Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசின் வாக்குறுதிகள் அனைத்துமே பொய் - கம்யூனிஸ்ட் பாண்டியன்

Featured Replies

இலங்கை அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என நிருபிக்கும் விதமாக 106 தமிழக மீனவர்கள் தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இச்செயலை இந்திய அரசு கண்டிப்பதோடு தமிழக மீனவர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மீனவர்கள் கைது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாகபட்டினம் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் வங்க கடலில் 15.02.2011 செவ்வாய் கிழமை அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். நாளும் தொடரும் இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.

வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். மீன்பிடி வலைகளை அறுப்பது படகுகளை சேதப்படுத்துவது, மீன்களை அள்ளி செல்வது, கடலில் கொட்டுவது, துப்பாக்கியால் சுட்டு கொல்வது, சித்திரவதைகள் செய்வது என இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள், அட்டூழியங்கள் தொடர்கிறது.

இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா இலங்கைக்குச் சென்றார். இதுபோல் தாக்குதல்கள், படுகொலைகள் நடைபெறாது என இலங்கை அரசு உறுதி கூறியதாகவும், தமிழக மக்களுக்கு அவர் அறிவித்தார்.

இலங்கை அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என நிருபிக்கும் விதமாக 106 மீனவர்கள் தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இச்செயலை இந்திய அரசு கண்டிப்பதோடு யாழ்பாணம் பருத்தித்துறை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடி நிபந்தனையின்றி விடுதலை செய்ய இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.

அத்துடன் இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக மீனவர்களை பாதுகப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று தா.பாண்டியன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.