Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையின்வழி நடப்பவர்கள் ஒருபோதுமே பொய்களைக் கண்டு அஞ்சுவதில்லை.

Featured Replies

உண்மையின்வழி நடப்பவர்கள் ஒருபோதுமே பொய்களைக் கண்டு அஞ்சுவதில்லை.

சமீபகாலமாக நெர்டோவின் மனிதாபிமானப் பணிகளில் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் சில செய்திகள் வெளியாகியவாறு இருக்கின்றன. எமது அமைப்பின் செயலாளர் திரு.குமரன் பத்மநாதன்(K.P) அவர்கள் புலம்பெயர் மனிதாபிமான செயற்பாட்டாளர்களுடன், யாழ் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சமூகத் தலைவர்களை சந்தித்ததிலிருந்து பரவிய குழப்பகரமான செய்தி வெளிப்பாடுகள், தற்போது பிறிதொரு வதந்தியில் தரித்து நிற்கிறது.

இந்த வதந்தியை மூத்த ஊடகவியாளர் வித்தியாதரன் தொடக்கி வைத்திருக்கிறார். அவர் என்ன வகையான உள்நோக்கம் கருதிய(Ulterior motive) சொந்த நலன்களில் இருந்து இவ்வாறான உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு வருகின்றார் என்று எமக்குத் தெரியாவிட்டாலும், விடயம் எம்மைப் பற்றியது என்பதால் நாம் அது குறித்து அக்கறைப்படாமல் இருக்க முடியாது.

தற்போது ஊடகவியலாளர் வித்தியாதரன் எந்தவிதமான ஆதாரங்களுமின்றி தனது ஊகங்களை செய்தியாக வெளியிட்டிருக்கிறார். கடந்த 16 பெப்ரவரி, 2011 அன்று தமிழ் மிரர் இணையத்தளத்தில் மேற்படி தனது ஊகத்தை உண்மை போல் வெளியிட்டிருந்தார். இங்கு கருத்துத் தெரிவித்த வித்தியாதரன், சமீபத்தில் இந்திய மீனவர்கள் 108பேர் தடுத்து வைக்கப்பட்டதற்கும் நெர்டோவின் செயலாளர் மற்றும் தலைவருக்கும் திரைமறைவான பங்களிப்பு இருப்பதாக எந்தவிதமான ஆதாரமுமின்றிய குற்றசாட்டுக்களை சுமத்தியிருந்தார். அவரது குற்றச்சாட்டின் அடிப்படையாக இருந்தது, யாழ்ப்பாண மீனவ கட்டமைப்பின் தலைவராக இருப்பவர் நெர்டோவின் தலைவராகவும் இருக்கிறார் என்பதே. எனவே இந்திய மீனவர்கள் தடுத்து வைப்பிற்கும் குமரன் பத்மநாதனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதே அவரது தர்க்கமாகும். வித்தியாதரனின் சிறுபிள்ளைத்தனமான வாதம் அடிப்படையிலேயே மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட முயலும் அவரது அறியாமையையே வெளிப்படுத்தி நிற்கிறது. ஒரு நாட்டின் காவலர்கள் எனப் போற்றப்படும் ஊடகவியலாளராக மேலும் மதிப்புவாய்ந்த பணியில் தன்னை ஈடுபடுத்தியிருக்கும் வித்தியாதரன் ஊடக தர்மத்தை மறந்து தனது நலனுக்காக இவ்வாறு பொறுப்பற்ற முறையில் கருத்துத் தெரிவித்திருப்பதை நெர்டோ வன்மையாகக் கண்டிக்கின்றது.

நெர்டோவின் தலைவர் கடந்த இருபது வருடங்களாக யாழ்ப்பாணத்தின் மீனவர் சங்கங்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுவரும் ஒருவர். மீனவர்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் அதற்காக மீனவர்களை அணிதிரட்டிக் கண்டனச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்திருக்கிறார். இது பலரும் அறிந்த விடயம்.

