Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் மாபியாக்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் மாபியாக்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது – தமிழில் ஜீரிஎன் :

யாழ்ப்பாணத்தில் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மிகப் பலவீனமான நிலையிலேயே..

யாழ்ப்பாணம் மாபியாக்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்று சொல்கிறார் லங்கா கார்டியன் கட்டுரையாளர் ஒருவர். அண்மையில் யாழ்ப்பாணத்திற்க விஜயம் செய்துள்ள அவர் தெற்கில் உள்ளதைப் போலன்றி யாழ்ப்பாணத்தில் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மிகப் பலவீனமான நிலையிலேயே இருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஜனநாயகக்கட்டமைப்பின் பலவீனமான நிலைமை உலகின் ஏனைய பாகங்களில் மாபியாக்களின் உருவாக்கத்திற்கு எவ்வாறு வழி வகுத்ததோ அதேபோன்று இங்கும் வழி வகுத்திருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார். இது தொடர்ந்தால் அது இன்னொரு பீகாராக மாறிவிடும் அபாயமுள்ளது என்றும் சொல்கிறார். அரசாங்கம் இவ்விடயங்களில் உடனடிக்கவனம் எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

அவர் சுட்டிக்காட்டுவதில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை.

1. போருக்குப் பின்னர் கட்டுமானப்பணிகள் அங்கு பெருக்கமடைந்துள்ளன. இது மணலுக்கான கேள்வியை அங்கு அதிகரித்துள்ளது. ஏறத்தாழ பதினையாயிரம் கியூப் றிப்பர் மணல் தேவைப்படுகிறது. இந்த நிலையில் மணல் அகழ்வதற்கான உரிமம் மகேஸ்வரி பவுண்டேசன் எனும் நிதியத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. இது மணல்காடு எனுமிடத்திலிருந்து மணலை அகழ்ந்து விற்பனை செய்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறது. எனவே மணல் தேவைப்படும் எவரும் மகேஸ்வரி பவுண்டேசனிடமிருந்தே மணலைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த ஏகபோகம் மணல் விலையை உச்சத்தில் வைத்திருக்க வழி வகுத்திருக்கிறது. 4.5 கியூப் றிப்பர் அளவிலான ஒரு லோட் மணலின் விலை 22000 ரூபாய்கள். மணல்படுகைகளிலிருந்து மணல் எடுப்பதற்கான செலவு 7500 ரூபாய். போக்குவரதுக் கூலி 6000 ரூபாய் ஆக, மொத்தம் 13500 ரூபாய்கள் தான் மொத்தச் செலவு. ஆனால் அது 22000 ரூபாய்களுக்கு விற்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட 8500 ரூபாய்கள் (இது ஒரு லோட்டுக்கு) மகேஸ்வரி நிதியத்திற்குச் சென்று விடுகிறது. அவ்வாறானால் ஒரு நாளுக்கு எவ்வளவு தேறும்? மாதத்திற்கு எவ்வளவு தேறும்? இந்த உச்சவிலை மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டின் ஏனை பகுதிகளிலும் கொழும்பிலும் நிலவும் மணல் விலையை விட இது மிக அதிகமாக இருக்கிறது.

2. இதேபோன்றதொரு நிலை தான் மீன் பிடியிலும் இருக்கிறது. ஏறத்தாழ 20 ஆயிரம் குடும்பங்கள் இதில் தங்கியிருக்கின்றன. போருக்குப் பின்னர் மீன்பிடி அதிகரித்து வருகிறது. 2007இல் 2963 மெ.தொன்னாக இருந்தது 2008இல் 2248 மெ.தொன்னானது. ஆனால் 2009இல் 6990மெ.தொன்னாகவும் 2010இல் அதன் மூன்று மடங்காக 19854 மெ. தொன் ஆகவும் மாறி அதிகரித்திருக்கிறது. போர்க்காலத்தில் மீன்பிடிக்கு இருந்த தடைகள் அகற்றப்பட்டமை இந்த அதிகரிப்பிற்குக் காரணமாக இருக்கிறது.

ஆனாலும் மீன்பிடியாளர் அங்கு இயங்கும் ஒரு மாபியாக்கும்பலினால் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். அவர்கள் கரைக்கு வர முன்னரே அவர்களுடைய மீனுக்கான விலை பேசப்பட்டு விடுகிறது. அடிமாட்டு விலைக்கு அவர்கள் மீனை வாங்கிக் கொள்கிறார்கள். நண்டு இறால் போன்றவற்றின் விலையும் அது தான். பெரிய நண்டு ஒன்று சிஙகப்பூர் சந்தையில் 10ஆயிரம் தொடக்கம் 13ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ஆனால் இந்த ஏழை மீன்பிடித் தொழிலாளருக்கோ அதற்காகக் கிடைப்பது வெறும் 700 அல்லது 800 ரூபாய்கள் தான். இதற்கு அடிப்படையான காரணம் மீனை வாங்குவதிலும் ஒரு ஏகபோகம் நிலவுவது தான். இது தெற்கில் மீன்பிடியாளம் பெறும் தொகையை விட மிகக் குறைவானது.

இவ்வாறு நீண்டு செல்லும் குற்றச்சாட்டுக்களை அவர் முன் வைத்த போதும் தீர்வாக அரசு மற்றும் அரசு இயந்திரங்கள் தலையிட்டு நிலைமையைச் சீர் செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்குகிறார். ஆனால். மகேஸ்வரி பவுண்டேசனை நடாத்தும் ஈபிடிபி அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்கையில் அத்தகைய தீர்வு சாத்தியமா என்பதே கேள்வி.

பாதிக்கப்படும் மக்கள் தம்மை அமைப்பாக ஒருங்கிணைத்து போராடாத வரை இவற்றுக்கான தீர்வு என்பது கேள்விக்குறி தான்.

அரசாங்கமும் வடக்கு மக்களுக்கு வழங்கிய ஜனநாயகமும் இந்தளவு தான்.

சிவச்செல்வன் ரமணீதரன்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/57751/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.