Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு - மஹிந்த பேச்சு; என்ன நடக்கின்றது?

Featured Replies

ஞாயிற்றுகிழமை, மார்ச் 27, 2011

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வேண்டும் என கூட்டமைப்பு மஹிந்தவிடம் கேட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. இந்த அதிகாரங்கள் 13 வது திருத்த சட்டத்தின் கீழ் உள்ளதாகவும் எனவே அதனை தந்தாலே இப்போதைக்கு போதுமானது என கேட்டுள்ளனர் கூட்டமைப்பினர். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி, காட்டுவளம், பொலிஸ் ஆகியவற்றை தருவதன் ஊடாக பிரச்சினைக்கான தீர்வை ஓரளவு எட்டமுடியும் என கூறியுள்ளனர் கூட்டமைப்பினர். ஆனால் தனக்கு ஒரு ஆலோசனையும் கூட்டமைப்பிடம் இருந்து கிடைக்கவில்லையென கூறியுள்ளார் மஹிந்த. அதே போல பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என மஹிந்த ஏற்கனவே கூறியும் உள்ளார். அத்துடன் புலிகள் கேட்டதையும் தரமுடியாது எனவும் கூறியுள்ளார்.

-

புலிகள் கேட்டதும் தரமுடியாது, காணி, பொலிஸ் அதிகாரமும் தரமுடியாது என்றால் மஹிந்த வேறு என்ன தீர்வினை தரப்போகின்றார். தவிர புலிகள் கேட்டவற்றுள் காணி , பொலிஸ் அதிகாரம் என்பனவும் உள்ளனவே ( இடைக்கால தன்னாட்சி அதிகார சபையில் ).

-

ஆகவே வெளிப்படையாகவே ஒன்றும் தமிழர்களுக்கு தரமுடியாது என மீண்டும் கூறியுள்ளார் மஹிந்த. மஹிந்தவிடம் இப்போ உள்ள ஒரே ஒரு தீர்வு அதிகாரப்பரவலாக்கல் என்ற பெயரில் கிராம சபா எனும் பொதி மட்டுமே.

அந்த கிராம சபாவிற்கும் ஓர் மத்திய அமைச்சு இருக்குமாம் அதுதான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துமாம். ஆகவே இதில் எங்கே அதிகார பரவலாக்கல் உள்ளது. இப்போதும் உள்ளூராட்சி சபைகளில் பல கட்சிகள் வென்றாலும் அந்த சபைகளை கட்டுப்படுத்தப்போவது மஹிந்த குடும்பமே என்பது எல்லோருக்கும் தெரியும். அண்மையில் பசில் இராஜபக்ச தலைமையில் இந்த உள்ளூராட்சி சபைகளை கட்டுப்படுத்தும் சட்ட ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

-

ஆகவே மஹிந்தவிடம் எதுவுமே எதிர்பார்க்க முடியாது என்பது முடிந்த முடிவு. கூடவே வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னம் இருக்கும் வரை எந்தவொரு அதிகாரமும் , நிர்வாக பகிர்வோ செல்லுபடியாகாது என்பதும் கண்கூடு.ஆனால் கூட்டமைப்பு தொடர்ந்து முயற்சி செய்வதன் மூலம் மஹிந்த அரசானது தமிழர்க்கு எதுவும் தர தயாராக இல்லை என்பதனை சர்வதேசத்திற்கு காட்டமுடியும்.

http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81

Edited by உமை

தீர்வு யோசனைகளை வழங்கிவிட்டோம் அரசுதான் இனிப் பதில் கூறியாக வேண்டும்தன்னிலை விளக்கத்தை அளிக்கிறது கூட்டமைப்பு

இனப்பிரச்சினைக்கு எந்த மாதிரியான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலான அடிப்படை விவரங்கள் அனைத்தும் அரச தரப்பிடம் வழங்கப்பட்டுவிட்டதாகவும் இப்போது அரசிடம் இருந்துதான் பதில்வர வேண்டி இருக்கிறது என்று கூறுகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

கூட்டமைப்பின் தீர்வுத் திட்டம் இன்னும் தனக்குக் கிடைக்கவில்லை என்று ஜனாதிபதி தன்னைச் சந்தித்த பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்குப் பதில் அளிக்கும் போதே கூட்டமைப்பு வட்டாரங்கள் இதனை ஆணித்தரமாகத் தெரிவித்தன.

அதிகாரப் பகிர்வு குறித்து யோசனைகளை அதாவது அடிப்படையான விடயங்கள் அரச குழுவிடம் சமர்ப்பித்து விட்டோம். அந்த யோசனைகள் குறித்து அரச தரப்பின் பதில் அடுத்த மாதம் 28 ஆம் தரப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தக் கால அவகாசத்தை வழங்கி உள்ளோம். அரசு உருப்படியான ஒரு பதிலைத் தரும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்று கூறின கூட்டமைப்பு வட்டாரங்கள்.

ஜனாதிபதி நியமித்த அரச தரப்புப் பிரதிநிதிகளுடன்தான் மூன்று கட்டங்கள் சந்திப்புக்களை நடத்தி கலந்துரையாடி உள்ளோம். தீர்வு எந்த வகையில் அமைய வேண்டும் என்று கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது என்பதை அதில் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறோம். அந்த யோசனைகளுக்கு உடன் பதில் சொல்லக் கூடிய நிலையில் அரச தரப்பு இருக்கவில்லை. தாம் உயர் மட்டத்துடன் ஆராய வேண்டும் என்று அவர்கள்தான் அவகாசம் கேட்டுள்ளனர்.

அடுத்த மாதம் 28ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்று அரசு தனது பதிலைத் தெரிவிக்கும் என்று கூட்டமைப்பு வட்டாரம் மேலும் தெரிவித்தது.

http://onlineuthayan.com/News_More.php?id=1334

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.