Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம்பெயர் தலைமையாக ருத்ரா! தென் சூடான் போல ஐ.நா தலையீடு ஏற்படுத்துவதே திட்டம்!!

Featured Replies

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைத்ததன் மூலம் ருத்ரா தனது நிலையைப் பலப்படுத்திக் கொண்டுள்ளார்.

அத்தோடு ஐக்கிய நாடுகள் அமைப்பில் புதிதாக இணையவுள்ள தென் சூடானின் அங்கிகாரத்தையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பெற்றுள்ளது என ஐலன்ட் நாளேட்டின் அண்மைய கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுக்களின்போது, கூட்டாட்சித் தீர்வு தொடர்பாக அதிகாரபூர்வமற்ற பேச்சு இரண்டு தரப்பு ஆலோசகர்களுக்கு மத்தியில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, சூடான் விவகாரத்தை ருத்ரகுமாரன் மேற்கோள் காட்டினார். தென் சூடான் பிரிந்து செல்வதைப் பயன்படுத்துவதன் மூலம் சிறிலங்காவிலும் ஐ.நா தலையீடு ஒன்றினை மேற்கொள்வதற்கான நீண்டகால மூலோபாயத்திட்டம் ருத்ரகுமாரனிடம் இருப்பதாக புலனாய்வுத் தகவல்களிலிருந்து தற்போது தெரிய வந்துள்ளது

இவ்வாறு ஐலண்ட் நாளேட்டில் Rudrakumaran emerges as Diaspora leader என்ற தலைப்பில் சர்மின்ட்ரா

பெர்டினான்டோ எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தென் சூடான் தனி நாட்டிற்கு வழி அமைத்த ஐ.நா தலைமையிலான வாக்கெடுப்பிற்கு ஒத்த வகையில் அனைத்துலகத் தலையீட்டுக்கு அவசியமான நிபந்தனைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்படுத்தும் என்பதை ருத்ரா வலியுறுத்தி வருகின்றார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டுள்ள விஸ்வநாதன் ருத்ரகுமாரன் புலம்பெயர் தமிழர்களின் தலைவராக உருவாகியுள்ளார். ஐக்கிய நாடுகள் அவை தலைமையில் தென் சூடான் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடாத்தப்பட்டதைப் போல, சிறிலங்காவிலும் தமிழர்கள் பிரிந்து செல்லும் வாக்கெடுப்பை நடாத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளரான கே.பி மலேசியாவில் கைது செய்யப்பட்டு, கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டதை அடுத்து, பல்வேறு புலம்பெயர் அமைப்புகள் புலிகளின் தலைமையைக் கைப்பற்றுவதற்கு முயன்றன. 'ருத்ரா' அனைத்து எதிர்ப்புகளை முறியடிப்பதில் வெற்றி கண்டுள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைத்ததன் மூலம் ருத்ரா தனது நிலையைப் பலப்படுத்திக் கொண்டுள்ளார். அத்தோடு ஐக்கிய நாடுகள் அமைப்பில் புதிதாக இணையவுள்ள தென் சூடானின் அங்கிகாரத்தையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பெற்றுள்ளது.

இனத்துவ அடிப்படையில் நாட்டைப் பிரிப்பதற்கு, சூடானை ஒத்த வாக்கெடுப்பினை ஏற்படுத்துவதற்குரிய அழுத்தத்தினை சிறிலங்காவிற்கு கொடுப்பதற்குரிய நகர்வுகளை ஐ.நா மூலம் மேற்கொள்வது பற்றி விடுதலைப் புலிகளின் போருக்கு ஆதரவளித்த சில உதவி நிறுவனங்கள் எடுத்துரைத்துள்ளன.

2003இல் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளின் போது, சூடானை ருத்ரா மேற்கோள் காட்டியதாக சிறிலங்காவின் சமாதானச் செயலக முன்னாள் பிரதிநிதி ஜோன் குணரட்ண கூறியுள்ளார்.

தென் சூடான் நிலைமைகளுக்கும் வடக்கு கிழக்கின் சில பிரதேசங்களை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த 'மே 2009' இற்கு முன்னான காலப்பகுதிக்குமிடையில் மேலெழுந்த வாரியான ஒற்றுமைகளைக் காண முடியும் என சண்டே ஐலண்ட் இதழின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார்.

