Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் அரசியல் போராட்டம் சர்வதேச அரங்கில் வீறு பெற்று உள்ளது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் அரசியல் போராட்டம் சர்வதேச அரங்கில் வீறு பெற்று உள்ளது!

அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் கருத்து (ஒலிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது)

.தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் தோற்கடிக்கப்படவே இல்லை, மாறாக சர்வதேச மட்டத்தில் வியாபித்து நிற்கின்றது என்று பிரபல அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரும், அரசியல் அவதானியும், சட்டத்தரணியும், ஆசிரியருமான சி.அ. ஜோதிலிங்கம் தெரிவித்து உள்ளார்.

இவர் இலங்கையின் உள்நாட்டு அரசியல் நிலைமைகள் குறித்து தமிழ் சி.என்.என் இற்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளார்.

இவர் இப்பேட்டியில் முக்கியமாக தெரிவித்து இருந்த விடயங்கள் வருமாறு:-

"போரின் தோல்வியோடு எல்லாம் முடிந்து விட்டது என்கிற மனநிலை தமிழ் மக்கள் மத்தியிலும் ஏனைய மக்கள் மத்தியிலும் பொதுவாக காணப்படுகின்றது. ஆனால் இங்கு உண்மை எதுவென நாம் பார்க்க வேண்டும்.

தமிழர்களுக்கு சாதகமான சர்வதேச சூழல்:

இராணுவ ரீதியில் தோல்வி கண்டிருந்தாலும் அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் இன்னமும் தோற்று விடவில்லை.

தமிழ் மக்களின் அரசியல் இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டு உள்ளது. சர்வதேச அரங்கில் தமிழர் அரசியலை நகர்த்தக் கூடிய வாய்ப்பு கிடைத்து உள்ளது. போரின் பின்னர் சர்வதேசத்தின் பார்வை இலங்கை மீது கூடுதலாக உள்ளது.

அதாவது தமிழ் மக்களை இலங்கை அரசு எவ்வாறு நடத்துகின்றது? என்கிற அவதானிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியாக கொண்டு செல்லக் கூடிய நிலைமை முகிழ்த்து உள்ளது.

தமிழ் மக்களின் போராட்டம் வெற்றி பெறவேண்டுமானால் சர்வதேச அரசியல் தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். தேசிய போராட்டம் தேசிய அரசியலால் தான் உருவாக்கப்படுகின்றது, வளர்கின்றது. ஆனால் போராட்டம் வெற்றி பெற சர்வதேச அரசியலே காரணமாய் அமைகின்றது.

இதனைத் தமிழ் அரசியல் சக்திகள் மறந்து விடக் கூடாது. தமிழர்கள் சர்வதேச அரசியலை நகர்த்தும்போது இலங்கை நாட்டுத்தளம். புலம்பெயர் நாட்டுத்தளம். தமிழகத் தளம்.ஆகிய மூன்று தளங்கள் முக்கியத்துவம் பெறுகிறன.

இம் மூன்று தளங்களையும் ஒருங்கிணைத்து செயற்படும்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் உண்டு.

பலவீனமான நிலையில் அரசு:

இலங்கையின் அரசியல் நிலைமையை உள்நாட்டு அரசியலை மாத்திரம் வைத்து மதிப்பிடமுடியாது.

இதனை வெளிநாட்டுக் கொள்கைகள், பிராந்திய அரசியல், சர்வதேச அரசியல் ஆகியவற்றையும் இணைத்தவகையில்தான் பார்க்க வேண்டும். தற்போதைய அரசுக்கு சிங்கள மக்களால் பலமான அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலைமை வெளியில் அரசு பலமாக இருப்பதாக காட்டுகின்றது. ஆனால் ஆழமாக பார்க்கும்போது பல்வேறு வகையான பலவீனங்களுடனேயே அரசு இருப்பதை காணலாம்.