ஒரு மீனவ சமாஜத்தின் தலைவர் மீனவர்களின் நலன்களுக்காகக் குரல் கொடுக்காமல் வேறு யாருக்காகக் குரல் கொடுக்க முடியும்? அதேவேளை அவர் மனிதாபிமானப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் நெர்டோவின் செயற்பாடுகளிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அவர் எவ்வாறு ஜனநாயக நெறிமுறைகளுக்கு அமைவாக மீனவ சமாஜத்தின் தலைவராக இருக்கின்றாரோ அதே ஜனநாயக ஒழுங்கிற்கு அமைவாகவே நெர்டோவின் தலைவராகவும் இருக்கிறார்.

ஒரு மனிதன் தனது செயற்பாடுகளைப் பல்வேறு வகையில் தீர்மானித்துக் கொள்ளும் உரிமையுடையவன். தான் சார்ந்த சமூகத்தின் பிரதிநிதி என்ற வகையில் அந்தச் சமூகத்தின் பிரச்சனைகளோடு ஒருவர் தன்னை இணைத்துக் கொள்கிறார். அவ்வாறு இணைத்துக் கொள்ளும் போது அவர் அந்தக் குறிப்பிட்ட சமூகத்தின் தலைவராக இருக்கின்றார். அதே நபர் தனது சமூகத்திற்கு வெளியில் பல்வேறு வகையான மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் அமைப்பொன்றில் அங்கத்தவராக இருக்கும் போது அவரது பணிகள் வேறாக அமைக்கின்றன. இந்த மனித இயங்குநிலையின் அடிப்படையில்தான் நெர்டோவின் தலைவரது செயற்பாடுகளை விளங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறில்லாது தங்களது சொந்த அரசியல் நலன்களுக்காக தவறான கருத்துக்களை வெளியிடுவதானது நாகரிகமான ஒன்றல்ல அத்துடன் அது ஊடக அறமுமல்ல.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பாக வன்னி மக்கள், அடிப்படை வசதிகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். முன்னாள் போராளிகள் முகம்கொடுத்து வரும் வாழ்வியல் நெருக்கடிகள் சொல்லில் எழுத முடியாதவைகள். இந்த நிலையில் அவர்களது எதிர்காலத்தை ஆக்க பூர்வமான வகையில் உருப்பெறச்செய்ய வேண்டும் என்பதற்காக நெர்டோ தன்னால் முடிந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் நெர்டோ குறித்து சமீபநாட்களாக வெளிப்படுத்தப்பட்டுவரும் வதந்திகளைப் பார்த்தால் வன்னி மக்களும், முன்னாள் போராளிகளும் எந்தவகையிலும் வாழ்வில் உயர்ந்துவிடக் கூடாது என்று சிலர் நினைக்கின்றனரா என்ற சந்தேகமே வலுக்கிறது.

விடுதலைப்புலிகள் வலுவாக இருந்த காலத்தில், வன்னியை வீரம் விளையும் நிலம் என்றும் போராளிகளை மறத்தமிழர்கள் என்றெல்லாம் புகழ்ந்தவர்கள், இன்று அவர்களை ஏறெடுத்தும் பார்க்கக்கூடத் தயாராக இல்லை. இந்த நிலையில்தான் திரு.பத்மநாதன் தனக்கு கிடைத்த வாய்புக்களை பயன்படுத்தி நெர்டோவின் மூலம் அவர்களது வாழ்வை வளமாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். ஆனால் அதனையும் விமர்சித்து தங்கள் அரசியல் நலன்களைப் பெருக்கிக் கொள்ள சிலர் முயல்கின்றனர். எனினும் இவ்வாறான ஜோடிக்கப்பட்ட செய்திகளால் நெர்டோ ‘பாதிக்கப்பட்ட நம் மக்களை வாழவைத்தல்’ என்னும் இலக்கைவிட்டு ஒதுங்கப் போவதில்லை. அவ்வாறு சிலர் எண்ணுவாராயின் அது அவர்களது அறியாமையாகும்.

