Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நகரசபையின் அனுமதி இன்றி புத்தர் சிலை வைக்க அனுமதிக்க மாட்டோம்

Featured Replies

உலகிலேயே மிகப்பெரிய புத்தர்சிலை வவுனியாவில் அமைக்கப்படவுள்ளது என நாம் அறிகின்றோம். எமது நகரசபையின் எல்லைக்குள் அந்தச் சிலை அமைக்கப்படுவதாயின் எமது சபையின் அனுமதி பெற்றே அது அமைக்கப்பட வேண்டும்.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்.தந்தை செல்வாவின் 113 ஆவது பிறந்ததின நிகழ்வு நேற்று முன்தினம் வவுனியா வில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ரதன் அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் கூறியவை வருமாறு:

"இலங்கைத் தமிழரசுக் கட் சியின் ஸ்தாபகரும், தமிழ் இனத்தின் தந்தையுமான தந்தை செல்வாவின் 113 ஆவது பிறந்த தினம் இன்றாகும். இன்றைய நாள் தமிழினத்துக்கு முக்கியத் துவம் வாய்ந்த ஒரு நாள். 31.03.1898 ஆம் ஆண்டு பிறந்த தந்தை செல்வாவின் வாழ்வு 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் கிடைத்த நாளுக்குப் பின்னர் முற்றாக மாற்றம் அடைந்தது.

ஐரோப்பிய இனத்தவராகிய பிரித்தானியர்கள் சிங்கள தேசத்துக்கு மட்டுமே சுதந்திரம் வழங்கிச் சென்றனர். இதனால், அஹிம்சை வழியில், பூரண ஜனநாயக வழியில் தமிழீழக் கோரிக்கையின் அடிப்படையில் தமிழர்களின் போராட்டம் ஆரம்பமானது.இவ்வாறான போராட்ட சூழ்நிலையில்தான் சிங்கள தலைமைகளுக்கும் தமிழ்த் தலைமைகளுக்கும் இடையில் ஒப்பந்தம் எழுதப்பட்டது. 1956 ஆம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தானமை சிறப்புக்குரியது. அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே தமிழர்களை அடக்கி, ஒடுக்க வேண்டும் என்பதிலேயே சிங்கள தேசமும் அதன் ஆட்சியாளர்களும் குறியாக இருந்தனர்.

1956ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழி என அறிவித்தபோது தந்தை செல்வா அதனை எதிர்த்தார். இதே போன்று 1972 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது தந்தை செல்வா நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார்.1956 ஆம் ஆண்டும் திருகோணமலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டமையை இன்றைய அரசு புரிந்துகொள்ளவேண்டும். தமிழ் மக்களுக்கு சமஷ்டிக் கூட்டாட்சிக்குட்பட்ட ஒரு தமிழரசு என்ற அந்த நிலையில் நாம் பயணிக்கவேண்டும்.வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை தந்தை செல்வா விரும்பவில்லை. ஆனால், இன்று என்ன நடக்கிறது? எங்கு பார்த்தாலும் காணி அபகரிப்புகளும், புதிய சிலைகள் உருவாக்கமுமே நடக்கின்றன.

உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலை வவுனியாவில் அமைக்கப்படவுள்ளது என அறிகின்றோம். இது 522 அடி உயரமுள்ள சிலை. இது பௌத்த தர்மத்திற்கு முரணான ஒரு செயற்பாடு. இதனை நாம் வன் மையாகக் கண்டிக்கின்றோம். இந்தப் புத்தர் சிலை வவுனியா நகரசபை எல்லைக்குள் அமைக் கப்படவேண்டுமாயின், எமது சபையில் அனுமதி பெறப்படுதல் வேண்டும்.

உள்ளூராட்சி மன்ற சட்ட முறை சட்டத்தின் பிரகாரம் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு நகரத்தில் என்ன விடயம் நடந் தாலும் அதற்கு அச்சபையின் அனுமதி பெறுதல் வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட நகரசபைக்குள் இச்சிலையை அமைப்பதாயின் சபையின் அனுமதி பெறப்படுதல் அவசியம் என வேண்டுகின்றோம். அதேபோல்தான் அண்மையில் வவுனியா வைத்தியசாலை யிலும் புத்தர் சிலையை எமது அனுமதி இல்லாமல் வைத்தார் கள். நாம் அதைத் தட்டிக் கேட்ட போது, வெவ்வேறு காரணத்தைச் சொன்னார்கள். எமது தேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. அதுவே எமது நிலைப்பாடு ஆகும்.தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும் இன்றைய அரசுக்கும் இடையிலான பேச்சில் எமது இனப்பிரச்சினைக்கான தீர்வை எமது கட்சி முன்வைக்க இருக்கின்றது. இந்த அரசையும் நாங்கள் நம்பத் தயாரில்லை. தந்தை செல்வா கூறியதுபோல், "நம்ப நட நம்பி நடவாதே'' என்ற நிலையில்தான் எமது தலைவர்கள் அரசுடன் பேசி வரு கின்றார்கள். இந்தப் பேச்சு, காலத்தை இழுத்தடிக்கும் ஒரு பேச்சாக இருக்கக்கூடாது. இந்த அரசு எமது தீர்வை ஏற்காது விடின் நாம் இந்தியாவிடமும், சர்வ தேசத்திடமும் முறையிடுவோம்.

தந்தை செல்வாவின் முப்பது வருடகால அஹிம்சைப் போரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முப்பது வருடகால ஆயுதப் போராட்டமும் எமது இனத்துக்கு புதிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த ஜனநாயக எழுச்சியில் வடக்கும், கிழக்கும் தமிழர்களின் தாயகங்கள் என்பதை ஏற்றுக் கொண்டு எங்கள் மண்ணில் எங்களை நாங்களே ஆளுகின்ற நிலையை உருவாக்க இந்த நாளில் உறுதி பூணுவோம் என்றார். இந்த நிகழ்வு வவுனியா மணிக்கூட்டுக் கோபுரச் சந்திக்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு முன்றிலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட கிளைத் தலைவர் டேவிட் நாகநாதன் தலைமையில் நடைபெற்றது.

உதையன்

Edited by உமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.