Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயற்கையும் தமிழர்களை வஞ்சிக்கின்றதா?: அகதி முகாம்களாக மாறும் தமிழர் தாயகம்

Featured Replies

இயற்கையின் கோரத்தாண்டவம் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளைத்தான் மீண்டும் சின்னாபின்னமாக்கியுள்ளது. இரண்டு வாரம் தொடர்ந்த கடும் மழையின் பின்னர் சற்று ஓய்வு. ஆனால் மீண்டும் கடந்த வாரம் முதல் இரண்டாவது கட்டமாக கொட்டித் தீர்த்த கடும் மழையினால் வடக்கு கிழக்கில் அகதி முகாம்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.

இயற்கையின் இந்த அழிவுகளின் போதும் அரசாங்கம் தன்னுடைய மக்களைத்தான் அரவணைக்கின்றது. தமிழினம் அனாதரவாகத்தான் உள்ளது. பல தமிழ்க் கிராமங்கள் பல நாட்களாகத் தொடர்புகள் இன்றித் துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் ஒரு நேர உணவுக்காக ஏங்கித் தவிக்கும் நிலையில் மிகவும் ஆட்மப்ரமாக சுதந்திர தினக்கொண்டாட்டங்களும் கண்காட்சியும் கதிர்காமத்தில் நடைபெறுகின்றது.

மன்னாரில் மழை இல்லை. ஆனால் மன்னார் மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்து பாடசாலைக்கட்டங்களின் மேல் மாடிகளில. ஆச்சரியமாகத்தான் இருக்கும். அநுராதபுரத்தில் கொட்டிய மழையால் அந்த மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அங்குள்ள குளங்களின் வான்கதவுகள் அனைத்தும் திறந்துவிடப்பட்டன. இதனால் மன்னார் வெள்ளக்காடாகியுள்ளது.

ஒரு நேர சோற்றுக்கு வழியின்றி உயிரை மாய்க்கும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள்...

சிங்களப் பகுதிகளிலோ ஆடம்பரமான சுதந்திர தினக்கொண்டாட்டங்கள்.

இவ்வாறான நிலையில் தான் நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட்ட சகல வளங்களையும் கொண்ட இலங்கை திருநாட்டின் இன்றைய நிலை...

ஆம், இலட்சக்கணக்காண மக்கள் தொகையினைக்கொண்ட இலங்கையில் தற்போது ஒரு தொகை படிப்படியாக பகுதிவாரியாக குறிப்பாக தமிழினம் அழிந்துக்கொண்டு செல்கின்றது. அது என்னவோ! தமிழ் மக்களுக்கு மாத்திரம் ஏன் இந்த நிலை என்று நினைக்கும் போதுதான பெரும் வேதனை தருகின்றது.

கடந்த முப்பது தசாப்தங்களுக்கு மேலாக செயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் தற்போது இயற்கை அழிவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றதை நினைக்கும் போது வெம்பி அழதான் தோன்றகின்றது. தமிழ் மக்கள் செய்த பாவமோ என்னவோ!

சுமார் முப்பது தசாப்தங்களாக யுத்ததத்தால் பாதிக்கப்பட்டு தமது சொத்து சுகங்கள் சொந்தபந்தங்களையெல்லாம் இழந்து, தற்போது தமக்கான உறைவிடத்தையும் உறவையும் தேடி அலையும் நேரத்தில், வெள்ளம் என்ற ஒரு காலான் (யமன்) தேடி வந்தது தான் பெரும் வேதனை அளிக்கின்றது. யுத்த காலத்தில் பயங்கரவாதம் என்ற பெயரில் இலங்கை அரசாங்கத்தினால் இனஅழிப்பு கிரமமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. தற்போது இயற்கை அழிவினால் இன அழிப்புடன் சேர்ந்து இட அழிப்பும் ஏற்பட்டுள்ளது...

