Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வெட்டித்துறை மீனவர்கள் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டித்துறை மீனவர்கள் மீது தாக்குதல்

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011 10:03

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடிக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள் நேற்றிரவும் வல்வெட்டித்துறை மீனவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

கடந்த இரவு 8மணியளவில் வல்வெட்டித்துறையிலிருந்து ஒரு படகில் இரண்டு மீனவர்கள் தொழிலுக்குச் சென்ற போது இவர்களை வல்வெட்டித்துறை 8ம்பாகம் கடற்பரப்பில் வைத்து வழிமறித்த சுமார் 5ற்கும் மேற்பட்ட இந்திய இழுவைப்படகுகளில் வந்தவர்கள் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டதாக வல்வெட்டித்துறை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு இந்திய இலங்கை கடற்படையினர் உதவியாக இருப்பதாகவும் இலங்கை தமிழனுகள் அனாதை பிச்சைக்காரன்கள் என்று தம்மை இந்திய மீனவர்கள் திட்டியதாகவும் இரும்பு பொல்லுகளால் தங்களை தாக்கிவிட்டு தங்களிடம் இருந்த வலைகளை கொள்ளையடித்து சென்றதாகவும் வல்வெட்டித்துறை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு இந்திய மீனவர்கள் அச்சுறுத்தியுள்ளனராம். இதனால் வல்வெட்டித்துறை மீனவர்கள் உடனடியாக கரைக்குத்திரும்பியுள்ளனர்.

இந்திய மீனவர்களுக்கு சிறிலங்கா இராணுவ புலனாய்வுப்பிரிவினரும் சிறிலங்கா கடற்படையினரும் ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் ஒரு அங்கமாக இந்திய மீனவர்கள் தொடர்பாக முறைப்பாட்டை செய்த வடமராட்சி கடற்தொழிலாளர் சங்க தலைவர் எமிலியாம் பிள்ளை சிறிலங்கா இராணுவப்புலனாய்வுப்பிரிவினரால் விசாரிக்கப்பட்டதுடன் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் இந்திய கடற்படைப்படகுகள் உள்நுழைந்தமை தொடர்பிலான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கியமைக்காகவே இந்த விசாரணை நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் எந்த தகவல்களையும் ஊடகங்களுக்கு வழங்கக் கூடாது என்ற அச்சுறுத்தலுடன் இவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

sangamam.com

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழனுகள் அனாதை பிச்சைக்காரன்கள் என்று தம்மை இந்திய மீனவர்கள் திட்டியதாகவும் இரும்பு பொல்லுகளால் தங்களை தாக்கிவிட்டு தங்களிடம் இருந்த வலைகளை கொள்ளையடித்து சென்றதாகவும் வல்வெட்டித்துறை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

'அனாதைப் பிச்சைக்காரர்களிடம் வலைகளைக் கொள்ளையடிக்கும் இந்தியப் பிச்சைக்காரர்கள்'

இந்த இந்தியப் பிச்சைக்காரர்கள் தமிழக மீனவர்கள் அல்ல'

காங்கிரஸ் அரசியல் வாதிகளின் ஏவல் நாய்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு மீனவர்களையும்,தமிழீழ மீனவர்களையும் கொழுவி விடுவதில் டக்ளசின் பங்கு அளப்பரியது.

தமிழ் நாட்டு மீனவர்களையும்,தமிழீழ மீனவர்களையும் கொழுவி விடுவதில் டக்ளசின் பங்கு அளப்பரியது.

அவருக்கு சென்னை நீதிமன்றத்தில் உள்ள வழக்கு "தள்ளுபடியானால்" மட்டுமே அவர் இதை நிறுத்துவாரா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.