Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாம் உலக யுத்தம் இல்லாமலே மாறப்போகிறது உலகம்!

Featured Replies

மூன்றாம் உலக யுத்தம் இல்லாமலே மாறப்போகிறது உலகம்..

அன்று உலகை மாற்றிய சுயஸ் கால்வாய் இன்று மறுபடியும் மாற்றப்போகிறது..

எகிப்திய அதிபர் கொஸ்னி முபாரக் பதவியில் இருந்து உடனடியாக விலகிப் போவது எல்லோருக்கும் நல்லது என்று முகமட் அல்பராடி தெரிவித்துள்ளார். மக்கள் விரும்பினால் தான் அடுத்த அதிபர் பதவிக்கும் போட்டியிட தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

பதினொரு தினங்களாக எகிப்திய அதிபர் கொஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டங்கள் தொடருகின்றன. தற்போது எகிப்தின் பல்வேறு சிறிய நகரங்களுக்கும் அது பரவியபடி உள்ளது. நேற்றிரவு ஆர்பாட்டக்காரரில் சிலர் படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஆனால் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்த காரணத்தால் இரத்தக்களரி இல்லாமலே விவகாரம் முடிவடைந்தது என்று சி.என்.என் தெரிவிக்கின்றது.

ஆனால் வீறு கொண்ட ஆர்பாட்டக்காரரில் சிலர் இஸ்ரேலுக்கு போகும் எரிவாயு குழாக்கு தீ வைத்துள்ளனர். பாரிய வெடிப்புடன் அது எரிந்து கொண்டிருக்கிறது. அதேவேளை கெய்ரோ தாகிர் பிளேஸ் நோக்கி எகிப்திய படைகள் அணிவகுத்து செல்ல ஆரம்பித்துள்ளன. ஆக இஸ்ரேல் விரும்பும் எகிப்து ஆட்சியை அங்குள்ள பலர் விரும்பவில்லையென்பது இந்தத் தீ வைப்பால் உணர்த்தப்பட்டுள்ளது.

இது இவ்விதமிருக்க நேற்று இரண்டு தடவைகள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கொஸ்னி முபாரக்குடன் பேச்சுக்களை நடாத்தினார். தொலைபேசி மூலம் நடந்த இந்த உரையாடலில் மக்களுடைய வேண்டுதலை முபாரக் கருத்தில் கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். முபாரக்கை பதவி விலகு என்று தெரிவிக்காவிட்டாலும் ஒபாமாவின் கருத்து அவருடைய வெளியேற்றத்திற்கு வழி காட்டுகிறது. மேலும் கெய்ரோவில் உள்ள தாகிர் பிளேசில் கூடிய ஆர்பாட்டக்காரர் பெரிய கம்பம் ஒன்றில் முபாரக்கின் உருவப் பொம்மையை தூக்கிலிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஆஸ்திரிய பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த முகமட் அல்பராடி எகிப்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளுக்கு தாம் உயர்நிலைப்பட்ட ஒருவராக தலைமைதாங்க விரும்புவதாக தெரிவித்தார். எதிர்க்கட்சிகளில் கூடுதலானவர்கள் இவருக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார்கள். இப்போது யார் தலைவர் என்று அறிவிக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் மக்கள் விரும்பினால் தாம் தேர்தலில் நிற்கவுள்ளதாக அவர் கூறினார். மேலும் இவரை ஒரு மேல்மட்ட ஆலோசகராக வைத்து எகிப்தின் தேர்தலில் மாற்றங்களை செய்வது அவசியம் என்றும் மேலை நாடுகளில் ஒரு கருத்துருவாக்கம் மலர்ந்துள்ளது.

ஆனால்…

யார் இந்த முகமட் அல்பராடி என்று அவதானிக்க வேண்டும். இவர்தான் ஐ.நாவின் அணு ஆயுத பரவல் கண்காணிப்புக் குழுவின் முக்கிய கண்காணிப்பாளராக பதவியேற்று ஈராக் சென்றவர். அங்கு அணு ஆயுதங்கள் இல்லை என்ற செய்தியை அறுதியிட்டு தெரிவிக்காமல் அடக்கி வாசித்தவர். இப்படியான ஒருவரின் வருகை அமெரிக்க சார்பு கொள்கையை பாதுகாப்பதாகவே அமையும் என்பது கவனிக்கத்தக்கது. கொஸ்னி முபாரக்கிற்கும் இவருக்கும் இடையே கொழுக்கட்டைக்கும் மோதகத்திற்கும் உள்ள வித்தியாசமே இருப்பது கடந்த கால வரலாற்றுச் சான்றாகும்.

