Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாறு படைத்தது இந்தியா

Featured Replies

வரலாறு படைத்தது இந்தியா

10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்று வரலாறு படைத்தது இந்தியா.

இந்திய கேப்டன் தோனி அதிரடியாக விளையாடி 79 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். கம்பீர் 97 ரன்கள் எடுத்தார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றுள்ளது இந்தியா. மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய இந்தியா 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்து வெற்றி கண்டது.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஜாகீர் கான் முதல் 5 ஓவர்களில் 3-ல் இலங்கை வீரர்கள் ரன் ஏதும் எடுக்கவில்லை. இலங்கைத் தரப்பில் சங்ககரா 48 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெயவர்த்தனா-குலசேகரா ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. அதிரடியாக விளையாடிய குலசேகரா 30 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஜாகீர் கானின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசி 84 பந்துகளில் சதமடித்தார் ஜெயவர்த்தனா. பெரேரா தன் பங்குக்கு 9 பந்துகளில் ஒரு சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களை விளாச இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவித்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் இலங்கை அணி 54 ரன்கள் குவித்தது. ஜெயவர்த்தனா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் குவித்தார்.

இந்தியா வெற்றி: 275 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. மலிங்கா வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் சேவாக் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 31 ரன்களை எட்டியபோது சச்சின் 18 ரன்களில் வெளியேறினார். அவரையும் மலிங்காவே ஆட்டமிழக்கச் செய்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த கம்பீரும், கோலியும் நிதானமாக விளையாடினர். கோலி 35 ரன்களில் தில்ஷான் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தோனி அதிரடி: இதையடுத்து கம்பீருடன் தோனி ஜோடி சேர்ந்தார். பந்துகளை வீணடிக்காமல் விளையாடிய கம்பீர் 56 பந்துகளில் அரை சதமடித்தார். வழக்கத்துக்கு மாறாக முன்வரிசையில் களம் கண்ட தோனி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். சிறப்பாக ஆடிய தோனி 52 பந்துகளில் அரை சதமடித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து யுவராஜ் களம் புகுந்தார். அதிரடியாக விளையாடிய தோனி இந்திய அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றார்.

49-வது ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்சரை விளாசி இந்தியாவுக்கு வெற்றித் தேடித்தந்தார் தோனி. யுவராஜ் 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

தொடர்நாயகன் யுவராஜ்

உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருதை இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேனும், ஆல்ரவுண்டருமான யுவராஜ் தட்டிச் சென்றார்.6 லீக் ஆட்டங்கள், காலிறுதி, அரையிறுதி, இறுதி ஆட்டம் என மொத்தம் 9 ஆட்டங்களில் விளையாடிய யுவராஜ் 362 ரன்களும், 15 விக்கெட்டுகளும் வீழ்த்தியதன் மூலம் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார். இறுதி ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 21 ரன்கள் எடுத்ததுடன், 2 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தினார்.

தோனி 6,000

உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் 42 ரன்களை எடுத்தபோது, தோனி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

இது அவரின் 186-வது ஒருநாள் ஆட்டமாகும். இந்த சாதனையைப் படைக்கும் 7-வது இந்திய வீரர் தோனி. 7 சதம், 37 அரைசதங்கள் அடித்துள்ளார். சச்சின், கங்குலி, அசாருதீன், திராவிட், யுவராஜ், சேவாக் ஆகியோர் 6 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ள மற்ற வீரர்கள்.

கம்பீர் 4,000

இறுதி ஆட்டத்தில் 24 ரன்களை எடுத்தபோது கம்பீர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4,000 ரன்களைக் கடந்தார். இது அவருக்கு 114-வது ஒருநாள் ஆட்டமாகும். 9 சதம், 25 அரைசதங்கள் அடித்துள்ளார்.