குமரன் பத்மநாதன் அரசியலுக்கு வருவதை அல்லது அவரது வருகையின் தேவையை மக்களே முடிவு செய்ய வேண்டும். ஊடகவியலாளர் என்ற போர்வையில் சொந்த நலனுக்காக அழிவுகளால் சிதைந்து போன மக்களின் போராளிகளின் வாழ்வு மீது அரசியல் இலபாம் தேட விளையும் சுயநலவாதிகள் அல்ல என்பதனை மூத்த முதிர்ந்த மரியாதைக்குரிய ஊடகவியலாளர் வித்தியாதரன் புரிந்து கொள்ள வேண்டும். பொய்கள் உண்மையை நசுக்க எழுகிற போதெல்லாம் அது பென்னாம்பெரிய பூதமாக விரியுமாம். அதுவரை உண்மைகள் உறைநிலையில் இருக்குமே தவிர உறங்கிப்போவதில்லை.உண்மையின்

வழி நடப்பவர்கள் ஒருபோதுமே பொய்களைக் கண்டு அஞ்சுவதில்லை.

நெர்டோ

கிளிநொச்சி

  • Replies 77
  • Views 4.4k
  • Created
  • Last Reply

Flasher.gif

கே.பி ... யமனே தோற்றுப்போவான், உன்னிடத்தில்!

Edited by Nellaiyan

மீனவர் பிரச்சினையிலை அப்ப இந்தியாவின் கையும் இருக்கே....?? விளக்கத்துக்கு நண்றி... !

"உண்மையின்வழி நடப்பவர்கள் ஒருபோதுமே பொய்களைக் கண்டு அஞ்சுவதில்லை" - அழகான தலைப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணா, டக்ளஸ் மட்டும்தான் மகிந்தாவின் அடிமைகள். குமரன் பத்மநாதன் மகிந்தாவின் எஜமான் என்று இருந்தால் மட்டும் இவர் அளக்கும் கதைகள் உண்மையாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

குமரன் பத்மநாதன் அரசியலுக்கு வருவதை அல்லது அவரது வருகையின் தேவையை மக்களே முடிவு செய்ய வேண்டும்.

ரஜினிகாந்த் ரேஞ்சுக்கு வந்தாயிற்று. "வணக்கம் தலைவா" என்று ஆர்ப்பரிக்க "ஒரு கைதியின் அரசியல்" என்று மகிந்தவைத் தயாரிப்பாளராக வைத்து படம் எடுக்குமாறு பரிந்துரைக்கின்றேன். . <_<

ஐரோப்பியாவில், குறிப்பாக இங்கிலாந்தில் இருக்கும்...... அதேநேரம் இலங்கையிலும் தொடர்புகளை வைத்திருக்கும் தமிழர்களை நேர்டோவின் ஆட்கள் சந்தித்து காசு கலக்ட் பண்ணுகிறார்கள். வருபவர்கள் இலங்கையில் இருக்கும் சொத்துக்கள் உறவினர்களின் முழு விபரங்களையும் சொல்லிவிட்டுத்தான் காசு கட்டுமாறு கேக்கிறார்கள்.

இப்போது எங்கட புலம்பெயர்ந்த தொழிலதிபர்களின், நிலமை தாச்சியில இருந்து அடுப்புக்க விழுந்தமாதிரி ஆகிட்டுதுங்கோ.. :lol::lol:

Edited by Panangkai

சரியான வார்த்தையில் சொல்வதானால் ... அலிபாபாவும், நாற்பது திருடர்களும் .... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கேபியைச் சந்தித்த ஆட்களை போட்டோவும் பெயருமாகப் போட்டால் எல்லாரும் அறிஞ்சு கொள்ள வாய்ப்பாய் இருக்கமே!!!!!!!!!

  • தொடங்கியவர்

Flasher.gif

கே.பி ... யமனே தோற்றுப்போவான், உன்னிடத்தில்!

நெல்லியான் உங்களோடை நிலைமை இப்படியாயிட்டுதே?? கர்ர்ர்ர்;;;;;;;;;;;;;;;;;;;;;;;.........புர்ர்ர்...............புஸ்ஸ்ஸ்ஸ்..........................

மீனவர் பிரச்சினையிலை அப்ப இந்தியாவின் கையும் இருக்கே....?? விளக்கத்துக்கு நண்றி... !