எகிப்து என்ற பலம் கொண்ட தேசம் முன்னைய ஜனாதிபதி நாஸர் காலத்தில் இஸ்ரேலின் தாக்குதலுக்குட்பட்டது. அதன் பின்னர் எகிப்தின் கடந்த நாற்பதாண்டுகால அரசியல் பழைய ஈரான் ஷா காலத்து ஆட்சி போலவே இருந்தும் வருகிறது. எகிப்தில் உள்ள முடிச்சு பாலஸ்தீன பிரச்சனையுடன் இணைக்கப்பட்டு, அரபுலீக், துருக்கி, லிபியா போன்ற மத்தியகிழக்கு வட ஆபிரிக்க வட்டகைவரையான அரசியல் இயங்கியலுடன் தொடர்புபட்டு நிற்கிறது.

பாலஸ்தீன விவகாரம் சூடு பிடிக்கும்போதெல்லாம் எகிப்திய அதிபர் அதில் முக்கிய பாத்திரம் வகிப்பார், பின் அது சுக்குநூறாக உடைந்துபோக அமைதியும் காப்பார். 1453 ல் துருக்கியர் கொன்ஸ்தாந்திநேபிளை கைப்பற்றிய பின்னர் ஆபிரிக்காவை சுற்றிய கடற்பயணங்களும் குடியேற்ற நாடுகளின் கண்டு பிடிப்புக்களும் அரம்பித்தது. பின் சுயஸ்கால்வாயின் வரவு வர்த்தகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

சுயஸ்கால்வாய் உள்ள ஒரு நாடு மக்கள் ஆட்சியின் கைகளில் போவதை மேலை நாடுகள் ரசிக்கப் போவதில்லை. இத்தனைக்கு பிறகும் முபாரக் பதவி விலகாமல் இழுத்தடிக்க அவருக்கு பின்னால் இருக்கும் மேலை நாடுகளே காரணமாகும். இத்தாலிய ஊழல் பிரதமர் சில்வியோ பலர்ஸ்கோனியின் நேற்றைய கருத்து இதற்கு ஓர் உதாரணம். எகிப்தில் முபாரக் ஏமாறப் போகிறாரா இல்லை மக்கள் ஏமாறப் போகிறார்களா என்பதே முக்கிய கேள்வியாகும். ஆனால் இன்று மக்கள் ஏமாற்றப்பட்டால் நாளை இதைவிட மோசமான மக்கள் புரட்சி வெடிக்கும் என்பதே யதார்த்தமாக உள்ளது.

அன்று சுயஸ் கால்வாயின் வரவு எப்படி உலகத்தை புரட்டிப் போட்டதோ அதுபோல எகிப்தில் ஏற்பட்டுள்ள இந்த ஆர்பாட்டம் ஐ.நாவை புரட்டிப்போட்டு உலக மக்கள் சக்தி வீறு கொள்ள வழிசமைக்கலாம். கடந்த 2003 ல் ஐ.நாவின் ஆணையை புறக்கணித்து போருக்கு போன அமெரிக்கா பிரிட்டன் செய்த செயலை உதாரணம் காட்டி உலக மக்கள் வெள்ளம் புதிய பாதையில் சரியப்போகிறது. மூன்றாவது உலக யுத்தம் இல்லாமலே ஓர் உலக மாற்றம் வருவதை உணர்த்துகிறது எகிப்து. உலகின் புதிய நாகரிகம் தோன்றிய மண்ணில் இருந்து அது உருவாவனால் அதிசயப்பட எதுவும் இல்லை.

