Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவராக கே.பத்மநாதன் இரகசிய நியமனம்!

Featured Replies

பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதுவராக, சென்னைத் துணைத் தூதுவராக கடமையாற்றிய கே.பத்மநாதனை நியமிக்க சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தூதுவர் பத்மநாதன் ஒரு வாரத்திற்கு முன்னரே தனது தூதரகப் பணிகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறிலங்கா அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சின் எவ்வித ஊடக அறிவித்தலும் இன்றி, மிகவும் இரகசியமான முறையில் பத்மநாதனின் நியமனத்தை மேற்கொண்டுள்ளதையிட்டு கொழும்பு ஊடகங்கள் சந்தேகம் தெரிவித்துள்ளன.

பிரித்தானியாவுக்கான சிறிலங்காத் தூதுவராக கடற்படைத் தளபதி வசந்த கன்னரங்கொட நியமிக்கப்படவுள்ளதாக கடந்த வருடம் செய்திகள் வெளியாகியிருந்த போதும், படைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக போர்க்குற்ற வழக்குகளை தாக்கல் செய்வதில் பிரித்தானிய தமிழர் அமைப்புகள் தீவிரம் காட்டிவந்த காரணத்தாலேயே சிறிலங்கா இவ் விடயத்தில் பின்வாங்கி உள்ளதாக நம்பப்படுகிறது.

அத்துடன், இப் பதவிக்கு படைத்துறை அதிகாரி ஒருவரை நியமிப்பது தொடர்பாக எதிர்கொள்ளக்கூடிய தேவையற்ற இராஜதந்திர சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு பிரித்தானிய அரசாங்கமும் இந் நியமனம் தொடர்பாக தயக்கம் காட்டி வந்ததாக நம்பப்படுகிறது.

பிரித்தானிய தமிழர் அமைப்புகளின் அழுத்தங்கள் காரணமாகவே இவ் வியடத்தில் சிறிலங்கா அரசாங்கம் பின்வாங்கிவிட்டதாகவும், எதிர்க்கட்சிகளும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் மேற்கொள்ளக்கூடிய பிரச்சார செயற்பாடுகளுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் பத்மநாதனின் நியமனத்தை இரகசியமான முறையில் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

1996ஆம் ஆண்டு சிறிலங்காவின் இராஜதந்திர சேவையில் இணைந்து கொண்ட பத்மநாதன், பாலித்த ஹோகன்ன இப் பதவியை ஏற்க மறுத்துள்ள நிலையிலேயே இப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, பிரித்தானியாவின் புதிய தூதுவருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும், சகல விடயங்களையும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சுடன் நேரடியாக மேற்கொள்ளுமாறும் பிரித்தானியாவில் இயங்கும் சிங்கள இனவாத அமைப்புகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={68ACC548-F71C-4582-9DEF-414D96542AC0}

.. இனியென்ன ... கும்பிடப் போறன் எண்டு கோயில்களுக்கு வருவார் ... நாலு பல்லை இழிக்கும் ... நாலு கையை கொடுக்கும் ... இன்னும் நாலோ, நம்மவர் எங்கள் கோயில்களுக்கு வந்து கும்பிடாமல், வேறெங்கு போறதென்று கேட்கும் ...

... இன்னும் கொஞ்சம் வீடு, வாசல்களுக்கும் கூப்பிடும் ... அவரை பிடித்தால் அதை/இதை செய்விக்கலாம் எண்டுங்கள் ...

....

ஒரு பத்மநாதனை வைத்து காதில் பூச்சுத்த முயற்சித்து தோற்ற சிங்களம், இன்னொரு மத்மநாதனை இறக்கியிருக்கிறது????.... அதுவும் தான் எவ்வளவு அவுட்புட்டை சிங்களவனுக்கு காட்டி, கரகோசம் பெறலாமென்று ... கூத்தாடப் போகிறது!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு கே.பியா?? :o

  • தொடங்கியவர்

இன்று சிங்களத்தின் முதன்மை இலக்கு புலபெயர் தமிழர் சமூகம்.

  • போர்க்குற்ற முன்னெடுப்புக்களை நிறுத்தல் வேண்டும்.

  • மனித உரிமைகள் பற்றி அவர்கள் பேசுவதை நிறுத்தல் வேண்டும்.

  • அரசியல் உரிமைகள் பற்றி அவர்கள் பேசுவதை நிறுத்தல் வேண்டும்.

  • அவர்களின் பணத்தை சிங்கள நிர்வாகத்துக்குள் கொண்டு வர வேண்டும்.

சென்னையில் இவர் சிங்களத்திற்கு செய்த சேவைகள் அதற்கு நிச்சயம் திருப்தி தந்தவையாக இருந்திருக்க வேண்டும். அதன் விளைவே இந்த பதவி உயர்த்தல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.