பூரண அதிகாரம் இந்நாட்டு தலைவரிடம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அது தனிப்பட்ட ஒருவரிடம் அதிகமாக கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் அதிகாரம் ஒரு குடும்பத்திடம் குவிக்கப்பட்டு உள்ளது என்றும் சிங்கள மக்கள் மத்தியிலும் ஏனைய மக்களிடமும் கருத்துக்கள் நிலவுகின்றன.

கட்சி அரசியலை விட குடும்ப அரசியலே இடம்பெறுகின்றது என்கிற கருத்தே அனேகரிடம் மேலோங்கிக் காணப்படுகின்றது. ஜனநாயக நிறுவனங்கள் பலவீனமான நிலையில் உள்ளன. வெளிநாட்டுக் கொள்கைகள் சீரில்லாமல் இருக்கின்றன. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் இல்லாத தன்மையும்.

ஊடகங்கள் பூரணசுதந்திரத்துடன் செயற்படமுடியாத நிலையும் அரசின் பலவீனமான நிலைமையையே சுட்டி நிற்கின்றன. இலங்கைக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பகைமைத் தன்மையே காணப்படுகின்றது..

இந்தியாவுடன் வெளியில் நல்ல உறவு இருப்பதாக தென்பட்டாலும் உள்மட்டத்தில் அதிருப்தியான உறவே நிலவுகின்றது. இலங்கை ஒரு வளர்ந்து வரும் சிறிய நாடு என்பதால் அது வல்லரசு நாடுகளுடனும், ஏனைய நாடுகளுடனும் ஒரு பக்கம் சாராமல் சம அளவில் வெளிநாட்டு உறவுகளை வைத்துக் கொள்வதே உகந்தது ஆகும்.

ஆனால் இன்று இலங்கையின் வெளிநாட்டு உறவை நோக்கும் போது சீனச் சார்புக் கொள்கையே பின்பற்றப்படுவதை அவதானிக்கமுடிகின்றது. இப்போக்கு மேற்கு நாடுகள்,அயல் நாடான இந்தியா ஆகியவற்றுக்கு இலங்கை மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு-தமிழ் கூட்டமைப்பு பேச்சு:

எதிர்கால தேர்தல்கள், மேற்கு நாடுகள் மற்றும் இந்தியா ஆகியவற்றின் அழுத்தம் ஆகியவற்றின் காரணமாகவே கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரசு முன்வந்து உள்ளது. ஆனால் இப்பேச்சுக்கள் எவ்வளவு தூரம் வலுவானவையாக அமையும்? என்பதை கூற முடியாது. .

அரசுடன் ஒத்துழைப்பு அரசியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது ஈடுபட்டு வருகின்றது. கடந்த வரவு - செலவுத் திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்து இருக்கவில்லை.

கூட்டமைப்பினர் இணக்க அரசியலுக்கு தயார் என்பதையே இது காட்டுகின்றது. ஆனால் ஓத்துழைப்பு அரசியல் என்பது சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினர்களிடம் இருந்தும் வர வேண்டும்.

அரசின் பக்கத்தில் இருந்து இணக்க அரசியல் வருவதற்கான சூழல் வலு இல்லாத நிலையிலேயே உள்ளது.இந்நிலையில் தமிழர்களின் அரசியல் சூழ்நிலை பாதிப்படைவதற்கான வாய்ப்பு கண் முன் தெரிகின்றது. .

கூட்டமைப்பினர் சரியான கட்டமைப்பு இல்லாமல் ஒத்துழைப்பு அரசியல் நடத்துகின்றமை தமிழர் அரசியலுக்கு எவ்வளவு தூரம் சாதகமாக இருக்கும்? என்கிற கேள்வியும் எழுகின்றது..

அத்துடன் ஒத்துழைப்பு அரசியல் உணர்வுரீதியாகச் சிந்திக்கின்றவர்களிடையே தமிழர் அரசியலைப் பலவீனப்படுத்தி விடும்

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=18159:2011-02-10-09-34-43&catid=55:2009-12-16-09-39-06&Itemid=413

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.