உலகம் முழுவதும் பொழியும் பெருமழை காலநிலை மாற்றம், உலகப் பொருளாதார மந்தம், வறுமை, பட்டினி, என்ற கொடுமைகள் உலக மக்களை ஏதோ ஒரு புதிய விடிவுதேடி இயங்க வைக்கும். அரசியல், பொருளாதாரம், பயங்கரவாதத்திற்கு அப்பால் உலக மக்கள் உயிர்வாழ ஒரு மாற்றம் அவசியம் என்பதற்கான பொறி எகிப்தில் விழுந்துள்ளது. வரும் மாதங்களில் இதுபோன்ற எழுச்சிகளை மேலும் பல நாடுகளில் காண்டாலும் ஆச்சரியப்பட முடியாது.

http://www.alaikal.com/news/?p=56403#more-56403

  • தொடங்கியவர்

சுயஸ் கால்வாய்

  • சுயஸ் கால்வாய் எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாய் ஆகும்.
  • இது மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கிறது.
  • 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்ட இக்கால்வாய் 1869 இல் திறக்கப்பட்டது.
  • இக் கால்வாய் வெட்டப்பட்டமையால் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான கப்பற்போக்குவரத்து மிக இலகுவானது.
  • அதன்முன்னர் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D

Edited by akootha

  • தொடங்கியவர்

ஒபாமா நிர்வாகமும், எகிப்தும்

Barry Grey and David North, 31 January 2011

எகிப்தில், அதிகரித்துவரும் ஒரு புரட்சிகர போராட்டத்தை ஒபாமா நிர்வாகம் முகங்கொடுத்து வரும் வேளையில், அதன் தந்திராபாயங்கள் பிரிக்கமுடியாமல் இருக்கும் இரண்டு மூலோபாய நோக்கங்களிலிருந்து உருவாகி வரக்கூடும்:

  1. ஒன்று எகிப்திய முதலாளித்துவ அரசை காப்பாற்றுவது,
  2. மற்றது மத்தியதரைக்கடல், வட ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கு முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கைகளின் அச்சாணியாக அந்த நாட்டை தக்கவைப்பது.

எகிப்திய தொழிலாள வர்க்கமும், போர்குணமிக்க மக்களோடிருக்கும் அதன் கூட்டாளிகளும் ஜனாதிபதி ஒபாமாவின் நோக்கங்கள் மற்றும் திட்டங்களில் நப்பாசை வைப்பதற்கு சிறிதும் இடம் கொடுத்துவிடக் கூடாது. ஜனாதிபதியும், பெண்டகன் மற்றும் CIAஇல் உள்ள அவருடைய ஆலோசகர்களும் புரட்சிகர போராட்டத்தை அடக்கவும், தணிக்கவும், முடிவாக அதை நசுக்கவும் துணிந்துள்ளன.

கடந்த வாரம் நடந்த நிகழ்வுகள் நிர்வாகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அது வாஷிங்டனின் நீண்டகால சொத்தான முபாரக்கிற்கு எதிராக இந்தளவிற்கு பெருந்திளரான எழுச்சி இருக்குமென்று எதிர்பார்த்திருக்கவில்லை. கடந்த வியாழனன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், இளைஞர்களும் பொலிஸ் வன்முறையை எதிர்த்து கொண்டிருந்த போது, அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் அந்த ஆட்சியின் ஸ்திரப்பாட்டிற்கு உறுதி மொழி வழங்கிக்கொண்டிருந்தார்.

முபாரக்கின் ஆட்சியில் அமெரிக்கா பாரியளவில் அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், மற்றும் இராணுவரீதியாகவும் முதலீடு செய்துள்ளது. சுருக்கமாக, சர்வாதிகாரியைக் கைவிடுவதில் அதற்கிருக்கும் தயக்கம், ஓர் உணர்ச்சிப்பூர்வ வெளிப்பாடல்ல. மாறாக, முபாரக்கிற்கு வேகமாக குழிபறிப்பதென்பது, CIA பட்டியலில் இருக்கும் மற்ற சர்வாதிகாரிகள் வாஷிங்டன் மீது கொண்டிருக்கும் நம்பகத்தன்மைக்கு குழிபறிப்பதாக போய் முடியும் என்று அது அஞ்சுகிறது. எவ்வாறிருப்பினும், பகுப்பாய்வின் இறுதியில், முபாரக்கின் எதிர்காலம் இரண்டாவதுபட்சம் தான். முதலாளித்துவ ஆட்சி எதைச் சார்ந்திருக்கிறதோ அந்த எகிப்திய இராணுவம் மற்றும் பாதுகாப்பு சேவைகளை காப்பாற்றுவது தான் வாஷிங்டனுக்கு ஒப்பிடமுடியாதபடிக்கு மிகப் பெரிய கவலையாக உள்ளது.