நாடளாவிய ரீதியில் கடந்த சில வாரங்களாக பெய்த கடும் மழை வெள்ளத்தினால் சுமார் 12 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் இனியும் ஒரு காலத்தில் மீண்டும் ஆரம்ப கால வாழ்க்கை வாழ முடியாத நிலையில் பெரிதும் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். ‘ஆசியாவிலே ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்றுவேன‘; என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியதாலோ தெரியவில்லை உலகமே ஆச்சரியப்படும் வகையில் இலங்கை மக்களுக்கு பெரும் அழிவு ஏற்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலை தொடருமாயின் இலங்கையின் எதிர்காலம் என்னவாயிருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று தான் கூற வேண்டும். நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பெருமளவான பாதிப்புகள் ஏற்பட்டாலும் கிழக்கு மாகாணமே பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களையோ மக்களை பாதுகாப்போம் என்று தம்பட்டம் அடிக்கும் இலங்கை அரசாங்கம் கண்டும் காணதது போல இருக்கின்றது.

தமிழ் மற்றும் ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகள் சிலர் மாத்திரமே பாதிக்ப்பட்ட மக்களை எட்டிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அரசாங்க அமைச்சர்களோ பாதிக்கப்பட்டுள்ள இடங்கள் இலங்கையிலா உள்ளது என்று கேட்கும் அளவிற்கு மக்களின் கண்களில் தென்படாதவாறு ஒடி ஒழிகின்றனர். தேர்தல் காலத்தில் மடிப்பிச்சை எடுக்கும் அரசியல் தலைவர்கள் பாதிகப்பட்ட மக்கள் மடிப்பிச்சை கேட்கும் போது உதவி செய்ய முன்வரவேண்டும் அதுவே உண்மையான மக்கள் தலைவன்!.

தென்பகுதியில் அதாவது, பெரும்பாண்மையினர் வாழும் பகுதியில் கடந்த வருடம் நடுப்பகுதி அளவில் பாரிய வெள்ளம் ஏற்பட்டு இலட்சக்கணக்காணோர் பாதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்காக முன்வந்த அரசாங்கம் தற்போது தமிழ் மக்களே பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான நிவாரணத்தை ஏன் உரிய முறையில் வழங்குவதற்கு மறுத்து வருகின்றது. இதற்கமைவாகவே ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்களில் இவ் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த தகவல்களை பட்டும் படாதது போல வெளிடுகின்றதே தவிர தென்பகுதி மக்களின் பாதிப்பை வெளியிட்ட அளவிற்கு இல்லையென்று கடந்த சில நாட்களாக ஊடகங்களின் மூலம் அறிய முடிகிறது.

ஏன்? உதரணமாக ஒன்றை குறிப்பிடலாம். மழை வெள்ளத்தினால் மக்கள் பாதிப்படைந்து உண்ண வழியின்றி திண்டாடிக்கொண்டிருக்கின்ற போது கடந்த நான்காம் திகதி வெகு விமரிசையாக ஆயிக்கணக்கானோரின் பங்கேற்றலுடன் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்வாறானதொரு விழா தேவைதானா? இவ்விழாவிற்கு செலவழித்துள்ள தொகையின் அளவில்; ஒரு கால் பகுதியையாவது அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்குமா? பாதிக்கப்பட்ட மக்களோ நாட்கள் கடந்த நிலையில் எங்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

இனவாதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாங்கம் இனத்தை பாதுகாப்பதற்கு எந்தொரு முக்கியத்தவமும் கொடுக்காதிருந்து வருகின்றது. ஒரு நாட்டில் கல்வி கூடங்கள்தான உருவாக்கப்பட வேண்டும் என்று நம் மூத்தவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்; ஆனால் இலங்கையிலோ கல்வியை அழிக்கும் அகதி முகாம்களே அதிகரித்து வருகின்றது. இவ்வவெள்ளத்தினால் இலட்சக்கணக்காண மாணவர்களின் கல்வி நிலை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அவர்களின் எதிர்கால நிலை என்னவாக இருக்கும்?