இப்பொழுதாவது புரிந்ததே. நீங்கள் என்னதான் இங்கிருந்து புலம்பினாலும் அங்குள்ள மக்களிடம் இருந்து நீண்டதுரம் விலகிவிட்டிருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை.

இப்பொழுதாவது புரிந்ததே. நீங்கள் என்னதான் இங்கிருந்து புலம்பினாலும் அங்குள்ள மக்களிடம் இருந்து நீண்டதுரம் விலகிவிட்டிருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை.

நீங்கள் சொல்லி கேக்க வேண்டிய நிலமை எங்களுக்கு.... உங்களுக்கு என்ன, சுட்டு கொல்லும் ஆமியோடை சேந்து தமிழரின் வாழ்வுக்கு பாடுபடுவியள்... என்களாலை முடிய இல்லை...

Edited by தயா

  • தொடங்கியவர்

நீங்கள் சொல்லி கேக்க வேண்டிய நிலமை எங்களுக்கு.... உங்களுக்கு என்ன சுட்டு கொல்லும் ஆமியோடை சேந்து தமிழரின் வாழ்வுக்கு பாடுபடுவியள்... என்களாலை முடிய இல்லை...

என்ன செய்யலாம் இங்கிருந்துகொண்டு அங்குள்ளவர்களை மொத்தமாக சுட்டுக்கொல்லும்படி சொல்லிவிடலாமா? அவன்கள் மெத்தமாக கொன்றபின்னர் சர்வதேசமே வா குற்றவிசாரணை நடத்து என்று லீவுநாளில் பிக்னிக்போய் கைபார்க்கில் நின்று கத்திவிட்டு வராலாம். சர்வதேசமும் இலங்கையை பார்த்து நீ செய்தது குற்றம்தான் ஆனால் நாங்கள் விசாரிக்கமாட்டோம் என்பார்கள். பின்னர் நீங்களும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் யாழ்களத்தில் தமிழீழத்திற்காக போராடுவீர்கள் அவ்வளவுதான் :wub:

இல்லை இல்லை ஒட்டு மொத்தமாக காட்டிக்குடுத்தும், கூட்டிக்குடுத்தும் விடலாம்.... பிரச்சினையே இல்லை...!

அதை விட முக்கியமாய் எல்லாரையும் சிங்களம் படிக்க வைச்சு, பிரித் ஓதப்பழக்கி , பெயரையும் மாத்தி விட்டால் பிரச்சினை ஓவர்... !

அது சரி நாங்கள் ஒண்டும் செய்யக்கூடாது ஆனால் எங்கட சில்லைறை மட்டும் அண்ணைக்கு போதுமாமோ....?? அதை ஏன் அரசாங்கத்திட்டையே வாங்கக்கூடாது..... ??

( உங்களது என்னைப்பற்றிய கற்பனையை பார்க்க சிரிப்பு மட்டும் தான் வருகுது... )

Edited by தயா

  • தொடங்கியவர்

ஐரோப்பியாவில், குறிப்பாக இங்கிலாந்தில் இருக்கும்...... அதேநேரம் இலங்கையிலும் தொடர்புகளை வைத்திருக்கும் தமிழர்களை நேர்டோவின் ஆட்கள் சந்தித்து காசு கலக்ட் பண்ணுகிறார்கள். வருபவர்கள் இலங்கையில் இருக்கும் சொத்துக்கள் உறவினர்களின் முழு விபரங்களையும் சொல்லிவிட்டுத்தான் காசு கட்டுமாறு கேக்கிறார்கள்.

