Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் முடிந்தும் தமிழ் மக்கள் மீது இப்போதும் வேறுபட்ட அணுகுமுறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் முடிந்தும் தமிழ் மக்கள் மீது இப்போதும் வேறுபட்ட அணுகுமுறை

குடாநாட்டில் புகைப்படம் பிடித்தல், கிளிநொச்சியில் சிங்கள கடிதங்களுக்கு கையொப்பம் பெறுவதைச் சுட்டிக்காட்டி தமிழ்க் கூட்டமைப்பு கடும் விசனம்

யுத்தம் முடிவடைந்து விட்டதாக அரசு கூறுகின்ற போதும் தமிழ் மக்களை வித்தியாசமான மனப்பான்மையிலேயே நோக்குவதாகக் குற்றம் சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.எஸ்.ஸ்ரீதரன், யாழ்.குடாநாட்டில் குடும்பம் குடும்பமாக இராணுவத்தினர் புகைப்படம் எடுப்பதற்கும் கிளிநொச்சியில் சிங்களத்தில் எழுதப்பட்ட கடிதங்களில் கையொப்பம் பெறும் செயலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டநீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; தற்போது ஏற்பட்டு வரும் இயற்கை அனர்த்தங்களினால் வடக்கு,கிழக்கு மாகாணம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் உணவுப் பொருட்கள் இன்றி மிகவும் கஷ்டப்படுகின்றனர். விவசாயிகள் அவர்களின் வேளாண்மைகள் அழிவடைந்து பெரும் நஷ்டமடைந்துள்ளனர். எனவே அவர்கள் பெற்ற வங்கிக் கடன்களை இரத்துச் செய்து ஒரு நிவாரணத்தை வழங்குமாறு அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.

யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 2010, 2011 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் எவரும் உள்வாங்கப்படவில்லை. இந்தப் பயிற்சிக் கலாசாலை மூலம் தமிழர் மட்டுமன்றி சிங்களவர்களும் நன்மை பெற்றுள்ளனர். வடக்கில் தமிழர்களுக்கென்று ஒரு உயர்கல்வி நிறுவனம் இல்லை. எனவே இது தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

வடக்கிற்கான ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி வரை ரயில் பாதை அமைக்கும் போது ஏராளமான கட்டிடங்கள் அழிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி வரையான ரயில் பாதையை கடற்கரை வழியாக அமைக்க வேண்டுமென அரசிடம் கேட்கிறேன்.

யாழ்ப்பாணத்தில் படையினர் குடும்பம் குடும்பமாக புகைப்படம் எடுக்கின்றனர். கிளிநொச்சியில் சிங்களக் கடிதங்களில் கையொப்பம் பெறுகின்றனர். இதனால் தமிழ் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

யுத்தம் முடிவடைந்து விட்டதாக அரசு கூறுகின்ற போதும் தமிழ் மக்களை வித்தியாசமான மனப்பான்மையிலேயே நோக்குகின்றது. அதன் வெளிப்பாடாகவே புகைப்படம் எடுப்பது, கையொப்பங்கள் பெறுவது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுகின்றது.

விநாயகமூர்த்தி எம்.பி

இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற பல படுகொலைகளுக்கு அரச பயங்கரவாதமே காரணமெனக் குற்றம் சாட்டிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி. அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவசரகாலச்சட்ட விதிகளின் கீழ்தான் கொலைகள்,கொள்ளைகள் இடம்பெறுகின்றன என்றும் கூறினார்.

அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒருமாதம் நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

அவசரகாலச்சட்டத்தின் கீழ் ஒரு சந்தேகநபரை 3 மாதங்கள் மட்டுமே தடுத்து வைத்திருக்க முடியும்.அதன்பின்னர் நீதிமன்றம் முன் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின்படி இப்போது ஒரு சந்தேகநபர் 18 மாதங்கள் வரை தடுத்துவைக்கப்படுகிறார். அவசரகால சட்டவிதிகள் பாதுகாப்பு தரப்பினருக்கு அதிகாரங்களையும் சுதந்திரத்தையும் அதிகம் வழங்கியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான ரவிராஜ்,ஜோசப் பரராஜசிங்கம், சிவனேசன், ஐ.தே.க. எம்.பி மகேஸ்வரன், ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்க போன்றோர் அரச பயங்கரவாதத்தினாலேயே படுகொலை செய்யப்பட்டனர். அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ்தான் படுகொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள் இடம்பெறுகின்றன. வெள்ளைவான் கடத்தல்களே மனித உரிமை மீறல்களுக்கு பிரதான காரணமாகவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தற்போது குடும்பம் குடும்பமாக புகைப்படம் எடுக்கப்படுகின்றது.இராணுவத்தினர் அழைத்துச்சென்று நூறு ரூபாவை கட்டணமாக வசூலித்துக்கொண்டு புகைப்படம் எடுக்கின்றனர். இதனால் குடாநாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் சிங்களத்தில் எழுதப்பட்ட கடிதத்தில் பொதுமக்களிடம் கையொப்பங்கள் பெறப்படுகின்றன.அந்தக் கடிதங்களில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது தெரியாமலே கையொப்பம் வைக்கவேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர்.

அரசு தனது கடமையிலிருந்து விலகிச் செல்கின்றது.எகிப்தில் நடந்த மக்கள் புரட்சி போன்று இங்கும் ஏற்படும்.இவ்வாறான நிலையில் அரசினால் மக்கள் எழுச்சிகளை தடுக்க முடியாது போய்விடும்.எனவே மக்களுக்கு விரோதமான இந்த அவசரகாலச்சட்டத்தை நீக்குமாறு அரசிடம் கோருகின்றோம்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=7079:2011-02-09-02-08-59&catid=34:hotn-news&Itemid=99

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.