Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பர் தற்கொலை

Featured Replies

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா இன்று (16.03.11) திடீரெனத் தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூரைச் சேர்ந்த ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா சென்னையில் கிரீன் ஹவுஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து வந்தார். இந் நிறுவனம் ராசா அமைச்சரான பின்னர் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்<br />என்பதால் இவரும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விசாரணை வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள் வீடுகள் மற்றும்அலுவலகங்களில் மத்திய புலனாய்வுக் கழகம் அதிரடி சோதனைகளை நடத்தியது. இவ்வாறு மத்திய புலனாய்வுக் கழகத்தின் சோதனைக்கு உள்ளானவர்களில் சாதிக் பாட்சாவும் ஒருவர்.

இன்று உச்சநீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை தொடர்பான வழக்கில் விசாரணை நிலவர அறிக்கையை மத்திய புலனாய்வுக் கழகம் தாக்கல் செய்ததுடன், எதிர்வரும் 31ஆம் திகதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

இந் நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தனது வீட்டில் சாதிக் பாட்சா இன்று தற்கொலை தூக்கில் தொங்கி செய்து கொண்டார். சாதிக் பாட்சாவின் மற்கொலை ஸ்பெக்ட்ரம் இலைக்கற்றை ஊழல் வழக்கில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தற்கொலை குறித்து தேனாம்பேட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டமை குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு டெல்லி மத்திய புலனாய்வுக் கழகத்தின் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் இலைக்கற்றை ஊழல் வழக்கில் சாதிக் பாட்சா ஒரு முக்கிய நபர் என்பதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் மத்திய புலனாய்வுக் கழகம் சாதிக் பாட்சா மரணம் குறித்த விசாரணையில் இறங்கியுள்ளது.

அத்துடன், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருவதால் மத்திய புலனாய்வுக் கழகத்துக்கும் இது பெரும் சிக்கலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொள்வதற்கு இவ் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உயர்மட்டத்தினரால்நிர்ப்பந்திக்கப்பட்டாரா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக தெரிய வருகின்றது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={F63A0D4C-73A3-45DB-B2ED-B44803E1E296}

  • கருத்துக்கள உறவுகள்

sathik-sucide1.jpg

கலைஞருக்கு நன்றி.... கலைஞர்

காப்பீட்டுத் திட்டத்திற்கு நன்றி

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=540:2011-03-16-10-50-38&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

டிஸ்கி:

சீனுவாசன் போல அடித்து கொலை செய்து இருப்பார்கள் .கருநாகத்திற்கு இதெல்லாம் கைவந்த கலை.

சாதிக் பாட்சா கொலையா? அல்லது கட்டாய தற்கொலையா? இது குறித்து மத்திய புலனாய்வுத் துறை தீர விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஆ.ராசாவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்த அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆண்டிமுத்து ராசாவின் நெருங்கிய கூட்டாளியும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் சட்டவிரோதமாக ஆ.ராசாவால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களின் காப்பாளருமான சாதிக் பாட்சா, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், மர்மமான முறையில் இறந்திருப்பது தி.மு.க.வின் "நீதி வழங்கும்" பாணியை தெரிந்துள்ள மக்களுக்கு எவ்வித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்காது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்டாலினின் நெருங்கிய கூட்டாளியும், பினாமியுமான அண்ணாநகர் ரமேஷ் மற்றும் அவருடைய குடும்பம் "தற்கொலை" செய்து கொண்டார். அந்த சமயத்தில் மனசாட்சிப்படி ரமேஷ் உண்மையைச் சொல்லி விடுவாரோ, அரசாங்க சாட்சியாக மாறிவிடுவாரோ என்ற ஒரு மர்மப் பேச்சு இருந்தது. தற்போது இது சாதிக் பாட்சாவின் முறை!

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் விசாரணையின் சாட்சிகளுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சாட்சிகளுக்கு இது போன்ற நிலைமை தான் காத்திருக்கிறது.

இந்த இமாலய ஊழலின் பின்னணியில் உள்ள முழு உண்மையும் வெளிக் கொணரப்பட வேண்டுமென்று மத்திய புலனாய்வுத் துறையும், உச்ச நீதிமன்றமும் கருதினால், விசாரணை முடியும் வரை அனைத்து சாட்சிகளையும் மத்திய புலனாய்வுத் துறை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும், அல்லது நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும்.

மேலும், இந்த ஊழலின் முக்கியக் குற்றவாளியான ஆண்டிமுத்து ராசாவுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் சாதிக் பாட்சாவின் கதி தான் ராசாவுக்கும் ஏற்படும். மத்திய புலனாய்வுத் துறை கருணாநிதி குடும்ப உறுப்பினர்களை நெருங்கக் கூடாது என்பதுதான் தி.மு.க.வின் முக்கிய நோக்கம்.

ஒரு இமாலய ஊழலை செய்துவிட்டு, அதை மூடி மறைக்க மேலும் ஒரு மன்னிக்க முடியாத குற்றம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. இது கொலையா? அல்லது கட்டாய தற்கொலையா? இது குறித்து மத்திய புலனாய்வுத் துறை தீர விசாரிக்க வேண்டும்.

மத்திய புலனாய்வுத் துறை இதில் ஏதாவது தயக்கம் காட்டினால், உச்ச நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் இதில் தலையிட்டு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

சாதிக் பாட்சா தற்கொலை குறித்து பிரபல தலைவர்களின் கருத்து அடங்கிய வீடியோ பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=25653

Edited by easyjobs

  • தொடங்கியவர்

சாதிக்பாட்சா மூச்சு திணறி இறந்தார்: டாக்டர் பரபரப்பு தகவல்

சென்னை: தற்கொலை செய்து கொண்ட ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா மூச்சு திணறி இறந்தார் என்று பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவர் டெக்கால் தெரிவித்துள்ளார்.

2ஜி விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 2ஜி விவகாரம் குறித்து அவரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லையா என்று அனைவரும் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அவரது பிரதே பரிசேதனை முடிந்துள்ளது.

சாதிக் பாட்சா உடல் பிரேத பரிசோதனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடந்தது. பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் டெக்கால் நிருபர்களிடம் கூறியதாவது,

சாதிக் பாட்சாவின் உடலில் கழுத்து இறுக்கப்பட்ட அடையாளத்தை தவிர வேறு காயமே இல்லை. அவர் மூச்சு திணறி இறந்தது மட்டுமே உறுதியாகி உள்ளது.

அவர் தூக்கில் தொங்கினாரா, இல்லையா? என்பதை கழுத்து பகுதியில் உள்ள சதையை ஆய்வு செய்த பிறகு தான் தெரியும். அவரது கழுத்து சதை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் 2 வாரங்களி்ல் தயாராகிவிடும் என்றார்.

English summary

Dr. V. Dekal of the Royapettah hospital, who conducted postmortem, told that former minister A. Raja's friend Sadiq Batcha died of asphyxia. There is no sign of injury in Batcha's body except the compression of the neck with hanging mark. We can't say now whether it is suicide or murder. The postmortem report will be ready in 2 weeks, he added.

http://thatstamil.oneindia.in/news/2011/03/18/sadiq-batcha-died-asphyxia-says-doctor-aid0091.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.