இப்போதைய நிலையில், போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவத்தைப் பயன்படுத்தும் ஒரு முயற்சியானது இராணுவ பொறிவிற்கு இட்டுச் செல்லக்கூடும் என்று ஒபாமா நிர்வாகம் அஞ்சுகிறது. கெய்ரோ, அலெக்சாண்டிரியா மற்றும் போர்ட் செய்டு மற்றும் ஏனைய நகரங்களின் வீதிகளில் இறங்கியிருக்கும் குடிமக்களைத் துருப்புகள் சுட்டுத்தள்ளுவதை அது ஏற்றுக்கொள்ளும் என்பது நிச்சயமில்லை. ஆனால் முபாரக்கைக் காப்பாற்றுவதற்கு இது மட்டும் தான் ஒரேவழியாக உள்ளது.

அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள், இதற்கு முன்னர் 1979 ஈரானிய புரட்சியால் துரத்தப்பட்டுள்ளனர். அப்போது ஷாவிற்கு ஓர் அரசியல் மாற்றீட்டை வாஷிங்டன் தயாரித்திருக்கவில்லை என்பதுடன், ஈரானிய இராணுவம் புரட்சியின் அழுத்தத்திற்கு இடையில் உடைந்துபோனது. அதன் விளைவு, பாரசீக வளைகுடாவில் ஒரு முக்கிய துணை-அரசை இழக்க வேண்டியதானது.

வாஷிங்டனில் உருவாக்கப்பட்டு வரும் குறுகிய கால கொள்கை, இரண்டு நோக்கங்களைக் கொண்டுள்ளது: எகிப்திய இராணுவம் மற்றும் உளவுபார்க்கும் அமைப்புகளை கூர்மையாக்குவது -இதற்காகத்தான் உளவுத்துறை தலைவரும் முன்னாள் தளபதியுமான ஒமர் சுலெய்மானின் துணை ஜனாதிபதி நியமனம்- அடுத்தது, முபாரக்கின் நீக்கம் அவசியமானால், அவருக்கு ஓர் அரசியல் மாற்றைத் தயாரிப்பது. ஆனால் வாஷிங்டனால் காட்டப்படும் எந்த மாற்றீடும், ஒரு புதிய இராணுவ ஆட்சிக்கு ஒரு போலி-ஜனநாயக மூடுதிரையை வழங்கும் ஒரு கைப்பாவை ஆட்சிக்கு மேல் வேறெதுவுமாக இருக்கப்போவதில்லை.

அந்த வேலைக்கான ஒரு வேட்பாளர் தான், அமெரிக்க ஊடகங்களால் தூக்கிவிடப்பட்டு வரும் மொஹமெத் எல்பராடே. எகிப்திய முதலாளித்துவத்தின் ஒரு நம்பகமான பிரதிநிதியான எல்பராடே, தலைதூக்கிவரும் ஒரு புரட்சியைத் தூக்கியெறிந்து, முதலாளித்துவ ஆட்சியை காப்பாற்றும் வெளிப்படையான நோக்கில் கடந்த வாரம் வியன்னாவிலிருந்து அவருடைய நாட்டிற்குப் பறந்தார்.

வாஷிங்டனிடமிருந்து ஆதரவைப் பெற அதன் சொந்த பேரத்தைச் செய்துவரும் முஸ்லீம் சகோதரத்துவம் (Muslim Brotherhood), அதன் பங்கிற்கு எல்பராடேயை ஆதரிக்க உடன்பட்டுள்ளது.

எதிர்ப்புரட்சி மூலோபாயத்திற்கான அடிப்படை வடிவத்தை வெள்ளை மாளிகை தயாரித்து வருவதாக, ஞாயிறன்று ஒரு தொடர்ச்சியான தொலைக்காட்சி நேர்காணல்களில் அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலளர் ஹிலாரி கிளிண்டன் தெளிவாக குறிப்பிட்டார். முபாரக் ஆட்சியைத் தொடர்ந்து கொண்டிருப்பது குறித்து கருத்து கூற மறுத்ததுடன், அவரின் இராஜினாமாவிற்கு அழைப்புவிடுப்பதையும் அந்த பெண்மணி தவிர்த்தார்.