இப்போது எங்கட புலம்பெயர்ந்த தொழிலதிபர்களின், நிலமை தாச்சியில இருந்து அடுப்புக்க விழுந்தமாதிரி ஆகிட்டுதுங்கோ.. :lol::lol:

நான் இலங்கையில் நின்ற காலத்தில் நேர்டோ அலுவலகத்திற்கு வரும் தொலைபேசி அழைப்புக்கள் பெரும்பாலானவை வெளிநாடுகளில் தமிழீழம் பெற்று தருகிறோம் என்கிற பொறுப்பாளர்களினுடையதுததான். மக்கள் பேரவை தலைவர்கள் மற்றும் நாடு கடந்த கடக்காத அரசு தலைவர்கள்.அவர்களின் பெயர்களை சொன்னால் உங்களிற்கு தலை சுற்றும். அனைவருமே பின்கதவை தட்டியபடிதான் நிற்கின்றனர். :wub:

இல்லை இல்லை ஒட்டு மொத்தமாக காட்டிக்குடுத்தும், கூட்டிக்குடுத்தும் விடலாம்.... பிரச்சினையே இல்லை...!

அதை விட முக்கியமாய் எல்லாரையும் சிங்களம் படிக்க வைச்சு, பிரித் ஓதப்பழக்கி , பெயரையும் மாத்தி விட்டால் பிரச்சினை ஓவர்... !

அது சரி நாங்கள் ஒண்டும் செய்யக்கூடாது ஆனால் எங்கட சில்லைறை மட்டும் அண்ணைக்கு போதுமாமோ....?? அதை ஏன் அரசாங்கத்திட்டையே வாங்கக்கூடாது..... ??

( உங்களது என்னைப்பற்றிய கற்பனையை பார்க்க சிரிப்பு மட்டும் தான் வருகுது... )

பிரித் ஓதப்பழகி சிங்களம் படித்தாவது அவர்கள் உயிரை பாதுகாத்துக்கொள்வார்கள் தானே உயிர்தானே முக்கியம் உங்களையும் என்னையும்போல. இல்லாவிட்டால் கணவர் கூப்பிட்டார் என்று நானும் முகாம் வாசலில் அம்மா வந்து அழுதார் என்று நீங்களும் உயிரை பாதுகாத்து கொள்ளவில்லையா? :wub:

நான் இலங்கையில் நின்ற காலத்தில் நேர்டோ அலுவலகத்திற்கு வரும் தொலைபேசி அழைப்புக்கள் பெரும்பாலானவை வெளிநாடுகளில் தமிழீழம் பெற்று தருகிறோம் என்கிற பொறுப்பாளர்களினுடையதுததான். மக்கள் பேரவை தலைவர்கள் மற்றும் நாடு கடந்த கடக்காத அரசு தலைவர்கள்.அவர்களின் பெயர்களை சொன்னால் உங்களிற்கு தலை சுற்றும். அனைவருமே பின்கதவை தட்டியபடிதான் நிற்கின்றனர். :wub:

அவர்களின் பெயர்களை பாவித்து அவர்களுக்கு வேண்டாதவர்கள் அல்லது நேர்டோவுக்கு வேண்டப் பட்டவர்கள் கதைப்பது கடினமான வேலை இல்லையே... இதை எல்லாத்தையுமா சிறுபிள்ளைத் தனமா பிரச்சாரம் பண்ணுறீங்கள்? :rolleyes:

பிரித் ஓதப்பழகி சிங்களம் படித்தாவது அவர்கள் உயிரை பாதுகாத்துக்கொள்வார்கள் தானே உயிர்தானே முக்கியம் உங்களையும் என்னையும்போல. இல்லாவிட்டால் கணவர் கூப்பிட்டார் என்று நானும் முகாம் வாசலில் அம்மா வந்து அழுதார் என்று நீங்களும் உயிரை பாதுகாத்து கொள்ளவில்லையா? :wub:

அதாவது என்ன சொல்லவாறியள் எண்டால் உயிர் இருந்தால் போதும் எண்டுறீயள்.... ! அப்படி எண்டால் உங்களுக்கும் ஆடு மாடுகளுக்கும் என்ன வித்தியாசம்...???

மகிந்த வளர்க்கும் பிராணிகளோ நீங்கள்...??

அப்படி எண்டால் சரிதான்... அவன் தேவை இல்லை எண்டால் அடிச்சு குழம்பு கூட வைக்கலாம்....

சரி உங்களுக்கு நாங்கள் போராடாமல் சில்லறை தந்தால் போதுமோ....??

