Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிவரை விட்டுக்கொடுக்க வேண்டாம் - எகிப்த்திய ஜனாதிபதிக்கு அமெரிக்கத் தூதுக்குழு பரிந்துரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிவரை விட்டுக்கொடுக்க வேண்டாம் - எகிப்த்திய ஜனாதிபதிக்கு அமெரிக்கத் தூதுக்குழு பரிந்துரை

ஜனநாயகப் புரட்சியாளர்களின் கோரிக்கைக்கு இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் போராடும்படி "கிளின்ரன் - ஒபாமா" நிர்வாகத்தின் தூதுக்குழு ஒன்று எகிப்திய சர்வாதிகாரியான ஒஸ்னி முபாரக்கிற்கு அறிவுறுத்தியிருக்கிறது. "முபாரக் அவர்கள் தொடர்ந்தும் பதவியில் இருப்பது எம்மைப்பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானது, அவரது அத்தியாயத்தை நாம் எழுதவேண்டும்" என்று முன்னால் அமெரிக்க ராஜதந்திரியும், தற்போது அமெரிக்காவின் தூதுக்குழுவிற்குத் தலமைதாங்கி எகிப்திற்குச் சென்றவருமான பிரான்க் விஸ்னர் அவர்கள் கூறியதாக தி இன்டிபெண்டென்ட் நாளிதழில் ரொபேட் பிஸ்க் அவர்கள் எழுதியிருக்கிறார். இவ்வாறே 2009 இல் தமிழீழ மக்களும் அவர்களது போராளிகளும் சிங்கள இனவழிப்பு ராணுவத்தால் சூழப்பட்டிருந்த வேளையில் இன்னொரு அமெரிக்க ராஜாங்கத் திணைக்கலத்தின் முன்னால் அதிகாரியான பென்னெட் ரம்பேக் அவர்கள் "போர் முடிவு காணப்படும்வரை கொண்டுசெல்லப்பட வேண்டும்" என்று சிங்கள அரசுக்கு அறிவுரை கூற அனுப்பப்பட்டிருந்தார். " இனத்தினடிப்படையிலான உள்நாட்டு யுத்தங்கள் தீர்மானமான ராணுவ வெற்றிகளின் மூலம் முடிவு கட்டப்பட முடியும்" என்று அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். இன்னொரு ராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரியான ரிச்சேட் ஆர்மிடேஜ் அவர்கள் மகிந்தவை உற்சாகமளிக்கும் பொருட்டு அண்மையில் கொழும்பு சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

"ஒபாமா நிர்வாகம் சரித்திரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளிற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட வேண்டும்" என்று ரம்பேக் அவர்கள் ஆலோசனை கூறியது போலவே ஐ.நா செயலாளரும், "முடிவு காணும்வரை போரை கொண்டு நடத்துங்கள்" என்று தலையாட்டி சிங்களத்துக்கு அனுமதியளித்தத்தாகக் கருதப்படுகிறது.

2009 பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி வெளிவந்த இன்னெர் சிட்டி பிரஸ் செய்திகளின்படி ஐ.நா செயலாளர் நாயகம் வெளிப்படையாக போர்முயற்சிகளைத் தளர்த்தும்படி கேட்டிருந்தாலும், போரைத் தொடர்ந்து நடத்துவதற்கான சமிக்ஞையை அவர் ரகசியமாக சிங்கள அரசுக்கு வழங்கியிருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

நவம்பர் 2008 இல் கொழும்பின் இனவழிப்பு ராணுவம் செய்ய வேண்டியது என்னவென்பதை சூட்சுமமாகத் தெரிவித்த அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் பிராந்தியத் தளபதி கொமாண்டர் திமோத்தி கீடிங் அவர்கள், "இலங்கை ராணுவம் தாம் என்ன செய்யவேண்டுமென்பதில் சரியான நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்குத் துளியளவேனும் சந்தேகமில்லை" என்றும் கூறியிருந்தார்.