'ஒரு சிறுபான்மைத் தேசிய இனக்குழுமம், பெரும்பான்மை இனத்தோடு முரண்பாட்டைக் கொண்டுள்ளது. தனி நாட்டை அமைப்பதற்கான போரை நடத்தியது என்ற அடிப்படையில் ஒற்றுமைகளைக் காணலாம். ஆனால் அவற்றைத் தவிர வேறு விடயங்களில் இந்த ஒப்பீடு பொருத்தமற்றது. ஏனெனில் இரண்டு முரண்பாடுகளினதும் வரலாறு முற்றிலும் மாறுபட்டது. ஆனபோதும் 2002-2003 காலகட்டப் பேச்சுவார்த்தைகளில் தாம் எதனைக் கோருகிறோம் என்பதில் விடுதலைப் புலிகள் எப்பொழுதும் கண்ணும் கருத்துமாக இருந்தனர்' என்கிறார் குணரட்ண.

2003 ஜப்பானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட்ட விவகாரங்களில் ஒன்று, சிறிலங்காவிற்கான கூட்டாட்சி அரசியலமைப்பு (Federal constitutional structure for Sri Lanka) ஆகும். உண்மையில் சிறிலங்கா அரசாங்கத் தரப்பில், 'ஒன்றுபட்ட சிறிலங்காவிற்குள் உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான கூட்டாட்சித் தீர்வினை ஆராய்தல்' என்ற தலைப்புடன் மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட வரைபு ஒன்று கையளிக்கப்பட்டது. அதில் கூட்டாட்சி அமைப்பின் அடிப்படை விடயங்களுடன் கொள்கை சார்ந்த 16 விவகாரங்கள் வரையறுக்கப்பட்டிருந்ததோடு, பேச்சுவார்த்தைக்கான அடிப்படை வரைபாகவும் அது உருவாக்கப்பட்டிருந்தது.

கூட்டாட்சித் தீர்வு தொடர்பான முன்வைப்பினை ஏற்றுக்கொள்கின்ற அதிகாரம் அந்த நேரத்தில் தன்னிடம் இல்லை என்பதான பதில் அன்ரன் பாலசிங்கத்திடமிருந்து வெளிப்பட்டது. இது பற்றி முதலில் அரசியல் விவகாரங்களைக் கையாள்வதற்கென உருவாக்கப்பட்ட அரசியல் விவகாரக் குழுவுடன் விவாதிக்கப்பட வேண்டும் என்று பாலசிங்கம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் பற்றிய அதிகாரபூர்வமற்ற பேச்சு, இரண்டு தரப்பு ஆலோசகர்களுக்கு மத்தியில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, சூடான் விவகாரத்தை ருத்ரகுமாரன் மேற்கோள் காட்டியது எனது நினைவுக்கு வருகிறது. என்ன வகையான பொருத்தமற்ற ஆலோசனை இது என்பதாக இருந்தது அந்த நேரத்தில் அங்கிருந்தவர்களின் வெளிப்பாடு.

இந்த ருத்ரகுமாரன் முட்டாள் அல்ல என்பது காலம் கடந்த ஞானமாக எனது சிந்தனையில் தோன்றியது. அவர் திறமையானவர். இப்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சராகியுள்ளார்.

தென் சூடான் பிரிந்து செல்வதைப் பயன்படுத்துவதன் மூலம் சிறிலங்காவிலும் ஐ.நா ஊடாக அவ்வாறான நகர்வினை ஏற்படுத்துவதற்கான நீண்ட கால மூலோபாயத்திட்டம் ருத்ரகுமாரனிடம் இருப்பதாக புலனாய்வுத் தகவல்களிலிருந்து தற்போது தெரிய வந்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் தனது மூலோபாயத்தின் ஒரு பகுதியாக கே.பியைப் பயன்படுத்தி, ருத்ராவை செயலிழக்க வைக்கும் நோக்குடன் புலம்பெயர் தமிழர்களை அணுகுகின்றது. அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒருவகைப் புரிந்துணர்வை ஏற்படுத்துவதும், இராணுவ வழிமுறை மூலம் சமாதானம் என்பதை வலியுறுத்தி வந்த மகிந்த ராஜபக்சவைப் பலப்படுத்த உதவுமென்பது சிறிலங்கா அரசாங்கத்தின் மூலோபாயமாகவுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நலவாழ்வுத் திட்டங்களை மேற்கொள்வதற்குரிய முழு ஆதரவினை கே.பியின் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு அபிவிருத்தி நிறுவனத்திற்கு (NERDO) அரசாங்கம் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