(உங்களுக்கு என்னை பற்றி தேவை எண்டால் உங்களுக்கு இப்ப புதுசா தெரிஞ்ச ஆக்களையே கேட்டு தெரிஞ்சு கொள்ளலாம்... மற்றும் படி கற்பனயை மூட்டை கட்டி வையுங்கள்... )

Edited by தயா

தெரியாமல் கேக்கிறேன்.. ஒரு முக்கிய போர்க்கைதியை ஒரு முக்கிய போர்க்கைதி மாதிரி நடத்தாமல்.. இப்படி காந்தித்தாத்தா மாதிரி திரிய வைத்திருக்கிறார்கள் என்டால் என்ன காரணம்....

கே.பீ.... சிகப்பு சால்வையும் அசட்டு மூஞ்சையும் கொண்டவரின் அடியாளாக செயல்படுகிறாரா?

அல்லது திட்டத்தோடுதான்* , கே.பீ.... ''வேறொரு நாட்டு'' முகவராக இலங்கையில் இருக்கிறாரா?

* அவர் திட்டமில்லை... :lol:

நான் இலங்கையில் நின்ற காலத்தில் நேர்டோ அலுவலகத்திற்கு வரும் தொலைபேசி அழைப்புக்கள் பெரும்பாலானவை வெளிநாடுகளில் தமிழீழம் பெற்று தருகிறோம் என்கிற பொறுப்பாளர்களினுடையதுததான். மக்கள் பேரவை தலைவர்கள் மற்றும் நாடு கடந்த கடக்காத அரசு தலைவர்கள்.அவர்களின் பெயர்களை சொன்னால் உங்களிற்கு தலை சுற்றும். அனைவருமே பின்கதவை தட்டியபடிதான் நிற்கின்றனர்.

எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான கருத்து.... :lol:

  • தொடங்கியவர்

அதாவது என்ன சொல்லவாறியள் எண்டால் உயிர் இருந்தால் போதும் எண்டுறீயள்.... ! அப்படி எண்டால் உங்களுக்கும் ஆடு மாடுகளுக்கும் என்ன வித்தியாசம்...???

மகிந்த வளர்க்கும் பிராணிகளோ நீங்கள்...??

அப்படி எண்டால் சரிதான்... அவன் தேவை இல்லை எண்டால் அடிச்சு குழம்பு கூட வைக்கலாம்....

சரி உங்களுக்கு நாங்கள் போராடாமல் சில்லறை தந்தால் போதுமோ....??

(உங்களுக்கு என்னை பற்றி தேவை எண்டால் உங்களுக்கு இப்ப புதுசா தெரிஞ்ச ஆக்களையே கேட்டு தெரிஞ்சு கொள்ளலாம்... மற்றும் படி கற்பனயை மூட்டை கட்டி வையுங்கள்... )

இதே கேள்வியினை கண்ணாடி முன்னால் நின்று நீங்களும் கேட்டுப்பாருங்கள் அதற்கான விடை என்னவோ அதுதான் எனது பதிலும் மற்றும்படி உங்களைப்பற்றி அறிந்து நான் செய்வற்கு ஒள்றும் இல்லை உங்களை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்த போராகளே அங்கு உயிர்வாழ்ந்தல் போதும் என்கிற நிலைமையில்தான் உள்ளனர்.

எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான கருத்து.... :lol:

பனங்காய் எங்கே உங்கள் பழைய வாசகத்தை காணவில்லை அடிக்கடி மாற்றுபவரோ?? தமிழருடன் தமிழில் உரையாடுகிறீர்களே??சிறுபிள்ளைத்தனமாய் இல்லையா??

இதே கேள்வியினை கண்ணாடி முன்னால் நின்று நீங்களும் கேட்டுப்பாருங்கள் அதற்கான விடை என்னவோ அதுதான் எனது பதிலும் மற்றும்படி உங்களைப்பற்றி அறிந்து நான் செய்வற்கு ஒள்றும் இல்லை உங்களை விட அனுபவத்திலும் வயதிலும் மூத்த போராகளே அங்கு உயிர்வாழ்ந்தல் போதும் என்கிற நிலைமையில்தான் உள்ளனர்.

