolescents whose brains are much more vulnerable to insults of certain kinds
  • you could follow the example of kids and teenagers and use text messaging, so the phone is nowhere near your head

- Feb. 23 issue of the Journal of the American Medical Association.

http://www.businessweek.com/lifestyle/content/healthday/650150.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.