யுத்தத்தின் பின்னர் அமைக்கப்ட்ட அகதி முகாம்களுக்கு விடிவு காணப்படாத நிலையில் தற்போதும் ஆயிரக்கணக்காண அகதிமுகாம்கள். அத்திவாரம் இட்ட வீட்டுக்கு கட்டிடம் ஏற்றுவதற்கான வசதிகளை செய்து கொடுப்தில் இழுபறியை ஏற்படுத்தும் அரசு அகதி முகாம் மக்களுக்கா அத்திவாரம் இடப்போகின்றது? இந்நிலையில் அமைச்சரொருவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களது வீடமைப்புத்திட்டத்துக்கு அதுவும் உடனடியாக ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்படும் என்று நேற்று குறிப்பிட்டுள்ளார். இது ஒவ்வொரு வெள்ளத்தின் போதும் ஒரு வெள்ளோட்டமாக வரும் ஊடக அறிக்கையே தவிர இது நடைமுறைக் ஏற்ற கருத்தாக இருக்கும் என்று கூறப்பட்ட விடயம் நடந்து முடியும் வரை எதிர்ப்பார்க்க முடியாது. ஏனெனில் பாதிக்கப்பட்டது தமிழ் மக்கள் தானே!

அந்த வகையில் ஒரு காலமும் இல்லாதவாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கடும் மழை வெள்ளம் காரணமாக பல உயிரினங்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. 75 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மூன்று இலட்சம் ஏக்கர் அளவிலான பயிர்கள் நாசமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு பல ஆண்டுகள் தேவை என்று தான் கூறவேண்டும். நாடளாவிய ரீதியில் 318,417 குடும்பங்களைச் சேர்ந்த 1,182,601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 946 பேர் அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவ்வெள்ளத்தினால் 14 பேர் உயிரிழந்துள்ளனர் 9 பேர் காயமடைந்துள்ளனர் இருவர் காணாமல் போயுள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலேயே பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியிலேயே தஞ்சம் கோருவதற்கு வழியின்றி நிலம் சேதமடைந்துள்ளது. கிழக்கில் 1957, 1959, 1983 ஏற்பட்ட வெள்ளம் 1978 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளி மற்றும் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு வருடங்கள் கடந்தும் அதன் காயம் இன்னும் ஆராத நிலையில் இப்படி ஒரு அனர்த்தம். மேற்படி அனர்த்தங்கள் இடம் பெற்ற பின்னர் பல தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை யாரறிவார்?

இன்னுமொரு விடயம் சுட்டிக்காட்டப்படவேணடும். மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் அவசரகால பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் அநாதரவாக உள்ள நிலையில் அவசரகால சட்டம் தேவைதானா? ஒரு சில பாதிக்கப்பட்ட இடங்களில் அந்தந்த குடியிருப்பாளர்கள் வற்புறுத்தலுக்கு மத்தியில் குடியமர்த்துவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இப்போது மழை சற்று ஓய்ந்திருப்பதால் வெளளத்தால் பாதிக்கக்படப்ட பகுதிகளில் வெள்ளம் வடிந்து வருவதாக தெரியவருகிறது... வெள்ளம்; வடிந்து வருவது போல பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் நிவாரணம் வழங்கி மக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருமா?

வடக்கு கிழக்கின் மக்களின் பிரதான ஜீவனோபாயம் விவசாயமும், கால்நடை வளர்ப்பும்தான். போருக்குப் பின்னர் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துவந்த அந்த மக்கள் இப்போது அனைத்தையும் இழந்துபோயிருக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான கால்நடைகள் இந்த மழை- வெள்ளத்தால் கொல்லப்பட்டுள்ள. விவசாயம் முற்றாகவே அழிந்துபோயுள்ளது. போர் விட்டுவைத்த அனைத்தையும் இழந்துபோன நிலையில் மக்கள். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இதனை ஒரு பொருட்டாகக் கருதவே தயாராக இல்லை என்பதுதான் தெரிகின்றது.

என்னசெய்யப்போகின்றார்கள் எம்மவர்கள்?

http://pooraayam.com/samakalappaarvai/571-2011-02-09-03-23-57.html

பூராயத்துக்காக

சிலம்பரசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.