Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையத்தள உரிமையாளர்களைக் குறிவைக்கும் இலங்கை புலனாய்வு..

Featured Replies

இணையத்தள உரிமையாளர்களைக் குறிவைக்கும் இலங்கை புலனாய்வு.

புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் தமிழ் தேசிய இணையத்தள உரிமையாளர்களை குறிவைத்து உள்நுளையும் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய இணையங்களைக் குறிவைத்து இந்தப் பெரும் காய்நகர்வுகள் திரைமறைவில் மிகவும் ரகசியமாகவும் நேர்த்தியாவும் திட்டமிடப்பட்டு நகர்த்தப்படுகிறது. வெளிநாடுகளில் வாழும் தமிழ் ஒட்டுக்குழுவினர் சிலர், இணையத்தள உரிமையாளர்களை அணுகி விளம்பரம் போடவேண்டும் என்ற போர்வையில், அவர்களோடு நட்பை ஏற்படுத்த முனைகின்றனர். அதன் மூலம் அவர்களோடு உறவாடி பின்னர் உங்கள் இணையத்தளத்தை தான் வடிவமைத்து தருவதாகவும் கூறுகின்றனர். சில நாட்களில் ஏற்பட்ட பழக்கம் காரணமாகச் சிலர் அதற்கு ஒத்துக்கொண்டு தமது இணையத்தை திருத்தி வடிவமைக்க அவர்களிடம் கொடுக்கும் போது, குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் இயங்கக்கூடிய வகையிலான வைரஸை ஏற்றுகிறார்கள்.

சிலர் இவர்களை நம்பி தனது முழு இணையத்தையும் கொடுத்து அதன் கட்டுப்பாடுகளை இழந்து, பறிகொடுத்தும் உள்ளனர். விளம்பரத்துக்கான பணத்தை கட்டும் போது, வங்கி கணக்குகளை கேட்டறிந்து, பின்னர் அந்தந்த வங்கிகளில் வேலைசெய்யும் தமது சில சகாக்களை வைத்து இணையத்தள உரிமையாளர்களின் பெயர் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. அதனை இவர்கள் இலங்கை தூதரகத்துக்கு கொடுத்து, இலங்கையிலிருந்து செய்தி வழங்குவோரையும் அச்சுறுத்துகின்றனர். இது போன்ற பாரிய மறைமுக அச்சுறுத்தலுக்கு தமிழ் தேசிய ஊடகங்களின் உரிமையாளர்கள் முகம் கொடுக்கவேண்டி உள்ளது. இது போன்ற இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் எல்லை கடந்த தாக்குதலை நாம் வன்மையாக கண்டிப்பதோடு, இச் செயல்பாட்டாளர்கள் யார் யார் என்பது குறித்து பிரித்தானிய மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள பொலிசாருக்கு தெரியப்படுத்தவும் உள்ளோம்.

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கிவரும் இலங்கை அரசு, தனக்குத் தலைவலி தரும் புலம் பெயர் மக்களுக்கு ஊக்கம் மற்றும் செய்திகளைக் கொடுக்கும் இணையத்தளங்கள் மீது இத் தாக்குதலை நன்கு திட்டமிட்டு நடாத்தி வருகிறது. இவ்வாறு நடத்தப்படும் தாக்குதலுக்கு தமிழ் தேசிய இணையங்கள் முகம்கொடுக்கவேண்டி உள்ள சூழ் நிலையில், இவ்வாறு தாக்கப்பட்டு சில இணையங்கள் செயல் இழக்கிறது. அந்த நேரத்தைப் பாவித்து, அவர்கள் இலங்கை அரசுக்காகவே வேலைசெய்வதாக, அரசுக்கு ஆதரவாக இருக்கும் சில இணையங்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவதோடு அந்த தமிழ் தேசிய இணையங்களை மக்கள் மத்தியில் நம்பிக்கை இழக்கச் செய்கிறது.

இதுவரை காலமும் எந்தத் தமிழ் இணையங்கள் வைரஸ் தாக்குதலுக்கு, சைபர் தாக்குதலுக்கு முடக்கப்படவில்லையோ அந்த இணையங்கள் யாருடன் இருக்கிறார்கள் என்பதே தற்போதைய கேள்விக்குறி. ஏன் அந்த இணையங்கள் மீது இன்னும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதனையும் மக்கள் ஒரு முறை எண்ணிப்பார்ப்பது சாலச்சிறந்ததாகும் !

Muthamizh Vendhan <muthamil78@gmail.com>

Edited by நெருப்பு நீலமேகம்

முடக்கப்பட்ட தமிழ் தேசியத் தளங்களின் விபரங்களைத் தரலாமே.

ஏனென்றால் நாங்கள் இனி அந்த இணையத் தளங்கள் தரும் செய்திகளை மட்டுமே நம்புவோம். அந்தச் செய்திகளை மட்டுமே படிப்போம். அது தானே உங்களிற்கு வேண்டியது???

எங்கட யாழும் இன்னும் முடக்கப்படவில்லை.

அந்த மோகன் அண்ணரையும் கவுத்துப் போட்டாங்களோ,??? :D

இதே தலைப்பில் முன்பும் ஒரு செய்தி வந்திருந்தது. ஆனால், உள்ளடக்கம் சற்று வித்தியாசமாக அமைந்திருந்தது.

இணையத்தளங்கள் மீதான தாக்குதலில் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினர்

December 28th, 2010

வெளிநாடுகளில் உள்ள தமிழ் இணையங்கள் மீதும் சிறீலங்கா புலனாய்வுப்பிரிவினர் அச்சுறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். சில ஊடகவியலாளர் மற்றும் இணையத்தளங்களின் மூலம் அவர்கள் இதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://meenakam.com/2010/12/28/17291.html

மீனகம் இணையம் நெருப்புநீலமேகம் தந்த செயதியில் உள்ள விடையத்தினை செய்கிறது. புலனாய்வுபிரிவன் ஒரு அணிதான் மீனகம் என்பதனை தெரிவித்து கொள்கிறென்.

மீனகம் இணையத்தில் உள்ளவர்கள் பல தமிழ் தேசிய இணையங்களுடன் நண்பர்களாகி பணத்தை ஏமாற்றின சம்பவங்களும் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.