Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆஸ்கார் ரஹ்மான் கைக்கு எட்டவில்லை

Featured Replies

இவ்வருட ஆஸ்கார் ரஹ்மான் கைக்கு எட்டவில்லை

127 hours படத்துக்கான பின்னணி இசைக்கும் அதே திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்குமாக A.R. ரஹ்மான் இரண்டு விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் இருந்தார் .

தான் நிகழ்ச்சியில் பங்குபற்ற மட்டுமே போகிறேன் பரிசை வெல்லும் எதிர்பார்ப்பு தன்னிடம் இல்லை என ரஹ்மான் கூறியிருந்தார் .

இரண்டு விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் குறைந்த பட்சம் ஒன்றாவது பெற்று ஏற்கனவே ஒரே வருடத்தில் இரண்டு விருது பெற்ற தமிழன் என்ற அவரது சாதனையை இரண்டு முறை வெவ்வேறு வருடங்களில் பெற்றவர் என்று உயர்த்திக்கொள்வாரா என்ற கோடிகணக்கான ரஹ்மான் ரசிகர்களின் ஆசைக்கு இன்றிரவு விடை கிடைத்துள்ளது . ஆயினும் அது முழு மகிச்சிக்குரியதாக அமையவில்லை .

இரண்டு பரிசுகளையும் வேறு இருவர் தட்டி சென்றுள்ளனர் . ஆயினும் ரஹ்மான் இவ்வருடத்தின் உலகின் 5 சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் என்ற பெயருடன் மீண்டுள்ளார் என்பது பெருமையே . அத்துடன் உலகின் சினிமாவின் உச்சமான ஒஸ்கார் நிகழ்ச்சி மேடையில் மீண்டும் இன்றிரவு (Feb 27) தோன்றி தனது பாடலை தந்து பெருமை சேர்த்து கொண்டார் என்பதும் ஒரு தனி பெருமையே. இப்படியான ஒரு தகமை வேறு எந்த தெற்காசிய இசையமைப்பாளருக்கும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிட தக்கது

Competing Nominees and winner:

MUSIC (ORIGINAL SCORE)

How to Train Your Dragon - John Powell

Inception - Hans Zimmer

The King's Speech - Alexandre Desplat

127 Hours - A.R. Rahman

WINNER = The Social Network - Trent Reznor and Atticus Ross

MUSIC (ORIGINAL SONG)

Country Strong - "Coming Home" Music and Lyric by Tom Douglas, Troy Verges and Hillary Lindsey

Tangled - "I See the Light" Music by Alan Menken; Lyric by Glenn Slater

127 Hours - "If I Rise" Music by A.R. Rahman; Lyric by Dido and Rollo Armstrong

WINNER = Toy Story 3 - "We Belong Together" Music and Lyric by Randy Newman

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=6704

  • தொடங்கியவர்

தலா 4 விருதுகளைத் தட்டிச் சென்ற தி கிங்ஸ் ஸ்பீச், இன்செப்ஷன்

83வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் கோலாகலமாக நடந்தேறியது.

இன்செப்ஷன் மற்றும் தி கிங்ஸ் ஸ்பீச் ஆகிய படங்கள் தலா 4 விருதுகளைத் தட்டிச் சென்றன. தி சோஷியல் நெட்வொர்க் படத்திற்கு 3 விருதுகள் கிடைத்தன. தி பைட்டர் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.

இதில் ஒரிஜினல் இசை மற்றும் ஒரிஜினல் பாடல் பிரிவுகளில் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை.

இன்செப்ஷன் திரைப்படம் 4 விருதுகளைக் குவித்தது. அதேபோல தி கிங்ஸ் ஸ்பீச் படத்திற்கும் 4 விருதுகள் கிடைத்தன.

விருதுகள் பெற்றோர் விவரம்:

சிறந்த நடிகர் – காலின் ஃபிர்த் (தி கிங்ஸ் ஸ்பீச்)

சிறந்த நடிகை – நதாலி போர்ட்மேன் (பிளாக் ஸ்வான்)

இயக்குநர் – டாம் ஹூப்பர் (தி கிங்ஸ் ஸ்பீச்)

இசை (ஒரிஜினல் பாடல்) – டாய் ஸ்டோரி 3

சிறந்த எடிட்டிங் – தி சோஷியல் நெட்வொர்க்

விஷூவல் எபக்ட்ஸ் – இன்செப்ஷன்

பொழுதுபோக்கு டாக்குமென்டரி – இன்சைட் ஜாப்

குறும்படம் (லைவ் ஆக்ஷன்) – காட் ஆப் லவ்

டாக்குமென்டரி – ஷார்ட் சப்ஜெக்ட்- ஸ்டிரேஞ்சர்ஸ் நோ மோர்

காஸ்ட்யூம் வடிவமைப்பு – ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்

மேக்கப் – தி உல்ப்மேன்

ஒலிக் கலவை – இன்செப்ஷன்

இசை (ஒரிஜினல் ஸ்கோர்) – தி சோஷியல் நெட்வொர்க்

சிறந்த துணை நடிகர் – கிறிஸ்டியன் பாலே (தி பைட்டர்)

சிறந்த வெளிநாட்டுப் படம் – இன் எ பெட்டர் வேர்ல்ட் (டென்மார்க்)

திரைக்கதை (ஒரிஜினல்) – தி கிங்ஸ் ஸ்பீச்

திரைக்கதை (தழுவல்) – தி சோஷியல் நெட்வொர்க்

அனிமேஷன் பொழுது போக்குப் படம் – டாய் ஸ்டோரி 3

அனிமேஷன் குறும்படம்- தி லாஸ்ட் திங்

சிறந்த துணை நடிகை – மெலிஸா லியோ (தி பைட்டர்)

ஒளிப்பதிவு – இன்செப்ஷன்

கலை இயக்கம் – ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்

சிறந்த திரைப்படம் – தி கிங்ஸ் ஸ்பீச்

http://www.alaikal.com/news/?p=58852

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஸ்கார் ரஹ்மான் கைக்கு எட்டவில்லை

ஒருக்கால் விருது எடுத்தவுடனை......... வருசாவருசம் விருது தருவாங்கள் எண்டு நினைக்கிறது அவ்வளவு நல்லாயில்லை கண்டியளோ. :)

இருக்கிறதை வைச்சு சந்தோசப்படோணும்.அதாவது வந்தவரைக்கும் லாபம் ராசா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை கொடுத்ததே பெரிசு :rolleyes:

  • தொடங்கியவர்

Oscars 2011 : Florence Welch With A.R. Rahman

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.