வன்னியில் சிறிலங்கா படையினரின் தாக்குதல்களை நிறுத்துவதற்கான இறுதி நேர முயற்சிகளில் ருத்ராவுடன் கே.பி அதீதமாக ஈடுபட்டிருந்தமை ஒன்றும் இரகசியம் அல்ல. 2009 ஓகஸ்டில் மலேசியாவில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட கே.பி, அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தொடங்கியதை அடுத்து, புலம்பெயர் தமிழர்களை வழிநடத்தும் போட்டியில் ருத்ராவின் கைகள் ஓங்கத் தொடங்கியுள்ளதாகவே நம்பப்படுகிறது.

மே 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் மரபுவழி படைபலத்தை இழந்திருக்கின்ற நிலையிலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் திட்டம் ஈழத்திற்கான பாதைகளைத் திறக்கும் என புலம் பெயர் தமிழர்களுக்கு ருத்ரா உறுதியளித்துள்ளார்.

தென் சூடான் தனி நாட்டிற்கு வழி அமைத்த ஐ.நா தலைமையிலான வாக்கெடுப்பிற்கு ஒத்தவகையில் அனைத்துலகத் தலையீட்டுக்கு அவசியமான நிபந்தனைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்படுத்தும் என ருத்ரா வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில் தென் சூடான் விடுதலை அமைப்புடன் ருத்ரா தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றார் என புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன. 1985 இல் திம்புப் பேச்சுவார்தை காலத்திலிருந்து ருத்ரா விடுதலைப்புலிகளை பிரதிநிதித்துவப்படுத்தி வந்துள்ளார். 2006 ஆரம்பத்தில் 'ஜெனிவா 2' பேச்சுவார்த்தையிலும் பங்கேற்றார். 2003இல் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை உருவாக்கத்திலும் ருத்ராவின் நிபுணத்துவம் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகின்றது. இவரது தந்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் ஒரு தடவை யாழ் நகர மேயராக பதவி வகித்துள்ளார்.

அவர் பெறுமதி மிக்க பங்களிப்பை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியுள்ளார். அதனால் பிரபாகரனுக்கு நெருக்கமாக முடிந்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கு எதிராக சட்டவாளர்களை ஒருங்கிணைத்தமை, கனடாவில் சுரேஸ் மாணிக்கவாசகத்திற்கு எதிரான வழக்கு மற்றும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகளை இணைப்பதான அமெரிக்க முடிவின் சவால்களை எதிர்கொள்வது போன்ற விவகாரங்களில் அவரது பங்களிப்புகள் அமைந்துள்ளது.

ஐ.நா மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் பேணிவரும் உறவு ருத்ராவினுடைய சொத்தாகக் கொள்ளக் கூடியது. தமிழ் கல்வியாளர்களுடனான சந்திப்புகளின் போது தனது நெருக்கத்தைக் உணர்த்தும் வகையில் அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட அவர் மறப்பதில்லை.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு முற்பட்ட காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக சட்ட ஆலோசகராகவும் அனைத்துலக இராஜதந்திர விவகாரங்களை ருத்ரா முன்னெடுத்த வேளையில், கொசோவோ மற்றும் கிழக்குத் தீமோர் நிலைமைகளுக்கு ஒத்ததான அரசியல் சூழலை சிறிலங்கா விவகாரத்தில் ஏற்படுத்துவது ருத்ராவின் உத்தியாக இருந்தது. ருத்ராவின் இவ்வாறான பின்னணி, நீண்ட காலமாக ஈழத்தை அடைவதற்காக விரக்தியுடன் பொறுமை இழந்திருந்த புலம்பெயர் தமிழர்களுக்கு உந்துதலாக அமைந்தது.

இவ்வாறு ஐலண்ட் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான கட்டுரையைப் படிக்க:

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=18286

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={47608D68-6C7B-4165-9196-2CD0AF858445}

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.dailymotion.com/video/xgo1hu_yyyyyy-yyyyy-yyyyy_news

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுவரும் தமிழீழ தேசிய அட்டை தொடர்பிலான பதிவு

http://www.tgte-us.org/idcard/Register.html

  • கருத்துக்கள உறவுகள்

இதை தமிழர்கள் புரிந்து கொள்ளவேணும், தெளிந்துகொள்ள வேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.