ஸ்கோர் போர்டு

இலங்கை

தரங்கா (சி) சேவாக் (பி) ஜாகீர்கான் 2 (20)

தில்ஷான் (பி) ஹர்பஜன் (பி) 33 (49)

சங்ககரா (சி) தோனி (பி) யுவராஜ் 48 (67)

ஜெயவர்த்தனா நாட் அவுட் 103 (88)

சமரவீரா எல்பிடபிள்யூ (பி) யுவராஜ் 21 (34)

கபுகேதரா (சி) ரெய்னா (பி) ஜாகீர்கான் 1 (5)

குலசேகரா ரன் அவுட் (தோனி) 32 (30)

பெரேரா நாட் அவுட் 22 (9)

உதிரிகள் 12

மொத்தம் (50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு) 274

விக்கெட் வீழ்ச்சி: 1-17 (தரங்கா), 2-60 (தில்ஷான்), 3-122 (சங்ககரா), 4-179 (சமரவீரா), 5-182 (கபுகேதரா), 6-248 (குலசேகரா).

பந்துவீச்சு: ஜாகீர்கான் 10-3-60-2, ஸ்ரீசாந்த் 8-0-52-0,

முனாப் 9-0-41-0, ஹர்பஜன் 10-0-50-1, யுவராஜ் 10-0-49-2,

சச்சின் 2-0-12-0, கோலி 1-0-6-0

இந்தியா

சேவாக் எல்பிடபிள்யூ (பி) மலிங்கா 0 (2)

சச்சின் (சி) சங்ககரா (பி) மலிங்கா 18 (14)

கம்பீர் (பி) பெரேரா 97 (122)

விராட் கோலி (சி) & (பி) தில்ஷான் 35 (49)

தோனி நாட் அவுட் 91 (79)

யுவராஜ் நாட் அவுட் 21 (24)

உதிரி 15

மொத்தம் (48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு) 277

விக்கெட் வீழ்ச்சி: 1-0 (சேவாக்), 2-31 (சச்சின்),

3-114 (கோலி), 4-223 (கம்பீர்).

பந்துவீச்சு: மலிங்கா 9-0-42-2, குலசேகரா 8.2-0-64-0

பெரேரா 9-0-55-1, ரனதேவ் 9-0-43-0, தில்ஷான் 5-0-27-1,

முரளீதரன் 8-0-39-0.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sports&artid=399791&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=

  • தொடங்கியவர்

Gambhir wants to win the World Cup for 26/11 victims

Muralitharan wants tickets for World Cup Final

  • தொடங்கியவர்

உலக கோப்பை வெற்றி: கருணாநிதி வாழ்த்து

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்திய அணி வென்றதற்காக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சரத்பவாருக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தந்தி அனுப்பியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி, சரத்பவாருக்கு அனுப்பியுள்ள வாழ்த்து தந்தி:

உலக விளையாட்டரங்கில் இந்தியா பிரதான சக்தி என்பதை கிரிக்கெட் உலகுக்கு நிரூபிக்கும் வகையில், உலகக் கோப்பையை இந்தியா வென்ற செய்தியால், மனம்நிறைந்த மகிழ்ச்சியடைகிறேன். மும்பையில், வரலாற்று சிறப்புமிக்க, மறக்க முடியாத வெற்றியை இந்தியா பெற்றுள்ளது.ஒட்டுமொத்த தேசத்தின் பாராட்டை பெறுவதற்கு, கேப்டன் தோனி பொருத்தமானவர். தமிழக மக்களின் சார்பிலும், என் சார்பிலும், இந்திய அணிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.இவ்வாறு தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=217970

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு வெறுப்புகளுக்கப்பால் கப்டன் என்ற வகையில் தோனி நல்ல பங்காற்றியுள்ளார்.

  • தொடங்கியவர்

உலக‌க் கோ‌ப்பையை வெ‌ன்ற இ‌ந்‌திய அ‌ணி‌க்கு 3 கோடி ரூபா‌ய் ப‌ரிசு வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

த‌மிழக அரசு சா‌ர்‌பி‌ல் வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

த‌மிழக ‌வீர‌ர் அ‌ஸ்‌வினு‌க்கு ரூ.1 கோடி வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1104/04/1110404016_1.htm

  • தொடங்கியவர்

20 மில்லியன் மக்களை கொண்ட இலங்கை 1.2 பில்லியன் மக்களை கொண்ட இந்தியாவுக்கு மகிழ்வை கொடுத்தது - மகிந்தா

Lankans gave up joy for Indians: MR

While hailing the Sri Lankan national cricket team, President Mahinda Rajapaksa today said that 20 million people of Sri Lanka took a step back to allow 1.2 billion Indian people to enjoy some happiness, for the second time since 1983.

