Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்

லிபிய நாட்டின் அதிபர் கேணல் கடாபியின் ஆதரவுப் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஐ.நா.சபையின் அனுமதியை அடுத்து கடாபி மீது எந்நேரமும் தாக்குதல் இடம்பெறலாம் என்பதற்கு முன்னதாக,ஐ.நா.பாதுகாப்பு பேரவையின் முடிபுக்கு அஞ்சி ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தத்தை கேணல் கடாபி அறிவித்துள்ளார். கேணல் கடாபியின் இந்த அறிவிப்பு தொடர்பில் கடாபி பயந்துவிட்டார் என ஒரு தரப்பும், அவர் புத்திசாலித்தனமான தீர்மானம் எடுத்துள்ளார் என இன்னொரு தரப்பும் வாதப்பிரதிவாதம் செய்யலாம்.

ஆனால், பொதுவில் நின்று ஆராய்வோர் ஐ.நா.பாதுகாப்புப் பேரவையின் தீர்மானம், அதனை அடுத்து கடாபி அறிவித்த யுத்த நிறுத்தம் என்பவற்றினூடாக, லிபிய நாட்டில் அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாகக் கொல்லப்படும் வன்செயல் நின்று போயுள்ளதெனக் கூறுவர். உண்மையில் வன்செயல் நிறுத்தப்படுவது, பொது மக்களின் உயிர் பாதுகாக்கப்படுவது என்பனவே தேவையானவையாகும். ஐ.நா.சபையின் நோக்கமும் அதுவே. அந்த வகையில் லிபியா தொடர்பில் ஐ.நா. பாதுகாப்புப் பேரவை எடுத்த முடிபைப் பாராட்ட முடியும்.

அதேநேரம்,லிபிய அதிபர் கேணல் கடாபி தனது நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தி கொன்றொழித்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் வன்னியில் நடந்த யுத்தத் தின்போது, உயிரிழந்த-காணாமல்போன- மருத்துவ வசதிகள் கிடைக்காமல் பலியாகிப்போனவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு ஆகும். லிபிய நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரை தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்க போர்க் கப்பலை அனுப்பவும், கடாபி மீது தாக்குதல் நடத்தும் அனுமதியை பாதுகாப்பு பேரவை அவசர அவசரமாக எடுக்கவும் முடியும் எனில் , வன்னி யுத்தத்தின் போது ஏன் அப்படி எதுவும் நடக்க வில்லை என்ற வினா ஏக்கத்துடன் -சோகத்துடன் எழுகை பெறுகின்றது.

வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழக்கையில், ஐ.நா.சபை இப்படியானதொரு முடிபை எடுத்து எங்களைக் காப்பாற்றும் என நம்பியவர்கள் கூட பலியாகிப்போகும் அளவில் எங்கள் விட யத்தில் ஐ.நா.சபையின் பாதுகாப்புப் பேரவை வாய்மூடி நின்றமைக்கான பலமான மூல காரணம் இருக்கவே செய்கின்றது.

அந்தக் காரணங்களுடன் தமிழ் அரசியல் தலைமைகளின் விவேகமற்ற செயல்களும் சுயநலன்களும் இணைந்து எங்கள் இனத்தை சங்காரம் செய்துவிட்டன. அந்த இழப்பை எவராலும் ஈடுசெய்ய முடியாத தாயினும் சமகாலத்தில் உலக அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் அரசியல் தலைமைகள் செயற்படுவது எதிர்காலத்திலேனும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வழிவகுக்கும். ஆகவே தயவு செய்து லிபியாவை ஒரு கணம் அவதானியுங்கள். அதில் நிறைந்த அனுபவ பாடம் உள்ளது.

valampuri.com

உலக அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்

அந்தக் காரணங்களுடன் தமிழ் அரசியல் தலைமைகளின் விவேகமற்ற செயல்களும் சுயநலன்களும் இணைந்து எங்கள் இனத்தை சங்காரம் செய்துவிட்டன. அந்த இழப்பை எவராலும் ஈடுசெய்ய முடியாத தாயினும் சமகாலத்தில் உலக அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் அரசியல் தலைமைகள் செயற்படுவது எதிர்காலத்திலேனும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வழிவகுக்கும். ஆகவே தயவு செய்து லிபியாவை ஒரு கணம் அவதானியுங்கள். அதில் நிறைந்த அனுபவ பாடம் உள்ளது.

valampuri.com

வலம்புரியையும் துரோகிப் பட்டியலில் சேர்க்கும் நாள் தூரமில்லை (பு.பெ.தமிழ் கூட்டத்தால்)

ஒவ்வொரு மக்கள் விடுதலைப்போராட்டமும் தனித்துவமானது. ஒவ்வொரு நாட்டினதினதும் அரசியல் உலக சதுரங்கத்தில் தனித்துவமானது. வங்களாதேசம் , கிழக்கு திமோர், கோசவா, தென் சூடான் என பிரிந்த ஒவ்வொரு நாடும் தனித்துவமான நிலைப்பாட்டை கொண்டிருந்தன. துனீசியா, எகிப்து என சர்வாதிகாரிகளை வெற்றிகரமாக அகற்றிய மக்கள் புரட்சிகள் கூட தனித்துவமானவை. லிபியாவின் தலைவிதி இன்று "எதுவும் நடக்கலாம்" என்ற நிலையில் உள்ளது.

உலக அரசியல் புத்தகங்கள் நிச்சயம் எமக்கு ஒரு பாடப்புத்தகம், அவற்றை படிப்பது எமது மக்களினதும் தலைவர்களினதும் கடமை. அதேவளை மாறும் உலக அரசியல் பொருளாதார அன்றாட நிலைமைகளை அவதானித்து சாணக்கியத்துடன் நகர்ந்தால் மட்டுமே அந்த படிப்புக்கள் பயனளிக்கும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் சுதந்ததிரத்தின் பின் சிறுபான்மையினரின் மீதான ஒடுக்குமுறை முடிவற்று தொடர்கிறது இதற்கு சிறுபானமையினரிடையே உள்ள ஒற்றுமை இன்மையே காரணம்.

குறைந்த்த பட்சமாக இலங்கையின் சட்ட எல்லை குட்பட்ட வகையில் சிறுபான்மையினரின் உரிமை பேணப்படும் வகையில் சிறுபான்மையினர் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தவேண்டும்.

உ+ம் மலையக தமிழரின் பிரஜா உரிமை பறிக்கப்பட்ட போது சாதாரண மனிதாபிமானம் கூட காட்டாமல் பேசாதிருந்தத தமிழ் மக்களும் தமிழ் கட்சிகளும்,முள்ளிவாய்காலில் மனிதாபிமானமற்ற முறையில் உயிர்கள் அளிக்கப்பட்ட போது அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்றிருந்தத அனைத்து கட்சிகளும் த தே கூ உட்பட,

தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியான வகையிலேயே தற்போது நகருகிறது,அனைவரது ஒத்துழைப்பும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.