"இலங்கை ராணுவம் அடைந்துவரும் முன்னேற்றம் எமக்கு மிகுந்த திருப்தியையும், உறுதியையும் தந்திருப்பதோடு, அது தான் இன்னும் என்ன செய்யவேண்டுமென்பதிலும் தெளிவாக இருக்கிறது" என்றும் கூறியிருக்கிறார்.

லட்சக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் உலகத்தின் தெருக்களில் இறங்கித் தமது சொந்தங்கள் மீதான படுகொலைகள் நிறுத்தப்பட் வேண்டும் என்றும், தமது நீண்டகால பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கவேண்டும் என்றும் ஓலமிட்டு அழுதபோது இந்த மேற்குநாட்டு அரசாங்கங்கள் அவற்றை ஏறெடுத்துப் பார்க்கத் தவறியதோடு "தீவிரவாதிகளின் எற்பாடு" என்றும் கூறிப் புறக்கணித்தன.

வெளிநாட்டு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்ட தமிழர்கள் சிலர் கூட, ஆர்ப்பாட்டங்களில் தமிழர்கள் தாங்கிச் சென்ற அடையாலங்களால்த்தான் மேற்குநாட்டு அரசுகள் அப்போராட்டங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்று கூறவும் தலைப்பட்டிருந்தனர்.

அப்படியானால் இன்று எகிப்தின் வீதிகளில் சுதந்திரம் கேட்டு அலைந்து திரியும் மக்கள் கூட்டம் கைகளில் காவித்திரிவது எந்தவிதமான அடையாலங்களை? இந்த அடையாலங்களால்த்தான் தம்மை "ஜனநாயகத்தின் காவலர்கள்" என்று பீற்றிக்கொள்ளும் மேற்குநாட்டு அரசுகள் அம்மக்கள் மீதான அடக்குமுறைட்யை இறுதிவரை தொடருமாறு எகிப்தின் சர்வாதிகாரியைக் கேட்டு வருகின்றனரா?

ஒபாமாவால் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட விஸ்னர் அவர்கள் தனது கூற்று சர்ச்சையைக் கிளப்பி இருக்கும் நிலையில், அது தனது "தனிப்பட்ட கருத்து" என்று கூறிச் சமாளிக்க முற்பட்டிருக்கிறார்.

ஆனால் எகிப்து ராணுவத்தின் பாதுகாப்பு ஆலோசகராக, எகிப்தின் அபிவிருத்தித் திட்டங்களைப் பராமரிக்கும் சக்தியாகச் செயற்படும் ஒரு அமெரிக்கக் கம்பெனியின் ஊழியரான வின்ஸர் அவர்களையே எகிப்துக்கு தற்போது அனுப்பவேண்டியதன் தேவை என்ன என்று ரெபேட் விஸ்க் அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தன்னால் தற்போதைய மக்கள் எழுச்சியைப் பற்றி எகிப்திய ஜனாதிபதிக்கு அறுவுரை கூற அனுப்பப்பட்டவர் அந்த சர்வாதிகாரியின் பாதுகாப்பு விவகாரங்களையும், அபிவிருத்தித் திட்டங்களையும் கைய்யாளும் ஒரு அமெரிக்க நிறுவனத்தின் ஊழியரென்பது தனக்குத் தெரியாது என்று கிளாரி கிளின்ரன் சொல்வதை எப்படி நம்ப முடியும் ? இதே அதிகாரி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தில் 36 வருடங்கள் சேவையாற்றியுள்ளர் என்பது, அவர் முன்னர் எகிப்து, சம்பியா, பிலிப்பைன்ஸ், இந்தியா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கத் தூதுவராக கடந்த 8 அமெரிக்க ஜனாதிபதிகளின் கீழ் செயலாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஸ்னர் அவர்கல் கடந்த இரு வருடங்களாக சேவையாற்றிவரும் அமெரிக்க நிறுவனத்தின் சட்டப்பிரிவு, எகிப்தின் பிரபல வர்த்தகக் குடும்பங்கலைப் பிரதிநிதிப்படுத்துவதோடு, இந்தக் குடும்பங்கள் சார்பாக எகிப்தின் எண்ணெய், எரிவாயு மற்றும் தொலைத்தொடர்புத் துறையிலும் ஈடுபட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்காளி நிறுவனமொன்று எகிப்து - அமெரிக்க வர்த்தகச் சம்மேளனத்தின் தலமைப்பதவியை வகிப்பதோடு வெளிநாட்டு முதலீடுகளை எகிப்தில் ஊக்குவிக்கவும் செயலாற்றி வருகிறது. இதே நிறுவனம் அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தங்களின் பிணக்குகள் சம்பந்தமாக பணியாற்றி வருவதுடன், அமெரிக்கா வருடாந்தம் 1.3 பில்லியன் டாலர் பெறுமதியான ராணுவ உபகரணங்களை எகிப்திற்கு வழங்கி வருகிறது.