எகிப்தில் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான ஒபாமா நிர்வாகத்தின் குற்றத்தன்மைவாய்ந்த வேண்டுகோள்களுக்கு ஒத்தவகையில், கிளிண்டனும் ஏளனமான அறிக்கையை வெளியிட்டார்: “எகிப்திய மக்களின் நியாயமான விருப்பங்களுக்குப் பிரதிபலிப்பு காட்டுமாறும், அமெரிக்கா 30 ஆண்டுகளாக செய்ததுபோல் ஜனநாயக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஸ்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்குமாறும் நாங்கள், எகிப்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.” [அழுத்தம் சேர்க்கப்பட்டது]

எகிப்தில் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான இந்த 30-ஆண்டுகால சிலுவையுத்தம் எவற்றை கொண்டுள்ளது? 35 பில்லியன் டாலர் உதவியுடன் முபாரக்கை வலுவூட்டியது, இராணுவத்தைப் பலப்படுத்தியது, மற்றும் ஈராக்கிற்கு எதிராகவும், இஸ்ரேலின் பாதுகாப்பு, மற்றும் “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" ஆகியவற்றில் ஓர் உறுதியான கூட்டாளியாக முபாரக்கை மெச்சியது ஆகியவற்றைத் தான் கொண்டுள்ளது. அந்த ஆட்சியின் அரசியல் எதிரிகளின் படுகொலை மற்றும் சித்திரவதையில் அமெரிக்கா இரகசியமாக சதிசெய்தது மட்டுமில்லாமல், சட்டவிரோத பயங்கரவாதிகளை கடத்துதல், “ஒப்படைத்தல்" ஆகியவற்றில் வாஷிங்டனின் கொள்கைக்கு முபாரக்கின் உளவுத்துறை மற்றும் பொலிஸை வாடகை-சித்திரவதையாளர்களாக அது பயன்படுத்தியுள்ளது.

கிளிண்டன் தொடர்ந்து கூறியது, “தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டிய அமைதியான போராட்டக்காரர்களுக்கும், அங்கிருக்கும் நிலைமைகளைப் பயன்படுத்தி கொள்ளையடிப்பதையும், ஏனைய குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கும் இடையில் அவர்கள் [எகிப்திய இராணுவம்] செயல்பட்டு வருவதற்காக, அவர்களை நாம் பாராட்டியாக வேண்டும்.”

இங்கே கிளிண்டன் "நியாயமான" மற்றும் "அநியாயமான" போராட்ட வடிவங்களுக்கு இடையில் வேறுபடுத்திக் காட்டுகிறார்-முந்தையவர்கள் அமெரிக்க நலன்களுக்கு சவால்விடாதவர்கள், இரண்டாவது வகையினர் அவ்வாறு செய்பவர்கள். அந்த பெண்மணி எதிர்கால மக்கள் ஒடுக்குமுறையை நியாயப்படுத்த, அரசியல் மற்றும் போலித்தனமான-நீதிநெறி கட்டமைப்பிற்கு அஸ்திவாரமிடுகிறார்.

எந்த அரசாங்கத்தை அது முன்மொழிந்தாலும் அது எகிப்தின் அரசியல் நெருக்கடியைத் தீர்க்கப் போவதில்லை என்பது வாஷிங்டனுக்கு நன்கு தெரியும். மக்களின் சமூக அல்லது அரசியல் கோரிக்கைகளான வேலைகள், நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் வறுமையை ஒழிப்பது, மற்றும் காட்டுமிராண்டித்தனமான பொலிஸ் முகமைகளின் ஒடுக்குமுறையைக் கைவிடுவது என்ற ஒன்றே ஒன்றைக்கூட எந்த முதலாளித்துவ ஆட்சியிலும் தீர்ப்பது சாத்தியமில்லை. அல்லது முபாரக்கிற்கு முன்னாலிருந்த ஜனாதிபதி அன்வர் சதாக் 1977இல் ஜெருசலேமிற்கு விஜயம் செய்திருந்ததிலிருந்து, மத்தியகிழக்கில் அந்நாட்டின் மூலோபாய பாத்திரத்தில் ஒரு முக்கிய உட்கூறாக இருந்துவரும் இஸ்ரேலுடன் எகிப்தின் கூட்டணியை எந்த முதலாளித்துவ ஆட்சியும் முடிவுக்குக் கொண்டு வந்துவிட போவதில்லை. இதுபோன்ற கொள்கைகளைச் செயல்படுத்த, கைக்கூலி எகிப்திய முதலாளித்துவம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு முழுமையான தொங்குதசையாக உள்ளது.

