Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமான நிலையங்களுக்காக இந்தியா,சீனா கடும்போட்டி – எவருக்கும் இல்லை என்கிறது சிறிலங்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thursday, 17 March 2011 00:37

விமான நிலையங்களுக்காக இந்தியா,சீனா கடும்போட்டி – எவருக்கும் இல்லை என்கிறது சிறிலங்கா

சிறிலங்காவின் உள்ளூர், அனைத்துலக விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி எழுந்துள்ளது.

இதனால் சிறிலங்கா அரசாங்கம் இராஜதந்திர அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்தநிலையில், எந்தவொரு விமான நிலையத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பும் வெளிநாட்டு நிறுவனங்களிடம ஒப்படைக்கப்பட மாட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து சிறிலங்காவின் குடியியல் விமானசேவைகள் அமைச்சர் பிரியங்கார ஜெயரத்ன தகவல் வெளியிடுகையில்,

சிறிலங்காவில் உள்ள விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் உதவ முன்வருகின்றன.

இந்தியா, சீனா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளின் நிறுவனங்கள் மத்தியில் இதற்கு கடும் போட்டி நிலவுகிறது.

ஆனால் அரசாங்கம் ஒருபோதும் எந்தவொரு விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் வழங்காது.

உதவ முன்வரும் நிறுவனங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எந்த நிறுவனத்துக்கு வழங்குவது என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை.

பொருத்தமான நிறுவனத்திடமே உள்ளூர் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான பணி ஒப்படைக்கப்படும்“ என்று தெரிவித்தார்.

அதேவேளை, சிறிலங்காவின் விமான நிலையங்கள், விமானசேவைகள் நிறுவனத்தின் பிரதித் தலைவர் கமால் ரத்வத்தை கூறுகையில்,

“அனைத்தலக விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் உதவிகள், கடனுதவிகளையே எதிர்பார்க்கிறது.

அது எந்தவகையிலும் வெளிநாட்டு நிறுவனத்திடம் விமான நிலைய நிர்வாகத்தை ஒப்படைப்பதற்கான வழிமுறையாக இருக்கமாட்டாது.

உள்ளூர் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு பொருத்தமான நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைப்பதற்கு அரசாங்கம் யோசிக்கிறது.“ என்று தெரிவித்தார்.

முன்னதாக இரத்மலானை விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணி இந்திய நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதற்கான திட்ட அறிக்கையை இந்திய நிறுவனத்திடம் இருந்து சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே பெற்றிருப்பதாகவும், விரைவில் அந்த நிறுவனத்துடன் உடன்பாடு செய்து கொள்ளப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

பலாலி விமான நிலையத்தையும் இந்திய நிறுவனம் ஒன்றே புனரமைக்கவுள்ள நிலையில் இரத்மலானை விமான நிலையத்தையும் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுத்த முடிவு இராஜதந்திர நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.

சீனாவின் அழுத்தம் காரணமாகவே, எந்த நிறுவனத்திடமும் விமான நிலைய அபிவிருத்திப் பணி ஒப்படைக்கப்படவில்லை என்றும், நிர்வகிக்கும் பொறுப்பு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படாது என்றும் அரசாங்கம் கூறியிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக பலாலி மற்றும் இரத்மலானை விமான நிலையங்களை வர்த்தக விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச அனுமதியை வழங்கியிருந்தார்.

இவை பல தசாப்தங்களாக சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இராணுவத் தேவைகளை நிறைவேற்றுவதற்கே இந்த விமான நிலையங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சிறிலங்காவில் அம்பாந்தோட்டை- மத்தாலவில் அனைத்துலக விமான நிலையம் ஒன்றை அமைத்து வரும் சீனா, இரத்மலானை விமான நிலையப் புனரமைப்புப் பணிகளையும் குறிவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

sankathi

யார் புனரமைத்தாலும் பாகிஸ்தான் விமானப்படையின் பாவனைக்கு வழங்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரின் பாவானைக்கு விட்டால்.... ஸ்ரீலங்காவின் மதிப்பு உயரும். Wee-Jx-MJ3A.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப பிகு பண்ண கூடாது ஒழுங்காக சீனாவுக்கு ஒப்படைக்க வேணும்..

டிஸ்கி:

ஆண்டவன் சொத்து ஆளுகொரு குத்து..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.