"விஸ்னர் அவர்கள் அவசரத் தூதுவராக எகிப்திற்கு அனுப்பப்பட்டிருப்பது ஒபாமா அவர்கள் கிளின்ரனை மேவி செயலாற்றியிருப்பதைத்தான் காட்டுகிறது" என்று அமெரிக்க ஆய்வாளரான நிக்கலஸ் நோ அவர்கள் கூறியிருக்கிறார்.

விஸ்னர் அதிகாரியாகப் பணிபுரியும் "பட்டொன் பொக்ஸ்" நிறுவனம், அவரின் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா பற்றிய அறிவு, அனுபவம் என்பவற்றிற்காக தனது அமெரிக்க மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு இணங்கவே பணியில் அமர்த்தியிருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறது.

மக்கள் எழுச்சியின் நோக்கமே தனது குடும்பங்களினூடாக எகிப்தின் செல்வங்களைத் திரட்டி வைத்திருக்கும் முபாரக்கினை வீழ்த்துவதும் அதனூடாக அவரது வர்த்தக மற்றும் அரசியல் வலையமைப்பை உடைப்பதுதான் என்று மேலும் எழுதியுள்ள பிஸ்க் அவர்கள், எகிப்திய சர்வாதிகாரிக்கு இந்த ஆலோசகர் எவ்வகையான ஆலோசனைகளை வழங்கப்போகிறார் என்று தெரியவில்லை என்று குறிப்ப்ட்டிருந்தாலும், அவரது கடந்த வார பேச்சுக்கள் அவரது ஆலோசனைகள் சர்வாதிகாரியை மேலும் சில மாதங்களுக்கு பதவியில் அமர்த்தியிருக்கவே வழங்கப்பட்டிருக்கும் என்பது தெளிவாகிறது.

"அமெரிக்கா இப்போது தனது நண்பனின் பிரச்சனையை இன்னொரு ஒப்பந்தக்காரரின் கைய்யில் கொடுத்திருக்கிரது" என்று நிக்கொலஸ் நோ கூறியிருக்கிறார்.

ஈழத்தமிழரின் சுதந்திரம் தொடர்பான சட்ட வேலைப்படுகளில் தற்போது ஈடுபட்டு வரும் தமிழர் ஒருவர், ஆமிட்டேஜின் தற்போதைய இலங்கைப் பயணத்தின் அடிப்படைகளை ஆராய்வது ஈழத்தமிழரைப் பொறுத்தவரையில் அவசியமானது என்று கூறியிருக்கிறார்.

அடிப்படைப் பிரச்சனை என்னவென்றால், வியட்னாம் யுத்த காலத்திலிருந்த அரசியல் விவேகத்தை இன்றைய உலக நிகழ்வுகள் பற்றி அமெரிக்க மக்கள் கொண்டிருக்கவில்லை என்பதுதான். தமது அரசுகளால் உருவாக்கப்பட்டிருக்கும் போலியான கற்பிதங்களை உடைத்தெறிந்துகொண்டு, மற்றைய நாடுகளில் வாழும் அடக்கப்பட்ட மக்களின் உண்மையான நிலையை உணரும்போதுதான் அமெரிக்கர்கள் தங்களின் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.

தமிழ்நெட்டிலிருந்து.....

ஈது ஒரு அநீதியான உலகம்.

முஸ்லீம் சகோதரர்கள் சரியானவர்கள். தகுந்த பாடம் புகட்டுவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.