ஏன் காட்டி குடுத்த KP க்கு ஆதரவு குடுத்தால் மட்டும் தான் மக்கள் காப்பாத்த படுவார்களோ...??? இலங்கை அரசு ஏன் KP க்கு மட்டும் அனுமதி குடுத்து இருக்கிறது.... எங்களின் அமைப்புக்களுக்கும் அனுமதி வாங்கி தாருங்கள்... ????

இங்கை நேசக்க்கரம் கூட செயற் படுகிறது... அவர்கள் உங்கட ஆக்களின் குறுக்கீடு இல்லாமல் எவ்வளவு வெளிப்படையாக செய்யலாம் எண்டுறீர்கள்...??? ஆனால் உங்கட அமைப்பாலை மட்டும் எப்படி அடைச்சு வைச்சு இருக்கிற புலிகளின் முகாம் களுக்கை எல்லாம் போய் வர முடிகிறது... ??? நீங்கள் இலங்கை அரச்சுக்கு தாளம் போடுகிறவர்கள் என்பதாலா....??

சரி சரண் அடையை சொன்ன KP இண்டு வரைக்கும் நடேசன் அண்ணை பற்றி ஏன் வாய் கூட திறக்கிறார் இல்லை... என் எண்டதையாவது சொல்வீர்களா.... அதை சொன்னால் KP எப்படியான நம்பிக்கை துரோகி என்பது தெரியும் என்பதால் அடக்கி வாசிக்கிறீர்களோ...??

இப்பவும் நீங்கள் தெரிஞ்சு கொள்ள வேண்டியது இங்கை இருந்து எங்களவர் குடுக்கும் அழுத்தம் தான் இலங்கை அரசை உங்களுக்கு ( எங்களை அடக்க ) அனுமதி கொடுக்க வைத்து இருக்கிறது... நாங்கள் இல்லை எண்டால் நீங்களும் கிள்ளுக்கீரைகள்...!

எங்கள் மக்களிற்கு உதவி செய்பவர்கள் யாரென்றாலும் நேசக்கரம் நம்பிக்கையொளி சர்வதேச மாணவர் அமைப்பு மற்றும் பல கோயில்கள் ஊர்சங்கங்கள் என்று எவரிற்கும் நேர்டோவினால் பிரச்சனை வந்ததே கிடையாது அப்படி வந்திருந்தால் இங்கு பகிரங்கமாக தெரிவிக்கலாம். நடேசன் அண்ணை பற்றி ஏன் வாய் திற்கவில்லையென்பதை அவரது சகோதரர் கே பியின் நண்பர் றிச்சாட்அம்மானாலேயே லண்டனில் இருந்து வாய் திற்க்க முடியவில்லை. காரணம் நடேசனின் குடும்பத்தி;ல் சிலர் உயிருடன் பாதுகாக்கப்படவேண்டி இருப்பதால்.

மற்றும்படி வெளிநாட்டில் இருந்து நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தால் நாங்கள் பாதுகாக்கப்படுகிறோம் என்பதற்கு பதிலாக உங்கள் ஒவ்வொரு அழுத்தமும்தான் அங்கு மக்ளை மேலும் அழுத்துகிறது என்பதே உண்மை. அம்மா அழுததால் ஓடிவரவில்லை அழுத்தம் கொடுக்கவே வந்தேன் என்கிறீங்க??

இப்பவும் நீங்கள் தெரிஞ்சு கொள்ள வேண்டியது இங்கை இருந்து எங்களவர் குடுக்கும் அழுத்தம் தான் இலங்கை அரசை உங்களுக்கு ( எங்களை அடக்க ) அனுமதி கொடுக்க வைத்து இருக்கிறது... நாங்கள் இல்லை எண்டால் நீங்களும் கிள்ளுக்கீரைகள்...!

தயா, நீங்கள் வழக்கம்போல மொட்டைத்தலக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடுகிறீர்கள்... :lol:

இது வேறேதோ கேம்.. ஆசிய அரசியல் சம்பந்தப்பட்டதுபோல் தோன்றினாலும்.. கேபியையையும் சில கீழ்மட்ட அரசியல் அனாதைகளையும் வைத்து, பசீல் விளையாடுறான் எண்டுதான் கேள்வி..