ஆகவே ஒபாமா நிர்வாகத்தின் மூலோபாயம், ஒரு போலித்தனமான "சீர்திருத்த" நிர்வாக வேஷத்திற்குப் பின்னாலிருந்து, தொழிலாள வர்க்கத்தின்மீது ஓர் எதிர்கால காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையைக்காக இராணுவத்தை தயார் செய்வதாகும். இந்த காட்சிகளுக்கெல்லாம் பின்னால், முடிவெடுப்பதில் எந்த படைகளைச் சார்ந்திருக்கலாம் என்பதற்காக ஒவ்வொரு துணைப்படை, படைப்பிரிவு மற்றும் எகிப்திய இராணுவத்தின் பிரிவுகளைக் குறித்து பெண்டகன் விளக்கமான கணக்கெடுப்பைச் செய்து கொண்டிருக்கிறது என்பதிலும் ஒருவர் நிச்சயமாக இருக்கலாம்.

புரட்சியின் முன்நிற்கும் எரியும் பிரச்சினையாக இருப்பது, அரசியல் தலைமையாகும். அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு இந்த உண்மை மிகத் தெளிவாக தெரியும். ஞாயிறன்று வெளியான ஒரு நேர்காணலில், வாஷிங்டனின் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தைச் சேர்ந்த ஜொன் பி. அல்டர்மென் கூறியது, “துனிசியாவைப் போன்றே, போராட்டக்காரர்கள் ஒரு பெரிய தலைமையில்லாத போராட்டத்தை எவ்வித தெளிவான திட்டமும் இல்லாமல் பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிகிறது; இதைக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு வழியே இல்லை.”

இந்த அரசியல் வெற்றிடத்தைத் தான் அமெரிக்க ஏகாதிபத்தியமும், எகிப்திய ஆளும் வர்க்கத்தில் உள்ள அதன் துணைவர்களும் சுரண்டப் பார்க்கிறார்கள்.

எகிப்திய தொழிலாள வர்க்கம் நம்பிக்கை மற்றும் அனுபவத்தைப் பெற்று வருகின்றன. தற்போதிருக்கும் அரசிடமிருந்து சுயாதீனப்பட்டும் அதற்கு விரோதமாகவும் மக்கள் பிரதிநிதித்துவத்தின் புதிய வடிவங்கள் அந்நாடு முழுவதும் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளன. ஆனால் வரலாற்று பின்புலத்தில், சர்வதேச சூழலில், எகிப்திலும் மத்தியகிழக்கு முழுவதிலும் கட்டவிழ்ந்து வரும் புரட்சிகர இயக்கத்தின் வர்க்க இயக்கவியலை புரிந்துகொண்டதன் அடிப்படையில், புரட்சிகர சக்திகளின் அபிவிருத்திக்கு ஒரு தெளிவான அரசியல் மூலோபாயம் தேவைப்படுகிறது.

இத்தகைய முக்கிய சந்தர்ப்பத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எகிப்திய தொழிலாள வர்க்கத்திற்கும், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் இருக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் இந்த ஆழ்ந்த மனப்பூர்வ அழைப்பை முன்வைக்கிறது: இருபதாம் நூற்றாண்டின் வரலாற்று அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் கோட்பாடுகள், தற்போது கட்டவிழ்ந்து வரும் போராட்டத்திற்கு மிக ஆழமாக பொருந்தி நிற்கின்றன. புரட்சியின் வெற்றி மற்றும் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்கான உங்களின் விருப்பம் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அதிகாரத்திற்கான போராட்டத்தில் மட்டுமே அடையப்படமுடியும். முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அமைப்புகளின் எந்த அரசியல் பிரதிநிதித்துவம் முன்னிருத்தப்பட்டாலும் அதை நம்புவதற்கில்லை. போலி-ஜனநாயக மற்றும் தேசிய முதலாளிகளோடு சமரசப்பட்ட பிரதிநிதிகளின் மத்தியில் அல்லாமல், மாறாக, உலகமெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் கூட்டாளிகளை காணுங்கள். ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தொழிலாளர்கள் அவர்களின் சமூக நிலைமைகளிலும், ஜனநாயக உரிமைகளிலும் இன்னும் இன்னும் அதிகமான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அவர்கள் வட ஆபிரிக்காவில் தொடங்கியுள்ள புரட்சிகர போராட்டங்களில் இருந்து புதிய உட்தூண்டுதல்களைப் பெற்று வருகிறார்கள்.

http://www.wsws.org/tamil/articles/2011/fer/110201_theobama.shtml

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணைப்பின் மூலம், பல விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது. நன்றி அகூதா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.