Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போரின் இறுதிக்கட்டத்தில் வெளிநாட்டு அழுத்தத்தை தடுத்து நிறுத்திய இந்தியா - இந்து தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரின் இறுதிக்கட்டத்தில் வெளிநாட்டு அழுத்தத்தை தடுத்து நிறுத்திய இந்தியா - இந்து தகவல்

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் அதிகரித்த மக்கள் படுகொலைக்கெதிராக எழுந்த வெளிநாட்டு அழுத்தத்தை இந்தியா தனது ராஜதந்திரச் செல்வாக்கைப் பாவித்து தடுத்து நிறுத்தியதுடன், இலங்கை தனது கொடூரப் போரில் தடையின்றித் தொடர்ந்து செல்வதற்கும் உதவியதாக விக்கிலீக்கின் தகவல்களை ஆதாரம் காட்டி இந்துவில் நிருபமா சுப்ரமணியன் செய்தி வெளியிட்டிருக்கிறார்.

ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியா கவலை கொண்டதாம், ஆனால் புலிகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபடியினால் அது போரை நிறுத்துவதை விரும்பவில்லையாம்.

http://www.thehindu.com/opinion/lead/article1544202.ece?sms_ss=facebook&at_xt=4d81d98bc318299f%2C0

India played a key role in warding off international pressure on Sri Lanka to halt military operations and hold talks with the LTTE in the dramatic final days and weeks of the war in 2009, confidential U.S. Embassy cables accessed by The Hindu through WikiLeaks showed.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிலீக்ஸ்: சர்வதேச நெருக்கடியில் இருந்து இலங்கையை காத்த இந்தியா!

கடந்த 2008-ல் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிப் போர் நின்றுவிடாத வகையில், சர்வதேச நெருக்கடிகளில் இருந்து இலங்கை அரசை இந்தியா தான் காப்பாற்றியது என வாஷிங்கடனுக்கு அனுப்பிய அமெரிக்க தூதரக கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது, 'தி' ஹிந்து' வாயிலாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் அம்பல ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுப்பதற்கு பல தடவை குரல் கொடுத்த இந்திய அரசு. அதுகுறித்து தனது கவலையையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தது. அதேவேளையில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கேட்கவே இல்லை என அமெரிக்க தூதரக கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் முடியும் தருவாயில், இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து சர்வதேச நாடுகளுடனும், அமைப்புகளுடனும் தனது கவலையைப் பகிர்ந்துகொண்டாலும், இலங்கையின் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கான மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை மழுங்கடிக்கும் முயற்சியில் இந்தியா முனைப்புடன் ஈடுபட்டது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி 29 தேதியிட்ட அமெரிக்க தூதரக கேபிளில், இலங்கைக்கு இந்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி மேற்கொண்ட அவசர பயணம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர், ராணுவத் தலைவர் உள்பட உயரதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய பிரணாப் முகர்ஜி, "மனித உரிமைகளும் குடிமக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் பட்சத்தில் வேறு எந்த பிரச்னையும் இல்லை (போர் நீடிக்கலாம் என்ற அர்த்தத்தில்)," கூறியதாக, அமெரிக்கத் தூதரிடம் கொழும்புவில் உள்ள இந்தியத் தூதரக துணைத் தலைவர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தனது பயணத்துக்கு பிறகு பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூட போர் நிறுத்தம் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் மட்டும் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யுமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டது. இதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்த அழுத்தம் தான் காரணம். அதற்குப் பிறகு, போர் தொடர்வதை இந்தியா ஒருபோதும் தடுக்கவில்லை என்று அந்தக் கேபிளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் : இந்திய ரேடார்கள் போதாமல் அமெரிக்காவை நாடிய இலங்கை அரசு!

கடந்த 2007-ம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரின் போது, தமக்கு இந்தியா வழங்கிய ரேடார்கள் போதவில்லை என்பதற்காக, அமெரிக்காவை இலங்கை அரசு நாடியது, கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் வாஷிங்டனுக்கு பகிரப்பட்டுள்ளது, 'தி' ஹிந்து' வாயிலாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் அம்பல ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

2007 ஆம் ஆண்டு ஏப்.1-ல் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வாஷிங்டனுக்கு 'ரகசியம்' பிரிவில் பகிரப்பட்ட அந்தக் கேபிளில், 'இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட ரேடார்களால் விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே, எங்களுக்கு மேலும் அதிநவீன ரேடார்களைக் கொடுத்து உதவுங்கள் என அமெரிக்காவிடம் இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே கோரினார்.

அதேநேரத்தில், இந்தியாவுக்குத் தெரியாமல் இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கக்கூடாது என இலங்கை ஒப்புக் கொண்டது என அந்தக் கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், '2007 மார்ச் மாதத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட எம்.ஐ ரக ஹெலிகாப்டர்களும் சேதமடைந்தன. தங்களுக்கு இந்தியா அளித்திருந்த இரு பரிமாண ரேடார்களால் விடுதலைப்புலிகளின் விமானம் வந்ததைக் கண்டறிய முடியவில்லை.

எனவே, சீனாவிடமிருந்து முப்பரிமாண ரேடார் பெறுவது என முடிவு செய்யப்பட்டதாகவும் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் கோத்தபய ராஜபக்ஷே கூறியிருக்கிறார் என்பது 'தி ஹிந்து'வில் வெளியான விக்கிலீக்ஸ் அம்பல ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை கடற்பரப்பை கண்காணிப்பதற்காக அமெரிக்கா அளித்த ரேடார்களை இலங்கையின் வடபகுதியில் நிறுவக் கூடாது. அவற்றை தெற்குப் பகுதிக்கு கொண்டு செல்லவேண்டும் என்று இலங்கையை இந்தியா வற்புறுத்தியிருக்கிறது.

அதற்கு இலங்கை உடன்படாததால், இந்தியா தனது எதிர்ப்பை விலக்கிக் கொண்டது என்றும் கொழும்புவில் இருந்து அமெரிக்காவுக்கு பகிரப்பட்ட தூதரக ஆவணம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூலம்: விகடன்

வட இந்தியாவிலும், கேரளாவிலும் ஆசியாவின் கீழ்தர மக்களை, காட்டுமிராண்டிகளை பெரும்பான்மையாக கொண்டிருக்கும் இந்தியாவால் இவ்வாறான மனித விரோத காரியங்களை மட்டுமே செய்யமுடியும்.

"லங்கா ரத்னா" பரிசு பெற்ற சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலி இந்து ராம், தமிழ் நாட்டு மண்ணிலிருந்துகொண்டு இந்திய அரச பயங்கரவாதிகளின் காலை வாரிவிடுவதை பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு இந்திய அரச பயங்கரவாதிகள் சிங்கள பயங்கரவாதிகளிடம் இலஞ்சம் பெற்றுள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.