“I like to tell my Indian friends that 20 million from our small country took a step back to allow 1.2 billion Indian people to enjoy some happiness, for the second time since 1983,” he said adding that “Sri Lankans took the defeat with dignity.”

Rajapaksa, flanked by his wife Shiranthi, presented players with a 5,000 rupee gold coin and a pair of gold cufflinks encrusted with colouful stones, during a ceremony at Temple Trees, AFP reported.

“Whether you won the Cup or not, reaching the final, was a great achievement,” Rajapaksa said referring to Saturday's six-wicket defeat. “You have done us proud.”

India won their first and only World Cup under Kapil Dev in 1983.

http://www.dailymirror.lk/top-story/10733-lankans-gave-up-joy-for-indians-mr.html

பணத்திற்காக உலகக்கோப்பை விலைபோனதா? :rolleyes:

Edited by akootha

  • தொடங்கியவர்

உலக கோப்பை போலியானதா?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு உண்மையான உலக கோப்பை தான் வழங்கப்பட்டது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

மும்பையில் கடந்த சனிக்கிழமை நடந்த 10-வது உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றியது.

உலக கோப்பை கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் தத்தளித்த இந்திய அணி வீரர்கள் அனைவரும் கோப்பை தங்கள் கையில் கிடைத்ததும் அதனை பலமுறை முத்தமிட்டு மகிழ்ந்தனர். கோப்பை கையில் ஏந்தியபடி மைதானத்தில் வலம் வந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கோப்பையுடன் வீரர்கள் அனைவரும் பல்வேறு கோணங்களில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து மகிழ்ந்தனர்.

இதற்கிடையில் இந்திய அணியினருக்கு வழங்கப்பட்ட உலக கோப்பை உண்மையானது (ஒரிஜினல்) அல்ல. அது `மாதிரி' கோப்பை என்று அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரிஜினல் உலக கோப்பையை மும்பை சுங்க இலாகாவினர் ரூ.25 லட்சம் வரி கட்டாததால் பறிமுதல் செய்து இருப்பதாகவும், வரி செலுத்திய பின்னர் தான் கோப்பையை பெற முடியும் என்று செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இந்திய அணிக்கு வழங்கப்பட்டது ஒரிஜினல் கோப்பை தான் என்று விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், `இந்திய அணியினருக்கு வழங்கப்பட்ட கோப்பை மாதிரி என்ற கேள்விக்கே இடமில்லை.

மீடியாக்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது. கோப்பையில் போட்டியின் சின்னம் மற்றும் பங்கேற்கும் அணிகள் விவரங்கள் அனைத்தையும் காண முடியும்.

சுங்க இலாகா வசம் இருப்பது போட்டியை பிரபலப்படுத்தும் நோக்கில் பல்வேறு இடங்களுக்கு எடுத்து செல்லப்படும் கோப்பையாகும். இந்திய அணிக்கு வழங்கப்பட்ட நிரந்தரமான உலக கோப்பை துபாயில் உள்ள ஐ.சி.சி.யின் தலைமை அலுவலகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்படும்.

அதற்காக இந்திய அணியினரிடம் இருந்து அந்த கோப்பை திரும்ப பெறப்பட்டு ஐ.சி.சி. அலுவலர் மூலம் துபாய் கொண்டு செல்லப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை சர்ச்சை எழுந்த பின்னர் சுங்க இலாகா தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், `தங்கள் வசம் இருக்கும் கோப்பை ஒரிஜினலா? மாதிரியா என்பது எங்களுக்கு தெரியாது. சுங்க வரி செலுத்தியதும் கோப்பை கொடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலக கோப்பை சர்ச்சை குறித்து உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விஷயத்தில் ஜனாதிபதி தலையிட்டு, இந்திய அணிக்கு வழங்கப்பட்டது உண்மையான கோப்பையா? என்பதை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி பாரதீய ஜனதா தலைவர் விஜேந்தர் குப்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=51345

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.