  • தொடங்கியவர்

யாழ். குடா மாதகல் கடற்பரப்பில் மீண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் காணப்படுவதாக மாதகல் மீனவர்களும் மாதகல் கடற்றொழில் சங்கத் தலைவர் இராஜசிங்கமும் இன்று தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இந்திய மீனவர்களுடைய 6இற்கு மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் அத்துமீறிப் பிரவேசித்து தமது 8 லட்சத்திற்கு மேல் பெறுமதியான வலைகளை அறுத்தெறிந்ததாக கடற்றொழில் வடமாகாண சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து அவரிடம் தெடர்பு கொண்டு கேட்டபோது அவர் மேலும் தெரிவித்ததாவது-

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டும் காணாததுபோல் இருந்துவிட முடியாது. இந்தநிலை தொடருமானால் வடமாகாண கடற்தொழிலாளர்கள் அகிம்சை வழிகளை தெரிவு செய்யாமல் வன்முறையில் இறங்க வேண்டிய கட்டாயத் தேவை எழும் என வடமாகாண சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அத்துமீறிப் பிரவேசித்த இந்திய மீன்பிடி வள்ளங்களுடன் மீனவர்களைக் கைது செய்து எதிர்ப்பை வெளியிட்டபோதிலும் அது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் அக்கறையற்று இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirr...4-15-21-24.html

மற்றும்படி வெளிநாட்டில் இருந்து நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தால் நாங்கள் பாதுகாக்கப்படுகிறோம் என்பதற்கு பதிலாக உங்கள் ஒவ்வொரு அழுத்தமும்தான் அங்கு மக்ளை மேலும் அழுத்துகிறது என்பதே உண்மை. அம்மா அழுததால் ஓடிவரவில்லை அழுத்தம் கொடுக்கவே வந்தேன் என்கிறீங்க??

நிச்சயமாக மலேசியாவில் இருந்து வேலை செய்த பல புலிகளின் ஆதரவாளர்கள் உங்களது KP அண்ணையால் காட்டிக்குடுக்கப்பட்டனர்... சிலர் தப்பி ஓடி இருக்கிறார்கள் சிலர் கைது செய்ய பட்டும் இருக்கிறார்கள்...! அதையும் விட இந்தோ நேசியாவில் , தாய்லாந்தில் இருந்தும் , உதவியவர்கள் KP யால் காட்டிக்குடுக்கப்பட்டனர்....!

இந்தோநேசியாவில் இருந்த ஒரு பெண்ணுக்கு ........................... கதைக்கிறன் எண்டு KP தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு இருந்தார் அடுத்த நாள் அவரின் வீடு சிங்கள அதிகாரிகள் உட்பட இந்தோநேசிய காவல்த்துறையால் சுற்றிவளைக்கப்பட்டது.... சம்பந்தப்பட்டவர்கள் வீட்டில் இல்லாததால் யாரும் கைது செய்யப்படவில்லை... இதை KP யை கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்....

உங்கட இரண்டான் தர நிலை கருத்துகளையும் தாண்டி உங்களை இதை விட கீழ் தரமாக என்னாலும் விமர்சிக்க முடியும்....! ஆனால் ஏற்கனவெ சிங்களவனுக்கு நக்கிறம் எண்ட

  • தொடங்கியவர்

தயா, நீங்கள் வழக்கம்போல மொட்டைத்தலக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடுகிறீர்கள்... :lol:

இது வேறேதோ கேம்.. ஆசிய அரசியல் சம்பந்தப்பட்டதுபோல் தோன்றினாலும்.. கேபியையையும் சில கீழ்மட்ட அரசியல் அனாதைகளையும் வைத்து, பசீல் விளையாடுறான் எண்டுதான் கேள்வி..

ராஜபக்சா குடும்பத்ற்குள்ளேயே புலனாய்வு பிரிவை வைத்திருக்கிறார் பனங்காய் :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.